கவலை நீங்க ஒரே வழி

தமிழர் சமயம்


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. (1:1:07)


விளக்கவுரை தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது. 

குர்ஆன்

 யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124) 

 நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன' - (குர்ஆன் 13:28) 

பைபிள்

 உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து. அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. - (சங்கீதம் 119:111)

உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.  (சங்கீதம் 70:4)

“தன்னைப் பிரியப்படுத்துபவனுக்கு, கடவுள் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் தருகிறார்..." - (பிரசங்கி 2:26) 

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும் பாவிகளைப்போன்று வாழாமலும் தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும் இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். - (சங்கீதம்1)  

பகவத் கீதை


ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)

முடிவுரை

பயபக்தியுடன் படைத்த அந்த ஆதிநாதனை வணங்கி வழிபடுவதால் மட்டும்தான் உலக வாழ்வின் பிரதான நோக்கமான அமைதி கிட்டும். அது அல்லாமல் செல்வம், கேளிக்கை, மது, மாது பிள்ளைச்செல்வம் போன்ற எதுவும் நிம்மதிக்கு வழிவகுக்காது.  



எப்பொழுது பொய் சொல்லலாம்?

தமிழர் சமயம் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (குறள் - 292)

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும் 

இஸ்லாம் 

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ  அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். நூல்: முஸ்லிம் 5079








எது உண்மையான பைபிள் !!!

தேவர்கள் மூலம் தூதர்களுக்கு வருவது தான் வேதம்

தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால், மாபெரும் மீட்பின் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு நம்மால் எப்படித் தப்பிக்க முடியும்? (எபிரெயர் 2:2&3)

இயேசு அதைதான் போதிப்பார் அதன்படி மட்டும்தான் தான் செயல்படுவார்.

ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். (யோவான் 6:38)


கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7)

வேதம் மனமகிழ்ச்சி தரும் (சங்கீதம் 119:92)

இறைவனின் வார்த்தை தேவதூதர்கள் வாயிலாக மெசாயாவுக்கு கொடுக்கப்பட்டு அது மக்களுக்கு போதிக்கப் படுபவைகளுக்கு பெயர் தான் வேதம். அப்படிப்பட்ட வேதம் தான் மக்களுக்கு மன மகிழ்ச்சியைத்தரும். ஆனால் ஏசுவின் வார்த்தை அல்லாத பல அத்தியாயங்கள் பைபிளில் எழுதபட்டுள்ளதா? இருந்தால் அவைகள் தேவ வாக்கியங்களாகுமா? வேத வாக்கியங்களாகுமா?

வேதவாக்கியங்களில் கூட்டவோ குறைக்கவோ மக்களுக்கு அதிகாரம் உண்டா?

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். (வெளிப்படுத்துதல் 22:18)

இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)

இந்த செய்த்தைகளை நமக்கு தருபவர் யோவான் (ஜான்) ஆவார்.


வெளிப்படுத்துதலின் ஆசிரியர் அப்போஸ்தலன் யோவான் அல்லது அவர் தன்னை இயேசு நேசித்த சீடர் என்று அழைத்தார். ஜான் புதிய ஏற்பாட்டில் ஐந்து புத்தகங்களை எழுதியவர்: 

- யோவான் நற்செய்தி (இங்குதான் அவர் தன்னை இயேசு நேசித்த சீடராக அடையாளம் காட்டுகிறார்)
- 1 ஜான்
- 2 ஜான்
- 3 ஜான்
- வெளிப்படுத்துதல்

ஜான் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர், அவர் பீட்டர் மற்றும் ஜேம்ஸுடன் "உள் வட்டத்தின்" ஒரு பகுதியாகவும் இருந்தார். மற்ற சீடர்கள் அனுபவிக்காத சில விஷயங்களை இயேசுவுடன் அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. இவற்றில் மிகப் பெரிய ஒன்று அவர்கள் இயேசுவுடன் மலையில் இருந்தபோது அவருடைய உருமாற்றத்தைக் கண்டபோது நடந்தது. மத்தேயு 17, மாற்கு 9 மற்றும் லூக்கா 9ல் இதைப் பற்றி நீங்கள் படிக்கலாம். எனவே ஜான்-இன் செய்திகள் நம்பத்தகுந்த ஆதாரமிக்க செய்தியாகும்.

யோவானால் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நற்செய்தி சிலவற்றை மறுப்பதற்க்காக அவரின் நம்பக தன்மையில் கேள்வி எழுப்பிக்கின்றனர். அதற்க்கான ஆதாரமாக அவரது வயதையும் இந்த சுவிசேஷம் எழுதப்பட்டகாலமாக சொல்லப் படுவதையும் ஒப்பிட்டு மறுக்கின்றனர். அவர் இயேசுவின் சீடர் தான் என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. மாறாக அவர்கள் மறுப்பே அது "பரிசுத்த வேதாகமம்" என்கிற தகுதியை கேள்விக்குறியாக்குகிறது. அவர்களின் வேதத்தில் அவர்களுக்கே நம்பிக்கை அற்று போன பிறகு நாம் அதை ஏற்பது பொருளற்றது. 

இப்படி இருக்க இன்று நம்மிடம் இருக்கும் பைபிளின் கி.பி 400 வாக்கில் இறுதி செய்யப்பட்டது என்று https://christianity.org.uk கூறுகிறது

 
    • 04 நியமன சுவிசேஷங்கள் - 4 canonical gospels by Matthew, Mark, Luke, & John
    • 01 அப்போஸ்தலர்களின் செயல்கள் - The Acts of the Apostles by Luke - and he is the student of Paul.
    • 14 பவுலின் நிருபங்கள் - 14 Pauline epistles 
    • 07 பொது நிருபங்கள் மற்றும் - 7 general epistles by James, Peter, John, & Jude
    • 01 வெளிப்படுத்தல் புத்தகம் - The Book of Revelation by John 
27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல், 4ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப், கி.பி. 367ல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் ஹிப்போ (393) மற்றும் கார்தேஜ் (397) சபைகளின் போது முதன்முதலில் இறுதி செய்யப்பட்டது. இதில் முதல் நான்கு நியமன சுவிசேஷங்கள் மத்தேயு, மார்க், லூக்கா மற்றும் ஜான். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையின் அதே அடிப்படைக் கோட்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

விடியற்காலையில், அவர் தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார், அவர்களில் அவர் அப்போஸ்தலர்களாகவும் நியமிக்கப்பட்டார்:  
 
1) சைமன் (அவருக்கு அவர் பேதுரு (Peter) என்று பெயரிட்டார்), 
2) அவருடைய சகோதரர் ஆண்ட்ரூ
3) ஜேம்ஸ்
4) ஜான்
5) பிலிப், 
6) பர்த்தலோமிவ்,
7) மத்தேயு
8) தாமஸ்
9) அல்பேயுவின் மகன் ஜேம்ஸ்
10) வைராக்கியம் என்று அழைக்கப்பட்ட சைமன்
11) ஜேம்ஸின் மகன் யூதாஸ் மற்றும் 
12) துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோட். — லூக்கா 6:12–16

எனவே யூதாஸ் தவிர்த்து 
இந்த 11 சீடர்கள் வாயிலாக, அல்லது
இயேசுவுடன் சில நாட்களாவது பயணித்த, அல்லது
குறைந்த பட்சம் இயேசுவை நேரடியாக கண்ட, அல்லது
ஆகக் குறைந்த பட்சமாக இயேசு காலத்தில் வாழ்ந்த மக்கள் மூலம் 
இயேசு சொன்ன அல்லது செய்த செய்திகள் பைபிளில் இடம் பெறலாம்.

அந்த அடிப்படையில் மார்க்-இன் சுவிசேஷங்களை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவருடைய தாயார் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களில் முக்கியமானவர். அப்போஸ்தலர் 12:12 எருசலேமில் உள்ள அவளது வீடு மற்ற சீஷர்களுக்கு கூடும் இடமாக பயன் படுத்தப்பட்டது என்று நமக்கு சொல்கிறது. இந்த வசனத்திலிருந்து அவளது மகனின் முழுப்பெயர் ஜான் மார்க் என்பதையும் அறிகிறோம். - churchofjesuschrist.org 

ஆனால் இயேசு அவர்களுடன் நேரடி தொடர்பை கொண்ட நபர்களில் பேதுரு, ஜான், மத்தேயு, ஜேம்ஸ், ஜூடா மற்றும் மார்க் ஆகியோரின் நற்செய்திகள் மட்டுமே பைபிளில் ஹிப்போ (கி.பி 393) மற்றும் கார்தேஜ் (கி.பி 397) சபைகளினால் சேர்க்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளிப்படுத்துதல் 22:19 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் உண்மை பைபிளின் ஒரு பகுதி நீக்கப்ட்டு உள்ளது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

மேலும், இயேசுவின் சீடர்கள் அல்லாத பால் மற்றும் லூக்கா ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்கள் அலல்து சுவிஷேஷங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது வெளிப்படுத்துதல் 22:18 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் தேவனின் வார்த்தைகள் அல்லாத ஒரு பகுதி பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது.

எதை சேர்த்தார்கள் என்று கூட ஓரளவு கண்டு பிடிக்கலாம், எதை எல்லாம் நீக்கினார்கள் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? 

அப்போஸ்தலர்களின் செயல்கள் என்பது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தலர்களின் ஊழியம் மற்றும் செயல்பாட்டின் விவரிப்பாகும், அந்த இடத்திலிருந்து அது மீண்டும் தொடங்கி லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக செயல்படுகிறது. நடை, சொற்றொடர்கள் மற்றும் பிற சான்றுகளை ஆராயும் போது, ​​நவீன புலமைத்துவம் பொதுவாக, அப்போஸ்தலர் மற்றும் லூக்காவின் சுவிசேஷம் ஒரே ஆசிரியரைப் பகிர்ந்து கொள்கிறது, லூக்கா-அப்ஸ் என குறிப்பிடப்படுகிறது. லூக்-ஆக்ட்ஸ் அதன் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தேவாலய பாரம்பரியம் அவரை லூக் தி சுவிசேஷகர் என 200 ஆண்டுகளுக்கு பின் வந்த பவுலின் துணையுடன் அடையாளப்படுத்தியது, ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் சட்டங்கள் மற்றும் உண்மையான பவுலின் கடிதங்களுக்கு இடையே உள்ள பல வேறுபாடுகள் காரணமாக இதை நிராகரிக்கின்றனர். 80-100 கி.பி. மிகவும் சாத்தியமான தேதியாக இருக்கலாம், இருப்பினும் சில அறிஞர்கள் அதை கணிசமாக பிற்காலத்தில் தேதியிட்டனர், மேலும் இது 2-ஆம் நூற்றாண்டிலும் கணிசமான அளவில் திருத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

ரெட் பைபிள் (சிகப்பு விவிலியம்) என்பது கிறிஸ்துவின் உண்மையான வார்த்தைகள், மேற்கோள்கள், மற்றும் குறிப்புகள், அவற்றின் சூழலில் இருந்து பிரிக்கப்படாமல், அல்லது துண்டு துண்டான அல்லது துண்டிக்கப்பட்ட வடிவத்தில், ஆனால் அவற்றின் சொந்த இடத்தில், பதிவின் ஒருங்கிணைந்த பகுதியாக,சிவப்பு வண்ண வேறுபாட்டில் தெளிவாகத் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் அல்லாதவைகள் கறுப்பிலே பிரசுரிக்கப் பட்டு இருக்கும். 

முடிவுரை

எனவே கூடுதலாக சேர்க்கவும் நீக்கவும் யாருக்கும் அனுமதி இல்லாத பைபிளில் 200 ஆண்டுகளுக்குப் பின் இயேசு சொல்லாத வார்த்தைகளை சேர்த்ததற்கான ஆதாரமும் இயேசுவின் சீடர்களின் நற்செய்திகளை நீக்கியதற்கான ஆதாரமும், அவ்வாறு சேர்த்து நீக்கியவைகள் இயேசுவின் போதனைக்கு எதிராக இருப்பதற்கான ஆதாரங்களும் பைபிள் முழுதும் வரலாறு நெடுக்கும் கொட்டிக் கிடைப்பதை காணலாம்.

மொழிபெயர்ப்புகளும் பைபிளின் அடிப்படை சாரத்தை சிதைப்பதை யாராலும் மறுக்க முடியாது. விரிவாக இங்கே காண்க. இயேசுவின் உண்மையான சீடர்களின் வேறு நற்செய்திகளை இங்கே காண்க

தேவர்களை வணங்கலாமா ?

தமிழர் சமயம்

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்

உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்

சிலப்பறி யார் சில தேவரை நாடித்

தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே

(நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 45)


பொழிப்புரை இறைவனை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. - (அருங்கலச்செப்பு தேவ மூடம் 31) 

இஸ்லாம்

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80)

கிறிஸ்தவம்

 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். 9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான். (வெளிப்படுத்துதல் 22:8-9) 
 
சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. (கொலோசெயர் 2:18) 

முடிவுரை 

தெய்வம் ஒன்று என்பதும், அது மட்டுமே வணங்கி வழிபட தகுதி படைத்தது என்கிற கருத்து தேவர்கள் வணங்கி வழிபட தகுதி அற்றவர்கள் என்று மறைமுகமாக கூறுவதோடு மட்டுமல்லாமல் மேற்சொன்ன வசனங்கள் மூலம் நேரடியாகவும் கூறுகிறது. தேவர்களே வெளிப்பட தகுதி அற்றவர்கள் என்கிற பொழுது நாம வணங்கும் தாய் தந்தை முன்னோர்கள் விலங்குகள் இயற்கை சிலைகள் படங்கள் எல்லாம் எந்த அளவு ஒதுக்கப்பட வேண்டியது எனபதை உணர்வோம்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

தமிழர் சமயம்


மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் - 28.1

பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு  இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று கூறுவதன் மூலம் இறைவனை உணரத்தான் முடியும் என்கிறார்.

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்: கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான் [தெரிபட மாட்டன்]  

இஸ்லாம் 


பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)

கிறிஸ்தவம் 


தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18) 

 தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4)