வேதத்தை விட்ட அறமில்லை!

தமிழர் சமயம் 

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க

வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)


பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.  

கிறிஸ்தவம்

அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)  

இஸ்லாம்

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது(திருக்குர்ஆன் 16 : 64)

பிராமணர்கள் இந்திய நாட்டிற்கு நன்மையா, தீமையா? Quora

இந்த கேள்வியில் பல தெளிவு தேவை படுகிறது…

பிராமணர்களும் அந்தணர்களும் வேறு வேறு..

பிராமணர்கள் வடமொழி சமயத்தை பின்பற்றுவோர், அந்தணர்கள் தமிழ் சமயத்தினர். பிராமணர் என்றால் பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்று பொருள். இவர்கள் வர்ண அடுக்குமுறையை பின்பற்றுபவர்கள். இது பிறப்பு, அதிகாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது.

அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் உரிய சொல் இல்லை. அந்தணர்கள் தமிழ் சமயத்தை அது கூறும் அறத்தை பின்பற்றுவோர் ஆவர். இவர்கள் அனைவரும் சமணவர்கள் என்று நம்புவார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை உணர்ந்தவர்கள்.. இவர்களின் இந்த அடிப்படை கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளை எதிர்க்கும் இயல்புடையவர்கள்.

பிராமணர்களும் ஓதுவார்களும் வேறு வேறு..

ஓதுவார்கள் அந்த அந்தணர்களில் இருந்து தமிழ் வேதத்தை ஒதுபவர்கள், மற்றவர்களுக்கு அதை ஓத சொல்லிக்கொடுப்பவர்கள்.

பிராமணர்களும் பார்ப்பனர்களும் வேறு வேறு..

மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது." இது தொழில் சார்ந்தது.

பிராமணர்கள் வேறு ஐயர் வேறு..

ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள்..

ஆனால் இன்று இவை அனைத்தும் பிராமணர்களை குறிக்க பயன்படுகிறது. அதேசமயத்தில் அனைத்து பிராமணர்களும் பிரமனியத்தை பின்பற்றவில்லை.

எனவே பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, வெளிப்படையாகவே மறைமுகமாகவோ பிரமாணியத்தை பின்பற்றும் ஒருவர் இந்த நாட்டுக்கு நன்மையா தீமையா என்பது தான் சரியான கேள்வி. ஏனென்றால் பிராமின் அலாதரில் சிலரும் பிராமனியத்தை பின்பற்றுகின்றனர்.

எனவே பிராமணியம் என்பது என்ன என்பதை அறிவது அவசியம்.

பிராமணியம் என்றால் அனைவரும் சமல்ல என்று கருதுவது, சரி அதை ஒன்று உண்மையில் இருந்தது நாம் எப்படி அறிந்து கொள்வது?

சில உதாரணங்கள்..

  • சிவாஜி பிராமணர் அல்லாதார் என்பதால் அவரை முடக்க நினைத்தவர் ராஜாஜி. ஏன்? எந்தவகையிலும் பிராமணரல்லாதோர் முன்னேறிவிடுவதை ஏன் அவர்கள் விரும்பவில்லை? https://youtube.com/shorts/6G_T14CDD94?si=08GMyoiV-B2x4aWz
  • இந்த தமிழ் கூறும் நல்லுலகில் சமசுகிருதம் தெரியாதோர் மருத்துவம் படிக்க முடியாத நிலை இருந்தது. இந்த விதியை ஏற்படுத்தியது யார்? ஏன்? தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது ஏன்? பிராமணரல்லாத தமிழர்கள் எத்தனைபேருக்கு சமசுகிருதம் தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்தது?

  • தொழில் அடிப்படையில் குலம் குறிப்பிடப்பட்டு அவரவர் குலத்துக்கு ஏற்ப கல்வி கொடுக்கப்பட்ட முறை இருந்தது. என்றால் உன் தந்தை என்ன தொழில் செய்தாரோ அதையேதான் நீயும் செய்ய வேண்டும்.. ஒரு விவசாயி அல்லாது முடி திருத்துபவர் அல்லது இதுபோன்ற வேலைகளை செய்பவர் மருத்துவராகவோ, கலெக்டர் ஆகவோ ஆகவே முடியாது என்கிற நிலை இருந்தது. இந்த வேலைகளெல்லாம் பிராமணருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட காலம் அது.

"மாணவர்களை கல்லூரியில் சேர்க்க GO போடும் நிலை இருந்தது.. பொய்யா?.. சவால் விட்றேன்.. நிரூபீங்க.."

இரட்டைமலை சீனிவாசன் கோவை கல்லூரியில் படிக்கும் பொழுது அங்கிருந்தவர்களில் 80% பார்ப்பனர்களே. அவர்களில் அதிக மக்கள் படிப்பது தவறல்ல ஆனால் மற்றவர்களை படிக்க விடாமல் இருப்பது தவறு.

https://youtube.com/shorts/vSG5lApkMXg?si=LioQuHeReBpHA1rZ

இன்னும் எத்தனையோ..

சரி பார்பனர்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்? கீழ்கண்ட சட்டங்களை அவர்கள் கொண்டு வந்ததால்..

20-ம்-நூற்றாண்டு-தொடக்கம்வரை-தேவதாசிகள்-இல்லாத-கோவில்களே-தென்னிந்தியாவில்-இல்லை-இராசராச-சோழன்-காலத்தில்-தஞ்சை-பெரிய-கோவ அறம் - கற்க கசடற-இல் அறம் கற்க கசடற (Learn Virtues)-இன் பதிவு

இன்று என்னமோ நல்லவர்களை போல அப்பிராணிகளை போல அவர்கள் பேசுவார்கள்…

இவைகளுக்கு எதிராக இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை என்றால் அது கட்டுக்கதை என்று நம்மை ஏமாற்றி விடுவார்கள் என நாம் உணரவேண்டும்.

மேலும் இவைகளை எல்லாம் மீண்டும் கொண்டுவர இவர்கள் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்கிறார்கள் RSS மற்றும் பிஜேபி வாயிலாக.. அதுவும் அவர்கள் யாரை ஒடுக்கி வைத்து இருந்தார்களோ, வென்றால் யாரை ஒடுக்க போகிறார்காளோ அவர்களை வைத்தே இதை செய்ய முயல்கின்றனர். இப்போ நீங்களே முடிவு செய்யுங்கள் பிராமணையத்தை பின்பற்றும் பிராமணர்கள் இந்திய நாட்டுக்கு நன்மையா தீமையா என்று..!

கடவுள் வாழ்த்து

உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா

மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா

நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா

எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா

என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா

எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா

இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிரை யாக்குமப்பா

வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா..!

வறுமையிலும் தர்மம்

தமிழர் சமயம்  


உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை. - (நாலடியார் 185

பொருள்: (மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை). 

 

இஸ்லாம்  


தங்களுக்கு இல்லை என்றாலும் தாங்கள் கடுமையான வறுமையில் பட்டினியில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கத்தான் அவர்கள் முன் வருவார்கள். யார் உள்ளத்தின் நப்ஸ் உடைய கஞ்சதனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ  அவர்கள்தான் வெற்றியாளர்கள். (குர்ஆன் 59:9) 

”அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) (நூல்: புகாரி 1413, 6539
 

கிறிஸ்தவம்  

இயேசு நிமிர்ந்து பார்த்தார், பணக்காரர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கை பெட்டியில் வைப்பதைக் கண்டார், மேலும் ஒரு ஏழை விதவை இரண்டு சிறிய செப்புக் காசுகளைப் போட்டதைக் கண்டார். மேலும் அவர், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை அவர்கள் அனைவரையும் விட அதிகமாகப் போட்டாள். ஏனென்றால், அவர்கள் அனைவரும் தங்கள் மிகுதியிலிருந்து பங்களித்தார்கள், ஆனால் அவள் வறுமையிலிருந்து தான் வாழ வேண்டிய அனைத்தையும் செய்தாள். (லூக்கா 21:1-4)