கடவுள் வாழ்த்து
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா
மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா
நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா
எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா
என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா
எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா
இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிரை யாக்குமப்பா
வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா..!
வறுமையிலும் தர்மம்
தமிழர் சமயம்
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்செய்வர் செயற் பாலவை. - (நாலடியார் 185)
பொருள்: (மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை).
இஸ்லாம்
தங்களுக்கு இல்லை என்றாலும் தாங்கள் கடுமையான வறுமையில் பட்டினியில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கத்தான் அவர்கள் முன் வருவார்கள். யார் உள்ளத்தின் நப்ஸ் உடைய கஞ்சதனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். (குர்ஆன் 59:9)
”அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) (நூல்: புகாரி 1413, 6539)
கிறிஸ்தவம்
இயேசு நிமிர்ந்து பார்த்தார், பணக்காரர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கை பெட்டியில் வைப்பதைக் கண்டார், மேலும் ஒரு ஏழை விதவை இரண்டு சிறிய செப்புக் காசுகளைப் போட்டதைக் கண்டார். மேலும் அவர், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை அவர்கள் அனைவரையும் விட அதிகமாகப் போட்டாள். ஏனென்றால், அவர்கள் அனைவரும் தங்கள் மிகுதியிலிருந்து பங்களித்தார்கள், ஆனால் அவள் வறுமையிலிருந்து தான் வாழ வேண்டிய அனைத்தையும் செய்தாள். (லூக்கா 21:1-4)
ஒவ்வொரு நிலத்துக்கும் மொழிக்கும் வேதம் உண்டு
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். - குறள் 28
பதவுரை :
நிறைமொழி - முழுமையான சொல்
மாந்தர் - மனிதர்
பெருமை - பெருமை
நிலத்து மறைமொழி - அந்த நிலத்தின் மறை நூல்
காட்டி விடும் - அடையாளம் காட்டும்
உரை: ஒரு சொல் எப்பொழுது முழுமை பெரும்? சொன்னனது படி நடக்கும் பொழுது ஆகும். எனவே சொன்ன சொல் பிபற்றிய மனிதரின் பெருமை பற்றி அந்த நிலத்த்தின் மறைநூல் அடையாளம் காட்டும்.
குறிப்பு: ஒவ்வொருநிலத்துக்கும் ஒரு மறை நூல் உண்டு என்பதை இக்குறள் உறுதிப்படுத்துகிறது. எனவே வேதம் என்றால் வடமொழி வேதத்தை மட்டும் சுட்டுவதும், தமிழில் மறைநூல் இல்லை என கூறுவதும் பெரும் பிழை ஆகும்.
இஸ்லாம்
மறைநூல் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)
பிற்காலத்தில் மொழிகள் வேறுபட்டதும், ஒவ்வொரு மொழிக்கும் வேதம் வழங்கப் பட்டது (ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முதல் நூல் உண்டு)
"ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்-ஆன் 10:47)
இஸ்லாம் இறுதி சமயமாகவும், முகமது நபி அவர்கள் இறுதி தூதராகவும், குர்ஆன் இறுதி தூதராகவும் இருப்பதால், அவரது காலத்துக்கு முன் உள்ள மொழிகளில் எல்லாம் ஏதம் கொடுக்க பட்டு உள்ளது. அதற்கு பிறகு வந்த மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுகு போன்ற மொழிகளில் வேதம் இருக்கவில்லை.
























