மரபு திரிதல் முற்றும் திரிதல்..!


"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன்னூல்-சொல்-388)

என்று நன்னூலார் இலக்கணம் வகுக்கிறார்.

மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும்.

"மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்" (தொல்-சொல்-646)

என்கிறார் தொல்காப்பியர்

"மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப் பட்ட சொல்லி னான" (தொல்-பொருள்-645)

மரபு மாறாமல் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும். தொல்காப்பியர் மரபின் இன்றியமையாமையை உணர்த்துகிறார். ஆனால், இன்று மரபு மாறி செய்யுள் இயற்றப்படுகின்றன.

"வழக்கெனப் படுவ துயர்தோர் மேற்றே" (தொல்-பொருள்-647)

வழக்கு என்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே. உயர்ந்தோர் ஒழுகலாறுகள் தான் வழக்காக் கருதப்பட்டன. ஆனால், இன்று தற்போது எளியோருடைய ஒழுகலாரும் இலக்கிய வழக்காக ஆட்சி பெற்றுள்ளது.

மரபு திரிபு நோயா இல்லை ஆரோக்கியமா?

உண்மையில் நோயே.! உயர்ந்தோர் வடித்து வைத்த நெறி நூல்களின் வார்த்தை திரிபால் வாழ்க்கை திரிந்து நிற்கிறது..! பழந்தமிழ் நூல்களில் பெரும்பான்மை சைவ வைணவ சமய சித்தாந்தங்கள் இலகுவாய் பொழிப்புரை என்ற பெயரிலும் இடைசொருகல் பாடல் வடிவிலும் திணிக்க பட்டுள்ளது..! நல்லது எதுவாக இருந்தால் எற்ப்பதில் என்ன பிழை என்று சிந்தித்தால், நன்மையான ஒன்றை இப்படி கள்ளத்தனமாக திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழன் கொள்கை வீரியமற்று போனதன் காரணம் இந்த திட்டமிட்ட மரபு திரிபு..! வென்ற அவர்கள் யுத்த முறை வாளும் எழுத்தும், ஆனால் இறுதியில் வாய்மையே வெல்லும்..!

சான்று :
http://www.muthukamalam.com/essay/literature/p92.html
http://www.muthukamalam.com/essay/literature/main.html

மரபு திரிபின் விளைவு :

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு... X ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... X படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்... X இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை) ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... X சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்.... X அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம்... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

சான்று :
http://thamil.co.uk/?p=6457
http://cowboymathu.blogspot.in/
http://tamilvizhumiyangal.blogspot.in/2014/09/blog-post_5.html
http://davidmeansbeloved.blogspot.in/2013/08/blog-post_4131.html
http://noolaham.net/project/42/4153/4153.pdf
http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/pazhamozhinaanooru.html
http://www.edubilla.com/tamil/pazhamozhigal/
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/77833/8/08_chapter1.pdf
http://www.thamizhagam.net/projectmadurai/pdf/pm0219.pdf
http://www.riyadhtamilsangam.com/EK/arinthathu_1.htm
https://rajanscorner.wordpress.com/2011/06/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4/
http://www.yarl.com/forum3/topic/127414-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
https://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14404.html
http://www.tamilpriyan.com/tamil-proverbs-part-4/
http://sgnanasambandan.blogspot.in/2012/01/blog-post_10.html

தமிழர் நெறி சிலைவணக்கம் அல்ல


தமிழர் நெறி சிலைவணக்கம் அல்ல : உருவ வழிபாட்டை எதிர்த்து சித்தர்கள் பாடிய பாடல்கள் ஏராளம்

சிவ வாக்கியர் பாடல் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

பத்திரகிரியார் புலம்பல் 

உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்

பட்டினத்துப் பிள்ளையார் பாடல் 

சொல்­னுஞ் சொல்­ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்­னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்
இல்­லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்
கல்­னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே

குதம்பைச் சித்தர் 

கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும்

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.

அகஸ்தியர் பாடல் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.
 

தர்மம்



தமிழர் நெறி 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். - குறள் 19

விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - நல்வழி வெண்பா : 18

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே. - திருமந்திரம் முதல் தந்திரம் பாடல் எண் : 4

விளக்கம் : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

இஸ்லாம் 

தொழுகையை (தவம்) நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் (தானம்) கொடுங்கள்;  (2.43)

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். [திருக்குர்ஆன் 41:39 ]

 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம் 5047)

குறிப்பு : ரம்ஜான் பண்டிகை என்று அழைக்கப்படும் ஈகை பெருநாள் மற்றும் பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாக திருநாள் என இரண்டு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இப்பண்டிகைகள் கொண்டாட்டங்களாக சொல்வது தொழுகை மற்றும் தர்மம் மட்டுமே.

கிறிஸ்தவம் 


நன்மை செய்வதையும், உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதையும் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் இத்தகைய தியாகங்கள் கடவுளுக்குப் பிரியமானவை. – எபிரெயர் 13:16

யாருக்காவது பொருள் இருந்தால், ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேவைப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் கடவுளின் அன்பு எப்படி இருக்கும்? – 1 யோவான் 3:17

இலவசமாகக் கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறார்கள்; மற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைத் தடுத்து நிறுத்தி, இன்னும் ஏழையாகி விடுகிறார்கள். – (நீதிமொழிகள் 11:24)

தூய்மையான உள்ளம்


தமிழர் மறை 


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற - குறள் 034

சி இலக்குவனார் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும். உள்ளத்தில் குற்றம் உடையவனாய்ச் சொல்லுகின்ற நற்சொல்லும் செய்கின்ற நற்செயலும் ஆரவாரத்தின் பாற்பட்டன.

உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம்
 
ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல்கழல் நாய் அன்னது உடைத்து. - (அறநெறிச்சாரம் பாடல் - 137)

விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.

சான்றோரைத் துணையாய்க் கொள்ளல்

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்டுத்திக்
கள்ளப் புலன்ஐந்தும் காப்புஅமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித் துணைபெற்றக் கால்.- (அறநெறிச்சாரம் பாடல் - 138)

விளக்கவுரை சிறந்த குணம் உடையவரை ஒருவர் தமக்குத் துணையாகப் பெறுவாராயின், அவர் தம் மனம் என்னும் சிறந்த குதிரை மீது ஏறி அதைத் தம் வசப்படுத்தி, தம்மை வஞ்சிக்கும் ஐம்புலன்களையும் புறத்தே செல்லாது தடுத்து, 'வெள்ளம்' என்னும் பேரெண்ணின் அளவையுடைய கடந்து வீடு பேற்றினைப் பெறுவர்.

உள்ளத்தை அடக்கி ஆளல்

பரிந்துஎனக்குஓர் நன்மை பயப்பாய்போல் நெஞ்சே!
அரிந்துஎன்னை ஆற்றவும் தின்னல் - புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ.- (அறநெறிச்சாரம் பாடல் - 139)

விளக்கவுரை உள்ளமே! எனக்கு ஒரு நன்மையைச் செய்வதைப் போன்று காட்டி, என்னை மிகவும் அரிந்து தின்னாதே! நீ விரும்பி அடைய நினைப்பவற்றை நான் விரும்பிச் செய்வேன் அல்லேன். பற்று விடுதலை நான் மேற்கொண்டேன்; பேதையே, அப்பாற்போ!

மனம் அடங்கினால் பல நன்மை உண்டாகும்

தன்னைத்தன் நெஞ்சம் கா¢யாகத் தான்அடங்கின்
பின்னைத்தான் எய்தா நலன்இல்லை - தன்னைக்
குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.- அறநெறிச்சாரம் பாடல் - 140

விளக்கவுரை ஒருவன் தன் செயல்களுக்குத் தனது மனத்தையே சான்றாக வைத்துத் தான் அடங்கப் பெற்றான் என்றால், பின்பு, அவன் அடைய முடியாத இன்பம் ஒன்றும் இல்லை தன்னைப் பிறந்த குடியுடன் கெடுக்கின்ற தீய மனத்தினுக்குத் தொண்டு செய்து நடத்தல், பார்வை விலங்காக நிறுத்தப்பட்ட பெண் யானையை விரும்பிக் குழியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல், எப்போதும் வருந்துதற்குக் குறியதாகும்.

உள்ளத்தே உயர்வே உயர்வு

உள்ளூர் இருந்தும்தம் உள்ளம்அறப் பெற்றாரேல்
கள்அவிழ் சோலையாம் காட்டுஉளர் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார்.- அறநெறிச்சாரம் பாடல் - 141

 விளக்கவுரை இல்வாழ்வை மேற்கொண்டு ஊரினுள் வாழ்ந்தாலும் தம் மனம் அடங்கப் பெறுவாரானால் அவர், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டில் வாழும் துறவியே ஆவார். துறவற வாழ்வை மேற்கொண்டு, காட்டில் வாழ்கின்றவராயினும் மனம் அடங்கப் பெறார் என்றால், அவர், நாட்டில் உள்ள மனை வாழ்க்கையை அடைந்து தீய செயலைப் பொருந்தி வாழ்கின்ற கயவர் ஆவார்.

மனத்தை அடக்குவார் அடையும் பெரும் பயன்

நின்னை அறப்பெறு கிற்கிலேன் நல்நெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பனேல் பெற்றேன்மற்று ஈண்டே
துறக்கம் திறப்பதுஓர் தாழ்.- அறநெறிச்சாரம் பாடல் - 142

விளக்கவுரை என் நல்ல நெஞ்சமே! உன்னை என் வயமாக்கிக்கொள்ள இயலாதவனாய் உள்ளேன்; இனி யான், யாரை என் வயமாக்கிக் கொள்வேன்? உன்னை என் வயமாக்கிக் கொள்வேன் ஆயின், சொர்க்க உலகினைத் திறப்பதான நிகரற்ற திறவு கோலை, நான் பெற்றவன் ஆவேன்.


இஸ்லாம் 


அல்லாஹ்விடம் தூய உள்ளத் துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது. - அல்குர்ஆன்  26:88

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி 001

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (அறிவித்தார். நூல். முஸ்லிம் 5011)

உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒரு சதை துண்டு அது சீராகிவிட்டால் எல்லாம் சீராகிவிடும். அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும் என்று கூறி அந்த சதை துண்டு தான் கல்பு என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி : 50)

ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப்  புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (குர்ஆன் 91: 7-10)

ஒரு சஹாபி வருகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? பாவத்தை எப்படி நான் புரிந்து கொள்வது? இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு நீண்ட பட்டியலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வாழ்நாள் எல்லாம் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒரு அளவுகோலை தனது கண்ணுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தனது மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர்கள் மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவருக்கு ஒரு அளவை கொடுத்தார்கள். உன்னுடைய உள்ளத்தில் எது உனக்கு உறுத்தலை ஏற்படுகின்றதோ, உள்ளத்தை குறை கூறுகின்றதோ, இதை நீ செய்கிறாயே செய்யலாமா? உன்னுடைய உள்ளத்தை எது உறுத்துகிறதோ குத்துகிறதோ அது பாவம் விட்டுவிடு என்று சொன்னார்கள் - அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், எண்: 4632

அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒருபயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன்26 : 88,89)

துஆ  

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)

“இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)

“மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)


கிறிஸ்தவம் 


மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். 1 தீமோத்தேயு 1:5

எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. - எபிரெயர் 12:14   

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார். - நீதிமொழிகள் 17:3

ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும். நீதிமொழிகள் 27:19 

தர்மம் எதற்காக செய்யவேண்டும்?


மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். - நாலடியார் 37

கருத்துரை: நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.

விசேடவுரை: (நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.

பதவுரை
    மக்களால்= மனிதர்களால்,
    ஆய= உண்டாய,
    பெரும்= பெரிய,
    பயனும்= விளைவும்,
    ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
    எத்துணையும்= எவ்வளவும்,
    ஆற்ற= மிக,
    பல ஆனால்= பலவாயிருந்தால்,
    தொக்க= பொருந்திய,
    உடம்பிற்கே= உடலுக்கே,
    ஒப்புரவு= தருமத்தை,
    செய்து= பண்ணி,
    ஒழுகாது= நடவாமால்,
    உம்பர்= சுவர்க்கத்தில்,
    கிடந்து= இருந்து,
    உண்ண=அநுபவிக்க,
    பண்ண= தருமங்கள் செய்ய,
    படும்= தகும்.


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். நாலடியார் 3328

பதவுரை 
சிறுகாலை = இளமை
வல்சி = உணவரிசி
தோள்-கோப்பு = கட்டுச்சோறு

கருத்துரை 
இளமையாக இருக்கும்போதே பிற்காலத்துக்கு (மறுமைக்கு) உதவும் நல்லறப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளியூர் செல்வோர் இறுக்கி இறுக்கிக் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வது போலச் சேர்த்து வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். இருக்கும் செல்வத்தை இறுக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பவர் அறிவிர்ராத பேதை ஆவார். அவர் வைத்துக்கொண்டிருக்கும் பொன் பழுக்காத புளிப்புத் தன்மையுள்ள விளாங்காய் போன்றது. விளாங்காய் தின்றால் தொண்டை விக்கும். அப்போது தண்ணீர் பருகினாலும் தண்ணீரும் விக்கும்.

இஸ்லாம் 

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

கிறிஸ்தவம்

இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.  - (மத்தேயு 19:21)