இஸ்லாம்
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது” என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன்: 3:187)
உண்மையில் உலக வேதங்களில் இப்படி ஒரு சேத்தி உள்ளதா? வாருகினால் ஆய்வு செய்வோம்!
தமிழர் சமயம்
திருமந்திரம் எனும் வேதத்தை சீடருக்கு உபதேசித்தவர் திருமூலர்
மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. (திருமந்திரம் 138)
(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! நான் இங்கு வந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் நந்தியிடம் நேரடியாக மொழிந்த மூலத்தில் இருந்து இறைவனின் விளையாட்டான சீலாங்க வேதத்தை கூறுவதற்கா வந்தேன.
திருமூலர் சீடருக்கு மட்டுமல்ல இவ்வையகம் அனைத்துக்கும் சொல்லப்பட்ட வேதம் திருமந்திரம்.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. - திருமந்திரம் 147.
(ப. இ.) நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் பெறவேண்டும். வானிலிருந்த மறை பொருளை இவ்வையக மக்களுக்கு சொல்லவில்லை என்றால் அது தவறு. இந்த உடலை பற்றி உணர்வுடைய திருமந்திரத்தை பற்ற பெற்ற அதாவது அதை ஓத ஓத நமக்கு அதன் விளக்கங்கள் புரியும். அதுவே இந்த உலக மக்களின் இன்பத்துக்கு காரணமாக அமையும்.
யூதம்
இஸ்ரவேலே, கேளுங்கள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் நேசிக்கக்கடவாய். இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைப் பற்றிப் பேசக்கடவாய். (9. உபாகமம் 6:4–7)
கிறிஸ்தவம்
பின்பு அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். (மாற்கு 16:15)