வணங்கி வழிப்படாதவர்களுக்கு இறைவன் அருள் செய்வானா?

இறைவன் தன்னை வணங்குபவர்களுக்கு அருள்செய்கிறான் என்று நாம் அறிந்து வைத்து உள்ளோம். அவனை வணங்கி வழிப்படாதவர்களுக்கு அருள் செய்பவர் யார் என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பு. இதற்கும் அவனது  மறைநூல்களில் விடை தேடுவோம் வாருங்கள்.

தன்னை வழிபடுபவர்களுக்கு இறைவன் அருள் செய்வதாக கூறுகின்றனா? ஆம்!

கிறிஸ்தவம்/யூதம்: 

1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 3 தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார். 5 கர்த்தர் உன் பாதுகாவலர். அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார். (சங்கீதம் 121:1-8)

இஸ்லாம்

இன்னும், (விசுவாசிகளே!) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள், (அவற்றின் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். (24:56)

மேலும், பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள்; அச்சத்தோடும், ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் அருள், நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (7:56) 

தன்னை வழிபடாதவர்களுக்கும் இறைவன் அருள் செய்கிறானா? செய்கிறான்!

தமிழர் சமயம்  

 

யாதொரு தெயவம்‌ கொணெடீர் அத்தெய்வமாக ஆங்கே

மாதொரு பாகனார்தாம்‌ வருவர்‌ !!!! மற்றத்‌ தெய்வங்கள்‌

வேதனைப்படும்‌ பிறக்கும்‌ இறக்கும்‌ மேல்‌ வினையும்‌ செய்யும்‌

ஆதாலல்‌ அவை இலாதான்‌ அறிந்து அருள்‌ செய்வன்‌ அன்றே - (திருமந்திரம்)

 
பதவுரை:
எந்த ஒரு தெய்வத்தை வணங்கினாலும் நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம்‌ வழங்க அந்த தெய்வங்களால்‌ இயலாது என்பதால்‌ மாதொரு பாகனாடிய இவனே வந்து அந்த தெய்வமா௫ அருள்செய்வான்‌. பிறதெய்வங்கள்‌ யாவும்‌ துன்பப்படும், பிறக்கும், இறக்கும், வினைகள் புரியும் ஆனால் எல்லாம்‌ வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள்‌ இல்லையாதலால்‌, செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக்‌ கொடுக்க வல்லவன்‌ அவனே ஆவான்‌. 

 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)  

 

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

கிறிஸ்தவம்/யூதம்

அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். (உபாகமம் 10:18)

இஸ்லாம்: மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த அருள்கள் என்னென்ன?

குர்ஆன்இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க உபதேசமாகும்; இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்? (21:50)

துன்பத்தை நீக்குகிறான்: அவர்களுக்கு நாம் அருள் செய்து அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டுத் தடுமாறியவர்களாகத் தங்கள் அட்டூழியத்திலேயே நீடிக்கிறார்கள். (23:75)

அன்றியும், மனிதனுக்கு நாம் அருள்புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, தன்பக்கம் விலகிச்செல்கிறான்; ஆனால், அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனையுடையவனாக இருக்கின்றான். (41:51)

மழை: மேலும்....வானத்திலிருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கிவைத்து, இறந்துபோன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (45:5)

இரவும் பகலும் சூரியனும் சந்திரனும்: (தவறாமல், தம் வழிகளில்) தொடர்ந்து செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (14:33)

உணவு: இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!'' எனக் கூறியதற்கு (இறைவன் ‘‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பதுபோல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது'' என்று கூறினான்.(2:126)

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன (குர்ஆன் 11:6)

அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர். (67:21)

அனைத்தும் இறைவனின் அருளாகும்: (இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா? இவ்வளவுகூட நீங்கள் நல்லுனர்வு பெற வேண்டாமா? அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான். (16:17)  

இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு மட்டும் அவன் கூடுதலாக அருள் செய்கிறானா? ஆம்!

கிறிஸ்தவம்/யூதம்

ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! (உபாகமம் 5:10)

இஸ்லாம் 

(தூதராக இருந்த ஈஸாவை) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் (முஹம்மது) மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவன் தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக்கொண்டு நீங்கள் (நேர்வழியில்) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (57:28)

இறைதூதர் ஸல் கூறினார்கள், யாருடைய முழுக் கவலையும் சிந்தனையுமாக உலகம் இருக்கிறதோ, அவனது காரியங்களை சீர்குலைத்து அல்லாஹ் அவனது கண் முன்னே வறுமையை கொண்டுவருவான் மேலும் உலகில் அவனுக்கு விதிக்கப்பட்டதை தவிர வேறெதுவும் அவனுக்கு கிடைக்காது. யாருடைய முழுக் கவலையும் சிந்தனையுமாக மருமை இருக்கிறதோ, அவனது காரியங்கள் நிறைவேற்றப்படும், அவனது உள்ளத்தில் அல்லாஹ் திருப்தியை ஏற்படுத்துவான், உலகம் அவனிடம் வந்து கொட்டப்படும் அதை அவர் விரும்பாவிட்டாலும். (இப்னு மாஜா 4105)

இறைவன் வணங்கி வழிபடாதவர்க்கும், வணங்கி வழிபடுபவருக்கும் அவன் கொடுப்பதில் வேற்றுமை உண்டா? உண்டு! 

ஏனென்றால் அவன் வகுத்த அறம் (அ) சட்டத்திற்கு வழிப்பாடாதவர் யாராக இருந்தாலும் தண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல அவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு அருள் செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் வேற்றுமை உணவு, ஏனென்றால் நல்லாருக்கு நலல்தும் தீயோருக்கு கெட்டதும் கொடுக்கப்படுகிறது. 

கிறிஸ்தவம்/யூதம் 

17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக் கொள்ள இலஞ்சத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். 18 அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். (உபாகமம் 10:17-19)

இஸ்லாம்

..(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன் 4:77)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக