கல்வி என்றால் என்ன?

கல்வி என்பதை தொழிலை கற்கவும், பணம் ஈட்டும் கருவியாகவும் சுறுக்கியது தான் இன்றைய நவீன கல்வி திட்டத்தின் மாபெரும் சதி. சங்க நூல்களிலும், அற நூல்களிலும், சமய நூல்களிலும் கல்வி-யின் அவசியம் அழுத்தி சொல்லப்பட்டு இருப்பது இவ்வகையான தொழிற்கல்வியை மட்டுமல்ல.

இன்றைய கல்வியாளர்கள் மதத்தால் தான் இவ்வளவு கொடூரங்கள் நடைபெறுவதாக கருதுகிறார்கள். இதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஒரு துறை சார்ந்த அரைகுறை அறிவு எப்படிபட்ட நிலைக்கு அந்த துறையை கொண்டுசெல்லும் என்பதை நாம்மல் கற்பனை செய்ய முடியும். அரைகுறை அறிவு எதிலும் ஆபத்துதான். இன்று சமய மற்றும் அறநெறிகளை பயிற்றுவிக்கும் மனநிலையும், கட்டமைப்பும், ஆசிரியர்களும் அற்று போனதன் விளைவுதான் இத்தனை கொடூரங்களுக்கு காரணம் எனும் உண்மையை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

சமய, அறநூல்கள் தீயவையாக கூறும் பெருமை, பொறாமை, ஆசை ஆகியவற்றின் கேட்டையும், மேலும் பொருமை, அன்பு, பணிவு ஆகியவற்றின் நல்ல விளைவுகளையும் கல்வியாக கொடுக்கும். பணமின்றி மகிழ்ச்சியாக இருக்கும் வழிமுறையையும், மக்களை நோகடித்து பொருள் சேர்ப்பதால் பலன் ஏதுமில்லை என்றும் விளங்க செய்து இருக்கும். அறமும் ஆன்மீகமும் வேறல்ல என்று உணர்த்தி இருக்கும்.

நான்மறைகள் கல்வியை பற்றி என்ன சொல்கிறது என்று வாசிப்போம் வாருங்கள். 

கல்வி என்பது இறைவனை அறிந்து வணங்கி வழிபட்டு மறுமையில் வீடு பேரு அடைய உதவுவதாகும். 

தமிழர் சமையம்

இம்மைகும் மறுமைக்கும் உதவுவதுதான் கல்வி.


ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்

தோதிய நூலின் பயன். (ஞானக்குறள் 1)

விளக்கம்: கல்வி கற்பதன் நோக்கம் ஆதிப் பொருளாய் நிற்கும் இறை நிலையை உணர்வதாகும். 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்: கல்வி 398)

விளக்கம்: இம்மையில் தான் கற்றக் கல்வியானது எழும் மறுமையிலும் உதவும் தன்மை உடையது. (மறுமையில் உதவாதது கல்வி அல்ல)  

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: கல்லாமை 401)

விளக்கம்: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கல்லாமல், ஒருவன் அவையின் கண் ஒரு பொருளைப் பற்றிக் கூறுதல் என்பது சூதாடும் களத்தை வகுத்துக் கொள்ளாமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது. 

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (குறள்: கல்லாமை 404)

விளக்கம்: நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாகவிருப்பினும், அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து. (நாலடியார் - 14.கல்வி 132)

விளக்கம்கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. தலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை. 

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது

உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல

கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்

போஒம் துணையறிவார் இல். (நாலடியார் - 14.கல்வி 140)

 

விளக்கம்எல்லையற்ற கgவிகளுக்குள்ளே மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பதெல்லாம் 'கலகல' என்னும் வீணான சலசலப்பே யாகும்! இத்தகைய இவ்வுலக அறிவு நூல்களைக்கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தைப் (துன்பத்தை) போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை. 


வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) 

எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்

மம்மர் அறுக்கும் மருந்து – (விவேகசிந்தாமணி ) 

 

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்

பல்லி யுடையார் பரம்பரிந்து உண்கின்றார்

எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.  4 

பொருள் : உலக ஞானத்தை மட்டும் அறிந்து கொள்ளும் கல்வியை கற்றுக்கொண்ட பலகோடி உயிர்கள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். எண்ணம் சிதறாத மனமுடையவர்கள் உண்மையான ஞானத்தை சிறிது சிறிதாக பெற்று தினமும் காலையும் மாலையும் இறைவனை போற்றி வழிபட்டால் சித்தக் குளிகையால் செம்பு பொன்னாவது போல இறைவனது அருளால் அழிகின்ற உடல் என்றும் அழியாத உடலாக மாறிவிடும்.

துணையது வாய்வரும் தூயநற் சோதி

துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணையது வாய்வரும் தூயநற் கந்தம்

துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.  5 

பொருள்: இறந்த பின் துணையாக கூடவே வருபவை தூய்மையான பேரொளி ஜோதியாகிய இறைவனும் அந்த உயிர்கள் சொன்ன நல்ல சொற்களும், அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் உண்டாகும் நல்ல வாசனையும், உண்மையான ஞானமாகிய கல்வியும் அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்

கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.  6 

பொருள்அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.  

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.  7 

பொருள் : உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான். மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாக தமக்குள் தரிசிக்க பெற்றவர்களுக்கு இறைவனை அடைய மனம் தகுதிபெற்று அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்

கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை

ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்

வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.  8 

பொருள் : உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களின் சிந்தனை உயிர்களுக்கெல்லாம் வழித்துணையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும். உண்மை ஞானமாகிய கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை இல்லாமல் அறியாமையை கொடுக்கும். உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களுக்கு, தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் இருக்கும் இறைவனே பெருங்கருணையுடன் அருள் புரிவான்.

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்

முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்

கிற்ற விரகிற் கிளரொளி வானவர்

கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.  9 

பொருள் : எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால் இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால் எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட உண்மைக் கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து

உடலுடை யான்பல ஊழிதொ றூழி

அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்

இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.  10 

பொருள்கடலாக இருப்பவனும் மலையாக இருப்பவனும் ஐந்து பூதங்களையே தனக்கு உடலாக வைத்திருப்பவனும் உலகம் தோன்றி அழியும் பலகோடி ஊழிக்காலங்களிலும் மாறாமல் நின்று வலிமையான காளையின் மேல் ஏறிவரும் அமரர்களுக்கெல்லாம் தலைவனுமான இறைவனை உண்மை கல்வி ஞானத்தைப் பெற்று தம் மனதில் இடம்கொடுப்பவர் நெஞ்சத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.

முதல் தந்திரம் - 25. கல்லாமை 

 

கல்லா தவருங் கருத்தறி காட்சியை

வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்

கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்

கல்லா தவர் இன்பங் காணகி லாரே. - (பாடல் எண் : 1) 

 

பொழிப்புரை : `கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.  

 

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்

அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்

எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை

கல்லா தவர்கள் கலப்பறி யாரே. - (பாடல் எண் : 2) 

பொழிப்புரை : கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள். 

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்

எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. (பாடல் எண் : 3)

பொழிப்புரை : நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது. 

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்

கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்

கல்லேன் கழியநின் றாடவல் லேனே. (பாடல் எண் : 4)

பொழிப்புரை : நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.

நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி

வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்

கல்லா மனித்தர் கயவர் உலகினில்

பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. (பாடல் எண் : 5)

பொழிப்புரை : கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர். 

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி

கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது

மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்

றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. (பாடல் எண் : 6)

பொழிப்புரை : நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர். 

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது

கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி

கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்

கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. (பாடல் எண் : 7) 

பொழிப்புரை : நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப்பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம். 

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று

கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்

கல்லாத மூடர் கருத்தறி யாரே. (பாடல் எண் : 8) 

பொழிப்புரை : கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார். 

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்

கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. (பாடல் எண் : 9) 

பொழிப்புரை: சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர். 

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற

சோதி நடத்துந் தொடர்வறி யாரே. பாடல் எண் : 10 


பொழிப்புரை : உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.

 அறநெறிச்சாரம்

கல்விக்கு அழகு 

கற்றதுவும் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றுஒருபால் போக மறித்திட்டுத் - தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல்பட்டாற் போன்று. - பாடல் - 73 

விளக்கவுரை கற்கத் தக்கனவற்றைக் கற்றதனால் ஆன அறிவு ஒழுக்கத்தில் சிறிதும் கலவாது ஒரு புறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவு அந்நூல் துணிவுளில் மாறுபட மற்றொரு புறம் போகவும், நல்ல வழியின் செலவைத் தடுத்து உள்ளத்தில் விரைய தீய எண்ணம் தோன்றுமானால், உண்ணப் புகுந்த அப்பக் கூட்டத்துள் பொருந்திய கல்லைப் போல் அது மிக்க துன்பத்தை அளிப்பதாகும்.

கற்றவர் தவற்றைப் பலரும் காண்பர்  

விதிப்பட்ட நூல்உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கைஇகந்து ஆக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழிஆய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு. - பாடல் - 74

விளக்கவுரை ஏற்படுத்தப்பட்ட விதியான நூலைக் கற்று உணர்ந்து, அதில் பிழை எனப்படுவதை செய்யாது அகற்றி, கெட்ட வழிகாட்டும் நூலை கைவிட்டு, இறைவனை அடைய விரும்பி வாழ்பவர், மற்றவர் பழித்தற்குக் காரணமானவற்றைச் செய்தல் சந்திரனிடத்தில் ஏற்பட்டுள்ள களங்கம் போன்றதாகும்.

கிறிஸ்தவம்  

பைபிளின் கருத்து கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா?

“விவரம் தெரியாதவரே கல்வி கற்பதை வெறுப்பர்.” —பூப்ளியுஸ் சைரஸ், மாரல் சேயிங்ஸ், பொ.ச.மு. முதல் நூற்றாண்டு. பைபிள் நம்மை “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் காத்துக்கொள்ள” துரிதப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21, NWஅறிவின் ஊற்றுமூலரான யெகோவா, தம்மை வணங்குபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்(1 சாமுவேல் 2:3; நீதிமொழிகள் 1:5, 22ஆனால் பைபிளில் பதிவு செய்யப்பட்ட சில வாக்கியங்கள் ஒருவேளை கேள்விகளை எழுப்புபவையாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் தன் உயர் கல்வி உட்பட, தன்னுடைய பழைய வாழ்க்கையின் நாட்டங்களைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “நான் இவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்.” (பிலிப்பியர் 3:3-8டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இன்னொரு கடிதத்தில் அவர் இவ்விதம் வலியுறுத்துகிறார்: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 3:19.)

இஸ்லாம்

கல்வி – ஒரு இஸ்லாமியப் பார்வை

”உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.” (திருக்குர்ஆன் 58:11)

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள்தாம் அறிஞர்கள்” (திருக்குர்ஆன் 35:28)

மேலும் அல்லாஹ் கூறினான் ‘அதனை அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 29:43)

மேலும் அல்லாஹ் கூறினான்: ‘நாங்கள் (செவி தாழ்த்திக்) கேட்டிருந்தாலோ, அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரக வாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள்.” (குர்ஆன் 67:10)

மேலும் கூறுகிறான்: ”அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?’ (குர்ஆன் 39:09)

கல்விக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் நெருங்கிய பிணைப்பை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? “சீனம் சென்றேனும் ஞானம் கல்” என்ற இஸ்லாமிய பழமொழி எத்தனை பேருக்குத் தெரியும்?

"ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். – புகாரி

உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றதொரு நபிமொழியில், ‘யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார். ”அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். (ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் "1) நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா) 2) பயனளிக்கக் கூடிய அறிவு 3) தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை- ஆதாரம் : முஸ்லிம்.

 

 
 

  யூதர்களின் திட்டம் 



சுருக்கமாக சொல்வதென்றால், கல்வி என்பது அறியாமையை போக்கும் ஒரு கருவி. நம்மை ஏமாற்ற ஏமாற்றுகாரர்களுக்கு தேவை நம்மிடம் குடி கொண்டு இருக்கும் அறியாமை. மேற்கூறிய இந்த கல்வி அவசியமல்ல என்று ஒருவர் கூறினால் அவர் பேதை என்று பொருள் அல்லது உங்களை பேதையாக்க நினைக்கிறார் என்று பொருள். எனவே இன்றைய தொழிற்கல்வியுடன் சமய நெறி நூல்களையும் கற்போம், அவற்றை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால் வாய்மை - யை வாசிக்க. 

பிரார்த்தனை இரகசியமாக செய்யப்பட வேண்டும் : மக்களிடம் காட்டுவதற்காக அல்ல, பொருளற்ற வார்த்தைகளை கொண்டு அல்ல

கிறிஸ்தவம்

5 “நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்7 ,“நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார்.  - மத்தேயு 6:5-8

இஸ்லாம்

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்புமீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (குர்ஆன் 19:3)

 தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். (குர்ஆன் 35:10)

மெல்லிய குரலில் இறைவனைத் துதிப்பதே விரும்பத்தக்கதாகும்.

அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்று கூறிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்"என்றார்கள். (முஸ்லிம் 5237)

மற்றவரை மன்னித்தால் இறைவனின் மன்னிப்பு கிடைக்கும்

கிறிஸ்தவம் 

மத்தேயு 6 14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். 15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.

https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81+6&version=ERV-TA

_____________________________________________________
இஸ்லாம் 

(அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். 24:22

http://www.tamililquran.com/qurantopic.php?topic=6
______________________________________________________
குறள்: பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)

விளக்கம்: தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.

ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)

விளக்கம்: தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார். ஆனால், பொறுத்தவர்களைப் பொன் போல் பொதித்து வைப்பார்கள்.

திறனல்ல தற்பிற் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (157)

விளக்கம்: தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நன்று.

Read more at: https://tamil.oneindia.com/art-culture/kural/16.html

துறவறம் சரியா? பிழையா?

தமிழர் மதம்


திருமந்திரம்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறியாரே256

அனைத்தயும்யும் துறந்த வழியை தேர்ந்தெடுத்தது முதல் அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவு இல்லை. இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும். அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன். இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்

 வள்ளுவரின் துறவு விளக்கம்

‘துறவு’ அல்லது ‘துறத்தல்’ என்பது பற்றிப் பல கருத்துகள், பல விளக்கங்கள், கூறப்படுகின்றன. குறளுக்கு உரை எழுதிய சமயவாதிகள் ஒரு வகையாகவும், பகுத்தறிவுவாதிகள் இன்னொரு வகையாகவும் விளக்கம் தருகிறார்கள். சமயவாதிகள், இல்வாழ்க்கையை விட்டு, விலகி, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத காடுகளுக்குச் சென்று, தனித்து இருந்து, தன்னை ஒறுத்துத் உடல் அசௌகரியங்களை வலிந்து தானே மேற்கொண்டு தவம் செய்வது என்பர்.

பதவியின் மீது பற்றுக் கொள்ளாத ஒருவர், அதைத்தானாக விட்டு விடுவதையும், துறவு, அல்லது துறத்தல் என்று குறிப்பிடுவர். தனக்கு இருக்கும் மிகுதியான பொருள்கள் மீதும், சௌகரியங்கள் (Comforts) மீதும் பற்று இல்லாதவர்கள், அவற்றை விட்டு விட்டு, தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, குறைந்த அளவுப் பொருட்களுடன் வாழ்பவர்களையும், வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து வாழ்கிறார் என்பர்.

 மனத்து அளவில் துறந்து, பற்று இல்லாமல் வாழ்வது, துறவு என வள்ளுவர் கூறுகிறார். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. புறத்தோற்றத்தில் இருப்பதை விட, அகத்துள், மனத்துள் இருக்க வேண்டியதையே எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறார். துறவு என்ற தலைப்பிலும் அதையே கூறுகிறார்.

பற்றும் துறவும்

பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்று உண்டு. அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு.

வாழ்க்கைக்குப் பொருள் முக்கியம். ‘பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை’ என்றே இன்னொரு இடத்தில் வள்ளுவர் குறிப்பிடுவார். எனவே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குப் பணம் தேவை. பணத்தை விரும்பிச் சேகரிக்க வேண்டும். ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது என்பதே வள்ளுவர் கருத்து.

குடும்பத்தை நடத்திச் செல்வதற்காகப் பொருளை ஈட்டவேண்டும். ஈட்டிய பொருள், பிறருக்கு உதவுவதற்கே. பொருளைப் பிறருக்கும் உதவுமாறு பயன்படுத்தாவிட்டால், ஒருவன் ஈட்டிய பொருளால் எந்த விதப் பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

பொதுவாகத் ‘துறத்தல்’ என்றால் ‘விட்டு விடுதல்’ என்று பொருள்படும். பிறர் மீது அல்லது இன்னொரு பொருள் மீது கொண்டிருக்கும் பற்றை விட்டுவிடுதல் அல்லது பற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பதாகும்.

துன்பத்தை விலக்குவது துறவு

ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்தின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான், பொருள் ஈட்டிக் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது. எனவே, பொருள் ஈட்டுவது அவனது கடமை. பொருள் ஈட்டுவது தன் கடமையை நிறைவேற்றுவதற்குத்தான் என்று எண்ண வேண்டும்.

கடமைக்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணாமல், தனது சுகபோகங்களுக்கு என்று எண்ணுபவனே, பொருள் மீது பற்றுக் கொண்டு, அதை எவ்வழியினாலும் ஈட்டவேண்டும், மிகுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். அவ்வாறு எண்ணிப் பொருளைச் சேகரிப்பவனுக்கு அதனால் தீமை வரும் என்கிறார் வள்ளுவர். பணத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவன் தீய வழியில், பணத்தை ஈட்ட முயலுவான்; குற்றவாளி ஆவான்; அதன் பயனாக வரும் பிற விளைவுகளை எதிர்கொள்வான்.

உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுக்குக் கூறும் இலக்கணம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (குறள் எண்: 341)

(யாதனின், யாதனின் = எவ் எவற்றிலிருந்து; நோதல் = துன்புறுதல்; அதனின், அதனின் = அவ் அவற்றிலிருந்து)

நீங்கிய பொருட்கள் ஒன்று ஒன்றாகச் சுட்டி, அவை ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய துன்பத்தினின்றும் விடுதல் பெற்றமையைக் குறிக்கத்தான் - ‘யாதனின், யாதனின்’, ‘அதனின் அதனின்’ என்று இரட்டித்துச் சொல்லப் பெற்றுள்ளது.

பதவியாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், சுகங்கள் (Comforts/ pleasure) ஆக இருந்தாலும், அவற்றின் மீது பற்றுக் கொள்ளாதீர். பதவியின் மீது பற்றுக் கொண்டால், அந்தப் பதவியே உங்களுக்குத் தீமையாக வரும்; பணத்தின் மீது பற்றுக்கொண்டு அதைத் தனக்கு எனப் பெருக்கிக் கொள்ள விழைந்தால் அப்பணமே உங்களுக்குப் பகையாக மாறும்; சுகங்களை விரும்பி நாடிச் சென்றால், அச்சுகங்களே உங்களுக்கு நோயாக வரும் என்று எச்சரிக்கிறார். எனவே தான் யாதனின் யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன் என்றார். அது சரி. ‘நீங்குதல்’ என்பதன் பொருள் என்ன? பணம் வேண்டாம்; பதவி வேண்டாம்; இவ்வளவு சுகங்கள் வேண்டாம் - என்று எல்லாவற்றையும் மறுப்பதா? அவற்றை எல்லாம் மறுப்பது தான் அறநெறி என்றால் அவ் அறவழியால் இவ்வுலக வாழ்க்கைக்கு என்ன பயன்?

துறவும் உலகியல் இன்பமும்

ஒருவன இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய நன்மைகளும் இன்பங்களும் பலவாகும்.

வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டு இயற்பால பல. (குறள் எண் 342)

(வேண்டின் = (துறவை) விரும்பினால்;

உண்டாகத்துறக்க = செல்வம், வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இருக்கும்போதே அவற்றின் மீது பற்றின்றித் துய்க்க;

துறந்த பின் = அவ்வாறு பற்றுதல் கொள்ளாமல் அனுபவிக்கத் தெரிந்து கொண்ட பின்னர்; ஈண்டு = இவ்வுலக வாழ்க்கையில்;

இயற்பால = உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய, உங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய)

இதுவே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு ஆகும்.

புலன்களின் மேல் ஆளுமை செலுத்துங்கள்; புலன்களின் வலையில் சிக்க வேண்டாம். இவ்வுலக வாழ்க்கையை முழுமையாகத் துய்க்க விரும்பினால் துறவினை மேற்கொள்ளுங்கள்; துயரங்களுக்கு ஆட்படாமல் வாழ்க்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (குறள் எண் : 343)

புலன்களை வெல்லுங்கள் (அடல் = வெல்லுதல்); வெல்லுதல் என்பதன் பொருள் கொல்லுதல் அன்று. புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், அவற்றின் தேவைகளை உங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். இன்ப நிகழ்வின் உந்துதலை நாடாதவருக்கு, துன்ப நிகழ்வுகள் உறுத்துதல் இல்லை.

ஆணவம் - துறவுக்குப் பகை ஆகும்

பற்றுகள் என்றால், பதவிப் பற்று, பணப்பற்று முதலியவைகள்தானா? இல்லை, இதற்கு மேலும் ஒரு பற்று இருக்கிறது. அது ஒருவன், தன்மீது கொண்டுள்ள பற்று. இந்தப் பற்றுத் தானே, பிற பற்றுகளையும் உருவாக்குகிறது. எனவே, ஒருவன் தன் மீது கொண்ட பற்றாகிய ‘யான்’ ‘எனது’ என்பதை அழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

யான், எனது என்ற இயல்பு உடையவர்களை ‘ஆணவம்’ உடையவன் என்பார்கள். இந்து சமயத்தில், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுன்றன.

இவற்றை அழித்தால் தான், ஒருவன் இறைவனை அடைய முடியும். வள்ளுவர் ஆணவத்தைச் ‘செருக்கு’ என்று குறிப்பிடுகிறார்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள் எண் 346)

ஆணவம் ஒருவனை அழித்துவிடும்; அதனால், யான், எனது எனும் செருக்கை விட்டுவிடுங்கள். (துறந்துவிடுங்கள்). அவ்வாறு செய்வீர்கள் ஆனால் வானவர்களாகிய தேவர்களுக்கும் மேலோன வீடுபேறு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

இல்லறத்துறவு

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், அற வழிகளில் இல்வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற ஒருவன், வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். வீட்டை விட்டுக் காடு செல்லும் துறவறத்தால் கூடுதல் பயன் ஒன்றும் இல்லை என்பதே வள்ளுவர் கருத்து.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன். (குறள் எண்: 46)

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? வள்ளுவரின் சிந்தனைச் செல்வம் எத்தகைய கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பது தெரியும் அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பலவேறு வகையான விளக்கங்களுக்கும் (Inerpretations), பலவகைப்பட்ட மக்களுக்கும் பொருந்தும். எனவே துறவறத்தில் சொல்லப்படும் கருத்துகள், இல்வாழ்வானுக்கும் பொருந்தும் மாண்பே அமைந்துள்ளது.

இஸ்லாம் 


ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புஹாரி பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5073)

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர். - (குர்ஆன் 57:27)

கிறிஸ்தவம் 


துறவறத்தை சரியாக வரையறுப்பது கடினம். சிலர் அதை சாதாரணமாக, சுயகட்டுப்பாடு அல்லது தன்னலம் துறத்தல் என்று பொருள்கொள்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இத்தகைய ஒழுக்கங்களை உயர்வாக கருதினர் (கொலோசெயர் 3:5)

22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள். (கலாத்தியர் 5:22-24)

சடப்பொருளின் சிக்கலிலிருந்து மனிதனின் ஆத்துமாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை கடும் துறவறத்தை ஊக்குவித்தது; அது மாம்சம் சாப்பிடுவது, உடலுறவு கொள்ளுவது இன்னும் இதுபோன்றவற்றை தடைசெய்தது; விசேஷ சடங்குகளை மேற்கொண்ட உயர்ந்தோரான, ‘பரிபூரணவாதிகள்’ அல்லது பெர்ஃபெக்டி போன்றவர்களால் மட்டுமே இவை கடைப்பிடிக்க முடிந்தவை.” இப்படிப்பட்ட சிந்தனைக்கு பைபிள் ஆதாரம் இல்லை; எனவே ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இது இருக்கவில்லை. - (நீதிமொழிகள் 5:15-19; 1; கொரிந்தியர் 7:4, 5; எபிரெயர் 13:4)

கிறிஸ்தவத்தில் துறவறம் பிறந்த கதை (The History of Consecrated Life)

ஆனால், 4-ஆம் நூற்றாண்டில் உரோமை அரசன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அங்கீகரித்தப்பின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை புரட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்தவம் ஆட்சியாளர்களின் மதமானது. போராளிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் பொதுமக்களாக மாறினார்கள். பணிவிடை புரிபவர்களாக இருந்த ஆயர்களும், குருக்களும், பணிவிடை பெறுபவர்களாக மாறினர். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயர்களும், குருக்களும் அரசனின் அரன்மனைகளில் மிகுந்த ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டனர். இதனால் மந்தையின் நலன் மறந்து, சொந்த நலன்களையும், சொந்தங்களின் நலன்களையும் மட்டுமே முன்னிறுத்த ஆரம்பித்தனர். பகட்டும், படோபமும், ஆடம்பரமுமே இவர்களது வாழ்க்கைத் தேவையாயிற்று. இன்னும் சிலரோ தான்தோன்றித்தனமான கருத்துக்களை சீர்திருத்தக் கருத்துக்கள் என சிறுபிள்ளைத் தனமாக அறிவித்துவிட்டு, தங்கள் தலைமையில் சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். கட்டளை செபங்களைக் கூட செபிக்காமல், இறைவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மொத்தத்தில் கடவுளை மறந்த மதமாக, மக்களை மறந்த மதமாக கிறிஸ்தவ மதம் மாற ஆரம்பித்தது.

இந்தச் சூழலில் தான் தங்களது ஆன்மாவை இழந்துவிடாமல், பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒரு சிலர் அடர்ந்த காடுகளில் செபம், தவம், ஒறுத்தல் ஆகியவற்றுடன் கூடிய புனித வாழ்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதுவே துறவற வாழ்வுக்கு முதன் முதலில் போடப்பட்ட அடித்தளம். இத்தகையோருள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் தூய வனத்து அந்தோணியார்.

முதன் முதலில் திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் தூய பத்திநாதர் துறவறத்தாருக்கான கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தார். இவரைப் பின்பற்றி முதலில் உருவான தூய பத்திநாதர் சபையே கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் துறவற சபையாகும்.

காலப்போக்கில் தூய பத்திநாதரைப் பின்பற்றி பலரும் பல்வேறு துறவற சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். தூய பிரான்சிஸ் அசிசியாரால் தொடங்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை, தூய தொன்போஸ்கோவால் தொடங்கப்பட்ட சலேசியன் சபை போன்ற துறவற சபைகளும் பல்வேறு கொள்கைகளை (ஏழைகளுக்குக் கல்வி, இயலாதோருக்கு மருத்துவம், கைவிடப்பட்டோருக்கு ஆறுதல்) முன்னிறுத்தித் தொடங்கப்பட்டன.

இந்து மதம் 


இந்துக்கள் திருமணத்தை பெரிய அளவில் இலட்சியப்படுத்தியுள்ளனர். ரிக்வேத இந்துக்களின் ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் ஒரு புனிதமான தொழிற்சங்கமாக கருதப்பட்டது, மேலும் இது முழு காலத்திலும் தொடர்ந்தது. சாஸ்திர இந்து சட்டத்தில், திருமணம் என்பது இன்றியமையாத சங்காரங்களில் ஒன்றாக (ஒவ்வொரு இந்துவிற்கும் புனிதம்) கருதப்படுகிறது . ஒவ்வொரு இந்துவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  (Modern Hindu law: codified and uncodified by: Diwan, Paras 1924-1997 Published: (1976))