இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதத்தவர்களின் மதப்பற்று போல இந்துக்களிடம் 10 சதவீதம் கூட இல்லையே, ஏன்?

மதப்பற்று என்று கூறுவதை விட சமைய பற்று என்று இதை கூற விரும்புகிறேன். இந்த வேற்றுமைக்கான சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு சில கேள்விகளையும் கேட்கிறேன்.
  • இஸ்லாமும் கிறித்தவமும் புனிதர்களால் ஏற்படுத்தப் பட்டதென்றும் அவர்களின் பாரம்பரியமும் வரலாறும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், ஆனால் இந்துமதம் ஆங்கிலேயர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
  • கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியும். இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரிந்தவர் எத்தனை பேர்?
  • இந்துக்களுக்கு சம்ஸ்கிருத வேதம் பற்றி அந்த மொழி பற்றி எந்த அறிவும் இல்லை. எனவே அரைகுறை சமஸ்கிருத்தைல் யாரேனும் பேசினால் ஆ-வென்று பார்த்து அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணுகிறார்கள். மொழி அறிவின், தத்துவ அறிவின் ஆழம் அறியாததால் இந்த நிலை. "வேதம் ஓதி வீடு பெற்றார்" என்று தமிழர்களுக்கு சொல்கிறது திருமந்திர வேதம்.தமிழர் வேதத்தை ஓதும் சைவர் அல்லது தமிழர்கள் யார்?
  • இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அவர்களுக்கு ஓர் பிரச்சனை என்றதும் அவர்கள் அவர்களது வேதத்தில் தீர்வை தேடுகிறார்கள், கிடைப்பதாக நம்புகிறார்கள். தம் வேதத்தை வாசிக்க கூட தெரியாத இந்துக்களோ, வேதம் என்ன என்ற அக்கறை கூட இல்லாத தமிழர்களோ அவர்களின் பிரச்னைக்கு வேதத்திலே தீர்வு தேடுவது சாத்தியமில்லை.
  • வேதம் கடவுளால் வழங்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள், கடவுள் மீதுள்ள பற்றே அவர்களின் வேதத்தின் மீதும், அவர்களின் சமயத்தின் மீதும், அந்தந்த மக்களின் மீதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியாமல், தெரிந்தால் வாசிக்க முடியாமல், வாசிக்க முடிந்தால் பின்பற்றாமலும் பிறருக்கு சொல்லாமலும் வாழும் பொழுது சமய பற்றை எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
  • இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ வேதத்தில் இந்துக்கள் கூட படித்து குறை சொல்லும் அளவுக்கு வேதங்கள் எல்லோரையும் அடையும் வண்ணம் பொதுமை படுத்தி உள்ளனர். ஆனால் இந்துக்கள் அல்லது தமிழர் வேதத்தில் ஒரு குறை சொன்னால், அது பொய்யான நூல் அல்லது பொய்யான விளக்க உரை என்று சொல்லி தப்பித்து கொள்ளும் அளவுக்கு எந்த நூல் சரி அல்லது பிழை, எந்த விளக்கம் சரி அல்லது பிழை என்று எல்லோரும் அறியும் படி அல்லது எல்லோரும் ஏற்கும் படி ஓன்று இல்லை!
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நம்பும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் உலக வேதங்களில் உள்ள ஒற்றுமையை பட்டியலிடும் பொழுது பல்வேறு மதங்களை இனங்களை உள்வாங்கிய இந்துமதம் அவற்றுக்கு இடையேயான வேத ஒற்றுமைகளை பண்பாட்டு ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் மற்ற வேதங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லாத நிலையே இந்து மதப்பற்று இல்லாமைக்கான காரணம்.
முதலில் இப்படி போட்டிக்கு சமைய பற்றை வளர்ப்பது பற்றல்ல. அதற்கு பொறாமை அல்லது ஈகோ என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

"கல்வி, கல்வி" என்று அனைத்து சமைய அறநூல்கள் கதறுவது வேத கல்வியையே..! ஒரு சிலருக்கு மருத்துவ கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு பொறியியல் கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு கணக்கியல் கல்வி கிடைக்கலாம் ஆனால் அனைவருக்கும் வீடுபேரு அடையும் வழிக்கான கல்வி அவசியம். அவரவர் வேத அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவோம். நிச்சயமாக உண்மை வேத அறிவு மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தவிடு பொடியாகும்.

பிறப்பெனும் பேதமை

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
 (மெய்யுணர்தல் குறள் எண்:358)

பதவுரை: பிறப்பு-பிறப்பு; என்னும்-என்று சொல்லப்படுவது (பற்றிய); பேதைமை-அறியாமை; நீங்க-கெட; சிறப்பு-சிறப்பு; என்னும்-என்கின்ற; செம்பொருள்-செவ்வியதான மெய்ப்பொருள், கடவுள்; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.

மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.

பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை (அதிகாரம்:துறவு குறள் எண்:345)

பதவுரை: மற்றும்-வேறுபிற, மற்றைய, பின்னும், மேலும்; தொடர்ப்பாடு-தொடர்பு; எவன்-என்ன பயன் கருதி? கொல்-(அசைநிலை); பிறப்பு-உயிர்வாழ்க்கை, பிறவி (த்துன்பம்); அறுக்கல்-அறுத்தல், நீக்குதல்; உற்றார்க்கு-மேற்கொண்டவர்க்கு; உடம்பும்-உடம்பும்; மிகை-அளவின் மீறுதல்.

மணக்குடவர் உரை: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?

____________________________

உங்கள் இறைவன் ஆதமுடைய குழந்தைகளிடமிருந்து - அவர்களின் இடுப்பில் இருந்து - அவர்களின் சந்ததியினரை எடுத்துக் கொண்டு, "நான் உங்கள் இறைவன் அல்லவா?" என்று அவர்களையே சாட்சியமளிக்கச் செய்ததைக் குறிப்பிடவும். அதற்கு அவர்கள், ஆம், நாங்கள் சாட்சியம் அளித்துள்ளோம் என்றார்கள். [இது] - மறுமை நாளில், "நிச்சயமாக நாங்கள் இதை அறியாமல் இருந்தோம்" என்று நீங்கள் கூறக்கூடாது என்பதற்காக. (7:172)

89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.






சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:98)

பதவுரை: சிறுமையுள்-இழிவினின்று, இழிதகைமையினின்று, சிறுதன்மையுள், அற்பத்தனத்தினின்று; நீங்கிய-தவிர்த்த; இன்சொல்-இனியமொழி கூறுதல்; மறுமையும்-மறுபிறப்பும்; இம்மையும்-இப்பிறப்பும்; இன்பம்-மகிழ்ச்சி; தரும்-அளிக்கும்.

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

குறிப்பு:

பிறவி இருவகை: இம்மை, மறுமை 

  • மறுமைஎழுமைஎழுபிறப்பு எனபவைகள் மறு வாழ்வை குறிக்கும்
  • இம்மைபிறவி, உலகு, வையம் என்பவைகள் பூவுலகை குறிக்கும்.  
  • ஒருமை என்பது தனிமையை குறிக்கும், ஒரு பிறவி என்று பொழிப்புரையில் தவறாக கொடுக்கப் பட்டுளள்து 
மறுமை என்கிற பதிவில் இது விளக்கப் பட்டுள்ளது 
மறுமையில் வாழ்வு இருவகை: மேலுலகம், கீழுலகம் 
  • வான், சொர்கம், வீடுபேறு என்பவைகள் மறுமையில் உள்ள மேலுலக வாழ்வை குறிக்கும்
  • நரகம்அளறுநெருப்பு ஆகையவைகள் மறுமையில் உள்ள கீழுக வாழ்வை குறிக்கும் 

குறளில் சொர்க்க நரகங்கள் தனித்தனியே சில இடங்களில் கையாளப் பட்டுள்ளது..! 

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை:222)

பதவுரை: 

நல்-நல்ல;
ஆறு-நெறி;
எனினும்-என்றாலும்;
கொளல்-ஏற்றல்;
தீது-கொடிது;
மேல்உலகம்-உயர்வாகிய உலகம்;
இல்லெனினும்-இல்லை என்றாலும்;
ஈதலே-கொடுத்தலே;
நன்று-நன்மையுடையது.

பொருள்: மேலுகம் (சுவர்க்கம்) கிடைப்பதில்லை என்றாலும் ஈகையே சிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை:
ஒருமை-ஒருபிறப்பு; 
செயல்-செய்தல்;
ஆற்றும்-செய்து கொள்ளும்;
பேதை-பேதை;
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்;
தான்-தான்;
புக்கு-புகுந்து;
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய;
அளறு-நரகம், நிரயம்

பொருள்: பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்குசான்று இந்த குரல். எழுமையில் அளறு: அதாவது மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம் என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எரிகிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் இந்த குறள் கூறும் விளக்கத்துக்கு எதிரானவர்கள்.  

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (வரைவில்மகளிர்  919)

பதவுரை: வரைவிலா - வரம்பின்றி; மாண் - சிறந்த, மாட்சிமையுடைய; இழையார் - அணி அணிந்தவர்; மென் - மென்மையான; தோள் - தோள்; புரையிலா - உயர்வு இல்லா; பூரியர்கள் - கீழ்மக்கள்; ஆழும்-புக்கு அழுந்தும்; அளறு - நரகம், நிரயம், சேறு.

மணக்குடவர் உரை: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.

சான்றுகள்:
________________________________________

 



மக்கள் காணவேண்டும் என்பதற்காக


“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! க்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. - மத்தேயு 6: 6 


“நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 3 எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். 4 உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது; மத்தேயு 6:3

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

இரத்தல்


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று (அதிகாரம்:இரவு குறள் எண்:1058)

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

மணக்குடவர் குறிப்புரை: இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

பதவுரை: இரப்பாரை-ஏற்பவர் ('ஐகாரம்' அசைநிலை); இல்லாயின்-இல்லாமல் இருந்தால், இல்லாவிடில்; ஈர்ங்கண்-குளிர்ந்த இடம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; மரப்பாவை-மரத்தால் செய்யப்பெற்ற பதுமை; சென்றுவந்துஅற்று-செல்வதும் வருவதும் போலும், போய்வந்தாற் போல்வது.

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222)

பதவுரை:
நல்-நல்ல; ஆறு-நெறி; எனினும்-என்றாலும்; கொளல்-ஏற்றல்; தீது-கொடிது; மேல்உலகம்-உயர்வாகிய உலகம் (வீட்டுலகம்); இல்லெனினும்-இல்லை என்றாலும்; ஈதலே-கொடுத்தலே; நன்று-நன்மையுடையது.

மணக்குடவர் உரை: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். (நாலடியார்)

பதவுரை: மறுமையும் இம்மையும் நோக்கி --- மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் --- கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் --- அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை --- பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் --- அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.

வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.

முழுக்கருத்து: இரப்பார் இல்லையென்றால் உலகம் இயங்காது என்று கூறும் வள்ளுவம், இரத்தல் தீது என்கிறது. 
____________________________

‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது, மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். நூல் : புகாரி-1480 , 1471

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும். நூல் : முஸ்லிம்-1883 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் என்னை விட ஏழைக்கு இதைக் கொடுங்களேன் என்பேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள். நூல் : புகாரி-1473 

முழுக்கருத்து: தேவை இருப்பின்பெற்றுக்கொள்வதை தடுக்காத மார்க்கம், ஆனால் தேவைக்கு அதிகமாக கேட்பவரை சபிக்கிறது. இயன்றால் உழைத்து உண்பதையே வலியுறுத்துகிறது. 

_____________________________

உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். Luke 11:41

இப்படி கடினமாக உழைத்து பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், 'வாங்குவதைவிட கொடுப்பதே அதிக பாக்கியம்' என்று கர்த்தராகிய இயேசு சொன்னதை நினைவுகூர வேண்டும் என்றும் எல்லாவற்றிலும் நான் உங்களுக்குக் காட்டினேன்-  சட்டங்கள் 20:35