தமிழர் சமயம்
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் தீது. - (மூதுரை)
பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.
இஸ்லாம்
குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)
நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.
கிறிஸ்தவம்
ஏமாந்துவிடாதீர்கள்: "கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கத்தை அழிக்கிறது." - ( 1 கொரிந்தியர் 15:33 )
கோபம் கொண்ட மனிதனுடன் நட்பு கொள்ளாதே, கோபம் கொண்டவனுடன் செல்லாதே, அவனுடைய வழிகளைக் கற்று, கண்ணியில் சிக்கிக் கொள்ளாதே. ( நீதிமொழிகள் 22:24-25 )
ஞானிகளுடன் நடப்பவன் ஞானியாவான், ஆனால் மூடர்களின் தோழனோ கேடு அடைவான். (நீதிமொழிகள் 13:20 )
ஒரு முட்டாள் இருப்பை விட்டு விடுங்கள், ஏனென்றால் நீங்கள் அறிவின் வார்த்தைகளை சந்திக்கவில்லை. (நீதிமொழிகள் 14:7 )