உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.
இஸ்லாம்
தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32)
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன் 21:26,27)
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50)
கிறிஸ்தவம்
தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)
“இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:10)
‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).
"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)
என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். (மத்தேயு 20 : 23)
30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார். (யோவான் 14:30&31)
இஸ்லாம்
“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:45)
எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை, ஒவ்வொரு தவணைக் கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (குர்ஆன் 13:38)
'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)
இந்த குர் ஆனின் வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம் வாருங்கள்..!
தமிழர் மதம்
ஏழாம் தந்திரம் - 13. குருபூசை, மாகேசுர பூசை
அழி தகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. - (திருமந்திரம் பாடல் - 1864)
பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே. - (திருமந்திரம் பாடல் - 1865)
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்த நூலுக்கு விளக்கவுரை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. எனவே அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஆய்வுக்கு உரியது.
இக்கட்டுரையின் தலைப்போடு முரண்படுவதால் அல்ல, இப்பாடல்களின் விளக்க உரைகளே ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறும் திருமந்திரத்தின் முதல் பாடலாக "வினாயகர் வணக்கம்" சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் இதில் இடைச்சொருகள் இருப்பது உறுதியாகிறது.
பாடலுக்கு விளக்கமும் பிழை, இடைச் செருகளும் உண்டு. இருந்தாலும் இந்த நூலை தேர்ந்தெடுக்க காரணம் தொல்காப்பிய நூல் விதி இதை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதுபற்றிய விளக்கம் "புனித நூல்கள்" தலைப்பில் விளைவாக எழுதப்பட்டுள்ளது.
பண்பனை நாடித் - நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி
தொழுதெழ - தொழுது எழுந்தால்
வையகத்து - உலகத்தில்
ஓர்இன்பம் ஆமே - ஒரு இன்பம் ஆகுமே
விளக்கம்: வருந்துதல் இல்லா தீவினைகளை அரிப்பவனின் அடியாரை பின்பற்ற உலகத்தின் மிகுந்த இருள் நீங்கும். குறையில்லாத வகையில் நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி அவனுடன் தொழுது எழுந்தால் உலகத்தில் இன்பம் உண்டாகும்.
பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்
புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி
அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)
ஊழி தோறூழி - ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்
அகமத் - தராகி - அகமத் தராகி
நின்று - நின்று
ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்
ஒழிந்தாரே - நீக்கினார்
விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.
வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)
என்று நம் மூலன் மொழிந்ததே. - என்று திருமூலர் சொல்கிறார்
விளக்கம்: தூதராகிய வந்தவர் உண்ட உணவை குரு அயன்மால் அருந்தியது போல மீதமுள்ளதை அருந்தினால் அறிவு தெளிவு பெற்று வீடு பெறலாம் என்று திருமூலர் சொல்கிறார். (வேத ஞானத்தை உணவோடு உவமையாக்கி கூறுகிறது இப்பாடல், இதை ஒத்த ஒரு நபி மொழி உண்டு - கனவில் நபியிடமிருந்து பெற்று உமர் அருந்திய பால் தொடர்பான நபிமொழி)
குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.
பைபிளின் மூலப் பிரதியான ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டிலும் கிரேக் மொழியில் புதிய ஏற்பாட்டிலும் முஹம்மத என்ற தீர்க்கதரசி வருவார் என்பது முன்மொழியப்பட்டுள்ளது.
ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டை பிறட்டுகின்ற போது சங்கீதம் என்ற புத்தகத்தில் அத்தியாயம் 5, வசனம் 16 சொல்லுகின்றது.
ஆங்கில மொழிபெயர்ப்பு: “His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem”.
தமிழ் மொழிபெயர்ப்பு: “ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது, இத்தகையவரே என் நேசர்” -(சங்கீதம் 5:16)
இங்கு முஹம்மதிம் என்ற சொல்லில் முஹம்மத் என்ற பெயருக்கு பின்னால் ”திம்” பாவிக்கப்பட்டிருப்பது; ஹீப்ரு மொழியில் பன்மைக்கு பயன்படுத்தும் இலக்கிய நடையாகும்.
பொதுவாக அரபு, ஹீப்ரு போன்ற மொழிகளில் இரண்டு பன்மை இருக்கின்றது.
1. மரியாதைக்காக பயன்படுத்துவது.
2. பல என்ற ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்க, பன்மைக்கு பயன்படுத்துவது.
இந்த நடைமுறையை பைபிளில் பல இடங்களில் பார்க்க முடியும். உதாரணமாக,
இங்கு ”தேவன்” என்பதற்கு ஹீப்ரு மொழியில் இலோஹிம் என்று சொல்லப்படுகின்றது. இலா என்ற சொல்லுடன் ஹிம் என்ற மரியாதைக்குரிய பன்மை பாவணையை பயன்படுத்தி யிருக்கின்றார்கள்.
இன்று வரை கிறிஸ்தவர்களால் மூலப்பிரதியாக பார்க்கப்படும் ஹீப்ரு மொழி பைபிளில் முஹம்மதிம் என்ற சொல் இடம்பெறுகிறது, இருந்துவருகிறது. ஆனால் மொழிபெயர்க்கும் போது தமிழாக இருந்தால் ”விரும்பத்தக்கவர்” ஆங்கிலமாக இருந்தால் “Lovely” ” “Praised” என்று மொழிமாற்றம் செய்கின்றார்கள்.
ஆயிரம் தடவை விரும்பத்தக்கவர் பொருந்திக் கொள்ளத்தக்கவர் என்று வாசித்தாலும் அது எந்த வகையிலும் நியாயமற்றதும் பொருத்தமற்றதுமாகும். ஒரு பெயரை அவ்வாரு மொழிபெயர்ப்பதற்கு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை.
எவரது பெயரையும் இவ்வாரு மொழிபெயர்ப்பு செய்து பாவிப்பதற்கு எவருக்கும் எந்த தகுதியுமில்லை.
தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிகளில் ஒருவர்தான் ”முன்னியர் சுவாட்” இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முன்னியர் என்பது திரு (Mr.) சுவாட் என்பது கருப்பு (Black) என்றும் பொருள். இதனை இவ்வாறு மொழிபெயர்த்து சொன்னால் திரு கருப்பு, (Mr. Black) என்று சொல்ல வேண்டும். இவரது பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரை ஆங்கிலயராக அல்லது தமிழில் மொழிபெயர்த்தால் அவரை ஒரு த்மிழனாகத் தான் பார்க்கமுடியும்.
ஆனால் இவ்வாறு மொழிபெயர்த்ததால் தான் முஹம்மதிம் என்பதற்கு ‘altogether lovely’ , ’loved one’ என்று பாவிக்கப்படுகின்றது.
ஆனால் இன்றுவரை மூலப்பிரதி முஹம்மதிம்என்றே இருந்துவருகிறது. எனவே அந்த வசனம் இவ்வாறு இருக்க வேண்டும்.👇👇👇👇
“ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், முகமது, இவரே என் நேசர்” -(சங்கீதம் 5:16)
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (குர்ஆன் 61:6)
குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்ய பைபிளை நோக்கினால்,
கர்த்தருடைய விசேஷ ஊழியன் என்ற தலைப்பில் கீழுள்ள வசனத்தை காணலாம்.
"இதோ! என் வேலைக்காரன், אחמד (நான் அவரை ஆதரிக்கிறேன்); நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன் அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்" [ஏசாயா 42:1-4]
ஹீப்ருவில், (எட்மோக்) אחמד என்பதை ஆங்கிலத்தில் "WHOM I UPHOLD" என்று அல்லது தமிழில் "நான் அவரை ஆதரிகிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால் பெயரை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. இப்பொழுது கூகுளில் இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யுங்கள்.
விக்கிபீடியாவில் இருந்து: ஏசாயா 42 முஸ்லீம்களால் குறிப்பிடப்படும் ஆரம்பகால மற்றும் மிகவும் பொதுவான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். முஹம்மது [ﷺ] காலத்திலிருந்தே, அது அவரைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்றப்படவில்லை என்று முஸ்லிம்கள் நம்பினர். முதல் வசனம் இவ்வாறு தொடங்குகிறது: “இதோ, நான் ஆதரிக்கும் என் வேலைக்காரன்; என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட…”. "நான் யாரை ஆதரிக்கிறேன்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையானது "אתמך" (Etmokh) ஆகும். இந்த வார்த்தை இங்கு தவிர முழு பைபிளிலும் எங்கும் காணப்படவில்லை. முஸ்லீம் ஆசிரியர்கள், "அத்மாச்"(etmokh) மற்றும் அஹ்மத் என்ற பெயரான "אחמד" எழுத்துக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி, ஒரு நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரின் பெயரை மறைப்பதற்காக இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வேதாகமத்தின் எழுத்தாளர்களால் செய்யப்பட்டது, அது "אחמד" (அஹ்மத்). முஹம்மது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரன் என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது
இந்து மதம்
A spiritual reformer will come from a foreign land (outside Bharat) with his disciples (companions). His name will be Mahamad(Muhammad). He will dwell in a desert. (BhavisyathPurana 3:5-8)
முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகள்
அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500 (சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1)
ஆ) சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 (சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)
இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18
ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10
உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16
ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14
ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1
'அஹமத்இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.' - (சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை)
போன்ற நூல்களில் முகமது நபி பற்றியதீர்க்கதரிசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.' - (குர்ஆன் 34:28)
"மேலும் நாங்கள் உங்களை அனுப்பவில்லை, ஆனால் அனைத்து உலகங்களுக்கும் (அதாவது, மனித ஜின் உலகங்களுக்கும்) கருணையின் உருவகமாகவே அனுப்பினோம்" (குர்ஆன் 21:108)
கார்ல்மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் இருவரும் ஏறக்குறைய சகோதரர்கள் போல. உடன் பிறந்தவர்கள் அல்ல கொள்கை சகோதரர்கள். மார்க்ஸின் எங்கல்ஸ் உடனான நட்பு ஒவ்வொருவரும் கனவு காணும் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்ஸ் காலந்தோறும் வாசிக்கவும் எழுதவும் பொருளாதார உதவி உட்பட பல்வேறு வகைகளில் உதவிய எங்கல்சின் கரங்கள் பின்னாளில் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" என்கிற சிறிய நூலை மார்க்ஸ் உடன் இணைந்து எழுதியதுடன், மார்க்ஸ் இறந்த பிறகு மார்க்ஸின் மூலதனம் நூலின் முதல் பாகம் தவிர மற்றவைகளை தொகுத்து வெளியிடவும் உதவியது.
அதேபோல மார்க்ஸ்-இன் மனைவி ஜென்னியும் ஒவ்வொரு ஆண்மகனும் கனவுகாணும் மனைவி ஆவார்.. அழகிலும், குணத்திலும், அறிவிலும், குடும்ப பின்னணியிலும் ஜென்னி அவர்கள் முதல் வரிசைக்கு சொந்தக்காரர். இவர்களின் காதல் கதையும் இல்லற வாழ்க்கையும் வார்த்தைகளில் வருணிக்க முடியாத அழகும் தியாகமும் நிறைந்தது.
சுருங்க சொன்னால் இருவரில் ஒருவர் இருந்திருக்கவில்லை என்றாலும் மார்க்ஸ் தனது வாழ்நாளில் செய்து முடித்த காரியங்கள் நிறைவேறியிருக்க சாத்தியம் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். வறுமையை தவிர வேறு எதுவும் கண்டிராத போராளியான கார்ல்மார்க்ஸும் அவரது உற்ற தோழரான எங்கல்ஸும் பிறப்பால் யூதர்களாக இருந்தும் யூத மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கவில்லை. சார்லஸ் டார்வின்-இன் சமகால மனிதரான மார்க்ஸ்-இன் வாழ்க்கையில் காதல், நட்பு, வறுமை, நாடு நாடாக ஓட்டம், போராட்டம் என அனைத்து அம்சங்களும் கூடுதலாகவே இருந்தது.
சரி உணர்வுகளை ஒதுக்கி விட்டு மார்க்ஸின் தத்துவம் மற்றும் அதன் பின்னணி போன்ற விவாத பொருளுக்குள் நுழைவோம்.
மார்க்சியம் என்றும் பொதுவுடைமை கொள்கை என்றும் சிலரால் அழைக்கப் படக்கூடிய தத்துவத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் \ Dialectics Materialism ஆகும்.
இயக்கவியல் - இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒருவகையில் இயங்கி கொண்டே இருக்கிறது, [இதை மிக விரிவாக விவரிப்பது கட்டுரையின் நோக்கமல்ல] இதை மார்க்ஸ் அந்நாளில் கருத்து ஆதிக்கம் செலுத்திய ஹெகல் [Georg Wilhelm Friedrich Hegel] என்கிற தத்துவஞானியிடம் இருந்து எடுக்கிறார் ஆனால் அவரிடம் மார்க்ஸ் சில இடங்களில் [கருத்து முதல் வாதத்தில்] முரண்பட்டு அவரின் கொள்கைகள் முழுமை அடையாதவையாக கருதுகிறார். எனவே அதை முழுமைப் படுத்துவதற்காக அவருக்கு கிடைக்கும் தத்துவம்தான் "பொருள்முதல்வாதம்"
பொருள்முதல்வாதம் - பொருள்தான் முதலில் தோன்றியது கருத்து அல்ல, பொருள்களில் ஒன்றான மனிதனின் மூலையில் படிப்படியாக பின்னாளில் கருத்து தோன்றியது என்று வரையறுப்பதன் மூலம் மார்க்ஸ் இறைவனின் இருப்பை மறுக்கிறார். “பொருள் சார்ந்த உலகை (Materialistic World) மனித மூளை பிரதிபலித்த கருத்துக்களாக மாற்றுகிறது என்றும் ஐம்புலன்களால் ஏதோ ஒரு வகையில் உணரகூடியவைகளே பொருள்கள் ஆகும் அல்லாதவை கருத்துக்கள் ஆகும் என்பன இவரின் வரையறைகள்... இறைவன் என்ற ஒரு கருத்தியலை உடைப்பதில்தான் பொருள்முத வாத கருத்தியலை தொடங்க முடியும் எனவே இதற்க்கான மூலத்தை ஃபயர்பெக் என்னும் நாத்திகரிடமிருந்து "The Essene of Christianity" என்ற நூலின் மூலம் மார்க்ஸ் பெறுகிறார்.
இறுதியில் இயங்கியல் மற்றும் பொருள்முதல்வாதம் என்கிற இரு தத்துவங்களை ஒன்றோடொன்று பொருத்தி உலக இருப்பை மார்க்ஸ் புரிந்து கொள்ள முயல்கிறார் இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே தனது தத்துவங்களை மார்க்ஸ் வடிக்கிறார். அவை தத்துவத்தோடு நின்றுவிடாமல் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் நீள்கிறது. இன்னும் மார்க்சியம் மட்டுமல்ல கம்யூனிச தத்துவத்தை உள்வாங்கிய அனைவரும் இந்த அடிப்படையின் மீதுதான் அவர்களின் சிந்தனை கோட்டையை கட்டினார்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த தத்துவங்களின் அடிப்படை மற்றும் மூல கருத்தை பொறுத்த வரையில்
- உலகமும் உலகில் உள்ள பொருட்களும் சதா காலமும் இயங்கி கொண்டே இருக்கின்றது என்பதை மதங்கள் மறுக்க வில்லை. இறைக்கோட்பாடு மற்றும் சமயங்களின் முதல் கருப்பொருளும் நோக்கமும் இவற்றை விரிவாக விளக்குவது அல்ல ஆனாலும் இயக்கவியலின் கூறுகள் சமய நூங்களில் பரவி கிடப்பற்கான பல சான்றுகளை தர முடியும், மேலும் மதங்கள் முழுமையாக மாறாநிலை தத்துவத்தை [metaphysics] தாங்கி நிற்கிறது என்ற முடிவுக்கு வருவது அறியாமையின் வெளிப்பாடு. பின்னாளின் ஒரு கட்டுரையில் இயங்கியல் தொடர்பாக மதங்கள் சொல்வது என்ன என்று விரிவாக பார்ப்போம்.
பொருள் முதல்வாதம் பொறுத்த வரையில் அது இறை மறுப்பிலிருந்து பிறந்துள்ளது. மேலும் இதற்க்கு பயன்பட்ட நூல், தத்துவ பின்புலம், தத்துவ ஞானிகள் என அனைத்தும் கேள்விக்கு உட்படுகிறது. இறை மறுப்பிற்கான மூலமாக எடுத்துகொள்ளப்பட்ட நூல் கிறிஸ்தவம் தொடர்பானது. கிறிஸ்தவம் உலகம் முழுவதுமான இறை கோட்பாட்டிற்கான பிரதிநிதி அல்ல. துருக்களை நீக்கி சரியான இறை கொள்கையை புரிந்து கொள்ளும் விஞ்ஞான வழிமுறையை புனித நூல்கள் வரையறுத்துள்ளது. அந்த வரையறையை அறிந்து அதன் அடிப்படையில் நோக்கும் பொழுது பொருளா அல்லது கருத்தா என்கிற குழப்பம் தீரும். கருத்து முதலாக இருக்கவே முடியாது என்பதற்கான காரணம் அதை சுமந்திருக்கும் மனிதன் என்கிற பொருள் அல்லாமல் எப்படி அந்த கருத்து உருவாகி இருக்க முடியும் என்பதாகும். மார்க்சியம் ஏற்றுகொண்ட அறிவியல் விதிகள் என்னவென்றால் பொருளும் ஆற்றலும் அழிக்கப்பட முடியாது ஆனால் அது மற்றொன்றாக மாறும் என்பதாகும். இதன் பொருள் இவை இரண்டும் ஆதி அந்தம் அற்றவை. எனவே தொடக்கமும் முடிவும் இல்லாத விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது அது நமது கண்முன்னே உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதை அடிப்படையாக கொன்று இறைவனின் இருப்பை உறுதி செய்ய முடியாது என்ற நிலைபாட்டை எடுக்க முடியாது. ஏனென்றால் ஒரு பொருளில் இருப்பை அறிவியல் ரீதியாக இரண்டு வகைகளில் உறுதி செய்ய முடியும். 1- நோக்கி அறிதல் 2- நோக்கி அறிந்ததை கொண்டு யூகித்து அறிதல் என்பதாம். முதலில் ஆதி அந்தம் இல்லாமல் ஒரு பொருள் இருக்க முடியும், இரண்டு நோக்கி அறிந்ததை கொண்டு காணமுடியாததை யூகித்து அறிய முடியும். பொருள் முதல்வாதம் மறுக்கும் பொருளின் இருப்பை யூகித்து அறிய இன்னும் பல நூறு நோக்கி அறிந்த ஆதாரங்களை சமர்பிக்க முடியும். அது வேறொரு கட்டுரையில்.
சிண்டிகலிசத்தை கொண்டு கம்யூனிசத்தை கணிப்பது எவ்வளவு தவறான அணுகு முறையோ அதைவிட பலமடங்கு பிழையான அணுகுமுறை கிறிஸ்தவ மத குறைகளை கொண்டு ஒட்டுமொத்த இறைகோட்பாடையும் மறுப்பது என்பதாகும். இறை நம்பிக்கையை பொறுத்தவரை ஒரு மதத்தில் மக்கள் பிழையாக செய்திகளை கையாளும் பொழுது அதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அனைத்து மதங்களுக்கும் அதை பொதுமை படுத்துவதும் இறைமறுப்பை முற்ப்படுத்துவதும்அடிப்படையில் முரண் ஆகும். இயங்கியல் விதி மத நூல்களுக்கும் பொருந்தும் என்பதை மார்க்சியம் மறுக்காது என்று நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் உலக புனித நூல்களின் ஜெர்மன் அல்லது ஆங்கில பதிப்பு மார்க்ஸுக்கு கிடைத்து இருக்க வாய்ப்பில்லை என்பது நிதர்சனம். ஆக கம்யூனிச தத்துவத்தின் அடிப்படையே பிழை என்பதை உணர முடிகிறது. இது ஏன் பிழை என்பதை அடுத்தடுத்த தொடர்களில் மேலும் விரிவாக காண்போம். தத்துவங்களை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் அறிமுகத்தை கொடுத்து தலைப்புக்குள் நுழைகிறேன்.
பொதுவுடைமை தத்துவம் ஜியோனிசவாதிகளால் உருவாக்கப்பட்டதா?
நோக்கமின்றி எந்த ஒரு செயலும் செய்யப்படாது. ஆனால் மார்க்ஸின் வரலாற்றை படிக்கும்பொழுது அவரது நோக்கம் பிழையானது என்று எங்கும் சந்தேகிக்க முடியவில்லை. எனவே மார்க்ஸுக்கும் சியோனிசத்துக்கும் நேரடி தொடர்பு இருந்தது என்கிற கோணம் பிழை என்ற முடிவுக்கு வருவதுதான் சரி ஆனால் மறைமுக தொடர்பு இருந்ததா என்று அறிய வேண்டிய அவசியம் இருப்பாதால் மார்க்ஸ் மீது கருத்து தாக்கம் செய்த சிலரை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மார்க்ஸ் மீது தாக்கம் செலுத்திய நபர்கள்
Immanuel Kant
Georg Wilhelm Friedrich Hegel
Ludwig Feuerbach
Adam Smith and David Ricardo
Jean-Jacques Rousseau
Charles Fourier and Henri de Saint-Simon
Pierre-Joseph Proudhon
Charles Darwin
Friedrich Engels
Lewis H. Morgan &
Moses Hess
ஆய்வில் உற்று நோக்கப்பட வேண்டிய நபராக மோசஸ் ஹெஸ் [Moses Hess] தோன்றுகிறார். ஏன்?
- இவர் கருத்தியல் ரீதியாக மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் மீது அதிகம் தாக்கம் செலுத்தியவர்.
- ஹெஸ் ஒரு யூதராக மட்டுமல்லாமல் ஆரம்ப கால தீவிர சியோனிச வாதியாக மட்டுமல்லாமல் அது தொடர்பாக பல நூல்களை எழுதி சியோனிச சிந்தனை தாக்காத்தை யூதர்கள் மத்தியில் எற்ப்படுத்தியத்தில் பெரும் பங்கு உடையவர்.
காந்தி கொலையுண்ட பிறகு RSS மற்றும் Godsay இடையே எந்தவித தொடர்புமில்லை என்று நடத்தப்பட்ட நாடகம் போல பின்னாளில் மார்க்ஸ் அவர்கள் ஹெஸ்-உடன் முரண் பட்டதை பார்க்க வேண்டியதில்ல என்றாலும் Mosas Hess கார்ல்மார்க்ஸ் மீது சிந்தனை தாக்கம் செலுத்தியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி படுத்துகிறது.
மிக அடிப்படையான விடயம் என்னவென்றால் சரியான தத்துவத்தின் பக்கம் அதாவது ஒரு நேர்கோட்டில் மக்களை இணைப்பதுதான் தான் கடினமே தவிர, அந்த ஒற்றை கோட்டை தவிர மற்ற திசைகளுக்கு ஒருவர் செலுத்தப்பட சிறிய குழப்பமான சிந்தனை தூண்டல் போதுமானதாக அமையும்.. அந்தவகையில் மார்க்ஸ் ஹெஸ் உடன் முரண்பட்டாலும் சியோனிச கொள்கை உடையவருக்கு அவரது இலக்கு ஈடேறி அவருக்கு அது இலாபத்தைதான் கொடுத்துள்ளது என்றே கருதவேண்டி உள்ளது.. ஏனென்றால் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துவது சியோனிஸ்டுகள் அவர்களின் நோக்கத்தை அடைய அவர்கள் கையாளும் அணுகுமுறைகளில் மிகப் பிரதானமானது.
கற்பனாவாதத்திலேயே உழல்வது போல தெரிகிறதா? சியோன்களின் வாக்குமூலம் ஒருவேளை உங்களுக்கு இந்த உண்மையை உணர்த்தலாம்.
யூத பயங்கர வாதிகளின் இரகசிய அறிக்கைபோன்ற ஒரு முகம் தெரியாத யூக அடிப்படையில் அமைந்த நூலை எப்படி நம்புவது என்ற கேள்விக்கு ஹென்றி ஃபோர்ட் சொன்ன பதிலைத் தான் நானும் சொல்ல விரும்புகிறேன். "இந்த நூல் உண்மையா பொய்யா என்று உறுதிபட கூற ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் இந்த திட்டங்கள் என் கண்முன் நடப்பதை என்னால் உணரமுடிகிறது"
இந்த நூல் வெளியான 1800களின் இறுதியில் தான் லெனின் ரஷ்யாவில் ஆட்சியை பிடித்து இருந்தார். அப்பொழுது இந்த தத்துவம் தனிமனித சுதந்திரத்தை ஒழித்துக் காட்டும் யாரும் கற்பனைகூட செய்து இருக்கா மாட்டார். ஆனால் இன்று சீனா தென்கொரியா உட்பட பொதுவுடைமை ஆட்சி செய்யும் இடங்களில் மனித உரிமை என்றால் என்ன என்கிற வார்த்தை கூட தெரியாத அளவுக்கு அந்த நாட்டு மக்கள் நடத்தப் படுகிறார்கள் என்பது கண்கூடு.
முடிவுரை சியோனிசம் நேரடியாக இதனை தோற்றுவித்ததற்கான வெளிப்படையான ஆதாரங்கள் இதுவரை புலப்படாவிட்டாலும் தத்துவ உள் முரண்பாடும், அதற்க்கு பயன்படுத்தப்பட்ட மூல நூல்களும், மார்க்ஸ் மீது தாக்கம் செலுத்திய நபர்களின் பின்புலமும் அதற்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது. "Protocols of learned elder Zions" நூலை வாசித்து அறிந்த ஒருவர் அதன் பேருண்மைகள் கண்முன்னே நடப்பதை உணராமல் இருக்க முடியாது, அப்படி உணரும் ஒருவர் மார்க்சிய தத்துவங்கள் மக்களிடையே சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்த நேரடியாகவோ மறைமுகமாகவோ சியோனிஸ்டுகளால் எப்படுத்த பட்டது என்றே எண்ணத் தோன்றும்.