வருடபிறப்பு கொண்டாட்டம் தேவையா?


தமிழிலிருந்து பிரிந்த தெலுகு-இன் வருட பிறப்பான ஊகாதி-யையோ, மலயாளத்தின் வருட பிறப்பான விஷ்ணு-வையோ, அவ்வளவு ஏன் ஹிந்து வருட பிறப்பாக கருத்தபடும் சமஸ்கிருதத்தில் "சித்திர சுக்லா பிரதிப்பதா" என்று அறிய படுகிற மராத்திய வருட பிறப்பான "Gudhi Padva" வருடங்களின் பிறப்பையோ தமிழ்நாட்டில் யாரும் வெகு விமர்சாயாக கொண்டாடுவதில்லை. இவ்வளவு அருகில் இருக்கும் வருட பிறப்புகளை விட்டு, அதனை தூரம் இருக்கும் ஆங்கிலேய வருட பிறப்பை ஏன் கொண்டாடுகின்றனர் என்று தெரிய வில்லை! 

இயேசு அவர்கள் பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25-லிருந்து 8வது-நாள் அவருக்கு விருத்தசேதனம்/கத்னா (circumcise) செய்ய பட்டு பெயர் சூட்ட பட்ட தினம்தான் ஜனவரி 1-ஆக புது வருடமாக கொண்டாட படுகிறது என்று எத்தனை கிருச்தவர்களுக்கோ கிறிஸ்தவர் அல்லதவருக்கோ தெரியும் என்று தெரியவில்லை. 

பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்." - லூக்கா2:21

And when eight days were accomplished for the circumcising of the child, his name was called JESUS, which was so named of the angel before he was conceived in the womb. - Luke 2:21

ஆங்கில வருட பிறப்பை இரவு முழுதும் விழித்து குடித்து கேக் வெட்டி கொண்டாடுபவர்களும் உண்டு, எழுந்த உடன் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்களும் உண்டு. ஆங்கில வருட பிறப்பிற்கும் பெருமாள் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.. தமிழனுக்கும் ஆங்கில வருட பிறப்புக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.. கால அளவு காட்டியான வருடபிறப்பிருக்கும், ஜோசியத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.
காலையில் எழுந்தால் அனைத்து சேனல்களிலும் இந்தவருடம் உஙகளுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கதை அளந்து காசு சம்பாதிக்க ஒரு கூட்டம்.. ஒரு வருசத்துக்கு எத்தன வருச பிறப்பு? எல்லா விதமான வருச பிறப்பன்னைக்கும் வந்து ஆத்து ஆத்துனு காலைல வந்து இவர்கள் ஆத்திக்கிட்டுதான் இருக்கிறார்கள் சொற்பொழிவு.. தமிழ் வருச பிறப்பன்னைக்கு சொல்லப்படுகின்ற சோசியம், ஆங்கில வருட பிறப்பு அன்று மாற்றி சொல்ல படுகிறது, ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.. எப்படி ஒரே காலத்திற்கு வெவ்வேறு சோசியம் சொல்ல படுகிறது, இயல்பில் எதாவது ஒன்று நிச்சயமாக நடகத்தான் போகிறது, கடசியில், பார்த்தாயா அவர் சொன்னது போல் நடந்து விட்டது என்று ஆரம்பித்து விடுவார்கள்.


வருட பிறப்பென்பது கால அளவுகோல் மட்டுமே, அதில் கொண்டாடாவோ, அந்த தினத்தை கொண்டு ஜாதகம் பாரப்பததிலோ எந்தவித தேவையும் புத்திசாலிதனமும் இல்லை என்பது என் கருத்து.. உடனே சகோதரத்துவத்திற்கு எதிராக பேசுவதாக என்மேல் கருத்து நிலவ வாய்ப்பு உள்ளது. அதில் துளியும் உண்மை இல்லை. நாம் செய்வதை ஏன் எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்யும் எண்ணத்திற்கும் சகோதர தன்மை இல்லாமைக்கும் எந்தவித சம்பந்தாமும் இல்லை. ஆங்கில வருட பிறப்பை கொண்டாடினால்தான் அவர்கள் மீது சகோதர உணர்வு உள்ளதாக அர்த்தம் இல்லை. சகோதரத்துவம் என்பது உண்மையில் மிகப்பெரும் வரையறை கொண்டது.

கட்டாயமாக இஸ்லாமியர்களாக மாற்றபட்டோமா?

 முகலாயர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அவர்கள் குடிமக்களை கட்டாய மதமாற்றம் செய்ததாக என்னிடம் பலமுறை குற்றச்சாட்டுகள் வைக்கபடுகிறது அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை எனக்குள்ளதாக உணர்கிறேன்... 

 1000 ஆண்டுகள் இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும். 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.
   வேறு நாட்டு அல்லது மொழியில் வந்த மதத்தை பின்பற்ற கூடாது என்றால் வட நாட்டில் இருந்து வந்த சமஸ்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்களை பின்பற்றுபவர்கள்தான் முதலில் அதை நிறுத்த வேண்டும்.
   தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரியவில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..
     வாருங்கள் இஸ்லாமிற்கு, நாட்டின் அரசனையும் மார்க பண்டிதார்களையும் சகோதரனாய் கட்டி தழுவலாம். எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் அவன் உன்னை விடதகுதியில் உயர்ந்தவனும் இல்லை, ஏழை உன்னைவிட தாழ்ந்தவனும் இல்லை. இஸ்லாமிய வேதத்தை படிக்க முஸ்லிம் அல்லாத, அவர் மதத்தில் வேதங்களை கற்றுக்கொள்ள அருகதை அற்ற தாழ்ந்தவராக கருத படுபவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு...
   ஹிந்து என்ற சொல் ஏதேனும் வேத புராண இதுகாசங்களில் இருக்கிறதா என்று தேடி பார்க்கவும். நமக்கு வெள்ளயன் வைத்த பெயர் ஹிந்து.. குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு குறிப்பிடும் சொல் அது, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள். அது மதம் இல்லை. மதமாய் இருந்தால் வேத புத்தகங்களில் காட்டுங்கள் பார்கலாம். சைவம் வைணவம் வைதீக மதங்கள் இன்னும் பற்பல வட்டார மதங்கள் மற்றும் கடவுள்களின் கலவைதான் ஹிந்து மதம். இதை நான் சொல்லவில்லை இந்து மதத்தின் வேத இதிகாசங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ரஷ்யாவை சேர்ந்த ஆன்டோநோவா எழுதிய "இந்திய வரலாறு" என்ற புத்தகம் பதிவு செய்த கருத்து இவைகள். இது வெறும் உதாரணம்தான், இன்னும் பற்பல ஆதாரபூர்வமான புத்தகங்களையும் ஆராய்ச்சிகளையும் தர முடியும்
    இப்படி கலவையாக இருந்தால் எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்கு முரணான கருத்தும் அதிலேயே இருக்கும்.
    உதாரணத்திற்கு கடவுள் ஒன்றே, அவருக்கு உருவம் இல்லை என்று என்று ரிக் வேத ஆரம்ப சுலோகங்கள் சொல்கிறது, 9 மண்டலம் வரை இதையே தான் சொல்கிறது, 10 வது மண்டலத்தில் தான் மற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள், உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டீர்கள்என்றால், 10 மண்டலங்களும் வெவ்வேறு ரிஷிகள் மூலம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டது.. அதிலும் இந்த 10வது மண்டலம் எழுதியவர் யார் என்பது விடை இல்லா கேள்வி... மண்டலம் 10 தான் உருவ வழிபாடு கொள்கையின் முதல் அடியிட்ட வரிகள்.. அதனை அடிப்படையாககொண்டுதான் உருவ வழிபாடு சித்தாந்தங்கள் வளர்ந்து இருக்க வேண்டும். யார் எழுதினார், அவர் சுபாவம் என்ன, நல்லவரா? கெட்டவரா? என்றே தெரியாத கொள்கையைத்தான் நாம் முன்னோர்கள் தொன்றுதொட்டு நம்பி வந்துஉள்ளனர்.
   இதை நான் சொல்லவில்லை ஹிந்து பண்டிதர் ஒருவர் எழுதிய கட்டுரையில் படித்தது. என்றால் முதல் 9 மண்டலம் சொல்வது சரியா இல்லை 10 வது மண்டலம் சொல்வது சரியா?
   நான் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று இறைவன் கீதையில் சொல்கிறான், ஆனால் க்ரிஷ்ணர் கடவுள் என்கிறீர்கள்? க்ரிஷ்ணர் பிறந்தார் மேலும் இறக்கவும் செய்தார்.. ராமரும் அதே வகைதான்.. இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், நல்ல மனிதர்களாக, புனிதர்களாக, ரிஷிகளாக, இறைத்தூதர்களாக ஆனால் கடவுள்களாக இல்லை.. இது என் கருத்து இல்லை. மேலே சொல்லிஇருக்கும் கீதையின் கருத்து இதுதான், மேலும்

  படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில் அழுத்தப்படுவர்! -  யஜூர் வேதம் 40:9
   யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! -  அதர்வவேதம் 40 : 09 
    வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். - பகவத்கீதை 7.20  

   இவைகளெல்லாம் சொல்வது என்ன? இயற்கையயும் படைப்பிணங்களாகிய மனிதனையும் விலங்குகளையும் வணங்காதீர்கள் என்றுதானே.. மனிதனை படைத்தது ஆதிபகவான் என்னும் தொடக்கமும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த ஒரு இறைவன் தானே? இவ்வாறு வேதங்கள் சொல்ல மற்ற முரணான கருத்துக்கள் எங்கிருந்து வந்தன?
   நீங்கள் கடவுள்களாக குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்களாகவே சொல்லுகிறது புராணங்கள்.. ஆனால் கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தவர் தானே, இங்கே பிறந்ததாய் சொல்ல படும் கடவுள்கள் ஏன் மற்ற நாடுகளில் மற்ற மொழி பேசும் இடங்களில் பிறக்கவில்லை...? என்றால் அவர் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? ஆம் என்றால் அவர் கடவுளாய் இருக்க வாய்ப்பு இல்லை.. இல்லை என்றால் உங்களின் புரிதலும் செயலும் தவறு.. அடிப்படை அல்லவா இது..?
   மற்ற வேதங்கள் இறைவன் ஒருவனே என்கிறது, அனேகர் அதயே பின் தொடர்கிறார்கள்.. அதை போதித்தவர்களை ரிஷிகள், சித்தர் , தூதுவர் என்று குறிக்கப்படுகிறது, கடவுள் என்று இல்லை.. ஹிந்து மதத்திலும் அதே சொல்ல பட்டு இருக்கிரது, துரதிஷ்டம் என்னவென்றால் இறைவன் ஒருவனே அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன், என இஸ்லாம் சொல்லும் அனைத்தையும் ஹிந்துமதமும் சொன்னாலும் இந்த கருத்துக்கு முரணான கருத்தையும் சேர்த்து சொல்கிறது.. இதனை ஆராய வாய்ப்போ ஆர்வமோ எவருக்கும் இல்லை.
    ஏனென்றால் சம்ஸ்கிருதம் தெரிந்தவரும் பழந்த்தமிழ் தெரிந்தவரும் வெகு குறைவு. மேலும் பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளை பெருகி கொள்ள ஆர்வம் கொண்ட நாம் எது உண்மை என்பதை அறிய ஆர்வம் கொண்டவர்களாக இல்லை.
   பாவிஷ்ய புராணம் பகுதி 3 ,3,5 இல் முகமது நபி அவர்களின் பெயருடன் அவரது வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது (ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மை இது, வீடியோவை  பாருங்கள்). மேலும் 10 அவதாரங்களில் 10வது அவதாரமாக கருத்தப்படும், கல்கி புராணத்தில் குறிக்கப்பட்ட கல்கி அவதாரம் தான் முகம்மது நபி என்று நிரூபிக்கப்பட்ட உண்மை.. நிரூபித்தது இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக உப்பாத்தேயா என்ற சம்ஸ்கிருத அறிஞர்.
   9 அவதாரங்களை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் 10-வது அவதாரத்தை ஏற்க்க மறுக்கிறோம்? அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? வேறு மொழியை சேர்ந்தவர் என்பதாலா? வேறு கொள்கை உடயவர் என்பதாலா?
    நாட்டை பற்றி கவலை படுவீர்களானால் நேற்றய திருப்பதி தமிழ்நாடு உடையது, இன்று ஆந்திராவிற்கு.. நாளை? நேற்றய நாடு இன்று பற்பல நாடுகளாக பிளவுகளுடன், நேற்றய பற்பல நாடுகள் இன்று ஒருங்கிணைந்த நாடாக.. இது வரலாறும் புவியியலும் அரசியலும் கட்டித்தந்த பதிவுகள்.. மறுப்பதற்கு இல்லை..
    மொழி ஒரு தடையா? என்றால் முந்தய 9 அவதாரங்களின் மொழி என்னவென்று தெரியும்? சமஸ்கிருததமாக இருந்தாலும் அது நமக்கு அந்நிய மொழியே.. அனைத்து அவதாரங்களின் மொழி சம்ஸ்கிருதம் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் வரலாறு வெறும் ஒரு சில ஆயிரம் ஆண்டுகாள் தான் ஆனால் இந்த அவதாரங்களின் கலகட்டமோ இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.. மேலும் பல ஆய்யிரம் ஆண்டுகாள் என்று சொல்லுவோரும் உண்டு.. எனவே எந்த மொழி அவர்களின் மொழி? அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே சர்ச்சைக்கு உரிய விஷயம், இதில் எங்கிருந்து அவர்களின் போதனையை பொய் கலக்காமல் அல்லது மறுவாமல் நாம் உண்மையை அப்படியே அறிவது? மொழி தடை எனில் முதலில் ஒதுக்க வேண்டியது தமிழ் சமணர்களை கழுவேற்றி கொலைசெய்து சைவ வைணவ மதங்களை தமிழ்நாட்டில் பரப்பிய ஆரியர்களின் அந்தணார்களின் சமஸ்கிருத போதனைகளைத்தான் நாம் விட்டு தள்ளவேண்டும்.
     வேறு கொள்கையை கொண்டவரா? தமிழன் நாம் வர்ணங்களை கொண்டவர்கள் இல்லை... இங்கு அந்தணனும் இருந்ததில்லை சூத்திரனும் இருந்ததில்லை.. அனைவரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே, ஒருவனின் உயர்வு தாழ்வு அவன் செய்த கருமங்களே தீர்மானிக்கும்.. தமிழன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவன், என்றால் முகம்மது நம் குலமல்லவா? அவர் போதிப்பதும் ஒன்றே குலம் ஒரே தேவனை அல்லவா? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை போதித்த அவதாரம் கல்கி / முகம்மது நபி அவர்கள்.. வார்த்தை பிரயோகங்கள் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றே.. சைவம் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இலக்கியத்திலும் புகுவதற்கு முன்னால் தமிழனின் கொள்கை வணங்க தகுதி படைத்தவன் உருவமற்ற ஒரேகடவுள், படைத்தவன் அவனே, அதை தான் கல்கி அவதாரமாகிய முகம்மது நபி அவர்கள் போதித்து சென்று உள்ளார்கள்..
    மேலும் இவர்தான் 10 வது அவதாரம் என்று உறுதிசெய்த பின்னர் ஏற்க மறுத்தோமானால், நாம் உண்மையில் நாம் வேதங்கள் (இறைவனின் வார்த்தை) சொல்வதை மீறியவர்கள் ஆகின்றோம்.. பின் நாம் கஷ்ட கலங்களில் "நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை" என்று சொல்ல தகுதி அற்றவர் ஆகி விடுகின்றோம்
     யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் போதுமான ஆதாரம், ஸாங்க் ஆஃப் சாலமோன் 5:16 இல் முகம்மது அவர்களின் வருகை பெயருடன் குறிக்கப்பட்டு உள்ளது.
     சரி இருக்கிறது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் உங்கள் வேதத்தையும் இறைவனையும் நம்பியவர்களாகவும் வணங்கியவர்களாகவும் இருந்தால், உங்கள் வேதம் சொல்லியிருக்கும் முன்னறிவிப்புகள் ஏன் என்று சிந்தியுங்கள்.. முகம்மது அவர்கள் வரும் காலகட்டத்தில் அவரையும் அவரது போதனையையும் ஏற்கவேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முற்சென்ற ரிஷிகளின் போதனைகள் பாழ் படும்போழுது அதனை சரிசெய்ய அடுத்து ஒரு ரிஷி அல்லது தூதரை அனுப்புவது இயற்கை.
     ஆதாரம்?, நான்கு வேதங்களும் வெவ்வேறு ரிஷிகளால் எழுத்த பட்டது, மட்டுமல்ல ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மண்டலமும் வெவ்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டது . இதுபற்றி கிருஸ்தவர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் ஹிந்துக்களை போல் அன்றி அவர்களுக்கு அவர்களது பழய புதிய ஏற்பாட்டின் கதை தெரிந்து இருக்க அனேக வாய்ப்பு உள்ளது.. ..
       அனைத்து மதங்களின் வேதங்களின் சாரம் படைத்த ஓரிறைவனை மட்டும் வணங்குவது, இஸ்லாம் மட்டுமே அதில் உறுதியாக இருப்பதால் என் மார்கமாக இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.
    என் கருத்துடன் உங்கள் கருத்து வேறுபடுகிறதா? ஆம் இறைவன் அவனது வேதத்தில் சொல்லுகிறான்

   மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)

கடவுள் நம்பிக்கை என ஒன்று இருந்தால் சிந்தியுங்கள்.. இது விளையாட்டோ, தேவை அற்றதோ இல்லை, விஷயம் கடுமையான விளைவுகளை கொண்டது.

source : https://www.facebook.com/TRafeequlislam/posts/483006018498005

பிராமணன் Vs இஸ்லாமியன்

யார் பிராமணன்?

“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)

கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.

வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.  

எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.

சோவின் எங்கே பிராமணன்?

ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

குறிப்பு: எனவே வர்ணம் பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது. 

மஹாபாரதத்தில் பல இடங்களில்"யார் பிராமணன்"? என்ற கேள்வி எழுகிறது.அதற்கு யுதிஷ்டிரனும்"எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல"

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது:"எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்"

பிராமணன் என்றால் இவ்வகை குணங்களை கொண்டவர் மட்டுமே, அது சாதி அல்ல, பிறப்பால் வருவது அல்ல. ஆனால் பிராஹ்மின் என்ற கூட்டம் அதை ஒரு சாதியாகவும் மற்றவர்கள் தீண்ட தகாதவர்கள் என்றும் வேதம் அவர்களுக்கே சொந்தம் என்றும் மாற்றி விட்டது.

யார் அந்தணன்?

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (நீத்தார் பெருமை குறள் 30)

பொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)

மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தான் செய் தொழிலினது (அதாவது செயலால்) ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது . எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று. 

யார் இஸ்லாமியன்?

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்(தேவர்கள் ), வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் (தயாள குணத்துடன்), தொழுகையை (தவம்) நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் (உண்மை), வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே (பொறுமை) நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் (இஸ்லாமியன்). - அல் குர்ஆன் 2:177

வரையறை அடிப்படையில் இஸ்லாமியன் = அந்தணன் = பிராமணன் ஆகும்.
இந்த வரையறை கொண்ட இஸ்லாத்தை பின் தொடர விரும்புகின்ற எவரையும் இஸ்லாமியனாக அங்கீகரிக்கலாம் ஆனால் இந்து சமயத்தில் பிராமினாக ஆக முடியுமா?

முடிவுரை : 

பிராமணன் என்பதற்கும் இஸ்லாமியன் என்பதற்கும் குறிக்க படும் வரையறை ஒன்றே.

சரி இதுபோல் நடைமுறயில் உள்ள வேற்றுமையாக கருத்தப்படும் அனேக விஷயங்கள் ஒற்றுமையாகவே இருக்க, எதுதான் உண்மையான வேற்றுமை?

இஸ்லாமிற்கு முன் இருந்த எல்லா மதத்தினரும் அது முடியும் தருவாயில் செய்த அதே தவறுதான். படைத்தவனை அன்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வணங்குவது.. சரி இதனை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

அவரவருக்குரிய மரியாதையும், வெகுமதியும், அங்கீகாரமும் அவரவருக்கே சென்றடைய வேண்டும் என்பது எதார்த்த உண்மை.. படிக்காதவனுக்கு சம்பளம் குறைச்சல், படித்த திறமையானவனுக்கு அவனுக்கு உரிய அங்கீகாரமும் சம்பளமும் கொடுக்க படவேண்டும், அம்மாவை அத்தை என்று அழைக்க முடியாது, அப்பாவை மாமா என்று அழைக்க கூடாது.. பிச்சைகாரனை அரசே என்று அழைக்க முடியாது, அரசனை பிச்சைக்காரன் என்று கூறமுடியாது. அது ஏன் கடவுள் விஷயத்தில் மட்டும் இதனை அலட்சியம்? கண்ணில் பட்டவனெல்லாம் கடவுள், காசு குடுத்தா அவன் சாமி, செத்துபோனா அவன் தெய்வம், அழகான சிலை இருந்த அதுவும் கடவுள்! 

சரி இறைவன் இந்த வழக்கத்தை ஏறுக்கொள்கிறானா? 

இல்லை, இறைவன் நம்மோடு வேதத்தின் மூலமாக பேசுகிறான். நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிவிக்கிறான். செய்தால் என்ன நன்மை? இல்லை என்றால் என்ன தீமை? என்றும் விளக்குகிறான். அவன் எவ்வளவு அன்பு கொண்டவன் பாருங்கள், அவன்தான் இறைவன் என்று பல குறிப்புகள், அத்தாட்சிகள், அதிசயங்கள், முன்னறிவிப்பு, நமக்குத் தெரியாத அறிவியல் உண்மைகள் சொல்வதன் மூலம் நிரூபிக்கிறான்.  இதனை அவன் செய்வதற்கு எந்த அவசியமும் கட்டாயமும் அவனுக்கு கிடயாது, நம் மீது கொண்ட கருணை மட்டுமே காரணம். வேதங்கள் என்று எஞ்சி இருப்பவை வெகு சிலவே, அதை படிப்பதில் அல்லது அறிஞர்கள் மூலம் அறிவதில் என்ன சிரமம்? வேதங்களின் அறிவு நமக்கு விளக்கம் கொடுக்கும் என்பது உண்மை, அனைத்து வேதங்களையும் ஒப்பீடு செய்தல் அதிக விளக்கத்தை கொடுத்து ஞானமும் முக்தியும் பெற வழிவகுக்கும்.

நாலடியாரும் இஸ்லாமும்

ஏகஇறைவனின் திருப்பெயரால்!

ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக! 

முன்னுரை :

  இஸ்லாமிய பண்பாடு மற்றும் தமிழர் பண்பாடுகளின் ஒப்பீட்டின் நோக்கம் கொள்கைரீதியாக நாம் எந்த அளவு ஒத்துபோகின்றோம் என்ற புரிதல் ஏற்படவும் ஒற்றுமைக்கு வழிவகுக்கவும் செய்யப்படும் சிறுமுயற்சி.

   தமிழராய் இருக்கும் நாம், தமிழராய் பெருமை கொள்ளும் நாம் நம் வாழ்வியல் அறநெறியாக எதை கொண்டிருந்தோம் என்பதை தமிழ் பிரியர்கள் அறிவதும், அறிய முயற்சிப்பதும் இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவதில் திருக்குறளுக்கு அடுத்து மிகமுக்கியமானது "நாலடியார்". 

   "குர் 'ஆன் 3:64"-லும்,  "எசாயா 1:18-20"-இல் பைபிளிலும், "ரிக் 1.25,3-6"-லும் குறிபிட்டுள்ளதுபோல, வேதங்களிலே உள்ள பொதுவான விசயங்களை ஆராயும் நோக்கத்தில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை கூறும் புனித குரானையும், தமிழர் வாழ்க்கை நெறியை கூறும் நாலடியாரையும் ஒப்பிடுகையில் 11(பழவினை) & 13(தீவினைஅச்சம்) அத்தியாயங்களில் சிலவைதவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய நெறிகளை அப்படியே வலியுறுத்துவதாக அமைந்துகின்றன.

  முரண்பாடுகளை பார்பதற்குமுன், ஒற்றுமைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் இங்கே பார்ப்போம், முழுவதையும் எழுதுவதென்றால் தனிஆய்வு புத்தகமாக வெளியிடலாம், நேரமும் பொருளாதாரமும் அனுமதிக்கின்ற காலத்தில் இறைவன் நாடினால் அந்த பணியை செய்வோம்.

     இவ்விரு பண்பாடுகளில் மிகப்பெரும் வேற்றுமைகளாக கருதபடுபவைகள் அவ்வாறு இருந்திருக்கவில்லை, அவைகளை மட்டும் இங்கே பதிகிறோம். முரண்பாடுகளின்  காரண காரியங்களை பிறகு பார்ப்போம். கீழே கொடுக்க பட்டவைகள் நாலடியாரின் அத்தியாய தலைப்புகள், இதில் சிகப்பு வண்ணமிட்டது முரண்பட்ட பகுதியை குறிக்கும், மற்றவை அனைத்தும் ஒரே போதனைகள்.

அறத்துப்பால் 
1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூய் தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை அச்சம்
பொருட்பால் 
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன் மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
37. பன்னெறி
காமத்துப்பால்
38. பொது மகளிர்
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்
குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள நாலடியாரின் விளக்கஉரைகள் திரு தி.சு.பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தில் 1945ல் வெளியிட்டது.

ஒற்றுமைகள்  : 

1) "இறைவன்" வரையறை & அவனை வணங்கும் முறை 

நாலடியார் செயுள் - 01 :

வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம் 
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று. 
பொருள் :
வான்இடு வில்லின் - மேகத்தால் உண்டாகின்ற  வில்லைப்போல,
வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மையினால்,
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் (புவியில்) படிதலில்லாத  இறைவனை, 
நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது,
சேர்தும் -அடைக்கலமாகிறேன் .

கருத்து :
 மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மை ஆகயால், எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது அடைக்கலமாகிறேன்.
இஸ்லாம் : 

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?  அல்குர்ஆன் 67: 16
கருத்து : வானத்தில் இருப்பவன் என்பதற்கு பூமிக்கு (நிலத்திற்கு) இறைவன் வருவது இல்லை என்று பொருள்.
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 32: 15
கருத்து :
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்) என்று 30 வசனங்களை கொண்ட முழு தனி அத்தியாயம் புனித குர்ஆன் -இல் உள்ளது, சஜிதா/ஸுஜூது /ஸஜ்தா என்பதற்கு நெற்றியும் அதன் முடியும் தரையில் பொருந்தும்படி தொழுதல் அல்லது வணங்குதல் என்றுபொருள்.
ஒப்பீடு :

இரண்டு  நூல்களிலும்,
இறைவனின் வரையறை : இறைவன் என்பவன் புவியில் கால் பதிப்பவன் இல்லை, அவன் வானத்தில் இருப்பவன் என்று மறைமுகமாகவும் நேர்முகமாகவும் குறிப்பிடபடுகின்றது.
தொழும்முறை : இறைவனை தரையில் தலையை வைத்து தொழுதல் வேண்டும் என்றே குறிப்பிடுகிறது.

2) சோதிடம் கூடாது 

நாலடியார் செயுள் - 52 :

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். 
பொருள் :
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து,
தலையாயார் - சிறந்தவர்கள்,
தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்,
தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட,
பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
கருத்து :
நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து. சிறந்தவர்கள் தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள் கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட அறிவிலாதவர் பிறர் இல்லை
இஸ்லாம் : 

    யாரேனும் சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்  (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட இறைவனின் சட்டத்தை (ஷரீஅத்தை) அவர் நிராகரித்து விட்டார்”  - அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

ஒப்பீடு :

இரண்டு நூல்களும் சோதிடம் பார்ப்பதை, கற்பதை ஊக்குவிக்கவில்லை மட்டுமின்றி தடைசெய்கிறது.

3) சாதி கூடாது :

நாலடியார் செயுள் - 136 :

தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

பொருள் :
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறுபோயற்று -
படகுசெலுத்துவோன் பழைமையான சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாகஆற்றைக் கடந்துபோதல் போல;
நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று.
கருத்து :
படகுசெலுத்துவோன் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோதலை போல, நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று. (கல்வியாலே உயர்வு தாழ்வு, சாதியால் அல்ல என்பது கரு.) 
இஸ்லாம் :

கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? அல் குர்ஆன் 39:9

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" அல் குர்ஆன் 49:13

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

ஒப்பீடு :

தமிழர் வாழ்வியல் நெறியும் இஸ்லாமும் போதிப்பது ஒன்றே, ஒரு மனிதனின் உயர்வு மற்றும் தாழ்வை அறிய அளவுகோலாய் இருப்பது இறைவனிடம் அவன் கொண்ட பயபக்தியும், நன்னடத்தையும், கல்வியுமே அன்றி தொழிலோ, பிறப்போ, சாதியோ இல்லை.

வேற்றுமைகள் : 

1)...

பதிவு தொடரும்...

குறிப்பு : 
1) மறுமை வாழ்க்கை பற்றி குர்'ஆன்-ஐ போல் மிகவும் வலியுறுத்தும் நூல் நாலடியார்.
2) பல கடவுள் கொள்கையோ, பெயர்களோ, உருவ வழிபாட்டு முறையோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சான்றாதாரங்கள் :

In PDF :

1) http://noolaham.net/project/38/3800/3800.pdf

In tamil :
1) http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar.html#.VJ_1_ABA
2) http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm
3) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0016.html

In Englishhttp://tamilnation.co/literature/pathinen/naladiyar_english.htm

History :
1) http://www.thoguppukal.in/2012/04/blog-post.html
2) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
4) http://www.valaitamil.com/literature_old-literature-books_pathinen-kezhkanakku/

Other :
1) https://www.facebook.com/Thonmai.Tamizh/posts/219218961543752
2) http://literature-comp.blogspot.in/2011/12/naladiyar.html
3) http://agarathi.com/

Islamic source:
1) http://labbaikudikadutoday.blogspot.in/2012/10/blog-post_4484.html
2) http://www.islamiyapenmani.com/2012/05/muslim-womens-education.html
3) http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/thozil_adipadayil_uyrvu_thazvu_unda/rss#.VKJ9oABA


மாற்றம் நிகழ நாம் மாற வேண்டும் *

கிறிஸ்தவம்


யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய். ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய். யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல, நீ நினைப்பதை எனக்குச் சொல்லு. (யோபு 34:33)

இஸ்லாம் 


எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 8:53)

வேதத்தை விட்ட அறமில்லை!

தமிழர் சமயம் 

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க

வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)


பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.  

கிறிஸ்தவம்

அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)  

இஸ்லாம்

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது(திருக்குர்ஆன் 16 : 64)

கடவுள் வாழ்த்து

உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா

மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா

நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா

எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா

என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா

எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா

இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிரை யாக்குமப்பா

வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா..!

வறுமையிலும் தர்மம்

தமிழர் சமயம்  


உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை. - (நாலடியார் 185

பொருள்: (மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை). 

 

இஸ்லாம்  


தங்களுக்கு இல்லை என்றாலும் தாங்கள் கடுமையான வறுமையில் பட்டினியில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கத்தான் அவர்கள் முன் வருவார்கள். யார் உள்ளத்தின் நப்ஸ் உடைய கஞ்சதனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ  அவர்கள்தான் வெற்றியாளர்கள். (குர்ஆன் 59:9) 

”அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) (நூல்: புகாரி 1413, 6539
 

கிறிஸ்தவம்  

இயேசு நிமிர்ந்து பார்த்தார், பணக்காரர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கை பெட்டியில் வைப்பதைக் கண்டார், மேலும் ஒரு ஏழை விதவை இரண்டு சிறிய செப்புக் காசுகளைப் போட்டதைக் கண்டார். மேலும் அவர், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை அவர்கள் அனைவரையும் விட அதிகமாகப் போட்டாள். ஏனென்றால், அவர்கள் அனைவரும் தங்கள் மிகுதியிலிருந்து பங்களித்தார்கள், ஆனால் அவள் வறுமையிலிருந்து தான் வாழ வேண்டிய அனைத்தையும் செய்தாள். (லூக்கா 21:1-4)


ஆத்திசூடி & இஸ்லாம் - ஒரு ஒப்பீடு

ஆத்திசூடி & இஸ்லாம்

ஓர் ஒப்பீடு


1. ஆத்திசூடி அறம் செய விரும்பு
பொருள் அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு – ஆசை கொள்
விளக்கம் தர்மம்/கடமை/நன்மை செய்ய ஆவல் கொள்.
    இஸ்லாம் 
நன்மை செய் - எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (குர்ஆன் 16:128)
   
2. ஆத்திசூடி ஆறுவது சினம்
பொருள் ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபம்.
விளக்கம் கோபம் தணியத் தகுவதாம். / ஆத்திரம் அடக்கு.
சினம் கூடாது : கோபத்தை மென்றுவிழுங்கு (குர்ஆன் 3:134)

3. ஆத்திசூடி
 இயல்வது கரவேல்
பொருள் இயல்வது-முடிந்தததை, கரவேல்- மறைக்காதே
விளக்கம் கொடுக்கமுடிந்த பொருளை கேட்பவர்களிடம் மறைக்காதே
முடிந்தததை தானம் செய் : வறுமை நிலைமையிலும் (முடிந்தததை)தானம் செய் - (குர்ஆன் 3:134)

4. ஆத்திசூடி  ஈவது விலக்கேல்
பொருள் ஈவது-கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
விளக்கம் ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.
கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டாதே: எவர் கருமித்தனம் செய்வதுடன் மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம் - (குர்ஆன் 4:37)

5. ஆத்திசூடி  உடையது விளம்பேல்
பொருள் உடையது - உள்ள பொருளை, விளம்பேல் - சொல்லாதே
விளக்கம் உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி(பெருமையாய்) சொல்லாதே / தற்பெருமை கூடாது
தற்பெருமை கூடாது : எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. - (குர்ஆன் 4:36)
 
6. ஆத்திசூடி  ஊக்கமது கைவிடேல்
பொருள் ஊக்கம் - மன உறுதியை, கைவிடேல் – கைவிடாதே
விளக்கம் நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே / உற்சாகத்தை (தன்னம்பிக்கை / விடாமுயற்சி) இழக்காதே
மன உறுதி கொண்டவர்கள் இறைவனுக்கு பிடித்தமானவர்கள். : உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? - (குர்ஆன் 4:36)

7. ஆத்திசூடி  எண் எழுத்து இகழேல்
பொருள் எண் - கணித, எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழாதே.
விளக்கம் கற்றலை இகழாதே / கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்
கல்வி மேலானது : கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - (குர்ஆன் 39:9)

8. ஆத்திசூடி  ஏற்பது இகழ்ச்சி
பொருள் ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்.
விளக்கம் இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. / இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்)
பிச்சை வெறுக்கதக்கது : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”…யாசகம் கேட்பதை, அல்லாஹ் வெறுத்துள்ளான்.” - (ஸஹீஹ் புஹாரி [3:591])
 
9. ஆத்திசூடி ஐயமிட்டு உண்
பொருள் ஐயம் - பிச்சையை, இட்டு - கொடுத்து, உண் - உண்ணு
விளக்கம் பிச்சையிட்டுப் பிறகு உண்
பசித்தவருக்கு கொடுத்து உண் - ‘அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறை விசுவாசியாக இருக்க முடியாது’ - (நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160, By : இப்னு அப்பாஸ் (ரழி))

10. ஆத்திசூடி ஒப்புர வொழுகு
பொருள் ஒப்புர- ‘ஒப்பு’ என்றால் சமம் என்று பொருள், ‘உரவு’ என்றால் வலிமை, அறிவு, பரத்தல், மிகுதி, உளத்திட்பம் என்று பொருள் ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். ஒழுகு- அந்த வழியிலே நட
விளக்கம் உலகத்தோடு ஒற்றுவாழ் / பகிர்ந்துண்டு வாழ் / பிறரையும் தமக்குச் சமமாகக்கருதி வாழ் என்று பலபொருள்படும்
    இஸ்லாம் 
அனைவரும் சமம் : ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல

11. ஆத்திசூடி ஓதுவது ஒழியேல்
பொருள் ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் – விடாதே
விளக்கம் ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே.
    இஸ்லாம் 
கல்வி கடமையாகும் : கல்வி கற்பது இறைநம்பிக்கையாளரின் மீது கடமையாகும் - (திரிமிதி 74)

12. ஆத்திசூடி ஒளவியம் பேசேல்
பொருள் ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.
விளக்கம் நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
பொறாமை கொள்ளாதே : நபி (ஸல்) அவர்கள் ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ, புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (ஆதாரம் : அபூதாவூத்))

13. ஆத்திசூடி 
அஃகஞ் சுருக்கேல்
பொருள் அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைக்காதே
விளக்கம் மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே
எடையைக் குறைத்து விடாதீர்கள் : நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்- (குர்ஆன்:55:9)
 
14. ஆத்திசூடி கண்டொன்று சொல்லேல்.
                      பொருள் கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே.
                      விளக்கம் கண்ணாற் கண்டதற்கு மாறாகச் (பொய்ச்சாட்சி) சொல்லாதே.
       இஸ்லாம் 
பொய்ச்சாட்சி) சொல்லாதே: அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)

  15. ஆத்திசூடி ஙப்போல் வளை.
                    பொருள் ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு.
விளக்கம்: ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள். 
பொய்ச்சாட்சி) சொல்லாதே: அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)


 
  16. ஆத்திசூடி சனிநீ ராடு.

(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு

(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)

 
  17. ஆத்திசூடி ஞயம்பட வுரை.

(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]

 
  18. ஆத்திசூடி இடம்பட வீடெடேல்

(பதவுரை) இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே

(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

 
  19. ஆத்திசூடி இணக்கமறிந் திணங்கு

(பதவுரை) இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்.

(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.

 
  20. ஆத்திசூடி தந்தைதாய்ப் பேண்

(பதவுரை) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று

(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

 
21. ஆத்திசூடி நன்றி மறவேல்.

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
    உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

 
22. ஆத்திசூடி பருவத்தே பயிர்செய்.

(பதவுரை) பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு. 
    எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

 
23. மன்றுபறித் துண்ணேல்.

(பதவுரை) மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.

(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
    'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.

 
24. இயல்பலா தனசெயேல்.

(பதவுரை) இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

 
25. அரவ மாட்டேல்.

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

 
26. இலவம்பஞ்சிற் றுயில்.

(பதவுரை) இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.

(பொழிப்புரை) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.

 
27. வஞ்சகம் பேசேல்.

(பதவுரை) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.

 
28. அழகலா தனசெயேல்.

(பதவுரை) அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.

 
29. இளமையிற் கல்.

(பதவுரை) இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.

(பொழிப்புரை) இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.

 
30. அறனை மறவேல்.

(பதவுரை) அறனை-தருமத்தை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

 
31. அனந்த லாடேல்.

(பதவுரை) அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.

(பொழிப்புரை) மிகுதியாகத் தூங்காதே.

 
32. கடிவது மற.

(பதவுரை) கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.

(பொழிப்புரை) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.

 
33. காப்பது விரதம்.

(பதவுரை) காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்.

(பொழிப்புரை) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
    தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.

 
34. கிழமைப் படவாழ்.

(பதவுரை) கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.

 
35. கீழ்மை யகற்று.

(பதவுரை) கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு.

(பொழிப்புரை) இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

 
36. குணமது கைவிடேல்.

(பதவுரை) குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.

 
37. கூடிப் பிரியேல்.

(பதவுரை) கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே.

(பொழிப்புரை) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.

 
38. கெடுப்ப தொழி.

(பதவுரை) கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு.

(பொழிப்புரை) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)

 
39. கேள்வி முயல்.

(பதவுரை) கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி செய்.

(பொழிப்புரை) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.

 
40. கைவினை கரவேல்.

(பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே.

(பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
    (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

 
41. கொள்ளை விரும்பேல்

(பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே.

(பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.

 
42. கோதாட் டொழி.

(பதவுரை) கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு.

(பொழிப்புரை) குற்றமான விளையாட்டை விட்டுவிடு.

கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.

 
43. சக்கர நெறிநில்.

(பதவுரை) சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் – அடங்கி யிரு.

(பொழிப்புரை) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

 
44. சான்றோ ரினத்திரு.

(பதவுரை) சான்றோர் – அறிவினால் நிறைந்தவர்களுடைய, இனத்து – கூட்டத்திலே, இரு – எந்நாளும் இரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

 
45. சித்திரம் பேசேல்.

(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.

 
46. சீர்மை மறவேல்.

(பதவுரை) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்- மறந்துவிடாதே.

(பொழிப்புரை) புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

 
47. சுளிக்கச் சொல்லேல்.

(பதவுரை) சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்) பேசாதே.

(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

 
48. சூது விரும்பேல்.

(பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

 
49. செய்வன திருந்தச்செய்.

(பதவுரை) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த - செவ்வையாக, செய் - செய்.

(பொழிப்புரை) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

 
50. சேரிடமறிந்து சேர்.

(பதவுரை) சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - அடை.

(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

 
51. சையெனத் திரியேல்.

(பதவுரை) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல் - திரியாதே

(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த்
திரியாதே

 
52. சொற்சோர்வு படேல்.

(பதவுரை) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே

(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே

 
53. சோம்பித் திரியேல்.

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

 
54. தக்கோ னெனத்திரி.

(பதவுரை) தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நடந்துகொள்.

(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

 
55. தானமது விரும்பு.

(பதவுரை) தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - ஆசைப்படு.

(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

 
56. திருமாலுக் கடிமை செய்.

(பதவுரை) திருமாலுக்கு - விட்டுணுவுக்கு, அடிமைசெய் - தொண்டுபண்ணு

(பொழிப்புரை) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

 
57. தீவினை யகற்று.

(பதவுரை) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு.

(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.

 
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

(பதவுரை) துன்பத்திற்கு - வருத்தத்திற்கு, இடங்கொடேல் - (சிறிதாயினும்) இடங்கொடாதே.

(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது

 
59. தூக்கி வினைசெய்.

(பதவுரை) தூக்கி - (முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (அதன் பின்பு) செய்.

(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

 
60. தெய்வ மிகழேல்.

(பதவுரை) தெய்வம் - கடவுளை, இகழேல் - பழிக்காதே.

(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து பேசாதே

 
61. தேசத்தோ டொத்துவாழ்

(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.

 
62. தையல்சொல் கேளேல்

(பதவுரை) தையல் - (உன்) மனைவியினுடைய, சொல்- சொல்லை, கேளேல் - கேட்டு நடவாதே.

(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

 
63. தொன்மை மறவேல்

(பதவுரை) தொன்மை - பழைமையாகிய நட்பை,மறவேல் - மறந்துவிடாதே

(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே

 
64. தோற்பன தொடரேல்

(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே

(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.

 
65. நன்மை கடைப்பிடி்

(பதவுரை) நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி

(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள்.

 
66. நாடொப் பனசெய்

(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை,செய் - செய்வாயாக.

(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

 
67. நிலையிற் பிரியேல்.

(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.

(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே

 
68. நீர்விளை யாடேல்.

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

 
69. நுண்மை நுகரேல்.

(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.

(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே

 
70. நூல்பல கல்.

(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல் - கற்றுக்கொள்.

(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள்.

 
71. நெற்பயிர் விளை.

(பதவுரை) (நெற்பயிர் - நெல்லுப் பயிரை, விளை- (வேண்டிய முயற்சி செய்து) விளைவி.

(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல்.

 
72. நேர்பட வொழுகு.

(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப் பட, ஒழுகு - நட.

(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட

 
73. நைவினை நணுகேல்.

(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்க, வினை - தீவினைகளை, நணுகேல் - (ஒருபோதும்) சாராதே.

(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.

 
74. நொய்ய வுரையேல்.

(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

 
75. நோய்க்கிடங் கொடேல்.

(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல்-இடங்கொடாதே.

(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.

 
76. பழிப்பன பகரேல்.

(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களை, பகரேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச்
சொற்களுமாம்.

 
77. பாம்பொடு பழகேல்.

(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனே, பழகேல் -சகவாசஞ் செய்யாதே.

(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.

 
78. பிழைபடச் சொல்லேல்.

(பதவுரை) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.

(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி பேசாதே.

 
79. பீடு பெறநில்.

(பதவுரை) பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..

(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு.

 
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து வாழு.

 
81. பூமி திருத்தியுண்.

(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்து, உண் - உண்ணு.

(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.

 
82. பெரியாரைத் துணைக்கொள்.

(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக நாடிக்கொள்.

 
83. பேதைமை யகற்று.

(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தை, அகற்று - போக்கு.

(பொழிப்புரை) அறியாமையை நீக்கிவிடு.

 
84. பையலோ டிணங்கேல்.

(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - கூடாதே.

(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

 
85. பொருடனைப் போற்றிவாழ்.

(பதவுரை) பொருள்தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு.

 
86. போர்த்தொழில் புரியேல்.

(பதவுரை) போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை,புரியேல் - செய்யாதே.

(பொழிப்புரை) யாருடனும் கலகம் விளைக்காதே.

 
87. மனந்தடு மாறேல்.

(பதவுரை) மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே.

(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க மடையாதே.

 
88. மாற்றானுக் கிடங்கொடேல்.

(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடம் கொடேல் - இடங்கொடாதே.

(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே.

 
89. மிகைபடச் சொல்லேல்.

(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல் - பேசாதே.

(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே.

 
90. மீதூண் விரும்பேல்.

(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே.

(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே.

 
91. முனைமுகத்து நில்லேல்.

(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் - (போய்) நில்லாதே.

(பொழிப்புரை) போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே.

 
92. மூர்க்கரோ டிணங்கேல்.

(பதவுரை) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல் - சிநேகம் பண்ணாதே!

(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.

 
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1

(பதவுரை) மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணுடைய, தோள் - தோள்களையே, சேர் - பொருந்து.

(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.

1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம்.

 
94. மேன்மக்கள் சொற்கேள்.

(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடைய, சொல் - செல்லை, கேள் - கேட்டு நட.

(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

 
95. மைவிழியார் மனையகல்.

(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசையருடைய, மனை - வீட்டை, அகல் - (ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.

(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.

 
96. மொழிவ தறமொழி.

(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி - சொல்லு.

(பொழிப்புரை)சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு.

 
97. மோகத்தை முனி.

(பதவுரை) மோகத்தை - ஆசையை, முனி - கோபித்து விலக்கு.

(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.

 
98. வல்லமை பேசேல்.

(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (புகழ்ந்து) பேசாதே.

(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

 
99. வாதுமுற் கூறேல்.

(பதவுரை) வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.

 
100. வித்தை விரும்பு.

(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையே, விரும்பு - இச்சி.

(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

 
101. வீடு பெறநில்.

(பதவுரை) வீடு - மோட்சத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்.

(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.

 
102. உத்தம னாயிரு.

(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு.

(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.

 
103. ஊருடன் கூடிவாழ்.

(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி - (நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.

 
104. வெட்டெனப் பேசேல்.

(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.

(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.

 
105. வேண்டி வினைசெயேல்.

(பதவுரை) வேண்டி - விரும்பி, வினை - தீவினையை,செயேல்-செய்யாதே.

(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.

 
106. வைகறைத் துயிலெழு.

(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு - எழுந்திரு.

(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.

 
107. ஒன்னாரைத் தேறேல்.

(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - நம்பாதே.

(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.

'ஒன்னாரைச் சேரேல்' என்றும் பாடமுண்டு.

 
108. ஓரஞ் சொல்லேல்.

(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தை, சொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.

(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

             ஆத்திசூடி மூலமும் உரையும்முற்றிற்று