பன்றி இறைச்சி உண்ண தகுமா?

தமிழர் சமயம்


கிடைக்கப்பெற்ற எந்த தமிழ் மறை நூலிலும் பன்றி இறைச்சியை தமிழ் கூறும் நல்லுலகம் உண்டதற்க்கான சான்றுகள் இல்லை. முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி உணவாக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. 


இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட  எல்லாப்பாடலும் முள்ளம்பன்றியை குறிக்கிறது. 

முளவுமா - முள்ளம்பன்றி.

கேழல் - காட்டுப்பன்றி. ஆனால் இந்த பாடல் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்வதைப்பற்றி பேசுகிறது. உணவு பற்றி அல்ல.

வளைமருப்பு ஏனம்  - வளைந்த கொம்பினையுடைய காட்டுப் பன்றியை கூறுகிறது
 

கிறிஸ்தவம்

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். - (லோவியராகமம் 11-7)

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. - (உபாகமம் அதிகாரம் 14:8)


இஸ்லாம் 

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.