இறைவனின் நாட்டத்தை தவிர வேறு எதுவும் நடக்காது


தமிழர் சமயம் 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - (குறள் 377)

உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம் 

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! - (குர்ஆன் 9:51)

கிறித்தவம் 

அதற்கு ஜான் பதிலளித்தார், “ஒரு நபர் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதை மட்டுமே பெற முடியும். (யோவான் 3:27)

பூமி எதிர் திசையில் சுழலத் தொடங்கினால் என்னவாகும்? : அறிவியல் தீர்க்க தரிசனங்கள் - 02

காலத்துக்கு ஏற்ற கேள்வி. ஏற்கனவே உள்பகுதி எதிர் திசையில் சுழல ஆர்மபித்து விட்டதாம்.

மேலுள்ள செய்தி குறிப்பிட்டு இருப்பது போல மையப்பகுதியின் வேகம் அல்லது திசை மாறுவதற்கான காரணம் என்ன?

உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். (திருக்குர்ஆன் 16:15)

தங்கம், நிலக்கரி, வைரம், லித்தியம் போன்றவைகளுக்காக மலைகளை குடைவதும், கிரானைட் போன்றவைகளுக்காக மலைகளை உடைத்ததும், தொடந்து உடைப்பதும், போட்டி போட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் துளையிட்ட ப்ரொஜெக்ட்டும் சில காரணங்களாக இருக்கலாம். ஏனென்றால் மலைகளை உள்ளும் புறமும் சேதப்படுத்துவது அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த காரணத்தை வலுவிழக்கச் செய்கிறது.

சரி இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு
  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்
  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்
  • பருவநிலை மாறுபடலாம்

இதை யாராவது முன்பே கணித்து உள்ளார்களா?

ஆம். ஆனால் அதை கணிப்பு என்று சொல்ல முடியாது. அது ஒரு டிவைன் மெசேஜ் என்று கூறலாம். அதாவது தொல்காப்பிய நூல்விதி கூறுவது போல.

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தை ஒத்த அந்த நாள், நாம் ஒரு நாளுக்கு உரியதை மட்டும் தொழுதால் போதுமா?". அவர் நபி அவர்கள், "இல்லை, ஆனால் கணக்கிட்டு தொழுங்கள்!" என்றார். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரலி)

  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் –“சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது”அறிவிப்பவர் அபூஹுரைரா(ரழி)நூல் (புகாரி 6506)

சூரியன் மேற்கிலிருந்து உதித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)

  • பருவநிலை மாறுபடலாம்
அரேபியாவின் நிலம் புல்வெளிகளாகவும் ஆறுகளாகவும் மாறும் வரை கடைசி நேரம் வராது." [முஸ்லிம் 157 c] 
 

 

 இந்த பதிவுக்காக மீள் வாசிப்பு செய்யும்பொழுது உள்ளுக்குள் பதட்டம் அதிகரிக்கிறது. உலக அழிவுநாள் மிக அருகில் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. மேலும் சில முன்னறிவிப்புகள் பட்டியல் உங்களுக்காக.

  • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கபப்டும்
  • பாலை வனம் சோலை வனமாகும்
  • காலம் சுருங்குதல்: அதாவது நாள் மிக வேகமாக ஓடுவது.
  • கொலைகள் பெருகுதல்
  • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
  • நெருக்கமான கடை வீதிகள்
  • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • ஆடை அணிந்தும் நிர்வாணம்
  • உயிரற்ற பொருட்கள் பேசுவது
  • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
  • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
  • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
  • செல்வம் பெருகும்
  • மகளின் தயவில் தாய்
  • குடிசைகள் கோபுரமாகும்

பூமியின் ஆழம்: அறிவியல் தீர்க்க தரிசனங்கள் - 01

இந்த பூமியின் மையப்பகுதி என்பது சுமார் 5000 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இருப்பது. இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - பிபிசி

மனிதர்கள் இயந்திரங்களை கொண்டு துளையிட்ட தூரம் 12km. ஆனால் மனிதர்கள் அடைந்த தூரம் எவ்வளவு?

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (அல்குர்ஆன் 17:37)

மிக உயாமான எவெரெஸ்ட்டின் உயரம் 8848 மீட்டர் அதாவது 8.8 கிமீ.

மனிதர்கள் அதனுள்ளே சென்று அடைந்தது என்று பார்த்தால் அதிக பட்சம் 4 கிலோமீட்டர் மட்டுமே.

எனவே இன்னும் மனிதன் உள்ளே செல்ல முடியும் என்றால் மேலும் ஒரு 4.8 கிமீ முயற்சிக்கலாம்.

இஸ்லாம் இறைவனிடம் இருந்து வந்த சமயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

குறளை பைபிளோடு ஒப்பிடுவது சரியா?

புலால் மறுத்தல் என்னும் ஒரு அதிகாரத்தை எழுதிய வள்ளுவரை எல்லா உயிரினங்களையும் அடித்து துன்புறுத்தித் தின்னும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர் என்று சொல்லுவது வெட்கக்கேடாக இல்லையா அவர்கள் எப்பேர்பட்ட கீழ் மக்கள்

புலால் மறுத்தல் அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டது என்பதை ஏற்பதே கடினமாக உள்ளது. அதற்கு சில காரணங்கள் உண்டு.

  1. குறளின் மற்ற அதிகாரங்களில் உள்ள பாடல்களின் சுவைக்கும் வார்த்தை பயன்பாட்டுக்கும் இந்த அதிகார பாடல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை இந்த அதிகாரம் குறளுக்கு பொருந்தமால் இருப்பதை உணர முடிகிறது. இந்த பாடல்களில் ஒருசில பொருட் பிழைகளும் உண்டு. திருக்குறளில் இடைசொருகள் இருப்பதாக வாவுசி கருதுகிறார், நானும் அவ்வாறே. ஆனால் ஆதிகரங்கள் வேறு வேறு.

2. தேவர் குறளும் மூலர் சொல்லும் ஒன்றே என்று கூறும் ஒளவையாரின் நல்வழி பாடலை கொண்டு ஆராய்ந்தால் திருமந்திரம் கெட்ட புலாலை (பொல்லாப் புலால், பாதக மாம்) மட்டுமே கூடாது என்று கூறுகிறது. புலால் என்றாலே கெட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இந்த பாடல்களில் இல்லை.

3. நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும் எனவே நான்மறை முடிவும் குறளும் ஒன்றே என்றால் குரான், பைபிள், தோரா, ரிக், யஜூர், சாமம், குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், உட்பட பல்வேறு மொழிகளில் உள்ள மறை நூல்களும் ஒன்றுகொன்று முரண்பட முடியாது என்று பொருள். அவ்வாறு இருக்க குறளில் மட்டும் எவ்வாறு புலால் மறுப்பு இருக்க முடியும்?

4. சிவவாகியரும் புலால் மறுப்பு என்ற கருத்து சைவத்தில் இல்லை என்று கூறுகிறார்.

5. புலால் உண்ணாமை என்பது பௌத்தம் போன்ற நாத்தீக சமயங்களில் இருந்து எடுத்து கொள்ளப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

6. பிராமண எதிர்ப்பிர்க்காக புலால் மறுப்பை குறளில் வைத்துள்ளார் வள்ளுவர் என்ற கருத்து உண்டு ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

7) குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 4) என்று தமிழ் கூறும் பொழுது பைபிள் மறை நூலா என்று அறிய இந்த ஒப்பீடு பயன்படும்

8) குறள் என்றால் சுருக்கமாக என்று பொருள். எனவே உலகில் உள்ள வேதங்கள் அனைத்தின் சுருக்கம் திருக்குறள் என்றும் பொருள் கொள்ளலாம்.

உதாரணம்:

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு. . . . .[திரிகடுகம் 37]

பொருள்: சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

எனவே புலால் மறுப்பு அதிகாரத்தை ஆதாரமாக கொண்டு பைபிள் மற்றும் குறளை ஒப்பிடுவதை விமர்சிப்பது பொருந்தாது. குறளை உலகில் வேதம் என கூறப்படும் எந்த ஒரு நூலோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். 

சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா?

 சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா என்று ஆய்வு செய்ய முதலில் சந்தானம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

சனாதன தர்மத்துக்கு ஆரிய மதம் என்று இன்னொரு பெயரும் உண்டு. அது பிற்கலத்தில் இந்து மதம் என்று அழைக்கப்பட்டது.

சரி இந்த ஆரியர்கள் யார்? இன்றைய தீவிர இந்து தேசியவாதம் பேசும் மக்களின் முன்னோடிகளான கோல்வால்கர் மற்றும் விவேகானந்தர் ஆகியோர் வட புலத்திலிருந்தும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்ததாக முறையே ஒப்பு கொள்கின்றனர். ஆனால் அக்காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதி என்கின்றனர்.

ஆனால் இவர்களின் கருத்துக்கு வரலாற்று இந்தியாவின் எல்லை முரண்படுகிறது. உதாரணமாக,

  • இமயம் முதல் கடல்கொண்ட குமரிவரை தமிழ் ஆண்டதற்கான பல்வேறு தரவுகள் கிடைக்க பெருகின்றன, மேலும் ஒரு நிலத்தில் இரு வேத பாரம்பரியங்கள் தொடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆரியர்கள் இந்த நிலப்பரப்பை சார்ந்தவர்கள் அல்ல.
  • தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம், இரண்டும் தொன்மை வாய்ந்த மொழிகள், ஆனால் தமிழுக்கு தான் சொந்தமாக எழுத்துருக்கள் உள்ளன, வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன. சமஸ்கிருதத்தின் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. எனவே ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல.
  • புவியியல் அமைப்பும் ஆரியர்கள் ஒரு கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைந்து உள்ளது. எனவே ஆரியர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.
  • கோல்வால்கர் சொல்வது போல வடதுருவம் முழுவதும் இந்தியாவுடன் எக்காலத்திலும் இணைந்து இருந்ததில்லை என்கிறது வரலாறு. மேலும் விவேகானந்தர் சொல்வது போல ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் எல்லைக்குள் தொடந்து இருந்ததற்கு ஆதாரமோ அல்லது இன்றைய தென் இந்திய கலாச்சார பண்பாடுகளுடன் ஒன்றி இருந்ததற்கான ஆதாரமோ இல்லை. மேலும் ஆரிய நூல்களில் சொல்லப்பட்ட நில, கால சூழ்நிலைகள் இந்தியாவிற்கு பொருந்தாத உதாரணங்கள். சைவ சமண நூல்களில் சொல்லப்பட்ட பூ காய் கனி விலங்கு நில அமைப்பு போன்றவைகள் தான் இந்த மண்ணுக்கு பொருந்தும் உதாரணங்கள். எனவே ஆரியர்கள் நம்மவர்கள் அல்ல.
  • இன்று இந்தியா எனும் நிலப்பரப்பை ஏறக்குறைய முழுமையாக முதன் முதலில் மௌரியர்கள் கிமு 322-லும், பிறகு மொகலாயர்கள் கிபி 17ஆம் நூற்றாண்டிலும், பிறகு ஆங்கிலேயர்களும் உருவாக்கினார். அதற்கு முன் இப்படி ஒரு ஒன்றிணைந்த கட்டமைப்பே இல்லை. எனவே ஆரியர்கள் அதற்க்கு முன் இந்த மண்ணுக்கு தொடர்புடையவர்களாக இருந்து இருக்க வாய்ப்பில்லை.

இதன் விளைவாக நாம் அறிவது என்னவென்றால் ஆரியர்கள் அவர்கள் பேசும் சம்ஸ்கிருத மொழியில் இயற்றிய வேதத்தை அடிப்படையாக கொண்ட சனாதன மதம் தமிழர்களின் அல்லது இந்தியர்களின் சமயம் அல்ல.

இதன் காரணமாக சனாதனம் தொடர்பான செய்திகள் தமிழர் சமயத்தில் இருக்க வாய்ப்பு இல்லையா என்றால், சமய பாரம்பரியங்கள்தான் வேறே தவிர நான்மறைகளும் அதாவது அனைத்து சமயங்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்கிற அடிப்படையில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால்,

  • இரண்டும் வெவ்வேறு வேத பாரம்பரியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • வேதங்கள் தான் முதன்மையானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • வேதத்துக்கு முரண்படும் புராண இதிகாசங்கள், வேதத்தை திரித்து இயற்ற பட்ட சட்டங்கள் புறந்தள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
  • வேதம் அந்த பாரம்பரியத்தை சார்ந்த எல்லோருக்குமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • எல்லா வேதங்களும் ஒரே மாதிரியான அறத்தைதான் போதிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எல்லாம் ஒன்று என்றால் சனாதனத்தை பின்பற்றலாமா என்றால்? "கூடாது" என்பதுதான் பதில். ஏன்? இறைவனை அறிய விரும்புவோர், இறைவனின் சட்டத்தை பின்பற்ற விரும்புவோர் தத்தம் மொழியில் உள்ள வேதத்தை கற்று செயல்படவேண்டும். மாற்று மொழி சட்டத்தை அல்லது வேதத்தை பின்பற்ற தத்தம் மொழியில் உள்ள வேதத்தில் வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருந்தால் பிழையில்லை. இல்லையேல் 100% மாபெரும் பாவம் ஆகும். அது தனது மொழியில் உள்ள வேதத்தை நிராகரிப்பது ஆகும். அது உலகை படைத்து மக்களுக்கு வெவ்வேறு மொழியில் வெவ்வேறு காலத்தில் வேதத்தை வழங்கிய இறைவனை நிராகரிப்பது ஆகும்.

சைவ நூல்களில் சனாதனம் பற்றிய செய்திகளின் ஆதாரங்கள் என்ன என்று கேட்டால்? ரிக் யஜுர் சாம வேதங்களை அதன் உபநிடதங்களை சமஸ்கிருதத்தில் முறையே கற்றவர் சைவ ஆகம நூல்களான தேவாரம் திருவாசகம் திருமந்திரம் ஆகியவற்றையும் முறையே கற்று இருந்தால் அவர் ஒப்பிட்டு சொன்னால் மிகமிக ஏற்புடையதாகி இருக்கும். மற்றவர்களும் செய்யலாம், ஆனால் அதை ஏற்போர் மிக மிக குறைவு. அவ்வாறு ஒரு நூல் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.