இறைவனின் வரையறைக? : திருமந்திரம் & திருக்குர்ஆன்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே

(திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான திருமந்திரத்துக்கு கிபி 1900 களின் நடுவில் பொழிப்புரை எழுதிய பொழிப்புரையாளர்களின் விளக்கத்தை விளக்கி வைத்துவிட்டு  இந்த பாடலுக்கான விளக்கத்தை திருமந்திரத்தில் இருந்தே எடுப்பதுதான் சரியான வழிமுறை. 

சொல்லுக்கு சொல் விளக்கம்:

ஒன்றவன் தானே – தானே ஒரே ஒருவனாய் உருவானவன்: ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதவன் எனபதுதான் ஒன்று என்பதன் விளக்கம். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் லிங்கமும் சிலையும் படமும் புராணமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல. 

அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (குர்ஆன் 112:1&3)

இரண்டவன் இன்னருள் – நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் தீமை நேர்ந்தால், “இது உம்மிடமிருந்து வந்தது” (நபியே!) என்கிறார்கள். நீர் கூறுவீராக: “எல்லாமே அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன.” ஆனால், இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது, ஒரு உண்மையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும் அளவிற்கு? உனக்கு நேர்வது எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு நேரிடுவது எல்லாம் உன்னிடமிருந்தே வருகிறது… (குர்ஆன்  4:78-79)

நின்றனன் மூன்றினுள் – நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு,  இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை: உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே. 

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40) 

இந்த முத்தொழிலில் இறைவன் தானுடன் யாரையாவது கூட்டாக ளளது தனக்கு இணையாக வைத்த்து உள்ளானா?

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110 
 
பொழிப்புரை: இறைவனை மூன்று ஐந்து என கருதுபவர்கள் இறைவனை அறியாத அறிவில்லாத குருடர்கள் ஆவர். இவாறு சிவன் விஷ்ணு பிரம்மன் என்று கூறுகிறவர்கள் உளறுகிறாரே தவிர வேறு இல்லை.

(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை. (குர்ஆன் 18:26)
 
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (குர்ஆன் 5:73)

நான்கு உணர்ந்தான் – நான்மறைகளையும் உணர்ந்தவன். நான்மறை என்பது என்ன? அது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் குறிக்கிறது.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)
 
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (குர்ஆன் 43:4)

குறிப்பு: உலக நான்மறைகள் னைத்தும் இந்த  லவ்ஹுல் மஹ்ஃபூளின் ஒரு பகுதியாகும்.

ஐந்து வென்றனன் – பிறப்பு, பசி, காமம், தூக்கம், இறப்பு என ஐந்தின் பிடியில் இல்லாதவன். அல்லது இது ஐம்புலன்களை (மெய், வாய், கண், மூக்கு, செவி) அல்லது ஐந்து இந்திரியங்களை வென்றவன் (இறைவன்/யோகி) என்று பொருள்படும். இது உடலின் ஐம்பொறி ஆசைகளை அடக்கிய முழுமையான கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இவை இரண்டுமே உலகில் மனிதனுக்கு இருக்க கூடிய தேவைகள் அல்லாதவன் என்ற பொருளை தருகிறது.

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
(குர்ஆன் 35:15)

ஆறு விரிந்தனன் – மந்திரம்:மறை, பதம்:உணவு, வன்னம்:எழுத்து, புவனம்:உலகம், தத்துவம்:உண்மை, கலை:மொழி என்னும் ஆறாக விரிந்தனன் என்று 19 ஆம் நூற்றாண்டில் விளக்கம் கொடுக்கப்பட்ட்டது. ஆனால் ஆறு நாட்களில் உலகை படைத்தான் என்பதுதான் உண்மைக்கு நெருக்கமான விளக்கம் ஆகும். 

“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் ; மேலும், அவன் அர்ஷில் உறுதியாக நிலைபெற்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆளுகிறான். அவனது அனுமதியைப் பெற்றாலன்றி, எந்தப் பரிந்துரைப்பவரும் அவனிடம் முறையிட முடியாது. இவனே உங்கள் இறைவன் அல்லாஹ்; எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்: நீங்கள் அறிவுரை பெற மாட்டீர்களா?” (ஸூரா யூனுஸ் 10.3)

எழு உம்பர் சென்றனன் – பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (திருமந்திரம் 1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

இருந்தான் உணர்ந்து எட்டே – தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.
  1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
  2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
  3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
  4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
  5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
  6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
  7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
  8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
திருமூலரின் திருமந்திரம் குறிப்பிட்ட இறைவனது எட்டு குணங்களை திருக்\குறளிலிருந்து விளக்கியதன் காரணம் ஓளவையார்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர் - ஓளவையார், நல்வழி பா.40

முடிவுரை :

ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html
http://araneriislam.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm

1 கருத்து:

  1. (நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள். 34:6

    முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக! 36:2

    பதிலளிநீக்கு