தமிழ் உலகில் இறைத்தூதர்கள் வந்துள்ளனரா என்பதை அறிந்துகொள்ளும் முன் நல்ல புரிதல் ஏற்பட சில அடிப்படைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
இறைத்தூதர் என்றால் என்ன?
வேதம் வரும் வழிமுறையில் குரு என்று குறிப்பிடப்பிடப்படுபவர்கள் தான் இறைத்தூதர்கள் ஆவர். அவர்கள் மேலுலகத்துக்கும் கீழுலகத்துக்கும் ஒரு இணைப்பு பலமாக செயல்படுவார்கள்.
இப்படிப்பட்ட இறைத்தூதர்கள் 25 பேரை குர்ஆன் குறிப்பிடுகிறது.
- ஆதம் (Adam) - முதல் மனிதர் & நபி
- இத்ரீஸ் (Enoch)
- நூஹ் (Noah)
- ஹூத் (Heber)
- ஸாலிஹ் (Methusaleh)
- இப்ராஹீம் (Abraham) நபிமார்களின் தந்தை
- லூத் (Lot)
- இஸ்மாயீல் (Ishmael)
- இஸ்ஹாக் (Isaac)
- யஃகூப் (Jacob)
- யூசுப் (Joseph)
- அய்யூப் (Job)
- ஷுஐப் (Jethro)
- மூஸா (Moses)
- ஹாரூன் (Aaron)
- துல்கிஃப்ல் (Ezekiel)
- தாவூத் (David)
- சுலைமான் (Solomon)
- இல்யாஸ் (Elias/Elijah)
- அல்யஸஃ (Elisha)
- யூனுஸ் (Jonah)
- ஜகரிய்யா (Zachariah)
- யஹ்யா (John the Baptist)
- ஈஸா (Jesus) - இயேசு
- முஹம்மது (Muhammad) - இறுதித்தூதர்
இதில் அனைவரும் மேற்குலகிற்கு வந்தவர்களா?
இல்லை. இதில் இப்ராஹிம் நபிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரும் மேற்குலகிற்கு வந்த தூதர்கள் ஆவர். அதில் முகமது நபி அவர்கள் ஆப்ரஹாமின் மகன் இஸ்மாயிலுக்கு பிறகும் எந்த வேதமும் தூதரும் வந்திராத சமுதாயத்திலிருந்து இறைத்தூதராக வந்தவர் என்றாலும் அவர் உலகம் முழுமைக்கும் வந்த இறுதி தூதராக இருக்கிறார்.
இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது
”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.” (குர்ஆன் 028:046 034:044, 032:003, 036:005,006)
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்ஆன் 33:40)
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (குர்ஆனின் 21:107)
முதல் மூன்று இறைத்தூதர்களும் மனிதர்கள் முழுமைக்கும் வந்தவர்கள் ஆவர். அதுவரை மனிதர்கள் அனைவரும் ஒரே மொழியை பேசிவந்தார் எனவே ஒரே காலகட்டத்தில் பல தூதர்கள் இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்கவில்லை.
நூஹ் நபி காலத்தில் உலகம் நீரால் அழிக்கப்பட்டு, நல்லோர்கள் மாட்டும் கப்பலில் ஏற்றப்பட்டு, கப்பல் ஒரு மலையில் தரைதட்டி நின்றபிறகு அவர்கள் அதிலிருந்து இறங்கி ஒரு சமவெளி பிரதேசத்தில் குடியேறினர் என்கிறது பைபிள். நவீன ஆய்வாளர்கள் மூன்று இடங்களை அடையாளம் கண்டு கப்பல் ஒதுங்கிய மலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அது அனைத்தும் துருக்கியில் உள்ளது.
அவர்கள் அங்கிருந்து பயணம் செய்து குடியேறிய சமவெளி பகுதி அவர்களுக்கு அருகில் உள்ள வளமான பகுதியான ஹரப்பா மற்றும் சிந்துசமவெளி பிரதேசங்கள் ஆகும். நோவாவின் சந்ததி இங்கிருந்துதான் இனங்களாக, நாடுகளாக , சமயங்களாக, மொழியாக பிரிய துவங்கியது. இதைப்பற்றி ஆதியாகமம் 10 & 11 தெளிவாக விளக்குகிறது.
இவ்வாறு பிரிந்த மக்கள் கூட்டத்தில் இருந்துதான் தமிழர்களாகிய நாம் வந்து உள்ளோம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எப்படி? சிந்துசமவெளி சுற்றிய பகுதிகளில் உள்ள தமிழ் ஊர் பெயர்களும் அங்கே கிடைக்கப்பெறும் எழுத்துக்களும் அதற்கான சான்றுகள் ஆகும்.
இப்படி இருக்க மறைநூல் பெரும் இந்த வழிமுறை தமிழில் இருந்திருக்க வாய்ப்பு உணடா? இல்லையா? என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
சரி இருக்கிறது என்று கருதினால் அதற்கான ஆதாரம் என்ன? ஏராளமாக கொட்டி கிடக்கிறது. உதாரணமாக திருமந்திரத்தை மட்டும் பார்ப்போம்.
திருமந்திரம்
இஸ்லாத்தில் அல்லாஹ் தேவர்கள் மனிதர்களுக்கு போதிக்கும் பொருட்டு முதலில் வேதத்தை தேவர்களுக்கு கொடுத்ததாக அறிந்துள்ள நாம், தமிழர் சமயத்தில் அந்த வழிமுறை உள்ளதா என்று ஆய்வு செய்யும் பொழுது திருமந்திரம் இப்படி சொல்வதை கண்டோம்.
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)
பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் வேதத்தை சொல்பவன் ஈசன் ஆவான்.
குறிப்பு: சிவன் என்பதற்கும், நந்தி என்பதற்கும் சிவபுராணம் அல்லது மற்ற புராணங்கள் கூறிய கதைகளை மறந்துவிட்டு இப்பாடல்களின் விளக்கத்தை நேரடியாக திருமந்திரம் எனும் வேதம் வழியாக தமிழ் சொற்களின் பொருள்களை கொண்டு வாசிக்கும் பொழுதுதான் அதன் உண்மை பொருளை அறிய முடியும்.
இதில் மூவர் யார்?
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. - (திருமந்திரம்)
குறிப்பு: அமரர் என்பது டெஹவர்களி குறிக்கும் என்பதை யாவரும் அறிவர். அசுரர் என்பது மனிதர்கள் அணுகமுடியாத வேறு ஒரு படைப்பு. எனவே நரகாசூரன் பத்மாசூரன் போல சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும்.
நால்வர் யார்?
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
மனிதர்களில் நந்தியின் அருள்பெற்ற நாதனை / குருவை நீங்கள் தேடினால், 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியக்ராமர் 4) எண்மர் இந்த நால்வரும் தான் நதிதேவர் ஆவார்கள். இவர்கள் ஒவ்வொரு திசையில் வெவ்வேறு விதமான விதத்தில் மனிதஅ குருக்களுக்கு தேவ குருவாகா ஆனார்கள் என்று மேற் சொன்ன பாடல்கள் விளக்குகிறது.
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - (திருமந்திரம்)
எண்மர் நந்தி தேவரை குருவாக பெற்ற திருமூலர் அவர்கள் அந்த நந்தி மூலம் மக்களுக்கு குருவாக ஆக்கபட்டதாவகவும், அவர் வழிகாட்ட அந்த வழியை பின்பற்றியதாகவும் அவர் மேற்குறிப்பிட்ட பாடலில் கூறுகிறார்.
இது முகமது நபி அவர்கள் தேவதூதர் ஜிப்ரியேலின் மூலம் எப்படி தூதுத்துவத்தை பெற்றாரோ அச்சுப்பிசகாமல் அவ்வாறே உள்ளது. மொழி மாற்றம் காரணமாக இறைவன், தேவர்கள், இறைத்தூதர்களின் பொதுப்பெயர் வேறுபடுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே வரையறையுடனும், ஒரே பண்புடனும் காணப்படுகின்றனர்.
ஆனால் இங்குள்ள ஆன்மீக மாரபும் கடவுளும் ஆபிரகாமிய மாதங்கள் கூறும் இறைத்தூது முறைமைக்கு மாற்றமாக தெரிகிறதே?
ஆம் இதற்கு காரணம் முகமது நபி இறுதி தூதராக இருந்தமையால் அவருக்கு பிறகு எந்த தூதரும் வராமல் ஏறக்குறைய 1440 வருடங்கள் கடந்துள்ளது. இதன் தாக்கம் இஸ்லாம் அல்லாத எல்லா சமய மரபுகளுக்கு நிகழ்ந்தது, அந்த கால கட்டங்களில் அறத்தை மறந்து தனது மொழி இனம் சமய சடங்குகள் ஆகியவற்றை மக்கள் பெரிதாக என்ன துவங்கினர், அதில் வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு மொழியில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு நுழைய முயன்றபொழுது அதற்கான உத்தியாக அவர்கள் ராஜ்யங்களை இணைபப்து போல மதங்களை இணைத்தனர். ஒவ்வொரு சமயத்திலும் உள்ள கடவுளின் பெயரை ஒரு கதா பாத்திரங்களாக வடிவமைத்து புறங்களை எழுத துவங்கினர். அது இந்த தமிழ் மறைநூல்களுக்கும் நிகழ்ந்தது. தமிழை பொறுத்தவரை அது இன்னும் மோசமான நிலைக்கு சென்றது. இங்கே இந்து மறை நூலகளை மறந்து மக்கள் இதிகாச புராணங்களை மட்டும் பின்பற்ற துவங்கினர். பழைய நூலகள் இதில் அழிந்து போனது. இதை மீட்டெடுக்க ஆங்கிலேயர்கள் வரவேண்டி இருந்தது. நம்மிடம் உள்ள மறை நூல் எச்சங்களை கொண்டே நமது அறம் என்ன நமது சமய கட்டமைப்பு என்ன என்று நம்மால் அறிய முடியும். அதற்க்கு வழு சேர்ப்பதாக கீழடி போன்ற தொல்பொருள் வாழ்விடங்கள் கிடைக்கப்பெறுகிறது.
இவைகளை முறையாக சீர்தூக்கி பார்த்தால் தமிழர் சமயம் இஸ்லாம் என்பதை மறுக்க முடியாது.