கற்பெனப் படுவது கரணமொடு புணரக்கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதே(பொருள் 140
உயிரினும் சிறந்தன்று நாணே;நாணினும் செயிர்தீர் காட்சிக்
கற்புச் சிறந்தன்று (தொல்.பொருள்.கள. 23)
ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றாகற்பும் ஏரும் எழிலும் என்றாசாயலும் நாணும் மடனும் என்றாநோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்குஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லதுகாட்ட லாகாப் பொருள என்ப (தொல் 52)
க - து : வண்ணம் வடிவு அளவு சுவை முதலாகிய குணங்களின்வேறாய்த் துய்த்தறியப்படும் சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம்என்னும் பொருள்களையும், மெய்ப்பாடு வாயிலாகத்தெளியப்படும் அச்சம், பெருமிதம், உவகை முதலாயபண்புகளையும் செயல் வாயிலாக அறியப்படும். அழுக்காறு,அவா, அடக்கம் முதலிய குணங்களையும் போல ஐம்பொறிவாயிலாக உணரப்படாமல் எஞ்ஞான்றும் உள்ளத்துணர்வான்தாமே தெரிந்தறிதலன்றி ஒருவாரற் புலப்படக்காட்டுதற்குஆகாதன இவை எனக்கூறுகின்றது.
குறள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். (குறள் 54)
விளக்கம்: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
அரும்பெற்று கற்பின் அயிராணி யன்னபெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்நறுநுதலாள் நன்மைத் துணை. (39.கற்புடை மகளிர் 381)
விளக்கம்: பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் டவர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மன¨வி ஆஸ்வாள்.
குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழிமாதர் மனைமாட்சி யாள். 382
விளக்கம்: ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.
நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்மேலாறு மேலுறை சோரினும் - மேலாயவல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்இல்லாள் அமர்ந்ததே இல். 383
விளக்கம்: சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும்.
கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கிஇடனறிந்து ஊடி இனிதின் உணரும்மடமொழி மாதராள் பெண். 384
விளக்கம்: கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கா¢த்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள்.
எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்பன்மார்பு சேர்ந்தொழுகு வார். 385
விளக்கம்: நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ? (கற்புடை மகளிர்க்கு நாணமும் ஓர் அழகாகும்).
ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளியஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோநாணுடையாள் பெற்ற நலம். 386
விளக்கம்: இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.
கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்றுஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வாநன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையும் தோய வரும். 387
விளக்கம்: ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம்! அது போல, முழுதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலை போன்ற மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் உடையவர் கற்புடை மகளிர்).
கொடியவை கூறாதி பாண! நீ கூறின்அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்வலக்கண் அனையார்க்கு உரை. 388
விளக்கம்: பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவா¢ன் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).
சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீதுஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்நோக்கி இருந்தேனும் யான். 389
விளக்கம்: கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இப்போது, தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் யானே! (தம் கணவர் பரத்தையரைக் கூடிய போதும் கற்புடை மகளிர் பொறுத்திருக்கும் இயல்பினர் என்பது கருத்து).
அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்றுபெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்இடைக்கண் அனையார்க்கு உரை. 390
விளக்கம்: பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். 'மறுமையிலாவது தலைவனின் அன்பைப் பெறவேண்டும்' எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி கூறும் கருத்து இந்தப் பாடலுடன் ஒப்பிடத் தக்கது).
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை - (கொன்றை வேந்தன் 14)
(பதவுரை) கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம்.
(பொழிப்புரை) மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமையாம்.
நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்தாற்போல்கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலாமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்காக்கை உகக்கும் பிணம் - (மூதுரை 25)
[கயம் = குளம்; காம் = விருப்பம்; காமுறு = விரும்பு; கற்பு = கல்வி, பயிற்சி, நன்னடத்தைப் பயிற்சி; முக, உக = விரும்பு]
(பதவுரை) கயத்தின் - குளத்தில் உள்ள, நல் தாமரை - நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந்தாற்போல் - நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கல்வி யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில் - புறங்காட்டில் உள்ள, பிணம் - பிணத்தை, காக்கை உகக்கும் - காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை - கல்வியில்லாத மூடரை, மூர்க்கர் - மூடரே, முகப்பர் - விரும்புவர்.
(பொழிப்புரை) கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர் எ - ம். (24)
நாலாயிர திவ்ய பிரபந்தம்
2058: வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாளவடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்தவேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,கற்புடைய மடக்கன்னி காவல் பூண்டகடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,பொற்புடைய மலையரையன் பணிய நின்றபூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7
3407 பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு, மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு, நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என் கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 6.6.10
3410 ஊரும் நாடும் உலகும் தன்னைப்போல், அவனுடைய பேரும் தார்களு மேபிதற்றக் கற்பு வானிடறி, சேருநல் வளஞ்சேர் பழனத் திருகோ ளூர்க்கே, போருங் கொலுரை யீர்க்கொடி யேன்கொடி பூவைகளே. 6.7.2
இஸ்லாம்
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். (குர்ஆன் 23:5)
24:30. (நபியே!) நம்பிக்கையாளர் ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
24:31. இன்னும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்; தங்கள் அலங்காரத்தை - அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும், தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்; மேலும் (நம்பிக்கையாளர்களான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்.
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.
70:29. அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக்கொள்கிறார்களே அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232)
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்‘ என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விட ரோஷக்காரன்” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3000)
“கண்ணியமும் மகிமையும் நிறைந்த அல்லாஹ், இறுதி நாளில் மூன்று பேர்களைப் பார்க்க மாட்டான். 1. தன் பெற்றோருக்கு மாறு செய்தவன். 2. ஆணைப் போல் காட்சியளிக்கும் பெண். 3. மனைவி விவகாரத்தில் ரோஷமில்லாதவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: பஸ்ஸார்)
கற்பியல்
பதிலளிநீக்கு160 களவுங் கற்பும் அலர்வரை வின்றே.
https://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=1106&book_id=1&head_id=3