11:00 சாதியை தமிழர்கள் தலையில் காட்டியது ஆங்கிலேயர்கள் (கிபி 1700) என்பதிலும் சோழர் காலத்துக்கு (கிபி 1000) பிறகுதான் வருணாசிரமம் தலை தூக்கியது என்பதிலும் உள்ள முரணை பின்வரும் பாடல்கள் கூறுகிறது.
அதவாது உயர்வு தாழ்வு பாராட்டாத ஒன்றாக சாதி இருந்த பட்சத்தில் கிமு 300 முதல் வெவ்வேறு காலகட்டத்தில் சாதி முறையை சாடிய பாடல்கள் ஏன் பல நூல்களில் இடம் பெற்று உள்ளது?
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2) - கிமு 300
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38) (சிவா வாக்கியம் 38) கி.பி. 9
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195) - கிபி 250
இவ்வாறு இருக்க வருணாசிரமம் ஏற்ற தாழ்வு என்பது சோழர் காலத்துக்கு பிறகுதான் இங்கே வந்ததாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.
- இப்பாடல்கள் தரும் புரிதலின்படி, சாதி/குல/குடி பாகுபாடு என்பது கிமு 300 முதல் இருந்தே வந்துள்ளது.
- ஆரம்பத்தில் குல/குடி பகை காரணமாக, விருப்பு வெறுப்பு போதிக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வுகள் போதிக்க பட்டும் இருக்கலாம்.
- பின்னாளில் அந்த ஏற்றத்தாழ்வு நிரந்தரமாகி அதன் விளைவாக விருப்பு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
- பின்னாளில் சுய இலாபத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகில் இதை நிறுவனமயப்படுத்த கீதை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
- ஆரிய பிராமணர்களின் தேவைக்கு ஏற்ப கீதையில் இந்த பாடல்களை திணித்தோ திரித்தோ இருக்கலாம். ஏனென்றால் சம்ஸ்கிருத வேத கடவுள்களுக்கும் கீதையின் கடவுளுக்கும் தொடர்பில்லை. எனவே கீதையின் மூல மொழி சமஸ்கிருதமா எனபதிலும் சந்தேகம் உள்ளது. மேலும் கீதை மகாபாரதத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு உள்ளது.
- 18:20 சாதிய ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் கிபி 1218-க்கு பிறகுதான் உருவானதிற்கான ஆதாரம் கிடைக்கிறது என்கிற தரவு, கிமு 300-இல் இருந்து சாதிய முரண் இருந்து வந்துள்ளது என்கிற கருத்தை வலுவிழக்க செய்யாது. காரணம் ஆண்டாண்டு காலமாக நமக்கு பல்வேறு சித்தர்கள் முனிவர்கள் மூலம் சாதி / குல / குடி ஏற்றத்தாழ்வு க்கு எதிராக போதனைகள் செய்யப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே அது உருவாகும் பொழுதெல்லாம் உடைக்கப்பட்டு வந்து உள்ளது. எனவே நமது தமிழ் உலகில் குருக்கள் / சித்தர்கள் தோன்றுவது நின்று போன சாதிய முரணுடன் வருணாசிரம கொள்கை திணிக்கப்பட்டு இந்த ஏற்றாததாழ்வு முறை ஆரியர்கள் மூலம் இங்கே நிலைநிறுத்தப்பட்ட காலம் வேண்டுமானால் கிபி 1200 ஆக இருக்கலாம்.
இல்லாத ஒன்றை எப்பொழுதும் தீய சக்திகள் புதிதாக ஏற்படுத்தாது, மாறாக இருப்பதன் பொருளை / விளக்கத்தை திரித்து தனக்கு தேவையானதை சாத்தித்து கொள்ளும் என்பது வரலாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக