கோவிலில் உள்ளவன் இறைவனா? கடமைக்காக இறைவனை வணங்கலாமா?

இறைவன் படைத்த கற்களை கொண்டு, யாரும் கண்டிராத இறைவனை மனிதனால் படைக்க முடியுமா?

இறைவன் பயப்பட தகுதியானவன், இறைவன் அன்பு செய்யவும் தகுதியானவன். எனவேதான் அதை பயபக்தி என்கிறோம்.

கோவிலில் வழிபாடு எதற்காக என்றால் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி இணக்கமாக இருப்பதற்காகவே, ஆனால் அங்கே சிலையை இணைத்த பிறகு அதற்க்கெதிராக பேசிய சித்தர்களின் பாடல்கள் இங்கே.

திருமூலர்

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' - (திருமந்திரம்)

"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந்திரம் 2614)

சிவவாக்கியர்

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே (சிவவாக்கியம்)

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ. (சிவவாக்கியம்)  

கிறிஸ்தவம்

ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7) 
யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! (யாத்திராகமம் 20:14)  

இஸ்லாம்

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (குர்ஆன் 5-90) 

கடமைக்காக இறைவனை வழிபடலாமா?

கூடாது. ஏன் கூடாது? என்று அறிய விரும்பினால் வணக்க வழிபாடு என்றால் என்ன? என்று நாம் அறிய வேண்டும்.

இறைவனுக்கு வழிப்படுதல் என்றால், அவனது அறிவுரையை ஏற்று நடப்பது என்று பொருள். அவனது சொற்கள் எது? அவன் வழங்கிய வேதங்கள்.! ஒவ்வொரு மொழிக்கும் வேதம் உண்டு, ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் அதை கற்று புரிந்து செயல்படுத்த முடியும் என்பதற்காக.! 

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்

நன்மை என்று நாமாக ஒன்றை தீர்மானித்து செய்ய முடியாது. வேதத்தில் சொல்லப்படவைகள் தான் அறம் (அ) நற்செயல் (அ) புண்ணியம் ஆகும். எனவே இறைவன் வழங்கிய வேதத்தை கற்று அது கூறும் அறத்தை செயல்படுத்தலே வழிபடுதல் ஆகும், அதுவே வழிபாடு ஆகும். அவ்வேதமே இறைவனை வணங்கும் முறையையும் அறமாக வகுத்துத் தரும், அதுவே இறைவணக்க முறை ஆகும். இதுதான் சுருக்கமாக வணக்கவழிபாடு என்று அழைக்கப் படுகிறது. 

இறைவனை வணங்குதல் என்பது வேறு, வழிபடுதல் என்பது வேறு. 

கடமைக்காக ஒருவர் இறைவனை வழிப்படக்கூடாது. மேற் சொன்ன விளக்கம் புரிந்தால், கடமைக்காக ஒருவர் இறைவனை வழிப்பட முடியாது என்றும் விளங்கிக்கொள்ளலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக