கவலை நீங்க ஒரே வழி

தமிழர் சமயம்


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. (1:1:07)


விளக்கவுரை தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது. 

குர்ஆன்

 யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124) 

 நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன' - (குர்ஆன் 13:28) 

பைபிள்

 உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து. அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. - (சங்கீதம் 119:111)

உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.  (சங்கீதம் 70:4)

“தன்னைப் பிரியப்படுத்துபவனுக்கு, கடவுள் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் தருகிறார்..." - (பிரசங்கி 2:26) 

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும் பாவிகளைப்போன்று வாழாமலும் தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும் இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். - (சங்கீதம்1)  

பகவத் கீதை


ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)

முடிவுரை

பயபக்தியுடன் படைத்த அந்த ஆதிநாதனை வணங்கி வழிபடுவதால் மட்டும்தான் உலக வாழ்வின் பிரதான நோக்கமான அமைதி கிட்டும். அது அல்லாமல் செல்வம், கேளிக்கை, மது, மாது பிள்ளைச்செல்வம் போன்ற எதுவும் நிம்மதிக்கு வழிவகுக்காது.  



எப்பொழுது பொய் சொல்லலாம்?

தமிழர் சமயம் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (குறள் - 292)

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும் 

இஸ்லாம் 

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ  அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். நூல்: முஸ்லிம் 5079








எது உண்மையான பைபிள் !!!

தேவர்கள் மூலம் தூதர்களுக்கு வருவது தான் வேதம்

தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால், மாபெரும் மீட்பின் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு நம்மால் எப்படித் தப்பிக்க முடியும்? (எபிரெயர் 2:2&3)

இயேசு அதைதான் போதிப்பார் அதன்படி மட்டும்தான் தான் செயல்படுவார்.

ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். (யோவான் 6:38)


கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7)

வேதம் மனமகிழ்ச்சி தரும் (சங்கீதம் 119:92)

இறைவனின் வார்த்தை தேவதூதர்கள் வாயிலாக மெசாயாவுக்கு கொடுக்கப்பட்டு அது மக்களுக்கு போதிக்கப் படுபவைகளுக்கு பெயர் தான் வேதம். அப்படிப்பட்ட வேதம் தான் மக்களுக்கு மன மகிழ்ச்சியைத்தரும். ஆனால் ஏசுவின் வார்த்தை அல்லாத பல அத்தியாயங்கள் பைபிளில் எழுதபட்டுள்ளதா? இருந்தால் அவைகள் தேவ வாக்கியங்களாகுமா? வேத வாக்கியங்களாகுமா?

வேதவாக்கியங்களில் கூட்டவோ குறைக்கவோ மக்களுக்கு அதிகாரம் உண்டா?

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். (வெளிப்படுத்துதல் 22:18)

இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)

இந்த செய்த்தைகளை நமக்கு தருபவர் யோவான் (ஜான்) ஆவார்.


வெளிப்படுத்துதலின் ஆசிரியர் அப்போஸ்தலன் யோவான் அல்லது அவர் தன்னை இயேசு நேசித்த சீடர் என்று அழைத்தார். ஜான் புதிய ஏற்பாட்டில் ஐந்து புத்தகங்களை எழுதியவர்: 

- யோவான் நற்செய்தி (இங்குதான் அவர் தன்னை இயேசு நேசித்த சீடராக அடையாளம் காட்டுகிறார்)
- 1 ஜான்
- 2 ஜான்
- 3 ஜான்
- வெளிப்படுத்துதல்

ஜான் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர், அவர் பீட்டர் மற்றும் ஜேம்ஸுடன் "உள் வட்டத்தின்" ஒரு பகுதியாகவும் இருந்தார். மற்ற சீடர்கள் அனுபவிக்காத சில விஷயங்களை இயேசுவுடன் அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. இவற்றில் மிகப் பெரிய ஒன்று அவர்கள் இயேசுவுடன் மலையில் இருந்தபோது அவருடைய உருமாற்றத்தைக் கண்டபோது நடந்தது. மத்தேயு 17, மாற்கு 9 மற்றும் லூக்கா 9ல் இதைப் பற்றி நீங்கள் படிக்கலாம். எனவே ஜான்-இன் செய்திகள் நம்பத்தகுந்த ஆதாரமிக்க செய்தியாகும்.

யோவானால் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நற்செய்தி சிலவற்றை மறுப்பதற்க்காக அவரின் நம்பக தன்மையில் கேள்வி எழுப்பிக்கின்றனர். அதற்க்கான ஆதாரமாக அவரது வயதையும் இந்த சுவிசேஷம் எழுதப்பட்டகாலமாக சொல்லப் படுவதையும் ஒப்பிட்டு மறுக்கின்றனர். அவர் இயேசுவின் சீடர் தான் என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. மாறாக அவர்கள் மறுப்பே அது "பரிசுத்த வேதாகமம்" என்கிற தகுதியை கேள்விக்குறியாக்குகிறது. அவர்களின் வேதத்தில் அவர்களுக்கே நம்பிக்கை அற்று போன பிறகு நாம் அதை ஏற்பது பொருளற்றது. 

இப்படி இருக்க இன்று நம்மிடம் இருக்கும் பைபிளின் கி.பி 400 வாக்கில் இறுதி செய்யப்பட்டது என்று https://christianity.org.uk கூறுகிறது

 
    • 04 நியமன சுவிசேஷங்கள் - 4 canonical gospels by Matthew, Mark, Luke, & John
    • 01 அப்போஸ்தலர்களின் செயல்கள் - The Acts of the Apostles by Luke - and he is the student of Paul.
    • 14 பவுலின் நிருபங்கள் - 14 Pauline epistles 
    • 07 பொது நிருபங்கள் மற்றும் - 7 general epistles by James, Peter, John, & Jude
    • 01 வெளிப்படுத்தல் புத்தகம் - The Book of Revelation by John 
27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல், 4ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப், கி.பி. 367ல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் ஹிப்போ (393) மற்றும் கார்தேஜ் (397) சபைகளின் போது முதன்முதலில் இறுதி செய்யப்பட்டது. இதில் முதல் நான்கு நியமன சுவிசேஷங்கள் மத்தேயு, மார்க், லூக்கா மற்றும் ஜான். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையின் அதே அடிப்படைக் கோட்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

விடியற்காலையில், அவர் தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார், அவர்களில் அவர் அப்போஸ்தலர்களாகவும் நியமிக்கப்பட்டார்:  
 
1) சைமன் (அவருக்கு அவர் பேதுரு (Peter) என்று பெயரிட்டார்), 
2) அவருடைய சகோதரர் ஆண்ட்ரூ
3) ஜேம்ஸ்
4) ஜான்
5) பிலிப், 
6) பர்த்தலோமிவ்,
7) மத்தேயு
8) தாமஸ்
9) அல்பேயுவின் மகன் ஜேம்ஸ்
10) வைராக்கியம் என்று அழைக்கப்பட்ட சைமன்
11) ஜேம்ஸின் மகன் யூதாஸ் மற்றும் 
12) துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோட். — லூக்கா 6:12–16

எனவே யூதாஸ் தவிர்த்து 
இந்த 11 சீடர்கள் வாயிலாக, அல்லது
இயேசுவுடன் சில நாட்களாவது பயணித்த, அல்லது
குறைந்த பட்சம் இயேசுவை நேரடியாக கண்ட, அல்லது
ஆகக் குறைந்த பட்சமாக இயேசு காலத்தில் வாழ்ந்த மக்கள் மூலம் 
இயேசு சொன்ன அல்லது செய்த செய்திகள் பைபிளில் இடம் பெறலாம்.

அந்த அடிப்படையில் மார்க்-இன் சுவிசேஷங்களை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவருடைய தாயார் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களில் முக்கியமானவர். அப்போஸ்தலர் 12:12 எருசலேமில் உள்ள அவளது வீடு மற்ற சீஷர்களுக்கு கூடும் இடமாக பயன் படுத்தப்பட்டது என்று நமக்கு சொல்கிறது. இந்த வசனத்திலிருந்து அவளது மகனின் முழுப்பெயர் ஜான் மார்க் என்பதையும் அறிகிறோம். - churchofjesuschrist.org 

ஆனால் இயேசு அவர்களுடன் நேரடி தொடர்பை கொண்ட நபர்களில் பேதுரு, ஜான், மத்தேயு, ஜேம்ஸ், ஜூடா மற்றும் மார்க் ஆகியோரின் நற்செய்திகள் மட்டுமே பைபிளில் ஹிப்போ (கி.பி 393) மற்றும் கார்தேஜ் (கி.பி 397) சபைகளினால் சேர்க்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளிப்படுத்துதல் 22:19 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் உண்மை பைபிளின் ஒரு பகுதி நீக்கப்ட்டு உள்ளது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

மேலும், இயேசுவின் சீடர்கள் அல்லாத பால் மற்றும் லூக்கா ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்கள் அலல்து சுவிஷேஷங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது வெளிப்படுத்துதல் 22:18 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் தேவனின் வார்த்தைகள் அல்லாத ஒரு பகுதி பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது.

எதை சேர்த்தார்கள் என்று கூட ஓரளவு கண்டு பிடிக்கலாம், எதை எல்லாம் நீக்கினார்கள் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? 

அப்போஸ்தலர்களின் செயல்கள் என்பது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தலர்களின் ஊழியம் மற்றும் செயல்பாட்டின் விவரிப்பாகும், அந்த இடத்திலிருந்து அது மீண்டும் தொடங்கி லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக செயல்படுகிறது. நடை, சொற்றொடர்கள் மற்றும் பிற சான்றுகளை ஆராயும் போது, ​​நவீன புலமைத்துவம் பொதுவாக, அப்போஸ்தலர் மற்றும் லூக்காவின் சுவிசேஷம் ஒரே ஆசிரியரைப் பகிர்ந்து கொள்கிறது, லூக்கா-அப்ஸ் என குறிப்பிடப்படுகிறது. லூக்-ஆக்ட்ஸ் அதன் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தேவாலய பாரம்பரியம் அவரை லூக் தி சுவிசேஷகர் என 200 ஆண்டுகளுக்கு பின் வந்த பவுலின் துணையுடன் அடையாளப்படுத்தியது, ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் சட்டங்கள் மற்றும் உண்மையான பவுலின் கடிதங்களுக்கு இடையே உள்ள பல வேறுபாடுகள் காரணமாக இதை நிராகரிக்கின்றனர். 80-100 கி.பி. மிகவும் சாத்தியமான தேதியாக இருக்கலாம், இருப்பினும் சில அறிஞர்கள் அதை கணிசமாக பிற்காலத்தில் தேதியிட்டனர், மேலும் இது 2-ஆம் நூற்றாண்டிலும் கணிசமான அளவில் திருத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

ரெட் பைபிள் (சிகப்பு விவிலியம்) என்பது கிறிஸ்துவின் உண்மையான வார்த்தைகள், மேற்கோள்கள், மற்றும் குறிப்புகள், அவற்றின் சூழலில் இருந்து பிரிக்கப்படாமல், அல்லது துண்டு துண்டான அல்லது துண்டிக்கப்பட்ட வடிவத்தில், ஆனால் அவற்றின் சொந்த இடத்தில், பதிவின் ஒருங்கிணைந்த பகுதியாக,சிவப்பு வண்ண வேறுபாட்டில் தெளிவாகத் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் அல்லாதவைகள் கறுப்பிலே பிரசுரிக்கப் பட்டு இருக்கும். 

முடிவுரை

எனவே கூடுதலாக சேர்க்கவும் நீக்கவும் யாருக்கும் அனுமதி இல்லாத பைபிளில் 200 ஆண்டுகளுக்குப் பின் இயேசு சொல்லாத வார்த்தைகளை சேர்த்ததற்கான ஆதாரமும் இயேசுவின் சீடர்களின் நற்செய்திகளை நீக்கியதற்கான ஆதாரமும், அவ்வாறு சேர்த்து நீக்கியவைகள் இயேசுவின் போதனைக்கு எதிராக இருப்பதற்கான ஆதாரங்களும் பைபிள் முழுதும் வரலாறு நெடுக்கும் கொட்டிக் கிடைப்பதை காணலாம்.

மொழிபெயர்ப்புகளும் பைபிளின் அடிப்படை சாரத்தை சிதைப்பதை யாராலும் மறுக்க முடியாது. விரிவாக இங்கே காண்க. இயேசுவின் உண்மையான சீடர்களின் வேறு நற்செய்திகளை இங்கே காண்க

தேவர்களை வணங்கலாமா?

தமிழர் சமயம்

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்

உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்

சிலப்பறி யார் சில தேவரை நாடித்

தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே

(நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 45)


பொழிப்புரை இறைவனை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. - (அருங்கலச்செப்பு தேவ மூடம் 31) 

இஸ்லாம்

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80)

கிறிஸ்தவம்

 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். 9 னால் அத்(தேவ)தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான். (வெளிப்படுத்துதல் 22:8-9) 
 
சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. (கொலோசெயர் 2:18) 

முடிவுரை 

தெய்வம் ஒன்று என்பதும், அது மட்டுமே வணங்கி வழிபட தகுதி படைத்தது என்கிற கருத்து தேவர்கள் வணங்கி வழிபட தகுதி அற்றவர்கள் என்று மறைமுகமாக கூறுவதோடு மட்டுமல்லாமல் மேற்சொன்ன வசனங்கள் மூலம் நேரடியாகவும் கூறுகிறது. தேவர்களே வணங்கப்பட்ட தகுதி அற்றவர்கள் என்கிற பொழுது நாம வணங்கும் தாய் தந்தை முன்னோர்கள் விலங்குகள் இயற்கை சிலைகள் படங்கள் எல்லாம் எந்த அளவு ஒதுக்கப்பட வேண்டியது எனபதை உணர்வோம்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

தமிழர் சமயம்


மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் - 28.1

பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு  இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று கூறுவதன் மூலம் இறைவனை உணரத்தான் முடியும் என்கிறார்.

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்: கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான் [தெரிபட மாட்டன்]  

இஸ்லாம் 


பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)

கிறிஸ்தவம் 


தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18) 

 தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4) 

தான் சார்ந்த மதத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா?

தமிழர் சமயம்

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147) 
 
பொருள்"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."  
 
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.  
 
அறம் விளக்கல்

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு. - (அருங்கலச்செப்பு, 24)

பொருள்: அனைவருக்கும் றத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்க வைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம். 
 

யூதம்  

நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். என்று மோசே கூறினார் - (உபாகமம் 4:14)  
கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்” (சங்கீதம் 105:1)   

கிறிஸ்தவம் 

அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்” (மத்தேயு 15:24)  

ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத்தேயு 24: 14)  

இஸ்லாம்

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187) 
 
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களிடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)

ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -  (அல்குர்ஆன் 103:3)

 (நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான் - (அல்குர்ஆன்16:125)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)

 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - (அல்குர்ஆன் 2:256)  

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99) 
 

முடிவுரை

வேதத்தை ஓதினால் மட்டும் போதாது அதை பொருள் உணர்ந்து அது கூறும் நெறிகளை பின்பற்றி பிறருக்கும் எடுத்து கூறவேண்டும் என்பது அனைத்து நெறிகளும் இடும் கட்டளை ஆகும். ஆனால் மற்றவரை கட்டாய படுத்துவதை அவைகள் விரும்பவில்லை. 

எல்லோரும் அவரவர் சமயத்தை போதிக்க வேண்டும் என்றால் மாதங்களுக்கு இடையே சண்டை வராமல் இருக்குமா என்று சிந்தித்தால், நான்மறை என்றால் என்ன? கல்வி என்றால் என்ன? என்று அறிந்தால் இப்படி பட்ட குழப்பங்கள் தோன்றாது. இறைவன் ஒருவனே, அனைத்து வேதங்களும் அவனிடம் இருந்தே வந்தது, அனைத்து சமயங்களும் அவன் உருவாக்கியது. அதை கற்காமல் பிழையாக புரிந்துகொண்டு அவன் கூறும் அறத்தில் நில்லாமல் போன மக்களால் ஏற்படும் குழப்பங்கள் இவைகளெல்லாம்.

மேல் & கீழ் உலகில் உள்ள அனைத்தும் இறைவனிடமிருந்துதான் வந்தது

பைபிள்

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1
 
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (I கொரிந்தியர் 8:6)

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.  (கொலோசெயர் 1:16)


திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள் 01)

மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.


பரிபாடல்

ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
          இரண்டி னுணரும் வளியும் நீயே!
          மூன்றி னுணரும் தீயும் நீயே!
          நான்கி னுணரும் நீரும் நீயே!
          ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)


குர்ஆன்

நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். (15:86



தேவர்களும் இறைவனின் கட்டளையின்றி எதையும் சுயமாக செய்ய இயலாது

தமிழர் மதம்


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். - (குறள் 1073
 
உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது. 
 
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.

இஸ்லாம்


தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32) 
 
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன்  21:26,27)  
 
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50

 

கிறிஸ்தவம் 


தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)

பெரியோரையும் சிறியோரையும் மதித்தல்

கிறிஸ்தவம்

“இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:10)

தமிழர் மதம்

பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


இஸ்லாம்

‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).


தூதர்கள் முற்றும் உணர்ந்தவர்களா? அவர்கள் விரும்பியதையெல்லாம் சொல்லவோ செய்யவோ முடியுமா?

தமிழர் மதம்


நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே - (திருமந்திரம் 7)

கிறிஸ்தவம் 


"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)

என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். (மத்தேயு 20 : 23)

30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.  (யோவான் 14:30&31

இஸ்லாம் 


நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:45)

எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை, ஒவ்வொரு தவணைக் கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (குர்ஆன் 13:38) 



முகமது நபி ﷺ அவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறிவார்கள்..!

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)

இந்த குர் ஆனின் வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம் வாருங்கள்..!

தமிழர் மதம்


ஏழாம் தந்திரம் - 13. குருபூசை, மாகேசுர பூசை
 
அழி தகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. - (திருமந்திரம் பாடல் - 1864)

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே. - (திருமந்திரம் பாடல் - 1865)

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)

  • சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்த நூலுக்கு விளக்கவுரை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. எனவே அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஆய்வுக்கு உரியது.
  • இக்கட்டுரையின் தலைப்போடு முரண்படுவதால் அல்ல, இப்பாடல்களின் விளக்க உரைகளே ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறும் திருமந்திரத்தின் முதல் பாடலாக "வினாயகர் வணக்கம்" சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் இதில் இடைச்சொருகள் இருப்பது உறுதியாகிறது.
  • பாடலுக்கு விளக்கமும் பிழை, இடைச் செருகளும் உண்டு. இருந்தாலும் இந்த நூலை தேர்ந்தெடுக்க காரணம் தொல்காப்பிய நூல் விதி இதை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதுபற்றிய விளக்கம் "புனித நூல்கள்" தலைப்பில் விளைவாக எழுதப்பட்டுள்ளது.

பிழையான விளக்கவுரை 1 - ஜி வரதராஜன்


பிழையான விளக்கவுரை 2 - Tamil Virtual University


பிழையான விளக்கவுரை 3 - thevaaram.org


பிழையான விளக்கவுரை 4 - தினமலர் 


சரியான விளக்கவுரை (இதற்கு முந்தய பாடலில் இருந்து துவங்குவோம்)

அழிதகவு இல்லா அரன் அடியாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கி இருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே.  (திருமந்திரம் பாடல் - 1864)

பதவுரை
அழிதகவு - வருந்துதல்
இல்லா - இல்லா
அரன் - தீவினைகளை அரிப்பவனின்
அடியாரைத் - அடியாரை 
தொழுகை - வழிபாடு (பின்பற்றல்) 
ஞாலம் - உலகம் 
தூங்கியிருள் - செறிந்தஇருள், மிகுந்தஇருள்.
நீங்கும் - நீங்கும்
பழுது படாவண்ணம் - குறையில்லாத வகையில் 
பண்பனை நாடித் -  நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி 
தொழுதெழ - தொழுது எழுந்தால் 
வையகத்து - உலகத்தில் 
ஓர்இன்பம் ஆமே - ஒரு இன்பம் ஆகுமே

விளக்கம்: வருந்துதல் இல்லா தீவினைகளை அரிப்பவனின் அடியாரை பின்பற்ற உலகத்தின் மிகுந்த இருள் நீங்கும். குறையில்லாத வகையில் நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி அவனுடன் தொழுது எழுந்தால் உலகத்தில் இன்பம் உண்டாகும். 

பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப் 
புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி
அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)

பதவுரை
பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு
ஏதாகிலும் - எது ஆகினாலும்
பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி
புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்
நின்று - நின்று
பூசனை - அன்றாட இறை வணக்கம்
செய்யும் - செய்யக்கூடிய
முகமத் - ஓடு - முகமத் உடன்
ஒத்து - சேர்ந்து, இணங்கி
நின்று - நின்று
ஊழி தோறூழி - ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்
அகமத் - தராகி - அகமத் தராகி
நின்று - நின்று
ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்
ஒழிந்தாரே - நீக்கினார்

விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு  நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.

வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)

பதவுரை
வித்தகமாகிய - தூதுத்துவ
வேடத்தர் - வடிவத்தார்
உண்ட - உண்ட
ஊண் - உணவு
அத்தன் - தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன்
அயன்மால் - அயன்மால்
அருந்திய வண்ணமாம் - குடித்தது போல
சித்தந் தெளிந்தவர் - அறிவு தெளிவு பெற்றவர்
சேடம் - மிச்சப்பொருள்; கழிந்தமீதி; எச்சில்;
பருகிடின் - குடித்தால்
முத்தியாம் - வீடு பெறலாம்
என்று நம் மூலன் மொழிந்ததே. - என்று திருமூலர் சொல்கிறார்

விளக்கம்: தூதராகிய வந்தவர் உண்ட உணவை குரு அயன்மால் அருந்தியது போல மீதமுள்ளதை அருந்தினால் அறிவு தெளிவு பெற்று வீடு பெறலாம் என்று திருமூலர் சொல்கிறார். (வேத ஞானத்தை உணவோடு உவமையாக்கி கூறுகிறது இப்பாடல், இதை ஒத்த ஒரு நபி மொழி உண்டு - கனவில் நபியிடமிருந்து பெற்று உமர் அருந்திய பால் தொடர்பான நபிமொழி)

குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர்.

1) பிழையான பகுப்பு 1: அதன் பகுப்பு  முகம்+அது+ஓடு மற்றும் அகம்+அது+ராகி என்று இருக்க வேண்டும் என்று சிலர் கூறியதை பார்க்க முடிந்தது.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகம்மதோடு என்றும் அகம்+அது+ராகி = அகம்மதராகி =  என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+அர்+ஆகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. 


2) முகம்+மத்தம் (மத்து)+ஓடு (உடன்) மற்றும் அகம்+மத்தர்+ஆகி என்றுதான் பிரிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.

சரி இதை பகுப்பாய்வுக்கு உட்படுத்த்துவோம். 

முகம் + மத்தம் + ஓடு = ? 
 

முகம்+மத்தம் = ? மகரப்புணர்ச்சி

(ம்+ம = ம)

முகம் + மத்தம் = முகமத்தம்

மத்தம் + ஓடு = ? தனிக்குறில் முன் ஒற்று

ம் + ஓ = (ம்மோ)

மத்தம் + ஓடு = மத்தம்மோடு

நீங்கள் சொல்லுவது போல பிரித்தால் முகம் + மத்தம் + ஓடு = முகமத்தம்மோடு என்றுதான் வருமே தவிர முகமத்தோடு என்று குறிப்பிட முடியாது. 
 

அகம் + மத்தர் + ஆகி = அகமத்தராகி

மத்தர் என்பது தமிழ் சொல்லா? எந்த சங்க நூலில் உள்ளது? கன்னடத்தில் தான் அப்படி ஒரு சொல் உள்ளது. மத்தன் (மத்து+அன்) என்பதை மத்தர் (மத்து +அர்) என்று கூற முடியுமே என்று கூறினால், மத்து என்பதன் பொருள் என்ன? எனவே இந்த பகுப்பு பிழை.

எனவே

அகமத் + அர் + ஆகி = அகமத்தராகி

என்று தான் இந்த சொல்லை பகுக்க முடியும்.

 எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம். 

யூத மதம் / கிறிஸ்தவம் 

பைபிளின் மூலப் பிரதியான ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டிலும் கிரேக் மொழியில் புதிய ஏற்பாட்டிலும் முஹம்மத என்ற தீர்க்கதரசி வருவார் என்பது முன்மொழியப்பட்டுள்ளது.

ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டை பிறட்டுகின்ற போது சங்கீதம் என்ற புத்தகத்தில் அத்தியாயம் 5, வசனம் 16 சொல்லுகின்றது.

மூலமொழியில்: חִכּוֹ מַמְתַקִּים וְכֻלּוֹ מַחֲמַדִּים זֶה דוֹדִי וְזֶה רֵעִי בְּנוֹת יְרוּשָׁלִָם

உச்சரிப்பு: Hik.ko ma m.taq.qim we.kul.low ma.ha.mad.dim zeh do.w.di we.zeh re.‘i be.no.wt ye.ru.sha.lim

ஆங்கில மொழிபெயர்ப்பு: “His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem”.

தமிழ் மொழிபெயர்ப்பு: “ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது,  இத்தகையவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)

இங்கு முஹம்மதிம் என்ற சொல்லில் முஹம்மத் என்ற பெயருக்கு பின்னால் ”திம்” பாவிக்கப்பட்டிருப்பது; ஹீப்ரு மொழியில் பன்மைக்கு பயன்படுத்தும் இலக்கிய நடையாகும்.

பொதுவாக அரபு, ஹீப்ரு போன்ற மொழிகளில் இரண்டு பன்மை இருக்கின்றது.

1. மரியாதைக்காக பயன்படுத்துவது.
2. பல என்ற ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்க, பன்மைக்கு பயன்படுத்துவது.

இந்த நடைமுறையை பைபிளில் பல இடங்களில் பார்க்க முடியும். உதாரணமாக,

”துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்”. (ஆதியாகம்ம் 1-1)

இங்கு ”தேவன்” என்பதற்கு ஹீப்ரு மொழியில் இலோஹிம் என்று சொல்லப்படுகின்றது. இலா என்ற சொல்லுடன் ஹிம் என்ற மரியாதைக்குரிய பன்மை பாவணையை பயன்படுத்தி யிருக்கின்றார்கள்.

இன்று வரை கிறிஸ்தவர்களால் மூலப்பிரதியாக பார்க்கப்படும் ஹீப்ரு மொழி பைபிளில் முஹம்மதிம் என்ற சொல் இடம்பெறுகிறது, இருந்துவருகிறது. ஆனால் மொழிபெயர்க்கும் போது தமிழாக இருந்தால் ”விரும்பத்தக்கவர்” ஆங்கிலமாக இருந்தால் “Lovely” ” “Praised” என்று மொழிமாற்றம் செய்கின்றார்கள்.

ஆயிரம் தடவை விரும்பத்தக்கவர் பொருந்திக் கொள்ளத்தக்கவர் என்று வாசித்தாலும் அது எந்த வகையிலும் நியாயமற்றதும் பொருத்தமற்றதுமாகும். ஒரு பெயரை அவ்வாரு மொழிபெயர்ப்பதற்கு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை.

எவரது பெயரையும் இவ்வாரு மொழிபெயர்ப்பு செய்து பாவிப்பதற்கு எவருக்கும் எந்த தகுதியுமில்லை.

தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிகளில் ஒருவர்தான் ”முன்னியர் சுவாட்” இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முன்னியர் என்பது திரு (Mr.) சுவாட் என்பது கருப்பு (Black) என்றும் பொருள். இதனை இவ்வாறு மொழிபெயர்த்து சொன்னால் திரு கருப்பு, (Mr. Black) என்று சொல்ல வேண்டும். இவரது பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரை ஆங்கிலயராக அல்லது தமிழில் மொழிபெயர்த்தால் அவரை ஒரு த்மிழனாகத் தான் பார்க்கமுடியும்.

ஆனால் இவ்வாறு மொழிபெயர்த்ததால் தான் முஹம்மதிம் என்பதற்கு ‘altogether lovely’ , ’loved one’ என்று பாவிக்கப்படுகின்றது.

ஆனால் இன்றுவரை மூலப்பிரதி முஹம்மதிம் என்றே இருந்துவருகிறது. எனவே அந்த வசனம் இவ்வாறு இருக்க வேண்டும்.👇👇👇👇

“ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், முகமதுவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)  

 

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (குர்ஆன் 61:6)

குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்ய பைபிளை நோக்கினால்,

கர்த்தருடைய விசேஷ ஊழியன் என்ற தலைப்பில் கீழுள்ள வசனத்தை காணலாம்.
 
"இதோ! என் வேலைக்காரன், אחמד (நான் அவரை ஆதரிக்கிறேன்); நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன் அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்" [ஏசாயா 42:1-4]

ஹீப்ருவில், (எட்மோக்) אחמד என்பதை ஆங்கிலத்தில் "WHOM I UPHOLD" என்று அல்லது தமிழில் "நான் அவரை ஆதரிகிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால் பெயரை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. இப்பொழுது கூகுளில் இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யுங்கள். 

ஹீப்ரு முதல் ஆங்கிலம்
ஹீப்ருவிலிருந்து அரபு = அலிஃப், ஹா, மிம், தால் = அஹ்மத் / அஹ்மத்
ஹீப்ருவிலிருந்து சீனம்
சீனத்திலிருந்து ஆங்கிலம்
ஹீப்ரு முதல் பிரஞ்சு வரை
ஹீப்ரு முதல் கிரேக்கம் வரை
கிரேக்கத்திலிருந்து ஆங்கிலம்

விக்கிபீடியாவில் இருந்து: ஏசாயா 42 முஸ்லீம்களால் குறிப்பிடப்படும் ஆரம்பகால மற்றும் மிகவும் பொதுவான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். முஹம்மது [ﷺ] காலத்திலிருந்தே, அது அவரைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்றப்படவில்லை என்று முஸ்லிம்கள் நம்பினர். முதல் வசனம் இவ்வாறு தொடங்குகிறது: “இதோ, நான் ஆதரிக்கும் என் வேலைக்காரன்; என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட…”. "நான் யாரை ஆதரிக்கிறேன்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையானது "אתמך" (Etmokh) ஆகும். இந்த வார்த்தை இங்கு தவிர முழு பைபிளிலும் எங்கும் காணப்படவில்லை. முஸ்லீம் ஆசிரியர்கள், "அத்மாச்"(etmokh) மற்றும் அஹ்மத் என்ற பெயரான "אחמד" எழுத்துக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி, ஒரு நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரின் பெயரை மறைப்பதற்காக இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வேதாகமத்தின் எழுத்தாளர்களால் செய்யப்பட்டது, அது "אחמד" (அஹ்மத்). முஹம்மது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரன் என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது 
 

 

இந்து மதம்

A spiritual reformer will come from a foreign land (outside Bharat) with his disciples (companions). His name will be Mahamad (Muhammad). He will dwell in a desert. (Bhavisyath Purana 3:5-8)

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகள்

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500 (சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1)

ஆ) சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 (சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.' - (சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை)

முடிவுரை

  1. முன்னைய வேதங்களில் முஹம்மது நபி,
  2. இந்து வேதங்களில் இஸ்லாம் 

போன்ற நூல்களில் முகமது நபி பற்றிய தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.' (குர்ஆன் 34:28)

"மேலும் நாங்கள் உங்களை அனுப்பவில்லை, ஆனால் அனைத்து உலகங்களுக்கும் (அதாவது, மனித ஜின் உலகங்களுக்கும்) கருணையின் உருவகமாகவே அனுப்பினோம்" (குர்ஆன் 21:108)