கற்பழிப்பு

தமிழர் சமயம்


கற்பழித்தவனுக்குத தண்டனை அகநானூறு 256

1.       பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! 
 
விளக்கம்: பழமையான சேற்று வயலில் ஆமை மேயும் ஊரனே!
வள்ளைக்கொடி மண்டிக்கிடக்கும் நீர்ச்சோலை. அதில், வளைந்த நகம் கொண்ட ஆமை உறங்கும். கல்லில் மோதிய கல் போல் அது நகரும்.
கிழிந்த வாய் நிறையக் கள் உண்டவன் தள்ளாடி நடப்பது போல அது நடக்கும். வயல்களை நாசமாக்கும். ஆம்பல் இலைக்கடியில் பதுங்கிக்கொள்ளும். இப்படிப்பட்ட நிலம் கொண்ட ஊரன் நீ. 
 
2.       பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை 
 
விளக்கம்: பொய் சொல்லாதே. உன் மாயம் எனக்குத் தெரியும். கையும் களவுமாக நீ பிடிபட்டுக்கொண்டது எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது. 

3.       மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் 
 
விளக்கம்: நேற்று வையைப் புனலில் உன்னவளோடு நீராடி அவளை உரிய முறையில் துய்த்தாய். அதனை அவளது உடன்பரத்தைத் தோழிமார் மறைத்தனர். என்றாலும் அதனை ஊரெல்லாம் பலபடப் பேசுகிறது. 
 
4.       தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், 15
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை, 20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 
 
விளக்கம்கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான்.
அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான். ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர். அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது.
ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர். அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர். அப்போது ஊரே ஆரவாரம் செய்தது. அந்த ஆரவாரம் போல உன் பரத்தை-உறவு பற்றி ஊரார் பேசிக்கொள்கின்றனர்.  
 

இஸ்லாம்


இஸ்லாத்தில் கற்பழிப்புக்கான (இத்திஷாப் / ஜினா பில்-ஜப்ர்) தண்டனையும் விபச்சாரத்திற்க்கான (ஜினா) தண்டனையும் ஒன்றுதான். குற்றவாளி திருமணம் செய்தவராக இருந்தால் கல்லெறியும் தண்டனையும், திருமணம் ஆகவில்லை என்றால் நூறு கசையடிகளும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்படுதலும் ஆகும். 
 
பலாத்காரம் கத்தி முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ நடத்தப்படாவிட்டாலும், கற்பழிப்பாளர் ஜினாவுக்கான ஹுதுத் தண்டனைக்கு உட்பட்டவர். இஸ்லாமிய சட்டத்தில்,  ஹத் என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அல்லது சுன்னாவால்  விதிக்கப்படும் தண்டனையைக் குறிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு ஹத்  உத்தரவாதம் அளிக்கப்பட்டால், நீதிமன்றம் அல்லது அரசு அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்தத் தண்டனைகளைச் செயல்படுத்துவதில் எந்தச் சலுகையும் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயுதம் பயன்படுத்தப்படுவது அச்சுறுத்தப்பட்டால், அவர் ஒரு முஹாரிப் ஆவார், மேலும் அல்லாஹ் கூறும் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஹத் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்  
 
“அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் செய்து, தேசத்தில் அக்கிரமம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் கூலி அவர்கள் கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்களின் கைகளும் கால்களும் எதிரெதிர் பக்கங்களிலிருந்து துண்டிக்கப்படுவதும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் மட்டுமே. அதுவே இவ்வுலகில் அவர்களுக்கு இழிவு, மறுமையில் பெரும் வேதனை அவர்களுக்கு உண்டு” [அல்-மாயிதா 5:33] (IslamQA)  
 

கற்பழிப்பாளர் ஹத் தண்டனைக்கு தகுதியானவர் என்பதற்கு அவருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தால் அல்லது அவர் அதை ஒப்புக்கொண்டால் அவர் ஹட் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். (அல்-இஸ்தித்கார், 7/146)

கற்பழிப்புக்கான ஹத் தண்டனை என்பது கல்லால் அடித்து கொலை செய்வது ஆகும்.  

கிறிஸ்தவம் & யூதம் 

“ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் (கல்லெறிந்து) கொன்றுவிட வேண்டும். அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம். (உபாகமம் 22:25-27)

இந்து மதம்

பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண் நிரபராதி என்றும், கற்பழிப்பில் ஈடுபடும் ஆணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் 
 
    • 8.323. பெண்களை கடத்துபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
    • 8.352. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு தூண்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், இது போன்ற ஒரு குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

குற்றம்: விபச்சாரத்தில் ஈடுபடுதல், பெண்களை சித்திரவதை செய்தல், கட்டாய பாலுறவு தொடர்பு.

தண்டனை: மக்கள் தங்கள் பிறப்புறுப்பு இடைவெளியில் சூடான திடமான வடிவமான தடி மற்றும் தடிகளால் துளைக்கப்படுகிறார்கள், மேலும் யமாவின் வேலைக்காரர்கள் பாதிக்கப்பட்டவரை பின்னால் அடிக்கிறார்கள். 

திருமண சடங்குகள் *

தமிழர் சமயம் 


அநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
"கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
"பேரில் கிழத்தி யாகென" தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

(பதவுரை)
உழுந்து - பருப்பு
களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்
கோள் - கெட்ட கிரகங்கள்
கால் - இடம், சகடம்
திங்களையுடைய நாள் - திருமண நாள்
பொதுசெய் கம்பலை - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் 
பெண்டிர் - அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர்
முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் 
முறை - முறையாகக் கொடுக்க
புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்
அலரி - பூ
வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்
ஓரில் - சதுர்த்தி அறை
உடன்புணர்தல் - கூடப்புணர்கிற
நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை
கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு
சதுர்த்தியறை - நான்காம் நாட் பள்ளியறை  
 
விளக்கவுரை: "எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு' என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினை யுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான். 
 
குறிப்பு: சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது. 
 
புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது. 
 
முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள -
(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை
(2) புரோகிதர் இல்லை.
(3) எரி ஓம்பல் இல்லை.
(4) தீவலம் இல்லை.
(5) அம்மி மிதித்தல் இல்லை.
(6) அருந்ததி காட்டல் இல்லை.
(7) கோத்திரம் கூறல் 
(8) தாலி முதலியன இல்லை

பெற்றோர் கொடுப்பக் கொள்வதுவே

“கற்பெனப்படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல். பொருள். நூ. 140)
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான” (தொல். பொருள் நூ. 141) 
 
‘கற்பு’ என்று சொல்லப்படுவதே திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே என்கிறார் தொல்காப்பியர். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்தல் தான் கற்புடன் கூடிய திருமணம் என்றும், உடன்போக்கு - பெற்றோர் இசைவில்லாது ஆண், பெண் இருவரும் தாமே மணம் புரிந்து கொள்ளுதல் ஆகிய இரு முறைகளிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.

இந்துமதம் 

இன்று இந்துக்கள் என்று தங்களை கருத்திக்கொள்ளக் கூடியவர்கள் திருமண சடங்குகளாக சிலவற்றை நிகழ்த்து கின்றனர். ஆனால் இந்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

  • கன்னிகாதானம் - பெண்ணை மணமுடித்து தருவதாக ஒப்புக் கொள்வது 
  • தாலி - என்பது திருமணமானதிற்கு அடையாளமாக ஏற்பட்டுள்ள ஓர் லௌகீக சம்பிரதாயமே தவிர தாலி என்பது சாஸ்திரத்தின்படி அவசியமானதல்ல.
பிறகு தாலி புனிதம்,சென்டிமென்ட் என்பதெல்லாம் எப்பொழுது யார் ஏற்படுத்தியது? 
 

 இஸ்லாம் 

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (குர்ஆன் 4:21)

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு (மணக்கொடை - ஆண் பெண்ணுக்கு தருவது) அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும். அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும். இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது. 


அத்தை மகள் மாமன் மகளை திருமணம் செய்வது கூடுமா?

தமிழர் சமயம் 

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்.40)

என்னும் இப்பாடலில் தாய் வழியிலும் முறை இல்லை, தந்தை வழி முறையும் இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது. 
 
அக மணம் புற மணம் இரண்டும் அனுமதிக்கப் பட்டுளள்து. அதிலும் தாய் தந்தை இரண்டு வழியிலும் திருமணம் நடைபெற்று வந்துள்ளது. இதில் சின்னம்மா வீட்டில் அல்லது சித்தப்பா வீட்டில் பெண்ணெக்க கூடாது போன்ற எந்த விலக்கும் இல்லை. வேறு எந்த நூலும், பாடலும் இவ்விதி விலக்கை பேசவும் இல்லை. 
 

இந்து மதம் *

இதிலும் இந்து மாதத்தில் வழக்கம் போல பல்வேறு கருத்து நிலவுகிறது.

முதல் கருத்து: சித்தப்பா குழந்தையை தவிர வேறு யாரைவேண்டுமானாலும் மணம் முடிக்கலாம்.

  1. உங்கள் அப்பாவின் சகோதரரின் (சித்தப்பா) குழந்தைகள்.
  2. உங்கள் அப்பாவின் சகோதரியின் (அத்தை) குழந்தைகள்
  3. உங்கள் அம்மாவின் சகோதரரின் (மாமா) குழந்தைகள்.
  4. உங்கள் அம்மாவின் சகோதரியின் (சின்னம்மா) குழந்தைகள்.
இப்போது (1) திருமணம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு ஒரே கோத்திரம் அல்லது சபிண்டா உள்ளது. இது இந்தியாவில் எங்கும் பின்பற்றப்படவில்லை.

திருமணம் (2,3 மற்றும் 4) இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தெற்கில் நடைமுறையில் உள்ளது மற்றும் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல. உதாரணங்களை மகாபாரதத்தில் காணலாம்.

இரண்டாம் கருத்து: அத்தை மகளையோ, மாமன் மகளையோ திருமணம் செய்வது சாஸ்திர விரோதம்

முதல் கருத்துக்கு அக்கினி புராண வசனம் ஆதாரமாக உள்ளது. இரண்டாம் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதற்க்கு காரணமாக கூறப்படுவது, "இந்துக்களிடையே குறுக்கு உறவினரின் (மணவழிச் சகோதரசகோதரி) திருமணம் ஒரு நிறுவப்பட்ட பழக்கமாக இருந்தது."

யார் குறுக்கு உறவினர்கள் இல்லை?

உங்கள் தாய் —-> உங்கள் தாயின் சகோதரிகள் உங்கள் இளைய அல்லது மூத்த தாய் என்று அழைக்கப்படுகிறார்கள்

உங்கள் தந்தை —-> உங்கள் தந்தையின் சகோதரர்கள் உங்கள் இளைய அல்லது மூத்த தந்தை என்று அழைக்கப்படுகிறார்கள்

அவர்களின் குழந்தைகள் உங்கள் சகோதர சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், பொதுவாக திருமணம் சாத்தியமில்லை.

அடுத்து, குறுக்கு உறவினர்கள் யார்?

உங்கள் தாய் —-> உங்கள் தாயின் சகோதரர் மாமா என்று அழைக்கப்படுகிறார் (அதாவது குறுக்கு மாமா மட்டுமே மாமா சரியானவர்)

உங்கள் தந்தை —→ உங்கள் தந்தையின் சகோதரி அத்தை என்று அழைக்கப்படுகிறார்

அவர்களின் குழந்தைகள் உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்று அழைக்கப்படுவதில்லை, அவர்கள் உங்கள் குறுக்கு உறவினர்கள், அத்தகைய உறவினர்களுக்கு இடையே திருமணம் அனுமதிக்கப்படுகிறது.

மூன்றாம் கறுத்தது: இரத்த பந்த திருமணமே கூடாது. 

ஒரே கோத்திரத்தில் இருந்து அல்லது அதே முனிவரின் வரிசையில் பிறந்தவரை தேர்வு செய்யக்கூடாது. ஏழுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்தும் தந்தைவழிப் பக்கத்திலிருந்தும் தாய்வழிப் பக்கத்திலிருந்தும் ஒருவர் தேர்வு செய்யலாம். -  (அக்னி புராணம், அத்தியாயம் 154)  

இதன்படி  இரத்த பந்த திருமணமே கூடாது. 

இஸ்லாம் 


 யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பதை குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது. 
 
‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள் மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள் மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்வி கள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத்தண்டுகளில் இருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.)’’ (திருக்குர்ஆன் 3:23 
  1. தாய் 
  2. மகள்கள் 
  3. சகோதரிகள் 
  4. தந்தையின் சகோதரிகள் 
  5. தாயின் சகோதரிகள் 
  6. சகோதரனின் புதல்விகள் 
  7. சகோதரியின் புதல்விகள் – இவர்கள் ரத்த பந்த உறவின் மூலம் தடை செய்யப்பட்ட 7 பிரிவினர் ஆவர்.  
இதைபோல 
  1. மனைவியின் தாய் 
  2. மனைவியின் பிறிதொரு கணவனுக்கு (முன்னாள் கணவனுக்கு) பிறந்த மகள் 
  3. மகனின் மனைவி (மருமகள்) 
  4. தந்தையின் மனைவி– இவர்கள் திருமண உறவின் மூலம் தடுக்கப்பட்ட 4 பிரிவினர் ஆவர். 
மேலும் பாலூட்டிய அன்னியப்பெண்ணும், பெற்றெடுத்த தாயும் ஒரே தரத்தைப் பெறுகின்றனர். 
 
ரத்தபந்த உறவின் மூலம் தாயின் வழித்தோன்றலில் யாரெல்லாம் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களாக ஆவார்களோ அவர்கள் அனைவரும் பால்குடி உறவின் மூலம் தடுக்கப்பட்டவர்களாக மாறுவர். எனவே அந்த 7 தரப்பினர் பால்குடி உறவின் மூலமும் திருமணம் புரிய தடை செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் ஒருவர் ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிச்சயமாக (இரத்த) உறவுகளில் ஒரு ஆணிற்கு அனைவருமே ஹராமகின்றனர். நான்கு பேரை தவிர:
  1. சாச்சா (பெரிய தந்தை, சிறிய தந்தை மகள்)
  2. மாமன் மகள்
  3. மாமி மகள்
  4. சாச்சி மகள் (பெரியம்மா, சின்னம்மாவின் மகள்)
இவர்கள் நான்கு நபர்களும் உறவுகளில் திருமணம் செய்ய அனுமதிக்க பட்டவர்கள்.

இந்த நான்குபேரை நபிகளாருக்கு ஹலாலாக்கி இறங்கிய வசனம்:

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); (சூரா அஹ்சாப் 33:50)

குடும்பத் தலைமை ஆணா? பெண்ணா?

இஸ்லாம்

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்…. (குர்ஆன் 4:34)

தமிழர் சமயம்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள், இல்வாழ்க்கை - 41)

கு ச ஆனந்தன் உரை: குடும்பத் தலைவன், பெற்றோர், துணைவி, மக்கள் ஆகிய இல்வாழ்க்கை இயல்புடைய முத்திறத்தார்க்கும் நன்னெறி நின்று பயன்தரும் துணையாவான்.

கிறிஸ்தவம்

சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள். (எபேசியர் 5:23-24)

குடும்ப பொறுப்பு ஆணிடமே உள்ளது

ஆங்கிலமும் இந்தியும்


மொழியை வெறுப்பவர்கள் அல்ல தமிழர்கள்.

இந்தியும் ஆங்கிலமும் ஏறக்குறைய சில நூற்றாண்டு வயதுடைய மொழிகளே

ஆங்கிலத்தை ஏற்பதன் காரணம்,

  1. தமிழர் வரலாற்றில், கடல் கடந்து சென்று வாணிபம் செய்ததை காணமுடிந்த நம், எப்படி நாம் அந்நியர்களோடு உரையாடி இருப்போம் என்று சிந்திக்க கடமைப் பட்டு உள்ளோம். நாம் அவர்களிடம் பொருளீட்ட முயற்சித்ததால் அவர்களது மொழியை நாம் தான் கற்று இருக்க முடியும். இந்தவகையில் ஆங்கிலத்தையும் நாம் ஏற்றுள்ளோம். 
  2. இரண்டாவது தமிழர்களின் சங்க நூல்களை மற்றும் வரலாற்றை மீட்ருவாக்கம் செய்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானது.
  3. மூன்றாவது ஆங்கிலம் என்பது உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு பொது மொழி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு மொழியை பொது மொழியாக ஏற்பதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், ஏற்கப்பட்ட பொதுமொழி மற்ற மொழிகளை காலப்போக்கில் அழித்தொழித்து ஓங்கி நிற்கும். ஹிந்தியே அதற்கொரு உதாரணம், வடக்கில் உள்ள பெங்காலி, காஷ்மீரி, பீஹாரி, அஸ்ஸாமி, மராட்டி போன்றவைகள் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மொழி அழிந்தால் வரலாறும் அழியும், வரலாறு அழிந்தால் அதன் தரும் நடுக்கம் கோரமானது.

ஆனால் இந்தியை வெறுப்பதற்கான காரணம்: திணிப்பு

  1. இந்தி தமிழை அழிக்க முயல்கிறது
  2. கீழடியை மூட முயன்றது
  3. தமிழரின் தொன்மைக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது
  4. தமிழர் நாட்டை பறிக்க 2 கோடி வடக்கர்களை இங்கே களமிறக்கி வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது
  5. இங்கே வந்து பிழைக்கும் கொத்தனார் சித்தாள் கூட, முடி திருத்துபவன் கூட, பாணிபூரி விற்பவன் கூட தமிழை கற்று பேச மாட்டான், நாம் இந்தி கற்றுக்கொண்டு பேசணும்! இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.!