முற்றும் உணர்ந்தவன் என்றால் அனைத்தையும் அறிந்தவன், எல்லையற்ற ஞானம் உடையவன் என்று பொருள்.
தமிழர் சமயம்
விடையுடையான் விகிர்தன் மிகு பூதப்
படையுடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும்
சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே. திருமந்திரம் 444
அனைத்துக்கும் விடை உடையவன். அவன் பிறப்பற்றவன். (பஞ்ச) பூதப் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற சடையை உடையவன்.
எண்குணம்?
- பரிமேலழகர் – சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
- புலவர் குழந்தை – திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
- ஆதிபகவன் - (பொருள்: பகவான் - ஒருவன், கடவுள்)
- வாலறிவான் - ((வால்=பெருமை) + அறிவு + அன் = வாலறிவன் = பெரும் அறிவைக் கொண்டவன்)
- மலர்மிசை ஏகினான் (மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்பவன்' என்பதே பொருள் ஆகும். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல்,பரவுதல்' என்று பொருள். 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்றும் பொருள் ஆகும். வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும். இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள். இது அண்டவெளியினைக் குறிக்கும். 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். 'ஏகுதல்' என்னும் சொல்லுக்கு இங்கே 'கடத்தல்' என்னும் பொருளே பொருத்தமாகும்.)
- வேண்டுதல் வேண்டாமை இலான் (தேவைகள் அற்றவன்)
- இறைவன் - முறை செய்து காப்பாற்றுவான் (அ) அனைத்து உயிர்களுக்கும் நடுநிலையோடு நடப்பவன், கொடுப்பவன்.
- பொறிவாயில் ஐந்தவித்தான் - ஐந்து புலன்களுக்கும் பொறிகளுக்கும் புலப்படாமை.
- தனக்கு உவமை இல்லாமை (உடலாலும், உருவிலும், காண முடிந்த எதை கொண்டும் உணமை கூற முடியாதவன்)
- அறக்கடல் ஆனவன் - அறத்தை நிர்னையிப்பவன், பின்பற்ற தூண்டுபவன், பின்பற்றுபவன்.
இஸ்லாம்
நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:11)
கிறிஸ்தவம் / யூதம்
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. (சங்கீதம் 147:5)
முடிவுரை
தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் எவரும் முற்றும் அறிந்தவர் அல்ல. முற்றும் உணர்ந்தவன் இவர்கள் அனைவரையும் படைத்து பாதுகாத்து அழிக்கும் அந்த இறைவன் ஒருவனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக