மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து..!

தமிழர் சமயம்


துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே - புறநானூறு 287

சொற்பொருள்:

துடி = ஒருவகைப் பறை
எறிதல் = அடித்தல்
புலையன் = பறை அடிப்பவன்
எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
இழிசினன் = பறையடிப்பவன்
மாரி = மழை
பிறழ்தல் = துள்ளுதல்
பொலம் = பொன்
புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
அண்ணல் = தலைமை
இலங்குதல் = விளங்குதல்
வால் = வெண்மை
மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
நுதி = நுனி
மடுத்தல் = குத்துதல்
பீடு = பெருமை
வியன் = மிகுதி
கூடு = நெற்கூடு
தண்ணடை = மருத நிலத்தூர்
யாவது = எது (என்ன பயன்?)
படுதல் = இறத்தல்
மாசு = குற்றம்
மன்றல் = திருமணம்
நுகர்தல் = அனுபவித்தல்
வம்பு = குறும்பு
இம்பர் = இவ்விடம்
காண்டீரோ = காண்பீராக 
மகளிர் - பெண்கள் (பன்மையில்) 
துடி - யானை 
இலங்குவால் - படினே 
மாசில் - வரவே

பொருள்:

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: போரில் இறந்தவர்கள் மேலுலகத்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

இந்து மதம் 


Agni, may we, beyond decay, invited, in the third heaven, feast and enjoy the banquet. These women here, cleansed, purified, and holy, I place at rest singly - [Atharva VedaHYMN CXXII:5]

அக்னிசொர்க்கவாசிகளை விருந்துக்கு அழைஅவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடுஅவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும்நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சொற்பொருள்: Women  - பெண்கள் (பன்மையில்)


இஸ்லாம்

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்" - [திருக்குர்ஆன் 44:51-54]

"மேலும், உன்னதமான விரிப்புகளில் அமர்ந்திருப்பர். நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; தம் துணைவர் மீது பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்" - [திருக்குர்ஆன் 56:34-38]

"அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்" - [திருக்குர்ஆன் 55:56-58]

கிறிஸ்தவம்

 அப்பொழுது பேதுரு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோம்; அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னைப் பின்பற்றிய நீங்கள் மறுபிறப்பில் மனுஷகுமாரன் தம்முடைய மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, ​​நீங்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். . என் பெயருக்காக வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, நிலங்களையோ கைவிட்ட எவனும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வான். ஆனால் முதலில் இருப்பவர்களில் பலர் கடைசியாக இருப்பார்கள்; மற்றும் கடைசியாக முதலில் இருக்கும். (மத்தேயு 19:27 – 29)

குறிப்பு: இது இம்மையை குறிக்கிறது என்று சிலர் வேறு சில வசனங்களை ஆதாரமாக காட்டுவர். ஒரு மனைவியை கர்த்தருக்காக கைவிட்டு நூறு மனைவியைப் பெற்ற நபரை சம காலத்திலோ, வரலாற்றிலோ அல்லது பைபிலிலோ யாரேனும் உண்டோ? மனைவியை விடுங்கள், அவ்வாறு நிலத்தை பெற்றவர் உண்டோ?  மேலும் நித்திய ஜீவன் என்றால் மரணமில்லா வாழ்வு என்று பொருள். எனவே இவையனைத்தும் இம்மையில் அல்ல, மறுமையில் என்று தெளிவாகிறது.

சொற்பொருள்: நூறு மனைவி - மணமுடிக்கும் பெண்கள் பன்மையில் 

முடிவுரை

இஸ்லாத்தில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் "ஹூருல் ஈன்". 

    • திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பதை புனிதமாக அருளாக வரமாக ஏற்கும் நாம், சுவர்க்கத்தில் அவரவர் தியாகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ப அழகிய பெண்களை மணமுடித்து வைப்பதாக இறைவன் வாக்களிப்பதை ஏன் இழிவாக பேசுகிறோம்
    • இவ்வுலகில் தான் மணமுடிக்கும் பெண் ஒழுக்கமாக இருக்க விரும்புவோர் அதன் காரணமாக தானும் ஒழுக்கத்தை பேன கருதி (கண், கை, மனம் உட்பட அனைத்து உறுப்புகளும் செய்யும்) விபச்சாரத்தை விட்டு விலகி நிற்கின்றனர். அதே போல மறுமையில் தூய பெண்களை அடைய ஒருவர் இவ்வுலகில் தூய்மையாக இருப்பது அடிபப்டை. அவ்வாறு ஒழுக்கத்தை பேணுவோருக்கு இவ்வாறு பரிசு இறைவனால் கொடுக்கப்படுத்தல் எந்த விதத்தில் பிழை. 
    • அவ்வாறு இவ்வுலகில் ஒழுக்கத்தை பேணுபவர்களுக்கு மறுமையிலும் குற்றமற்ற பாசமுள்ள யாரும் அறிந்திராத யாரும் தீண்டாத அழகுள்ள பெண்களை இறைவன் மனம் முடித்து தருவதாக சொல்வது எப்படி கேவலத்துக்கு உரியதாகும்? 

ஆனால் இது இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மறைநூல்களிலும், அனைத்து சமயங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. 

தமிழர்களோ அல்லது இந்துக்களோ அவரவர் மறைநூல் என்ன வென்று ஆய்ந்து அறியாதிருப்பதும், அறிந்தவர்கள் முயன்று கற்காதிருப்பதும் மறை நூல்களை இழித்து பேச வசதி ஏற்படுத்தி தருகிறது. 

பலதாரமணம் பிழையாகவும் ஆபாசமாகவும் இன்று சொல்லப்படுவதால் இந்த நிலை இருக்கலாம். ஆனால் இந்த கருத்து சமீப காலத்தில் ஏற்படுத்தப் பட்டது. 

மேலும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக தங்களை கருதும் சில தத்துவ பின்புலத்தோரும், தனி நபர்களும் அருவருக்கும் வகையில் இதை விமர்சிப்பதற்கான காரணம் அவர்களின் உள்ளத்தில் உள்ள அருவருப்புகளே. இவ்வாறு முற்போக்கு பேசும் நபர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் போற்றும் சேகுவேரா, மார்க்ஸ், பெரியார் போன்றோர்கள் சில உதாரணங்கள். 

காசா? கடவுளா?

தமிழர் சமயம்


செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. - (திருமந்திரம் 126)

பொருள்: நிலையா இவ்வுலக வாழ்வின் உண்மையை அறியாமை மட்டுமல்லாமல் நிலைக்குமென்று மாறுபடக் கொள்வோர் புல்லறிவாளராவர். அத்தகையோர் சிலரையேனும் பலரையேனும் கேடுறு செல்வங் கருதிப் பாடிப் பரவிப் பணிந்து போற்றி வாடுறுதல் வேண்டா. புக்கில்லாகிய வீடுபேற்றினைக் கருதி முழுமுதல் இறைவனை தொழுங்கள். தொழுதால் இம்மை, உம்மை, அம்மை என்னும் முத்திறச் செல்வமும் முறையாகக் கைகூடும். அதற்கு ஒப்பு சிறந்த வில்லேருழவனாகிய வில்லி (வேடன்) எய்த விற்குறி தப்பாமல் கைகூடியதென்ப.

இஸ்லாம்

...அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்.... - (குர்ஆன் 104)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. - (குர்ஆன் 102:1)

பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. - (குர்ஆன் 3:14)


கிறிஸ்தவம்

ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார். - (லூக்கா 16:13)

அகண்ட பாரதத்திற்கான தருணம் வந்துவிட்டதா? இலங்கை, நேபாளம் மாற்றங்கள் திவால்கள் இதனை உணர்த்துகின்றனவா?

RSS இன் அகண்ட பாரத கனவு Zionist-இன் Greater Isreal-லிருந்து உருவானது.

Zionism இறை நம்பிக்கை அற்ற தங்களை உலகின் மிக உயர்ந்த இனமாக கருதிய மெத்தப் படித்த யூத இன வாதிகளால் உருவாக்கப்பட்டது. அவர்கள் Greater Isreal இலக்கை அடைய எந்த அறத்தையும் பின்பற்ற தேவையில்லை ஏனென்றால் யூதர்களை தவிர அனைவரும் கோயிம்கள் - அதாவது கால்நடைகள் என்று நம்புபவர்கள். (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலிலிருந்து)

RSS உம் இறைநம்பிக்கையற்ற இனவாதம் பேசும் ஓரளவு படித்த பார்ப்பன கூட்டத்தால் விதையிடப்பட்டது. சாவர்க்கர் zionist-ஐ ஆதரித்தவர் அவர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பது வரலாற்று உண்மை. பிராமணர்களை விட மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பது அவர்கள் கோட்பாடு.

இப்படி இரு குழுவினருக்கும் ஒற்றுமைகள் பல. ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவென்றால், பிராமணர்களுக்கு எப்படி அவர்களை தவிர இந்த தேசத்தில் உள்ள அனைவரும் தாழ்ந்தவர்களோ அதேபோல யூதர்களுக்கு அவர்களை தவிர உலகில் உள்ள, பிராமணர்கள் உட்பட அனைவரும் கோயிம்களே.

RSS அகண்ட பாரத கனவை நனவாக்கினால் உலகை ஆளும் கனவுடன் நடைபோடும் யூதர்களளின் திட்டத்துக்கு உதவுமே தவிர இவர்களுக்கு உதவாது. இந்த பிராமணர்கள் அந்த சமயத்தில் யூதர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாவர்.

யூதர்கள் நேரடியாக உலகனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இது போல ஓர் குழுவினரை முடக்கிவிட்டுள்ளனர். வல்லவனுக்கு வல்லவனாக தான் யூதன் செயல்படுவான். பல கோடி மக்களை கட்டுப்படுத்துவதை விட, பல சிறு குழுக்களை கொண்டு பல கோடி மக்களை கொன்று கட்டுப்படுத்தி, அவர்களை இந்த சியோனிச குழு கட்டுபடுத்தும் படி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இன்று உள்ள அனைத்து வகையான முரணான அரசியல் தத்துவங்களும் பெரும்பாலான நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலமும் அவர்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.

அம்பேத்கார் 60-க்கும் மேற்பட்ட நாட்டின் அரசியலமைப்பை படித்து அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்ததாக நாம் அறிவோம். அவற்றில் பெரும்பாலானவை யூதர்களால் வடிக்கப்பட்டது. அம்பேத்காரின் இந்த பணியில் அவருடன் உடன் இருந்த உதவியாளர் ஒரு யூத பெண்மணி. இது தற்செயலானது அல்ல.

நவீன கால நாத்தீகத்துக்கு காரணமாக இருக்கும் பொதுவுடமை தத்துவத்தை வடிவமைத்த மார்க்ஸ் ஒரு யூதர் - இப்படி இனத்தை காரணமாக சொல்வது சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதனை இங்கே குறிப்பிட காரணம் கார்ல் மார்க்ஸ் மீது தத்துவ ஆதிக்கம் செலுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மோசஸ் ஹெஸ் என்கிற ஆரம்ப கால ஜியோனிச வடிவமைப்பாளர். நான் வாசித்தவரை மார்க்ஸ் தனது வர்த்தைகளுக்கு நேர்மையாக நடந்து கொண்டவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் ஒருவரின் உள்ளத்தை யாராலும் அறிய முடியாது. மேலும் யூதர்களிலும் நல்லோரும் உள்ளனர் என்பது என் கருத்து. ஆனால் நஞ்சு எண்ணம் கொண்ட ஹெஸ் போன்றவர்களால் தூண்டிவிடப்பட்ட நெருப்பு மார்க்ஸ் என்று கருதாமல் இருக்க முடியவில்லை.


போதுவுடமைக்கு எதிராக தமிழ் சமூகத்தில் இருந்து சங்கி அல்லாத ஒரு குரல் வருவது ஆச்சரியமாக இருக்கலாம். அது ஆண்ட (சீனா, ரஷ்யா, கொரியா) நாடுகளின் வரலாற்றையும் சமகால செய்திகளையும் வாசித்து இருக்கிறோமே.



மக்களாட்சியும் குறையுள்ளதுதான், இன்றுவரை காமராசரைத்தான் உதாரணத்துக்கு அழைக்கிறோம். ஆனால் அவர் ஒரு விதிவிலக்கு. மக்களாட்சியின் பண்பு இன்று உள்ளது போலத்தான் என்றும் இருக்கும்.

இவர்கள் சில நியதிகளை நாம் அறிவது அவசியம்.

    • உலகில் ஆதிக்க பீடத்தில் ஒருசில நூறாண்டுகளை தாண்டி எவரும் இருந்ததில்லை
    • இன்றைய அடிமை நாளைய அரசன்
    • இன்றைய அரசன் நாளைய அடிமை
    • வரலாற்று காலம் மிகச் சிறியது, நம் காலமும் பிற்காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலமாக கருதப்பட வாய்ப்புள்ளது - மாயன் கல்வெட்டுகளும், அரேபிய பள்ளத்தாக்குகளும், மெசப்பட்டோமியாவும், சிந்து சமவெளியும், கீழடியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.
    • நமது ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு கூலி வழங்கப்படும்
    • மீளா நரகமும் சொர்கமும் அனைத்து சமயங்களும் சொல்லும் உண்மை.

எனவே அந்த நியதிகளை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

முடிவுரை:

RSS-இன் திட்டமும் வழிமுறையும் ஒன்று zionism-மிடமிருந்து காப்பியடித்தது அல்லது அவர்களால் வடித்து தரப்பட்டது. அகண்ட பாரத்துக்கு நேரம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உயரம் செல்ல செல்ல வீழும் நேரம் அருகில் உள்ளது. அழிவதுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

source : https://ta.quora.com/அகண்ட பாரத கனவு

வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

ஆம், வேதம் ஓதி வீடுபெறலாம்.

தமிழர் சமயம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள். 

 இஸ்லாம்

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் (மறுமையில் செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படும்) நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்)

இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழி தவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி)

கிறிஸ்தவம்

தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது. ( வெளி 1:3)

யூதம் 

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். - (சங்கீதம் 1:2-6) 

ஓதினால் மட்டும் போதாது பொருள் அறிந்து ஓத வேண்டும் 

தமிழர் சமயம் 

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே(திருமந்திரம்: 52)

பொருள் : வேதத்தை ஒத்துகின்றவன் வேதியன் அல்ல, வேதத்தை ஓத வேண்டும் அதை விளங்கி கொள்வதற்கு, வேதத்தை ஓதி அதை செயல் படுத்தவேண்டும், இதுதான் வேதம் உரைத்தல் என்பதன் மெய்ப்பொருள் ஆகும்.  

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பதவுரை: நண்ணல் - நெருங்குதல் 
 
பொழிப்புரை: மூலன் உரைசெய்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் காலையில் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் உலகத்தின் தலைவனை நெருங்கலாமே. 
 
ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது. பாடல் - 1

விளக்கவுரை: அனைத்ததின் தொடக்கமுமான தெய்வத்தின் மிக பழமையான சீர்மிகுந்த அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் புரிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், தீய வினைகள் நீங்கப்பெற்று, அவர்கள் கருதியவை எளிதில் முடியும்.

இஸ்லாம் 

”நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே நட்டமடைந்தவர்கள்.” (அல்குர்ஆன்:- 2:121)

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறை வனையே சார்ந்திருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 8:2) 

‘குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 73:4)

‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:204

பொருள் அறிந்து ஓதினால் மட்டும் போதாது, பிறருக்கும் கூற வேண்டும் 

கிறிஸ்தவம்யூதமதம்  

 

இயேசு கூறினார் “ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக் கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்" (மத்தேயு 5:19,20)    

 

தமிழர் சமயம்


கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு

கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்

கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. (திருமந்திர 1:20:2)


பொருள் உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று. 
 
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147) 
 

பொருள்"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."  

 
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.   

இஸ்லாம்

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)  

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44) 

ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -  (குர்ஆன் 103:3) 

பிறருக்கு உபதேசித்தல் மட்டும் போதாது, நாமும் அது கூறும் அறத்தின் படி வாழ வேண்டும்!

தமிழர் சமயம்

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

பொருள்: அரு மறை –  மறை நூல்களை; சோரும் – கடைபிடிக்காது தவறும்; அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்; செய்யும் – செய்து கொள்வர்; பெரு மிறை – பெரிய துன்பத்தை; தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
 பேதையார் இல். - (திருக்குறள் : பொருட்பால் : பேதைமை 834)

பொருள்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அதை செய்யாத பேதையார் போலப் பேதையார் உலகத்தில் இல்லை

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக. - (குறள் 391)
 
பொருள்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! - (சிவவாக்கியம் 140)

வேதம் உரைத்தானும் ஆகிலன்
வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. - (திருமந்திரம் 3. வேதச் சிறப்பு - 2) 

பொருள்: வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி ("வேள்விஎன்பதற்கு அறச்செயல் என்று பொருள்) செய்வதற்காக, உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில். - (திரிகடுகம் 2)

பொருள்தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.  

 இஸ்லாம்

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44) 

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (குர்ஆன்  62:5)

 திருக்குர்ஆனை வாசித்து, அதன்படி செயல்படக்கூடிய இறை நம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர். அதன் சுவை நன்று; ஆனால், அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்துள்ளது. அதன் வாசனை நன்று; அதன் சுவை கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றது. அதன் சுவையும் கசப்பு; அதன் வாடையும் வெறுப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகி விட்டது. (குர்ஆன் 61:3)

நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை; (மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” -  (குர்ஆன்  2:38

கிறிஸ்தவம்

இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8)

பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(மத்தேயு 23:1-3)

யூதம் 

எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!

6 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 2 நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.

4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். 7 நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். 8 அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்து கொள்ளுங்கள். 9 அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.

ஏனென்றால் வேதத்தை விட்ட அறமில்லை!

தமிழர் சமயம் 

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க

வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)


பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.  

கிறிஸ்தவம்

அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)  

இஸ்லாம்

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது. (திருக்குர்ஆன் 16 : 64)

முடிவுரை

வேதத்தை ஓதி மட்டும் வீடுபேறு அடைய முடியாது ஏனென்றால் வேதம் வழங்கப்பட்ட காரணம் அதை ஓதி அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகவே. எனவே நாம் ஓதும் வேத பாடல்களின் வசனங்களின் பொருள் உணராமல் ஓதுதல் ஆகாது.  எனவே ஓதுதல் மட்டும் நோக்கமல்ல, ஓதுவதை புரிந்து நாமும் அதன்படி வாழ்ந்து பிறர்க்கும் உபதேசிப்பது நோக்கமாகும்.


ஓதி, உணர்ந்து, பிறர்க்கு சொல்லி, தானும் கடைபிடிப்பவன் வீடுபேறு அடைவான்!

மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?

கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.

நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.

உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.

உதாரணமாக,

  • நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற இரண்டு வேதங்களும் உள்ளன.
  • நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும் என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம், அதற்க்கான ஆதாரங்கள் நான்மறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது என்று குர்ஆன் கூறுகிறது.
  • நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள். 

எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்கவில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.

சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)

எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.

முடிவுரை

இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.

    1. ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
    2. ஒரு சமயம் ஒன்று அல்லது பல அந்நாள் ஒன்றுக்கொன்று முரண்படாத வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
    3. ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும், பின்வரும் வேதத்தில் சான்று அளிக்கப்பட்டு இருக்கும். 
    4. அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
    5. அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
    6. இந்த அமைப்பில் உள்ள சமயங்கள்தான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
    7. சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
    8. அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே "அரியும் சிவனும் ஒன்னு" என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை மறுக்கமுடியாது ஆனால் அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் அவைகள் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.

கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்தி இருப்பது போல நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை ஒருக்காலமும் மறுக்க முடியாது.