இறைவனின் வரையறைகள் ? : திருமந்திரம் & திருக்குர்ஆன்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே
– திருமந்திரம் கடவுள் வாழ்த்து

விளக்கம் :

ஒன்றவன் தானே – தானே ஒரே ஒருவனாய் உருவானவன் : ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதான். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் சிலையும் படமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல.

இரண்டவன் இன்னருள் – நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

நின்றனன் மூன்றினுள் – நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாட,ு இறைவன் ஏற்பாடு அல்ல.

நான்கு உணர்ந்தான் – அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் எது சரி எது பிழை என உணர்ந்தவன் மனிதனுக்கு உணர்த்துபவன்.

ஐந்து வென்றனன் – பிறப்பு, பசி, காமம், தூக்கம், இறப்பு என ஐந்தின் பிடியில் இல்லாதவன்.

ஆறு விரிந்தனன் – மந்திரம்:மறை, பதம்:உணவு, வன்னம்:எழுத்து, புவனம்:உலகம், தத்துவம்:உண்மை, கலை:மொழி என்னும் ஆறாக விரிந்தனன்.

எழு உம்பர் சென்றனன் – பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

இருந்தான் உணர்ந்து எட்டே – தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

1. ஆதிபகவன் - ஆதியானவன்.
2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன்
3. இறைவன் அந்தரங்கமானவன் - மலர்(அகம்)மிசை ஏகினான்
4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன்
6. இறைவன் ஐம்பொறிகளால் கட்டுபடாதவன் - பொறிவாயில் ஐந்தவித்தான்
7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான்
8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன்

இறைவனது எட்டு குணங்களை குறளிலிருந்து விளக்கியதன் காரணம்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர்
- ஓளவையார், நல்வழி பா.40

இஸ்லாம் :

ஒன்றவன் தானே : அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (அல்குர்ஆன் 112:1&3)

இரண்டவன் இன்னருள் : அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)

நின்றனன் மூன்றினுள் : நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (அல்குர்ஆன் 5:73)

நான்கு உணர்ந்தான் : அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றில் நேர்வழி செலுத்துபவன் - திருக்குர்ஆன் 28:56

ஐந்து வென்றனன் : தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)

ஆறு விரிந்தனன் : ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)

எழு உம்பர் சென்றனன் : ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

இருந்தான் உணர்ந்து எட்டே : தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).

முடிவுரை :
ஒன்றே குலம் ஒருவனே தேவன், அவன் இறுதி தூதரையும் வேதமாகிய திருக்குர்ஆனையும் பின்பற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடைமை.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html
http://araneriislam.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm

சிவவாக்கியருடன் சில நிமிடங்கள்..!

 

இந்து சாமானியன்: ஐயா சித்தரே, சாமி, சிலை, வழிபாட்டு தளங்கள் பெயரால் சண்டை சச்சரவு நாளுக்கு நாள் அதிகமாக பெருகி கொண்டே போகிறதே.. பூ போன்ற காணிக்கைகளை செய்து மந்திரங்கள் சொல்லி தெய்வத்தை குளிர செய்தால் நிலைமை சீரடையுமா?

சிவவாக்கியர்:
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - 494

இந்து சாமானியன்: ஐயா, லிங்கம், சிவன் சிலை போன்றவைகள் ஈசன் இல்லையா? வெறும் கல்லா? அப்போ ஈசன் யாருங்க? எத்தன இறைவன் தான் இருக்குங்க ஐயா?

சிவவாக்கியர்: 
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே? - 22

உம்பர்(சொர்க்கம்) வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. - 308

இந்து சாமானியன்: ஐயா சித்தரே தெய்வம் ஒன்றுதான், அவன் ஏழாம் சொர்க்கத்தில் உள்ளான் என்கிற உண்மை ஆச்சரியமாக உள்ளது. எனவே இங்கு உள்ள சிலைகள், மிருகங்கள், படங்கள் எல்லாம் வழிபட தகுதி அற்றவைகள் என தங்கள் வாயிலாக அறிகிறேன்..

சாதி சண்டை தீர வழி சொல்லுங்க..!

சிவவாக்கியர்:
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே. - 39

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?  - 46

சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. -  44

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. - 45

இந்து சாமானியன்: சாதியே இல்லையா? அப்போ தாழ்ந்த சாதியில் பிறந்வர்கள் மீண்டும் பிறப்பெடுத்து பிராமணர்களானால் தான் பிறப்பு முடியும் என்கிறார்களே..! 

சிவவாக்கியர்:
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

இந்து சாமானியன்: செத்தவன் பிறப்பதே இல்லையா? அப்போ முன்பிறவி, அடுத்தபிறவி, ஏழுபிறவி--னுல்லாம் சொல்லி குறி, சோதிடம் சொல்லுவதெல்லாம் பொய்யா? பேய் பிசாசு பற்றி ? 

சிவவாக்கியர்:
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. - 252

இந்து சாமானியன்: ஐயா சித்தரே உங்கள் கொள்கை விளக்கப்படி ஒருவன் இந்துவாக இருத்தல் இயலாது. உங்கள் கொள்கைகளை ஆப்படியே அச்சு பிசகாமல் சொல்வதோடு அதை அப்படியே பின்பற்றச் செய்யும் இஸ்லாம் தான் ஒரே வழி..! 

குறிப்பு  : மற்ற வேதங்களை போலவே  சிவவாகியர் பாடல்களிலும் இதற்கு முரணான கருத்துக்கள்  திணிக்க பட்டும் இருக்கிறது.. ஒரே நபர் இருவேறு முரண்பட்ட கருத்துகளை ஒரே நூலில் சொல்ல இயலாது என்பது எதார்த்தம். எனவே கருத்து  முரண்  இல்லாத  வேதமான திருக்குர்ஆனே  பின்பற்ற தகுதியானது. சகோதரர்கள் இறைவனை மத ரீதியாக அணுகுவதை விடுத்தது கொள்கை ரீதியாக அதாவது இறைவனுக்கான வரையறை மற்றும் இலக்கண அடிப்படையிலும் வேதாந்த அடிப்படையில் அணுகுவதே உண்மை அறிய உதவும்.

மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை

உடலினை உறுதி செய்

இஸ்லாம்



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)

ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)

பலகீனமாக இருப்பதை பற்றி நபி ஸல் அவர்கள் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.” அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?”
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.” அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?” அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.”வெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்து விதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.

 

தமிழர் சமயம் 


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (திருமந்திர பாடல் 724)
 
பொழிப்புரை : உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன். 

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (திமந்திர பாடல் 725)

பொழிப்புரை : முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர்.

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்...

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உணவு குறைய உயிர் குன்றும் 

இறைஇறை யின்சந்தித்து என்பொடு ஊன்சார்த்தி
 முறையின் நரம்புஎங்கும் யாத்து - நிறைய
 அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
 புகாச்சுருக்கில் பூட்டா விடும். - (அறநெறிச்சாரம் பாடல் - 112)

பொழிப்புரை: உறுப்புகளில் மூட்டு வாயை ஒன்றுடன் ஒன்று பொருத்தி எலும்புடனே தசையைச் சேர்த்து முறையே உடம்பில் நரம்பால் எல்லா இடங்களையும் உறுதியாய்க் கட்டி மிகுதியாக ஆசையை நிரப்பிய உடல் என்ற வண்டியை ஏறிச் செலுத்தும் உயிர் என்னும் பாகன் உணவைக் குறைத்தால் செலுத்துவதை விட்டுவிடுவான்.