கிறிஸ்தவம் & யூதம்
16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)
இஸ்லாம்
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)
எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 2:192)
'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள் மக்காவை வெற்றி கொள்ளுங்கள் அங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 28)
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)
'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)
முடிவுரை
இறைவனை அவன் தந்த கட்டளையை இவர்கள் மறுக்க செய்வார்கள் என்கிற அடிப்படையில் ஒரு நாட்டின் படைக்கு, அதன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சட்டம் ஆகும். இது தனி மனிதன் இன்னொரு தனிமனிதனை கொலை செய்வதை ஆதரிக்கும் சட்டமல்ல.