தமிழர் சமயம்
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் (அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:658)
பொழிப்பு (மு வரதராசன்): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
இஸ்லாம்
..."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (குர்ஆன் 6:151)
நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- (புகாரி, முஸ்லிம்)
கிறிஸ்தவம்
அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை பின்பற்றாமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான். (2 இரா. 22:13)
தீமையினை நன்மையினாலே வெல் பாடல் - 109
பதிலளிநீக்குஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கு நால்மடங்கே என்ப - ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ஒறு.
விளக்கவுரை மனமே, என்னைத் துன்புறுத்துபவர்களை நான் துன்புறுத்துவேன் என்றும், தீயவருக்கும் கொடியவன் ஆவேன் என்றும், என்னை வெறுப்பவர்க்கு நான்கு மடங்கு வெறுப்பேன் என்றும் உலகத்தவர் உரைப்பர். நீ இவற்றை மேற்கொண்டு மற்றவரை அடக்கச் செல்வாயானால் ஆசை அறியாமை வெகுளி என்னும் இவை இம்மூன்றும் நின்னை மேற்கொள்ளும் பகைகளாய்த் தோன்றும் (ஆதலால்) உன்னிடம் இவை உளவாகாவாறு அடக்கு https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html