கடவுளுக்கு முன் எதுவும் இருந்திருக்கவில்லை

ஹிந்து மதம்

om atma va idameka evagra asinnanyatki.nchana mishat.h. sa ikshata lokannu srija iti. (Aitareya Upanishad Mantra 1)

In the beginning all this verily was Atman (Absolute Self) only, one and without a second. There was nothing else that winked. He (Atman) willed Himself: "Let Me now create the worlds".

ஆரம்பத்தில் இவை அனைத்தும் ஆத்மனாக (முழு சுயம்) இருந்தது, இரண்டாவது ஏதுமில்லாமல் ஒன்றாகவே இருந்தது. கண் சிமிட்டியது வேறு எதுவும் இல்லை. அவர் (ஆத்மான்) உலகங்களை உருவாக்க விரும்பினார். 
 
இஸ்லாம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வுக்கு முன் வேறு எதுவும் இல்லை, அவனுடைய சிம்மாசனம் தண்ணீருக்கு மேல் இருந்தது, பின்னர் அவர் வானங்களையும் பூமியையும் படைத்து எல்லாவற்றையும் புத்தகத்தில் எழுதினார்."  (புஹாரி)

கருத்து:  ஹதீஸ் நேரடியானது. அல்லாஹ் இருந்தான், அவனுக்கு முன் எதுவும் இல்லை. அதனால் அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தும் ஒரு படைப்பு. அல்லாஹ் ஒருவன் மட்டுமே ஆரம்பம் இல்லாதவன்.

கிறிஸ்தவம் 

ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. (ஜான் 1:1)

தனிமை வேண்டாம் *

கிறிஸ்தவம் / யூதம் 

தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் எவனும் தன் இச்சையைத் தேடுகிறான்; அவர் அனைத்து நியாயமான தீர்ப்புக்கு எதிராக உடைக்கிறார். ( நீதிமொழிகள் 18:1)

இஸ்லாம் 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களுடன் கலந்து அவர்களின் எரிச்சலை பொறுமையுடன் தாங்கும் நம்பிக்கையாளர் கலக்காதவனை விட பெரிய வெகுமதியைப் பெறுவார். மக்களுடன் மற்றும் அவர்களின் எரிச்சலை பொறுத்துக்கொள்ளவில்லை." (அல்-திர்மிதி 5207) 

 


நம்பிக்கை *

 யூதம் 

முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வையுங்கள்; உன் வழிகளிலெல்லாம் அவனை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். ( நீதிமொழிகள் 3:5-6)

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். – நீதிமொழிகள் 22:19

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருப்பார், கண்ணியிலிருந்து உன் பாதத்தைக் காப்பார். - நீதிமொழிகள் 3:26 

சங்கீதம் 9:10  உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடவில்லை.

சங்கீதம் 125:1  கர்த்தரை நம்புகிறவர்கள் சீயோன் மலை போன்றவர்கள். அதை நகர்த்த முடியாது; அது என்றென்றும் நிலைத்திருக்கும்.

 சங்கீதம் 37:3  கர்த்தரை நம்பி நன்மை செய்; நிலத்தில் தங்கி, விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சங்கீதம் 20:7 சிலர் இரதங்களிலும், மற்றவர்கள் குதிரைகளிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை நம்புகிறோம்.

சங்கீதம் 28:7 கர்த்தர் என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இதயம் அவரை நம்புகிறது, நான் உதவி பெற்றேன். ஆகையால் என் இதயம் மகிழ்கிறது, என் பாடலால் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

 எரேமியா 17:7 ஆனால், கர்த்தரை நம்பி, அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

எரேமியா 29:11 உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக, உங்களைச் செழிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டுள்ளேன் என்று கர்த்தர் கூறுகிறார்.

 ஏசாயா 26:4 “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.”

2 சாமுவேல் 22:31 “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”

நாஹூம் 1:7  கர்த்தர் நல்லவர், ஆபத்துநாளில் அரணானவர்; தம்மை நம்புகிறவர்களைக் கவனித்துக்கொள்கிறார். 

கிறிஸ்தவம் 

இதற்காக நாங்கள் உழைக்கிறோம் , பாடுபடுகிறோம், ஏனென்றால் எல்லாருக்கும், குறிப்பாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். - 1 தீமோத்தேயு 4:10 

இஸ்லாம்

ஈமான் என்றால் என்ன?

இந்த கேள்வியை ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) பதில் கூறினார்கள்:

1.அல்லாஹ் (தான் அனைத்தையும் படைத்தவன், அவன் தான் வணங்குவதற்கு தகுதியானவன், அவனுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன) என்று நீ நம்ப வேண்டும்.

2.மலக்குமார்கள் (ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டார்கள் என்று) நம்ப வேண்டும்.

3.வேதங்கள் (அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை அதில் உள்ளவை தான் தவ்றாத், ஸபூர், இன்ஜீல், இறுதி வேதம் குர்ஆன் என்று )நீ நம்ப வேண்டும்.

4.தூதர்கள் (அனைவரும் நல்லவர்கள் அவர்களில் முதன்மையானவர் நபி நூஹ்(அலை) அவர்கள்.அவர்களில் இறுதியானவர் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

5.இறுதி நாளில் (மக்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

6.விதி (யால் ஏற்படும்) நன்மையானாலும் தீங்கானாலும் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று நம்ப வேண்டும். (முஸ்லிம்)

நூல்:அகீததுல் இஸ்லாமிய | ஆசிரியர்: முஹம்மது பின் ஜமீல் ‌ ஜைனூ

புற அழகை மதிப்பிட கண்ணாடியை பயன்படுத்துவது போல், நம் அகத்தில் உள்ள ஈமானை நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியால் அளவிடலாம். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து கேட்கின்றார். “ஈமான் என்றால் என்ன?” என்று அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால், தீய செயல் உன்னை துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீ ஈமான் உடையவன் ஆவாய்”. அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூல்கள்: அஹ்மத்.

 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அல்குர்ஆன் 29 : 2) 

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.

8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.

9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.

10) அல்லாஹ்வை நேசிப்பது.

11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.

12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.

13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.

14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.

15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.

16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.

17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.

18) கல்வியைப் பரப்புவது.

19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.

20) தூய்மையாக இருப்பது.

21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.

22) ஜகாத் கொடுப்பது.

23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.

24) இஃதிகாஃப் இருப்பது.

25) ஹஜ் செய்வது.

26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.

27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.

28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.

29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.

30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.

31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)

32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.

33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.

34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.

35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.

36) கொலை செய்யாதிருப்பது.

37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.

38) திருடாதிருப்பது.

39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.

40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.

41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.

42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.

43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.

44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.

45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.

46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.

47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.

48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.

49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.

50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.

51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.

52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.

54) வெட்கப்படுவது.

55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.

56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.

57) நற்குணத்துடன் நடப்பது.

58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.

59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.

60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.

61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.

62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.

63) நோயாளியை விசாரிப்பது.

64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.

65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.

66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.

67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.

68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.

69) பிறரின் குறைகளை மறைப்பது.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.

72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.

73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.

74) அதிகமாக தர்மம் செய்வது.

75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.

76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.

77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.

78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

இரவுத் தவம்

தமிழர் சமயம் 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே. (ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன் 2) 
 
பதவுரை: பூசனை - வணங்கு; பானு - சூரியன், ஒளி; இந்து - நிலவு; தேய்முறை - காலைக் கதிரவனால் நிலவொளி தேயும் முறை; உபயம் - இரண்டு, தானம், உரிமையான; சிவம்: செம்மை, முழுமை.

பொழிப்புரை: சந்திரன் சூரியன் சேர்ந்து வானில் வரும் காலத்தில், சூரியன் உதிக்கும் முன் உள்ள ஒளியில் அதாவது விடியற்காலையில் (அ)  சூரியன் உதிக்கும் முன், நிலவு வந்து தேயும் (அ) மறையும் நேரத்தில் அதாவது விடியற்காலைக்கு முன் உள்ள இரண்டு பொழுதும் உரிமையான நிலத்தில் பூசனை அதாவது இறைவனை வணங்குவோருக்கு சிந்தை தெளியும், முழுமை பெறுவார்.

இஸ்லாம் 

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

 ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் (அதிகாலை) தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18) 

கிறிஸ்தவம்

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். - (லூக்கா 6:12)

இந்து மதத்திலும் மற்ற மதங்களைப் போன்று தன் கடவுளைத் தொழவில்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனும் கோட்பாடு ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் அதை ஓதி உணர்ந்தவர் குறைவு. சமய நெறிகளை பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தான் இன்று இந்து மதம் உள்ளது. ஆன்மிகம் சார்ந்த கேள்விகளுக்கு மறைநூலில் மட்டுமே பதில் தேடவேண்டும் என்கிற அடிப்படையை இந்த நிலம் மறந்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கருதுகிறேன்.

நாம் தமிழர்களாக இருப்பதால், தமிழரின் சைவ சமய வேத ஆதாரங்களை பார்ப்போம். நமக்கு சம்ஸ்கிருத சனாதன சமய ஆதாரம் தேவை இல்லை. இவ்விரண்டும் வேறு வேறு என்கிற அறிவு பலருக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1) உடல் மற்றும் உயிர் சேர்ந்த உருவம் இறைவனை தொழவில்லை என்றால் அது ஏழாவது நரகில் அழுந்தும்.

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)

பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வணங்காமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர். 
 
2) தனது சமய சின்னங்களை மட்டும் அணிந்து அது கூறிய அறத்தை பின்பற்றாதவர்களை தெய்வம் மறுமையில் தண்டிக்கும், இங்கே தண்டிப்பது அரசனின் கடமை

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

3) நெறிதவற துன்பம் நேரும்

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

முடிவுரை

எனவே வணங்காது இருந்தாலும் அவனை வழிபாடாது இருந்தாலும் அதாவது அவன் வேதத்தில் சொன்ன அறத்தை பின்பற்றாது இருந்தாலும் தண்டனை இம்மையிலும் மருண்மையும் உண்டு.

நாம் அறியவேண்டிய உண்மை என்னவென்றால், உலகம் ஒன்று, அதை படைத்த்ட்ட இறைவன் ஒன்று, அனைத்து வேதங்களையும் தந்தவன் ஒன்று. அப்படி இருக்க அதன் போதனைகள் மட்டும் எப்படிவேறுபடும்?

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், கடவுளை வழிபடுவது என்றால், நமது விருப்பத்துக்கு வணங்க வழிபட முடியாது. அது கடவுள் விரும்பியாடிதான் அமையவேண்டும். அதற்கு நாம் சைவ சமய வேதத்தை வாசிக்க வேண்டும். ஆனால் இன்று அதற்கு உள்ள சாத்தியகூறுகளை சிந்திக்கவேண்டி உள்ளது.