மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால். - (ஞானக்குறள் 108)
பொருள் கலப்படம் இல்லாத இறை கொள்கை முழு நிலவை போல தெளிவாகத் தோன்றும் ஈசன் அருளைப் பெற்றுவிட்டால்.
இஸ்லாம்
அல்லாஹ்வே அவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் - (குர்ஆன் 6:88)
உங்களுடைய இணையர்களில் (விக்ரகங்களில்) சத்தியத்தின்பால் நேர்வழி காட்டுபவர் எவரேனும் இருக்கிறார்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ் (தான்) உண்மையின் பால் வழி கட்டுகிறான். (சூரத்து யூனுஸ் வசனம் 35.)
கிரிஸ்தவம் / யூதம்
கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. - (நீதிமொழிகள் 3:5-8)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக