தேவர்கள்

தமிழர் சமயம்


விண்ணுலகம் என்ற ஓர் உலகம் இருக்கிறது, அங்கு தேவர்களும் தெய்வங்களும் வாழ்கிறார்கள் என்பது தமிழர்களிடம் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவரிடமும் இருந்திருக்கிறது என்பதைத் திருக்குறள் பல இடங்களில் உணர்த்துகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (குறள் எண் 18)

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (குறள் எண் 84)

 மலர்ந்த முகத்துடன் எவனொருவன் விருந்தினரை உபசரிக்கிறானோ, அவன் இல்லத்தில் அகம் மலர்ந்து லட்சுமி வாசம் செய்வாள். (எனவே லட்சுமி தேவி விண்ணுலகில் வாசம் செய்கிறாள் என்பதும் அவள் மண்ணுலகம் வந்து வசிப்பாள் என்பதும் வள்ளுவம் வலியுறுத்தும் நம்பிக்கைகள்.)

 செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு!

வானுலகில் வாழும் வானவரோடு இணைந்து வாழ்வதற்கு எளிதான வழி ஒன்றிருக்கிறது. வந்த விருந்தினரை உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து நாம் காத்திருப்போமானால், வானகத்துத் தேவர்கள் நம்மை விருந்தினராக ஏற்பார்கள்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள். (ஆக விண்ணுலகில் லட்சுமி, மூதேவி ஆகிய இருவரும் உறைகிறார்கள் என்பதும் அவர்கள் மண்ணுலகில் வந்து வசிப்பதுண்டு என்பதும் வள்ளுவர் கருத்தாக இருக்க வேண்டும்.)

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்! (குறள் எண்: 617)

(சோம்பல் உள்ளவனிடம் மூதேவிதான் குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் தாமரைச் செல்வியான திருமகள் வாசம் செய்வாள். (இந்தக் குறளிலும் ஸ்ரீதேவி, மூதேவி என இருவர் இருப்பதை வள்ளுவர் ஏற்கிறார்.)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
 வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’(குறள் எண்: 24)

மனக் கட்டுப்பாடு என்ற அங்குசத்தால் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்பவன் மேலுலகிற்கு விதை போன்றவன் ஆவான். (விண்ணுலகம் உண்டு என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’ (குறள் எண்: 50)

 உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி எவன் வாழ்கிறானோ அவன் வானுலகில் உள்ள தெய்வத்தோடு வைத்து எண்ணப்படுவான்.

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (குறள் எண்: 346)

 உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் தோன்றும் கர்வத்தை எவன் விட்டொழிக்கிறானோ அவன் வானவர்கள் வசிப்பதற்கும் மேலான உலகை அடைவான்.

தேவ ரனையர் கயவர் அவரும் தான்
மேவன செய்தொழுக லான்!’ (குறள் எண்: 1073)

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் வாழ்வதால் கயவர்கள் தேவர்களைப் போன்றவர். (வஞ்சப் புகழ்ச்சி அணியாகச் சொல்லப்பட்ட இக்குறளில் வள்ளுவர் தேவர் என்ற பிரிவினர்இருப்பதை ஏற்கிறார்.) தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் நிலங்களை ஐந்தாகப் பகுத்து ஒவ்வொரு வகை நில மக்களும் வழிபடுவதற்குரிய தெய்வம் எது என்பதையும் வரையறுத்து விளக்கியுள்ளது. 

கிறிஸ்தவம்


தேவதூதர்கள் மனிதர்களைவிட மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11

அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம். (1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38

ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.— (1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10)

இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.— யோபு 38:4-7 (மாற்கு 12:25

அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.— வெளிப்படுத்துதல் 5:11

இரண்டு தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. ஒன்று மிகாவேல் மற்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1:26)

 வேறுசில தேவதூதர்கள் தங்களுக்குப் பெயர் இருப்பதாக ஒத்துக்கொண்டபோதிலும், அவற்றைத் தெரிவிக்கவில்லை.—ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7

இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள்.— அப்போஸ்தலர் 8:26, 27
 

இஸ்லாம்


மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 

1. வானவர்கள் என்றால் யார் ? 


மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

2. வானவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்?


அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்? என்பது இறைவனைத்தவிர எவருக்கும் தெரியாது. குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில நபிமொழிகள் காணப்படுகின்றன. அறிவிப்பாளர் தொடர் பலம் குன்றியதாலும் முன்பின் முரணான ஆதாரமற்ற செய்திகள் என்பதாலும் அவற்றை நாம் நம்பகரமான தகவலாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவர்கள் ‘மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப் பட்டவர்கள்’  என்பதை ‘பூமியில் என் பிரதிநிதியைப் படைக்கப்போகிறேன் என வானவர்களிடம் இறைவன் கூறிய போது’ என வரும் 2.30-வது வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உறுதியாகக் கூறமுடியும்.

3. வானவர்களின் எண்ணிக்கை. وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو


அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                                                                          ‘மிஃராஜின் போது ‘பைத்துல் மஃமூர்’ (வானவர்கள்தொழுமிடம்) உயர்த்தப்பட்டபோது (இது எந்த இடம்?) எனஜிப்ரீலிடம் கேட்டேன்.இது ‘பைத்துல் மஃமூர்’ என்ற இடமாகும். இங்கு ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் உள்ளே செல்வார்கள். சென்றவர்கள் மிண்டும் திரும்பி வருவதில்லை. (அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஸஃஸஆ, நூல்: புகாரி 3207, முஸ்லிம் 162.) மறுமைநாளில் நரகில் 70,000 கடிவாளங்கள் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 வானவர்கள் இழுத்து வருவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்கள் : முஸ்லிம் 2842-29, திர்மிதி : 2573)
 
இவர்களை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இதற்கு ஆதாரமாக ‘அல்லாஹ்வையும், வானவர்களையும், நம்பிக்கை கொண்டோரும்’என வரும் அல்குர்ஆனின் 2:285 வசனமேயாகும்..

4. வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியுமா?                                        


நபிமார்கள் வானவர்களை நேரிலே பார்த்தும் பேசியுமுள்ளனர். நாயகத்தோழர்களும் ‘திஹிய்யத்துப்னு கலீஃபத்துல் கல்பி’ எனும் ஸஹாபியின் தோற்றத்தில் பார்த்துள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஜிப்ரீல் (அலை) அவர்கள் திஹிய்யத்துல் கல்பி அவர்களின் உருவத்தில் வருவார்கள். (அதாரம்: அஹ்மத்)
மனித உருவத்தில் முன் வாழ்ந்த நபிமார்கள் பார்த்துள்ளனர் என்பதை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வானவர்கள் மனித உருவத்தில் விருந்தினராக வந்தபோது லூத் நபியின் மக்களும் பார்த்தனர் என்ற செய்தியை 11.69 வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகத்தின் காலத்திற்குப்பிறகு எவரும் வானவர்களைப் பார்த்ததில்லை.இனி எவரும் பார்க்கவும் முடியாது. ஆயினும் மறுமையில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும்.

5. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நேரில் கண்டார்களா?                       


முதல் தடவையாக நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை (அலை) ஹிரா மலைக்குகையில் இயற்கையான தோற்றத்தில் கண்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி:)

இரண்டாவது தடவையும் அவரது இயற்கைத் தோற்றத்தில் வானிற்கும் பூமிக்கும் இடையே ஒர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கண்டேன் என நபிகளார்(ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) தெரிவிக்கிறார்கள். (நூல்:புகாரி:4)

மூன்றாவது தடவையாக மிஃராஜின் போது கண்டார்கள் ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக்கண்டார். (53:13,13) அங்கே தான் சொர்க்கமெனும் தங்குமிடம் உள்ளது.(53:15)அந்த இலந்தை மரத்தை மூடவேண்டியது மூடியபோது அவரது பார்வை திசைமாறவில்லை. தாண்டவுமில்லை. (53:16,17) தமது இறைவனின் பெரும் சான்றுகளைக் கண்டார்.(53:18)தூய்மையான வெண்ணிற ஆடையில் ஒரு மனிதர் வந்தார் என அறிவிக்கும் நபி மொழி, ‘நபி(ஸல்) அவர்களும்,நாயத்தோழர் களும் மனித உருவத்தில் கண்டதற்கான ஆதாரமாகும்.’ (முஸ்லிம் 1-8)                                                     

(நபி (ஸல்) அவர்கள் ஜப்ரீலை அசல் தோற்றத்தில் இரு தடவைகள் தான் பார்த்துள்ளதாகவும் முதலாவது தடவை பார்த்தது மனித உருவத்தில் என்றும் கூறுகின்றனர். இறைவனே அறிந்தவன்)

6. மனிதர்கள் வானவர்களாக முடியுமா ?                                                       


மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.

7. வானவர்கள் இறைவனின் பிள்ளைகளா ?  


சில மதத்தவர் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் எனக்கூறுவதையும் இறைமறை மறுக்கிறது.

‘ உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை வழங்கிவிட்டு தனக்கு வானவர்களை பெண்மக்களாக ஆக்கிக் கொண்டானா? (17:40) என்ற வசனமும், அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை என்ற 112:1-4 வசனமும் இதற்கு ஆதாரமாகும்.

8. வானவர்கள் பெண்களா ? أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُون


வானவர்களை சிலர் தேவைதைகளாகவும் பெண்களாகவும்; சித்தரித்துக்கூறும் பொய்ச் செய்திகளையும் மறுத்து அவர்கள் பெண்களல்ல என இறைவனின் வசனங்கள் 43:19,37:150,53:27 தெளிவுபடுத்துகின்றன.

9. வானவர்களின் உருவத் தோற்றம்.


 நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி). (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புவான் (அல்குர்ஆன் 35:1)

‘அதன் மேல் (நரகின் மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். 66:6  عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார். (53:5,6).  ‘அழகிய தோற்றமுடையவர்’ என 12:31 என்ற வசனமும் தெளிவு படுத்துகிறது. ذُو مِرَّةٍ ‘தூ மிர்ரத்தின்’ என்பதற்கு ‘அழகிய தோற்றமுடையவர்,பெரும் வலிமை மிக்கவர்’ என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளிக்கிறார்கள்.

10. வானவர்களின் உணவு, பானம்


நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.

11. வானவர்கள்-வெட்கப்படுவார்கள்.


ஒருமுறை அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) நபிகளாரிடம் வந்தபோது, நபி(ஸல்)தமது ஆடைகளைச் சரி செய்யாத போது, உத்மான் (ரலி) வந்ததும் தமது ஆடையைச் சரிசெய்தார்கள். காரணம் வினவியபோது நபி (ஸல்) கூறினார்கள். ‘வானவர்கள் எவர் விசயத்தில் வெட்கப்படுகிறார்களோ அவர் விசயத்தில் நானும் வெட்கப்படுகிறேன்’ என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் :முஸ்லிம்:2401)

12. வானவர்கள்-வேதனை-அடைகிறார்கள்


இறைவனின் நேசத்திற்குரியவரே மலக்குகளின் நேசத்திற்கும் உரியவர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வெங்காயம், பூண்டு (போன்றவற்றை) உண்டுவிட்டு நமது பள்ளிவாசல் பக்கம் வரவேண்டாம். நிச்சயமாக ஆதமின் மக்கள் வேதனை அடையும் (துர்வாடை வீசும்) பொருட்களி லிருந்து வானவர்களும் வேதனை அடைகிறார்கள்.’ (அறிவிப்பவர்:ஜாபிர்இப்னு அப்துல்லாஹ்,நூல் முஸ்லிம்-1655)  
 

13. இறைவனின் விருப்பமே வானவர் விருப்பம்    

 

இறைவன் நேசிப்பவர்களை வானவர்களும் அவரவர் அமலுக்கேற்பவும், தகுதிக்கேற்பவும் நேசிப்பார்கள்.

‘உயர்வும், மாண்பும் மிக்க அல்லாஹ், ஒரு அடியாரை நேசிக்கும் போது வானவர் ஜிப்ரீலை அழைத்து ‘நான் இன்னாரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசியுங்கள் எனக் கூறுவான்.அவ்வாறே ஜிப்ரீலும் அவரை நேசிப்பார்.பின்னர் ‘வானுலகில் அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள’ என அவரும் அழைத்துக் கூறுவார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். (அதன்படி மண்ணகத்தாருக்கு மத்தியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி: 7485) 
  

14. வானவர்கள் இறைவனை மிகவும் அஞ்சுவர். 

 

 தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் ( 16:50) 
 

15. முற்றிலும் அவனுக்கு வழிப்படுவர். 

 

அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75) 
 

16. இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள். 

 

உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)  
 

17. நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.  

 

(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5) 
 

18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)  

 

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161) 
 

19. உருவமுள்ள வீட்டில் நுழையார்.  

 

நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649, 
 

20. வானவர்களின் பணிகள்  

 

தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?

இறைவன் வானவர்களுக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளான்.            

1. வஹி -இறை தூதின்- பொறுப்பு.

 இப்பொறுப்பு வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும். (ஜிப்ரீலின் பெயர் குர்ஆனில் 2:97,2:98,66;4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன.) இவர்களுக்கு சில சிறப்புப் பெயர்களும் உள்ளன.1.ரூஹுல் குத்ஸ். (16:102) 2. ரஸூலுன் கரீம் ( 81:19) 3.தூ குவ்வத்( 81:20) 4. ரூஹுல் அமீன்(26:193) 5. ஷதீதுல் குவா (52:5)

2. மழை, காற்றின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் மீக்காயீல் எதன் பொறுப்பாளர் எனக் கேட்டபோது,’ மரம் செடிகொடிகளுக்கும், மழைக்கும் என்றார்கள்.

3. சூர் ஊதுவதின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). இரண்டு தடவைகள் சூர் ஊதப்படும். முதல் தடவை ஊதும் போது உலகிலுள்ள யாவும் அழிந்து விடும்.
‘ சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளளோர் மடிந்து விடுவர். (39:68) ஒரே ஒரு தடவை சூர் ஊதப்படுபோது (69:14), பூமியும்; மலைகளும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கித் தூள்தூளாக ஆக்கப்படும் போது (69: 13,14) இரண்டாவது தடவை சூர் ஊதப்படும் போது மரணித்தவர் யாவரும் உயிர்ப் பிக்கப்படுவர்.

‘ (இரண்டாவது தடவை) சூர்ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து இறைவனை நோக்கி விரைவார்கள். (36:51) பின்னர் மீண்டும் ஒருமுறை ஊதப்படும். அவர்கள் எழுந்து பார்ப்பார்கள் ( 39:68)

4. உயிரைக் கைப்பற்றும் வானவர். 
 
(மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவரை சிலர் ‘இஸராயீல்’ என்பர். இந்தப் பெயருக்கு நபி மொழிகளில் ஆதாரம் கிடையாது.

5. உயிரைக் கைப்பற்ற தனித்தனி வானவர்கள்.

நாம் நினைப்பது போல உயிகை;கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் கிடையாது. இது தவறான கருத்தாகும். ஒவ்வொருவரின் உயிரையும் கைப்பற்றுவதற்கு தனித்தனிவானவர் உள்ளனர் என குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ‘ உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரியவானவர் உற்களை கைப்பற்றுவார்.பிறகு உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள் (32:11) உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அதில்) குறை வைக்கமாட்டார்கள். (6: 61) இதில் ஹஃபளத்தன்-பாதுகாவலர்கள், ருஸுலுனா-நமது தூதர்கள் என்பது வானவர்களைக் குறிக்கம். 
 
6. நல்லோரின் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

இறந்த அடியார் நல்லவராக இருந்தால் உயிரைப் கைப்பற்ற வரும் வானவர் நல்ல அழகிய தோற்றத்தில் வந்து நற் செய்தி கூறும் முகமாக ‘ ஸலாமுன் அலைக்கும், உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! நீங்கள் செய்த (நல்ல) வற்றின் காரணமாக சொக்க்கம் செல்லுங்;கள்’ எனக் கூறுவார்கள். (16: 32)

7. தீயோர் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

 இறந்த அடியார் தீயோராக-பாவியாக- இருப்பின் அவரிடம் வரும்வானவர் காணச்சகிக்காத விகாரமாகன பயங்கரத் தோற்றத்தில் வந்து தொண்டைக் குழியை நெருங்கும் அவனது உயிரை கருணை காட்டாது கடுமையாகப் பறித்துச் செல்வர்.

‘ ஒருவனது உயிர் தொண்டைக்குழியை அடையும் போது அந்நேரத்தில் நீங்கள் (எதுவும் செய்ய முடியாது) பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகிலிருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். (56:83, 84,85) அவர் இறைவனுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தால் அவருக்கு உயர்வும், நறுமணமும், சுகந்தரும் சுவர்க்கச்சோலையும் உளளன. அவர் வலப் புறத்தைச் சார்ந்தவராக (சுவர்க்க வாசியாக) இருந்தால் வலது சாராரிடமிருந்து (சுவர்க்க வாசிகளிடமிருந்து) உமக்கு ஸலாம் உண்டாவதாக. (இறையாணைகளை) பொய்படுத்திய வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் வெந்துருகுவதும் விருந்தாகும். இது உறுதியான உண்மையாகும். எனவே மகத்தான உமது இறைவனைகப் (பணிந்து ) துதி செய்வீராக!

8. மனிதனை சதாவும் பாதுகாக்கும் வானவர்.

மனிதனது விழிப்பிலும், தூக்கத்திலும், ஓய்விலும், இயக்கத்திலும், பயணத்திலும் எல்லா நிலையிலும் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர்.

‘ மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை (இடி, மின்னல், விபத்துகள் போன்ற சகல ஆபத்துகளிலிருந்து இறைவனின் விதி வருவது வரை) காப்பாற்றுகின்றனர். (13:11)

9. மனிதனைக் கருவிலும் காக்கும் வானவர்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான்.மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318)

10. மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்கள்

மனிதன் செய்யும் நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்துள்ளான்.

‘ வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18) வலது பக்கம் இருப்பவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடது பக்கம் இருப்பவர் தீமைகளைப் பதிவு செய்வார். இவர்களின் பெயர்களை ரகீப், அத்தீத் என்று சொல்வார்கள். இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும்.. வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’ கண்காணிக்கும் எழுத்தாளர் என்று சொல்லலாம். இவர்களை ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

11. இரவும் பகலும் சுற்றிவரும் வானவர்கள்.(பாதுகாப்புப்பணியினர்)

வானவர்களில் சிலரை ‘தனது நல்லடியார்களை கண்காணிக்கவும் பாதுகாத்து வரவும் கட்டளையிட்டுள்ளான்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இரவிலும் பகலிலும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையிலும், மாலை (அஸ்ரு)த் தொழுகையிலும் இருசாராரும் சந்திக்கின்றனர்.பின்னர் இரவுப் பணியிலுள்ளவர்கள் மேலேறிச் சென்றுவிடுவர். இறைவன் அறிந்து கொண்டே அவர்களிடம் என் அடியார்களை எவ்வாறு விட்டு வந்தீர்கள்? என விசாரிப்பான். (அதற்கவர்கள்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (அங்கே) விட்டு வருகிறோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் போய் சேருகிறோம் என விடையளிப்பர். (நூல்: புகாரி :555)

12. லைலத்துல் கத்ர் இரவில் இறங்கும் வானவர்கள்.

லைலத்துல் கத்ர் என்னும் (மாண்பார்) இரவு ஆயிரம் மாதங்களை விட மாண்புடையது. வானவர்களும் (அவர்களின் தலைவர்) ரூஹும் (ஜிப்ரீலும்) தமது இறைவனின் கட்டளைப் படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (97:3,4) 
 
13. கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அங்கிருந்து நகரும் போது, அவன் அவர்களின் காலணிகளின் ஓசையை செவியுறுவான். அப்போது அவனிடம் இரு வானவர்கள் வந்து அமர்ந்து கொண்டு (பல கேள்விகளைக் கேட்டபின்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கேட்பார்கள்) இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்கிறாய்? என்று கேட்பார்கள்.

(ஒரு முஃமின்)- நம்பிக்கை கொண்டவனாயின், ‘அவன் அல்லாஹ்வின் அடியாரும் அவனது திருத்தூதருமாவார்’என்று சாட்சி சொல்கிறேன் என்று கூறுவான். அப்போது அவனை நோக்கி, (இதோ, உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப் பார்! அதற்குப் பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படவிருக்கிறது என்று அவனிடம் கூறப்படும். (அப்போது சுவர்க்கம், நரகம் ஆகிய) இரு இடங்களையும் அவன் பார்ப்பான். அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி),நூல்: முஸ்லிம்: 2870).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான். (14:27) என்ற இறைவசனம் கப்ருடைய வேதனை சம்மந்தமாக அருளப்பட்டது. (கப்ரில் அடக்கமாயிருக்கும்) அவனிடம், (மன் ரப்புக்க) உன் இரட்சகன் யார்? அதற்கவன் ‘அல்லாஹ் தான்’என்று பதிலளிப்பான்.( உனது நபி யார்? ) எனது நபி முஹம்மத்(ஸல்)அவர்களாவார் என்று பதில் கூறுவான். இதைத்தான் அல்லாஹ் (14:27-ல்) கூறுகிறான். (அறிவிப்பவர்:ஃபரா இப்னு ஆஸிஃப்(ரலி), நூல் : முஸ்லிம் :2871)
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர் என ஹதீஸ் நூல்களில் வருகின்றன.

14 பரிந்துரைக்கும் வானவர்கள்

அல்லாஹ் அனுமதியளித்தவர்களுக்காக வானவர்கள் பரிந்துரைப்பர்.

இறைமறை கூறுகிறது. ‘வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டோரைத்தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை பயன் தராது. (53:26)

15. மரணவேளையிலும், இறுதிநாளிலும் வாழ்த்தும் வானவர்கள்.

 ’எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி,

‘அஞ்சாதீர்கள்!கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ எனக்கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் உதவியாளர்கள்.நிகரற்ற அன்புடைய மன்னிப்ப வனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் கேட்பதும் கிடைக்கும் என்றும் கூறுவர். (41:30,31)

16. சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة )

காஸின் என்பதன் பன்மைச் சொல்லே கஸனத் என்பதாகும். கஸனத்துல்ஜன்னா- சுவர்க்கத்தின் காவலர்கள்) ‘தமது இறைவனை அஞ்சியோர் சுவர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படு வார்கள். அதன் வாசல்கள்திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் ‘உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும!(இனி)நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நிரந்தரமாக தங்குவதற்காக இதில் நுழையுங்கள். (39:73.)

17. நரகின் காவலர்கள் (خزنة جهنم)

இவர்கள் ஸபானியாக்கள் என்றும் கூறப்படும்.(96:18).நரகிற்கு 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’அதன் மேல் பத்தொன்பது வானவர்கள் உள்ளனர்’.74:30 என குர்ஆன் கூறுகிறது.

அதன் தலைவர் மாலிக் (அலை)ஆவார் என ஹதீஸ் நூல்களும் அறிவிக்கின்றன.இதை திருமறையும் உறுதிப்படுத்துகிறது.

‘ யாமாலிக்! (நரகக்காவலரான) மாலிக்கே! உமது இறைவன்    எங்கள் பிரச்சனையை விரைவில் முடிக்கட்டும் என்று (நரக வாசிகள்) அழைப்பார்கள்.’ நீங்கள் இங்கேயே கிடப்பீர்கள் என்று அவர் கூறுவார்.(43:77).

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகிற்கு இழுத்து வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் இறைதூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா? இந்த நாளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா? என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பார்கள். எனினும் (ஏக இறைவனை மறுப்போருக்கு வேதனை என்னும் (கடும்) உத்தரவு உறுதியாகிவிட்டது. (39:71)

18. அர்ஷய் சுமக்கும் வானவர்கள்.

அர்ஷய் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர்.’ ஒவ்வொரு பொருளையும் (உன்) அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கிறாய். எனவே (உன்னிடம்) மன்னிப்புக்கேட்டு உனது பாதையை பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகைவிட்டும் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக (அந்த வானவர்கள்) பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.(40:7); 
 
அர்ஷய் சுமப்பவர்களை’கரூபிய்யூன்-ஈச்சமரத்தின் அடிப்பாகம் கனத்திருப்பதைப் போன்ற பலமிக்க அகன்ற கால்களை உடையவர்கள்’ என பொருள் விரிக்கப்படுகிறது.

19. மலைகளைக்காக்கும் வானவர்கள் (முவக்கலுன் பில் ஜிபால்)

தாயிப் நகருக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் சென்றபோது பனூ அப்து யாலைல் சென்று திரும்புகையில் நீங்கள் இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததையும் அவர்கள் கூறிய பதில்களையும் இறைவன் செவியுற்றான்.’நீங்கள் விரும்பினால் இந்த மலைகளுக்கிடையே இவர்களை அழித்து விடுகிறோம்.’ அங்கே வானவர் ஜிப்ரீலும், மலைகளைக் காக்கும் அமரர்களும் வந்து கேட்டனர் என்ற நபி மொழி இதற்கு ஆதாரமாகும்.

20. பைத்துல் மஃமூரை வலம் வரும் வானவர்கள்

‘பைத்துல் மஃமூர்’ என்பது கஃபாவுக்கு மேலே வானிலுள்ள வானவர்கள் தொழுமிடமாகும்.. அங்கே நாள் தோறும் 70,000 வானவர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதில்லை. (ஆதாரம்: புகாரி)

21. அணிவகுத்து நிற்கும் வானவர்கள்

‘நின்ற நிலையிலே சதாவும் நின்று வணக்கம் புரிபவர்கள்! நிமிராமல் ருகூவிலே குனிந்து வணங்குபவர்கள்! ஏழாமல் சுஜீதிலே சிரம் பணிந்து வணக்கம் புரிபவர்கள்!’ என அணிஅணியாக இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கும் இலட்சக்கணக்கான வானவர் படையும் உள்ளனர் என்பதையும் குர்ஆன், சுன்னா ஒளியில் நாம் ஈமான் (நமபிக்கை) கொள்ளவேண்டும். நம்ப மறுப்போர் நிராகரிக்கப்படுபவர்கள் என்றே கருதப்படும்

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!


"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

தமிழர் சமயம்


பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். - (முதுமொழிக் காஞ்சி 7. பொய்ப் பத்து 9)

பதவுரை முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்; பொய் - இல்லை

விளக்கவுரை பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.
 

இஸ்லாம்


அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7
 

பைபிள் 


செல்வத்தைப் பெறுவதற்கு உழைக்காதே; விலகியிருப்பதற்குப் போதுமான விவேகமுள்ளவனாக இரு. - (
நீதிமொழிகள் 23:4-5
 
அப்போது இயேசு சுற்றிலும் பார்த்து, “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவது எவ்வளவு கடினம்!” என்று சீடர்களிடம் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைவது எவ்வளவு கடினம்! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் ஒரு செல்வந்தன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஓர் ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார். (பைபிள் - மாற்கு 10:23-25)
 

இந்து மதம்


நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்களை சேர்க்க விரும்புகிறார்கள். என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இன்ன திறமை இனி எய்துவேன், என்னிடம் இந்த செல்வம் உள்ளது, இனி இன்ன பொருளை பெறுவேன். “இது போன்ற பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.” - (கீதை 16 :12-14)

முடிவுரை 


தேவைக்கு பொருள் தேடுவது கூடாது என்பது இதன் பொருளல்ல. கிடைக்கும் செல்வதை கொண்டு விரைவில் நன்மை செய்து விடவேண்டும், நன்மைகளுக்கு செலவிடாமல் சேர்த்து வைத்து கொள்ளுதல், தீமை செய்து அதன் மூலம் சம்பாதித்தல், பொருளை முறையற்ற அல்லது சுக போகங்களுக்கு செலவு செய்வத்தோ வீண் விரையம் செய்வத்தோ கூடாது என்பதுதான் இதன் சாரம்.

இந்துமதம் இறைவனை பற்றி என்ன சொல்கிறது??


 பகவத் கீதை 7:207வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
1. இறைவன் ஒருவனே
 சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது. "ஏகம் எவதித்யம்" (இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே)'. reference :உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
குர்ஆன் கூறுகிறது : நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. இறைவன் பிறப்பற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" (அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை). நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே" (அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.) ref: (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. இறைவன் இணையற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)நதஸ்ய பரதிமா அஸ்தி (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை)னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது)
குர்ஆன் கூறுகிறது:"அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை". (குர்ஆன் 112:4)"..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.(குர்ஆன் 42:11)
4. இறைவனை பார்க்க இயலாது :
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் (அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை ) ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி (அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.)
குர்ஆன் கூறுகிறதுபார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
  நாம் பழய வேதங்களை ஒப்பீட்டிற்க்காகவும், அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகளை கொண்டு புதிதாக வேதம் என்று வந்தது உண்மையா என்பதை அறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. பழய வேதமே போதுமானதாக இருந்தால் புதிதாக ஒருவேதத்தை இறைவன் இறக்க வேண்டிய அவசியம் இல்லை.. அவன் முற்றும் அறிந்தவன்.
  இறைவனால் கொண்டுவரபட்ட அனைத்து மதங்களிலும் அனைத்து வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறைவனின் தூதர் முகமது நபி அவர்களையும் புனித நூல் குரானையும் அறிய தொடங்கினால் அவருக்கு இறைவன் நாடினால் புரியும் இறைவன் ஒருவனே என்று..
  அப்படியானால் இஸ்லாமின் கடவுள் ஏன் இதற்கு முன் இங்கு தமிழில் மக்களை வழி நடத்தவில்லை?
"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக"(14 :4 ) 
"..தன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத சமூகம் ஏதுமில்லை."(35 :24 )
  இறைவன் அவரது தூதர்களை அனுப்பாத சமுதாயமே இல்லை என்கிறான், நான் கற்பிதத்தை தவிர உனக்கு எதுவும் தெரியாது என்கிறான். அந்த அடிப்படையில்திருக்குறள்ஆத்திசூடி மற்றும் நாலடியார் இவைகளை புனித குர்ஆனோடு ஒப்பீடு செய்ய தொடங்கியுள்ளோம். அனைத்து வேதங்களும் அவனது தூதர்கள் மூலமே அவரவர் மொழியில் கொடுக்கப்பட்டது. இதில் என் மொழி பெரிது என் வேதங்கள் பெரிது என் கலாச்சாரம் பெரிது என் கடவுள் பெரிது என்பது வீண் பெருமையே அன்றி வேறில்லை. ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் இந்துக்களின் கடவுள் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? இல்லை மற்ற நாட்டு மனிதர்களை அவர் படைக்கவில்லயா? இல்லை வேறு மொழி அவருக்கு தெரியாதா?

  இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனே அனைத்தையும் படைத்தான், அவன் அருள் எந்த நாட்டு மூலமாகவும் மொழிமூலமாகவும் வரும், கண்மூடி தனமாக நம்பாமல் உண்மையை அறியும் நோக்கில் படித்து அறிய முனைவோருக்கு இறைவன் காரியத்தை எளிதாக்கி வைப்பான். 

  இத்தனை வேதங்கள், மதங்கள் அவரவர் மொழியில் இருக்க ஏன் அந்நிய மொழியிலிருந்து வந்த இஸ்லாமை கற்கவேண்டும், பின் தொடரவேண்டும்..? ஒவ்வொரு சமுதாயத்திற்கு ரிஷிகளை அனுப்பினாலும், இறுதி ரிஷியாக இருப்பவர் முகமது அவர்கள், மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்ப பட்டவர் அல்ல, ஒரே கடவுளை வணங்க உலகம் முழுவதற்கும் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார். இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் பல வேதங்களிலும் குரானிலும் கொடுக்கபட்டு உள்ளது.. அறிவோர் அவருக்கே நன்மை செய்கிறார்,இல்லையேல் அவருக்கே கேடு..

  உலகமயமாதல் மனிதனின் திறமை என்று நினைத்தால் பரிதாபம் மட்டுமே படமுடியும், உலகம் முழுவதும் உலகதிற்கான தூதர் அவர்களின் இறை போதனை சென்றடைய இறைவன் ஏற்படுத்திய வழிவகை. இதற்குமுன் உலகமயமாதல் தேவையில்லை ஏனெனில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதர் இருந்தார் ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, ஒரே கடைசி தூதர், அவரும் இல்லை, குரான் மட்டுமே தூது வேலையை செய்து கொண்டு இருக்கிறது, ஒவ்வொரு இஸ்லாமியர்களின் மூலமாக.. எனவே உலகமயமாதலை, தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை இறைவன் சாத்தியப்படுத்தினான்.. இறைவனின் நுணுக்கமான செயல் சிந்திப்பவர்களுக்கு இறைவன் தெளிவுபடுத்துவான்.. இன் ஷா அல்லாஹ்... இறைவன் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக..  
மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை

முன்னுரை - வாய்மை

அனைத்தும் அறிந்ததாக உங்களை கருதாமல் இந்நூலினுள்ளே நீங்கள் நுழையும் முன் இதுவரை நீங்கள் அறிந்த அனைத்தையும் சிறிது காலம் மறந்து, பின் உண்மையை தேடும் நோக்கில் இதனுள் நுழைந்தால் இந்த வாய்மை உங்களுக்கு பலன் தரலாம். 

இது சுய சரிதை அல்ல, அதற்கு நான் தகுதி உடையவனும் அல்ல, எந்த சுயசரிதையில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஏனென்றால்,

  1. சுயசரிதை எழுதுவோரின் நேர்மையும், நியாபக திறனும், மொழி ஆற்றலும் அதில் எழுதப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கான தகவல்களை நாம் அவரின் சுயவரலாற்றிலிருந்து பெறமுடியாது. எனவே எழுதுபவரின் நேர்மையையும் நியாபக சக்தியையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சுயசரிதையை கொண்டு ஒருவரை எடை போட முடியாது. 
  2. சான்றோரின் வரலாறுதான் மக்களையும், சமூகத்தையும் பண்படுத்தும். ஆனால் யார் சான்றோர்? அதற்க்கான வரைவிலக்கணத்தை எங்கே பெறுவது? தொல்காப்பியரும், வள்ளுவரும், திருமூலரும், ஆப்ரஹாமும், இயேசுவும், முகமதுவும், மேலும் நாம் அறிந்த எந்த சான்றோரும் சுய சரிதையை எழுதி இருக்கவில்லை. ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா? அதற்கு அவசியமில்லை என்பதுதான் கரணமாகும்.
  3. வரலாறு என்பது சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு மக்களால் பேசப்பட்டு, நேர்மையான அறிஞர்களால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதாகும்.

வாழ்கைக்கு சான்றாக எடுத்துக்கொள்ள பட வேண்டியவனின் தகுதி என்ன என்று கற்று அறியாமல் சமகாலத்தில் பெண்பித்தன், தற்பெருமைக்காரன், பொய்யன், திருடன், ஏமாற்றுக்காரன், நடிகன், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவன், போலி நல்லவன் என்று யார் யாரையோ குருவாக, தலைவனாக, சான்றோனாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். பரிதாபமான நிலையல்லவா இது?


இந்த குணம் அரசியலில் மட்டுமல்ல, பொதுவாக எல்லா இடங்களிலும் புரையோடி உள்ளது. திறமையாக செய்தால் எதையும் வியக்கும் பண்பு நமது ஆன்மாவுக்கும் நமது சந்ததிக்கும் உகந்ததல்ல. எனவே நமது வாழ்க்கை வழிகாட்டியாக ஒருவரை ஏற்றுக்கொள்ள, அவருக்கு இருக்க வேண்டிய பண்பு எது? அந்த பண்பை வரையறுக்கும் அதிகாரம் படைத்தவன் யார்? போன்ற என்னைக் கவர்ந்த கருப்பொருளையும், எல்லோரும் அறிய வேண்டிய மெய்ப்பொருளை எங்கேனும் பதிந்து வைத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் எவருக்கேனும் பயன்படுமே என்கிற தீராத ஆவலைத் தவிர வேறேதும் இந்த இந்த நூலை கோர்க்க தொடங்கியதற்கான நோக்கமல்ல. இதன் மூலம் ஒருவரேனும் நான் விரும்பும் விதத்தில் பயன்பெற்றால் நான் என் பிறவிப் பயனை அடைந்ததாக கருதுவேன். 

மிகைப்படுத்தி எழுதுவதோ பேசுவதோ எமது இயல்பு அல்ல. மனதுக்கு பிடித்தவர்களை கவர அவ்வாறு பேச முயன்ற பொழுதெல்லாம் அசௌகரிய மன நிலைக்குத்தான் தள்ளப்பட்டேனே தவிர வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது கிடையாது. இதை இங்கே ஒப்புக்கொள்ளும் காரணம் இந்தநூல் முழுவதும் வாசகர்களை வசீகரிக்கும் அமைப்பில் இருக்குமா எனபது சந்தேகமே. ஆனால் இதில் உள்ள பல உண்மைகள் நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிராத, ஆச்சரியமூட்டும், நீங்கள் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய, பயனுள்ள, ஒருவேளை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவல்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

தினசரி வாழ்வில் கீழ்வரும் கேள்விகளை சிந்திக்காமல் ஒரு நாளை நம்மால் கடக்க முடியாது. எந்த ஒன்றை செய்வதானாலும், 
  • ____________ஐ செய்வது சரியா? தவறா? 
  • ____________ஐ செய்யலாமா? வேண்டாமா? 
  • இதன் விளைவுகள் நமையாக இருக்குமா? அல்லது கெடுதியாக இருக்குமா? 

ஆனால் இதற்கான பதிலை நாம் யாரிடம் அல்லது எதில் தேடுகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த தேடலுக்கு பதில் தரும் நூலாக இது அமையும் என்று நம்புகிறேன்.

நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சரி பிழை போன்ற நமது அன்றாட தேடலுடன் தொடர்புடைய நூலக இது அமையும். சுய விளக்கங்களைவிட, சரியான நூலிலிருந்து ஆதாரங்களையும் அதற்கான அறிஞர்களின் விளக்கங்களையும் குவித்து உங்களின் சிந்தனையை முடுக்கிவிடுவதே இந்த நூலின் நோக்கம்.

- சக்திவேல்
(1-செப்-22)

செய்தி & உண்மை : பசுவதை தடை

செய்தி : 

1) மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
2) மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் ராம கோபாலன் வலியுறுத்தல்


உண்மை : 

இதன் பின்னணியில் பிராமண கூட்டம் இருப்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் வரலாறும் இதிகாச புராணங்கள் சொல்லுவது "பார்ப்பான் மாமிசப் பிராணியே"! மேலும் அவர்கள் பசு கறி உணுவதை முக்கிய ஒன்றாக கருதி இருந்தார்கள். இந்து மதம் எதன் மீது கட்ட பட்டுள்ளதோ அவைகளே புலால் உண்ணுதல் / மாட்டு இறைச்சி உண்ணுதலை தடை செய்ய வில்லை என்பது அப்பட்டமான உண்மை. அடுக்கடுக்கான ஆதாரங்கள் வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

1) பசுவைக் கொல்லும் போது,
  ”ஹோதா” என்ற புரோகிதர், ‘அத் ரிகோ சமீத்வம் ஸுசமி சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரிகாஉர் இதித்ரிப் ரூயத்’ என்று சொல்ல வேண்டும். - நூல் : ஐதரேய பிராஹ்மனம் - (பஞ்சிகா2, கண்டம் 7)

 பொருள் : ‘நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே! என்று கூறியவாறு பசுவைக் கொல்ல வேண்டும்.


2) பசுவைக் கொல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: அதாஸ்யா பிராணன் விஸ்ரம் ஸமானா நனுமந்த்ரயதே ஹே புருஷ்ய்ய ஸயாவரீ ராஜகவீ தவப்ராணம் சிதிலம் க்ருத வானஸ்மி பித்ருன் உபேஹி அஸ்மின் லோககே ப்ரஜா புத்திராதிகயா ஹைஷேமம் பிராய - நூல்: தைத்ரீய ஆரண்யகம் (அத்தியாயம் 6, கல்பசூத்திரம்)

 பொருள் : பசுவை கொல்லும் போது சொல்ல வேண்டியது: ‘ஓ புரு ஷனுக்குரிய ஸயாவரியே! பசுமாடு களுக்கு தலைவி (ராஜகவீ)யே நான் உனது உயிரை வாங்குகின்றேன், நீ உனது மூதாதை (பித்ருக்)களை அடையக் கடவாய். இந்த உலகில் உனது சந்ததிகளுக்கு நலத்தைக் கொடுப்பாயாகபசுவும், காளையும் புனித விலங்கு கள். எனவே அவைகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். - நூல் : ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (1:5, 14:29)


3) ‘தேன் வனடு ஹெளபஷ்யம்’

பொருள் : மாடும், எருதும் உணவுக்காத்தான்! அறிவிப்பவர் : சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மத விசாரணை (பக்கம் 105,106)

 ‘கௌசிக முனியின் ஏழு குமாரர் களும் ஒரு மனிதனின் பசுவைக் கொன்று தின்று விட்டதினால் மோட் சம் அடைந்தனர் என்று 1863ல் அச் சான சித்த மத நிரூபன் பக்கம் 334ல் உள்ளது. பிறருடைய பசுவை திருடி சாப்பிட்டவர்கள் கூட மோட்சம் பெற்றதாக வேதங்கள் கூறுகின்றன. யாகத்தில் கொன்ற பசுவின் இறைச்சியை 36 பாகங்களாக பங்கிட்டு அதனை அனைவரும் உண்டனர். இவ்வாறு செய்வதால் கொல்லப்பட்ட விலங்கிற்கு சொர்க்கம் கிட்டும் என்று நம்பினர். வேதகாலக் கட்டத்தில் ஆரியர்கள் மாமிச உணவை குறிப் பாக பசு, காளை, எருது முதலி யவற்றின் இறைச்சியை பயன்படுத்திய தற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

4) சணல் இட மருகு வேதங்கள் ஓர் ஆய்வு (பக்கம்79) வேள்விக்கு படைக்கப்பட்டது. மந்திரப்பூர்வமாய் கொல்லப்பட்டது. விதிப்படி வரிக்கப் பட்டது. ஆசார்யனால் பணிக்கப் பட்டது. ஆகிய புலால் உணவை பிராமணன் உண்ணலாம். அந்த உணவு இல்லையெனில், தன்னுயிர் போகும் என்ற போதும் புலால் உண்ணலாம். ”உண்ணமாட்டேன்!” என்று மறுப்பது தான் பெரும் பாவம்! - நூல் : மனு தர்மம் (பக்கம் 100,101)

5) சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப் பட்டது. விஜனணானவன் தோஷமென்று மாம்ஸத்தைப் புசியாவிட் டால், அவர் 21 பிறவி (ஜென்மம்) பசுவாய் பிறப்பான். - நூல் : மனுஸ் மிருதி (அத்தியாயம் 43 சுலோகம் 35)

6) பசுவைக் கொன்று அந்த கொழுப்பை எடுத்து யாகம் (ஹோமம்) செய்ய வேண்டும். - (அஷ்டகாவிதானம் 1:24,26)

7) எந்தப் பசு கொல்லப்பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிரா மணர்களுக்கு படைக்க வேண்டும். - நூல் : ஆஸ்வலாயண க்ருஷ்ய சூத்ரம் (2,5,27)

8) விருந்தினர் உபசரிப்பில் மது, மாமிசம், இல்லாமல் (பசு அல்லது எருதின் இறைச்சி இன்றி) நடத்தக் கூடாது.நூல் : மாதவ க்ருஹ்ய சூத்திரம் 1,9,200

9) ‘காளையின் இறைச்சி விருந்தினர் உபசாரத்திற்கு உகந்தது’ என வாஜஸ நேயன் கூறுகின்றார். நூல் : வேதங்கள் ஓர் ஆய்வு பக்கம்90
திவோதாசன் என்னும் பாரத மரபின் வேந்தன் பல நூறு காளை களைக் கொன்று விருந்தளித்ததினால் பெருமையுடையவனாய்த் தன்னை அதிதிக்வா எனக் கூறிக் கொண்டான். - அறிவிப்பவர் : சி.ஸா.ஸ்ரீ நிவாசாச்சாரியார். நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம்: பக்கம்43)

10) மாமிசத்தோடு மதுவும் கொடுக்க வேண்டும் என்ற தேவதிதியை அனு சரித்து வேத மறிந்த விருந் தாளிக்கு ஒரு பசுங்கன்றையோ, காளை மாட் டையோ, வெள்ளாட் டையோ வீட்டில் உள்ளவர்கள் பலி கொடுக்கிறார்கள். அதுதான் தர்மம் என்று தர்ம சூத்திரங்கள் கூறுகின்றன. - அறிவிப்பவர் : ராஜாஜி நூல் : உத்தாராம சரிதம்

11) சர்மண்வதி (சம்பல்) நதிக்கரை ஷத்திரிய அரசன் தந்திதேவன் அவ ருடைய விருந்தினர் மாளிகையில் தினசரி 2000 பசுக்கள் கொல்லப்பட் டன. கொல்லப்பட்ட பசுவின் ஈரத் தோல்கள் சமையல் அறைக்கு அரு கிலே குவிக்கப்பட்டிருக்கும். அதிலி ருந்து கசியும் நீர் நதிலாகப் பெருகி ஓடும். (சர்ம தோல்; ணவதி வெளிப் பட்டு ஓடுதல்) சர்மண்வதி என்ற பெயர் தோன்றியது.

12) ரந்தி தேவரு டைய மாளிகையில் விருந்தினர் களுக்காக இந்தப் பசு மாமிசங்களைச் சமைப்பதற்கு 2000 சமையல் காரர்கள்இருந்தார்கள். ஆயினும், பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால், ‘மாமிசம் குறைவாக இருப்பதால் தனய செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை கூட ஏற்பட்டது. - நூல்: வால்காவிலிருந்து கங்கை வரை (பக்கம் 297, 298)

13) சோம்லி’பூஷா’ தேவதைகளின் பொருட்டு பசுவைக் கொல்ல வேண்டும். நூல் : ஸாம வேத தாண்ட மஹாப்பிரஹ்மனன் 23:14:4
அஸ்வின, ஸாரஸ்வத, இந்த்ர, இம்மூன்று தேவதைகளின் பொருட்டு பசுவைப் பலியிட வேண்டும். நான்காவதாக பிரகஸ்பதிக்கும் பசு வேண்டும். - நூல் : ஆகஸ்வலாயன கலிப திரௌத சூத்ரம் (அத்தியாயம் 3, கண்டிகை 9)

14) அவர்கள் மயக்கம் தரும் சோம பானத்தையும் தானியங்களையும் இறைச்சியையும் தேவர்களுக்குப் படைத்து வழிபட்டனர்.நூல் : இந்திய வரலாறு பக்கம் 33 ஆசிரியர் : டாக்டர் சுப்பிரமணியன்

15) மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாட்டிறைச்சி கன்று இறைச்சி முதலியன வழங்கப்பட்டிருக்கின்றன.ஆசிரியர் : ஜவஹர்லால் நேரு, நூல் : டிஸ்கவ்ரி அஃப் இந்தியா

16) அறிவில் மிகுந்த கக்லயஜுர் வேதம் இயற்றிய யாக்ளு வல்கியமுனிவர், காளைகளின் தசையை விரும்பி உண்டார். - ஆசிரியர் : சிவா ஸ்ரீ நிவாசாச்சாரியார், நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம், பக்கம் 43)

17) ‘பிரம்மா மாமிசம் புசிக்கும் படி போதித்தார்! கபில முனிநூல்: சாதாரண இந்து மார்க்கம் பக்கம் 93

18) இந்திரனே! இதுதான் பலிபீடம், இதுதான் பலியிடக் கொண்டு வந் துள்ள பசு, இதோ சோமபானம் (சாரயம்) இந்திரனே! இங்கே உட் காரவும், சோமபானத்தைக்குடிக்கவும். (நூல் : ரிக்வேதம் 1,77,4)

19) இந்திரனே! இந்த புரோடசத்தை (மாடு அல்லது ஆட்டின் விதை) தின்னவும். எங்களுக்கு நூற்றுக்கணக் கான ஆயிரம் கணக்கான பசுக்களை அளிக்கவும். நூல் : ரிக்வேதம் 8,28,1

20) இந்திரனாகிய என்னை வணங்கு கிறவர்கள் எனக்கு பதினைந்து காளைகளையும் இருபது காளையும் சமைக்கிறார்கள். அதிலுள்ள கொழுப் புக் கறிகளை விரைவாக நான் விழுங்குகிறேன். அவை என் வயிற்றை நிரப்புகின்றன. இந்திரன் எல்லா உலகத்திற்கும் தலைவனாய் இருக்கின்றான். நூல் : ரிக்வேதம் 10,86,14

21) அக்கினியே! உனக்காக பசுவின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட தும், மிக்கச் சத்துள்ள கொழுப்புக்கறி யால் செய்யப்பட்ட உணவுப்படை யலை உனக்கு அளிக்கிறோம். உனக்காக கொழுப்புரசம் சொட்டுகிறது. அவற்றைத் தேவர்களுடன் பங்கிடவும். நூல் : ரிக்வேதம் 3,21,1 முதல் 5 வரை அக்னி ஷோத்திரஹோமம் செய் திடப் பயன்படுத்தும் பத்துப் பொருள் களுள் ஒன்று மாமிசம். நூல் : தேவாரம் தேவாரம் வேதசாரம் பக்கம்38,39

22) பசுவைக் கொல்ல வேண்டும். ஆஸ்வலாயன கல்ப சிரௌ தஸுத்ரம் (நூல் : அத்தியாயம் 3 கண்டிகை 7)

23) மஹாவ் ரத யாகத்திற்கு எருதைக் கொல்ல வேண்டும். ஏகாதசி என்னும் யாகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பசுவீதம் கொல்ல வேண்டும். ‘ஆஸ்வலாயன சிரௌதஸுத்ரம் (நூல் : உத்ரஷ்டகம் 7வது கண்டிகை)

24) பசுவின் மாமிசம் கொடுக்கிறதினால் பதினொரு மாதம் வரை பிதுர்கள் இறந்தவர்கள் திருப்தியாயிருக்கிறார்கள். கௌசிகர் புத்திரர் குருக்குருசி யின் சீடர்கள் பசுவின் மாமிசத்தை சிரார்த்தத்தில் புசித்தார்கள். நூல் : சிவபுராணம் தர்ம அத்தியாயம் 16 : அனுஹ் 3 வாஜ்பேய் என்ற யாகத்தில் பசுக் கள் கொல்லப்பட்டு உப்பு, புளிர் பாடாமல் சாப்பிட்டனர். நூல் : தெய்வத்தின் குரல் தீக்கதிர் 22.09.2003 பக்கம் 3)

25) ‘ஆரபத்வமுத மனுஷ்ய இத்யாஹ அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ரதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூத்ய இதி ஜனித்ரைரேனவனம் தத்ஸமனு மத மால பந்த உதிசீனாம் அஸ்யபதோ நிதத்தாத் ஸுர்யம் சக்ஷுர்கமயதாட் வாந்த ப்ராணமன் வஸ்ருத தாதந் திரி க்ஷமக்ஷும்திச ஸ்ரோத்ரம் ப்ருதிவீ சரீரம் நூல் : ஐதரேய ப்ராஹ்மணம் (பஞ்சகா 2, கண்டம் 6)

 பொருள் : இம்மந்திரத்தினால் பசுவின் தாய், தந்தையரைக் கேட்டுக் கொள்வதா வது, இந்த பசுவை எனக்குக் கொடுங் கள். இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர், ‘அத்வர்யூ’ என்னும் தலை மைப் புரோகிதருடைய கட்டளை யைப் பெற்றுக் கொண்டு, பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து ‘கமிதா’ என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் ‘முஷ்டி’ என்னும் குறுந்தடி யால் பசுவினுடைய கழுத்தில் அடித் துக் கொலை செய்வார். அதன் பின் ‘கரா’ ‘இடா’ ‘ஸுனு’ ‘ஸ்வதீத்’ என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவைக் கிடத்தி, தோல் உரித்து, சதையை அறுத்தெடுத்து, சிறிது நெருப்பிலிட்டு, மீதியுள்ள மாமிசத் தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்வார்கள். - அறிவிப்பவர் : ங.ஃ.கேலுண்ணி நாயர் என்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மதவிசாரணை, பக்கம் 67:69


26) உலகத்தில் மாமிசத்தின் ருசியைப் போல் வேறொரு வஸ்துவுமில்லை. மாமிசத்தினால் தேகபலம் வளர்கிறது. இரத்தம் உற்பத்தியாகிறது. மாமிசத்தை விட நேர்த்தியான வேறொரு ஆகார மில்லை என்று ராஜா ஜதேஷ்டர் அவர்கள், பஷீம்ஜீ என்பவரை நோக்கி மொழிந்தார். நூல் : மகாபாரதம், சாந்தி பர்வம், அத்தியாயம் 8 பக்கம் 1543

27) வடை முக்கிய பலகாரங்கள், பாயாசம் , கிழங்கு, ருசியுள்ள இறைச்சி, நறுமணமுள்ள நீர் இவைகள் பிராமணர்களுக்கு உரியன. (மனு .அத்.3சு227)ஒரு பிராமணன் மந்திரத்தினாற் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாமிசத்தைப் புசிக்கலாம். (மனு அத் 5. சு.27)

28) உயிருக்கு ஆபத்து நேருங்கால் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் புசித்த போதிலும் தோஷத்தை அடையமாட்டான். (மனு அத் 3. சு.10) இன்ன இன்ன மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் இவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்ற விவரம் எள், செந்நெல், அரிசி, உளுந்து, நீர், கிழங்கு , கனி இவற்றால் மனித பிதுர்க்கள் ஒரு மாதம் திருப்தியடைவர். மீனுணவால் இரு மாதங்கள் மான் மாமிசத்தால் மூன்று மாதங்கள் - செம்மறியாட்டுப் புலாலால் நான்கு மாதங்கள், பட்சி மாமிசத்தால் அய்ந்து மாதங்கள் பிதுர்த்திருப்தியாகும்.

29) வெள்ளாட்டின் மாமிசம் ஆறு மாதம்- புள்ளிமான் புலால் ஏழுமாதம், கருப்பு மான் மாமிசம் எட்டுமாதம், கலைமான் மாமிசம் ஒன்பது மாதம். முள்ளம்பன்றி, காட்டெருமைக் கடா இவற்றின் மாமிசத்தால் பத்து மாதங்கள், முயல், ஆமை, இவற்றால் பதினோரு மாதங்கள்.பசுவின் பால், தயிர், நெய், இவற்றால் ஒரு வருடம். இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கிக் குடிக்கின்ற கிழ வெள்ளாட்டுக் கடா மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகள்.

30) அந்தந்தத் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசத்தாலும் காட்டில் முளைக்கின்ற செந்நெல் அரிசியினாலும் செய்தால் எல்லையற்ற காலமும் பிதுர்க்கள் சிரார்த்தத்தால் திருப்தியுறுகின்றனர். மழைக் காலத்து புரட்டாசி தேய்பிறை பதின்மூன்றாம் நாளில் தேனாலும் பாயசத்தாலும் சிரார்த்தம் செய்தால் குறைவறத் திருப்தியடைவர். (மனு. அத் 2. சு 267 முதல் 273 வரை) சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு. அத்.5.சு 35)


கருத்து

   மேலே சொல்லப்பட்டு உள்ள ஆதார சுலோகங்கள் மற்றும் நிகழ்வுகள் அறியாதவர் பலர் அறிந்தவர் சிலர், நம் சிந்தையில் விதைக்க பட்ட உண்மை அல்லாத இப்படிப்பட்ட விஷயங்களை வெறுப்பு அரசியலுக்கு அன்றி வேறெவைகளுக்கு பயன் படுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்கள்? பசு புனிதம் என்று எதன் அடிப்படையில் சொல்லுகிறார்கள் இவர்கள்! வேத புத்தகங்கள் தானே ஹிந்து மதம்! அவைகளே தடைசெய்யாமல் உண்ண சொல்லுகிறதே.  நீங்கள் வேதம் சொல்லுவது எங்களுக்கு தேவை இல்லை எங்களுக்கு எங்கள் பொய்யான யூகம் மற்றும் பொய் நம்பிக்கைதான் முக்கியம் என்றால், நாங்கள் உங்களை கட்டாய படுத்தவில்லை. ஆனால் எங்கள் நம்பிக்கியில் மூக்கை நுழைக்காதீர். 

சிந்திக்க 

1) நாம் (தமிழர்கள்) யார்?
2) நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ன?
3) பசுவதை தடை அரசியலா? இல்லை உணமை புனிதமா? இதை அறிய எதை படிக்க வேண்டும்?
4) இந்து மத வேதங்கள் பசு இறைச்சி பற்றி என்ன சொல்லுகிறது?
5) தமிழருக்கும் இந்து மத வேதத்திற்கும் தொடர்பு ஏதும் உண்டா?
6) நம்மை அறிய படிக்க வேண்டிய நூல்கள் வேத இதிகாச புராணங்களா? தமிழ் நன்னெறி நூல்காளா?
7) இதை அரசியல் என்றால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது?