தமிழர் சமயம்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:339)
பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
இஸ்லாம்
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை {தன்னிடத்தில் } நிறுத்திக் கொள்கிறான். மீதிள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை {வாழ}அனுப்பி விடுகிறான். - (திருக்குர்ஆன் 39:42)
கிறிஸ்தவம்
இவைகளைச் சொன்னபின், அவர் அவர்களிடம், "நம்முடைய நண்பன் லாசரு தூங்கிவிட்டான், ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்றார். சீடர்கள் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கிவிட்டால், அவர் குணமடைவார்" என்றார்கள். இப்போது இயேசு அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் அவர் தூக்கத்தில் ஓய்வெடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம் தெளிவாக, “லாசரு இறந்துவிட்டார். (ஜான் 11:11-14 )