ராமாயணம் உணமையாக இருக்கும் பட்சத்தில் இதை சிந்திப்பதில்லை உபயோக முண்டு.
இராமாயணத்தை பற்றி சில உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆதாரங்களுடன் உள்ளது, இதில் சொந்த கருத்து எதுமில்லை.
- அம்பேத்கர் இராமாயண காலம் பற்றி வேறு கருத்துக்களை கொண்டுள்ளார்.
2. இந்து சமய அறிஞர்களை பொறுத்த வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட வெவ்வேறு வகையான இராமாயண நூல்கள் உண்டு. அவைகள் ஒன்றுக்கொன்று முரன்படவும் செய்கின்றன.
இந்த link ஐ சொடுக்கி, அதில் உள்ள வெவ்வேறு இராமாயண பட்டியலை வாசித்து கொள்ளுங்கள்.
மேலுள்ள ஆதாரத்தின் படி இராமாயண காலம் கிமு 249 அல்லது அசோகருக்கு ஒருசில நூறு வருடங்கள் முந்தயதே தவிர, 10000 ஆண்டு என்பதெல்லாம் வெறும் ஆதாரமற்ற நம்பிக்கையே.
3. இராமாயணம் தொடர்பாக பெரியார் சில கேள்விகளை முன்வைத்து உள்ளார். அவற்றில் சில.. சில அந்தரங்க கேள்விகளையும் முன் வைத்து உள்ளார், ஆனால் எமது விமர்சன முறைமை அவ்வாறு அல்ல என்பதாலும் கேள்விக்கு தொடர்பில்லாதது என்பதாலும் அவைகளை தவிர்க்கப்பட்டுவிட்டன.
எனவே காலத்திலும் ஏனைய விடயங்களிலும் பல முன்னுக்கு பின் முரணானது இந்த இராமாயண இதிகாசம். இதில் குறிப்பிட்டு உள்ள பல்வேறு பதிப்புகள், தகவல்கள் எல்லாம் இது உண்மைக்கு நெருக்கமாக இல்லை என்பதை விளக்குகிறது.
இப்போ டார்வினின் பரிணாம கொள்கைக்கு வருவோம்.
டார்வினின் பரிணாம கொள்கையை ஏற்க்கும் ஒருவர் படைப்பு கொள்கையை இயல்பாக மறுக்கிறார். மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டு இருக்கும் பொழுது அமீபாவில் இருந்து பரிணமிக்கும் அவசியம் என்ன? அல்லது பரிணமித்து இருந்தால் கடவுள் எப்படி படைத்து இருப்பார்?
- மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்
- மனிதர்கள் அமீபாவிலிருந்து அல்ல, ஆதமிலிருந்து வந்தவர்கள்.
- கடவுள் உலகைப் படைத்தாரா? அல்லது கடவுள்கள் உலகத்தை படைத்தார்களா?
- அரக்கர்களும் அசுரர்களும் - இறைவனின் மூன்று படைப்புகள்
- உலகம் எத்தனை நாளில் படைக்கப் பட்டது?
முடிவுரை.
எனவே ஆய்வாளர்களின் கருத்துப்படி இராமாயணம் உண்மை அல்ல. குறைந்த பட்சம் அது கூறும் அமைப்பில் அது நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதன் காலம் உண்மை அல்ல. ஏனென்றால் எழுதியவர்கள் கூற்றுப்படியே யாரும் இராமனை அருகில் இருந்து பார்த்து இருக்கவில்லை. இராம பக்தி வளர்க்கப்பட்டதெல்லாம் அப்பட்டமான அரசியல். இன்று மோடி பெரும்பான்மை கிடைக்காத பொழுதே இராமனை கைவிட்டுவிட்டார் மோடி.
அதே போல டார்வினின் பரிணாம கொள்கைக்கு முரணாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளிவந்து உள்ளது என்றாலும் அது தொடர்ந்து போதிக்க படுவதின் காரணம் நாத்தீகத்தை பரப்ப விரும்பும் உலக அரசியல் ஆகும்.