புனிதநூல்கள்

புனித நூல்கள் பல்வேறு மொழிகளில் வெவ்வேறு காலங்களில் பல்வேறு பெயரில் பெயரில் கையாளப் பட்டுள்ளது. தமிழ் நூல்களைப் பொறுத்த வரையில் தொடக்கத்தில் வேதங்களை தவிர ஏதும் இல்லை என்கிற நிலை இருந்த பொழுது "நூல்" என்று குறிப்பிடப் பட்டு அது முதல் மற்றும் வழி நூல் என்று வகை படுத்தப் பட்டது. பிறகு அனுபவத்தைக் கொண்டு உலகம் தொடர்பான நூல்கள் மனிதர்களால் எழுத தொடங்கிய பொழுது அவைகளை உலக நூல்கள் என்றும் அல்லாததை "மறை நூல்கள்" என்றும் குறிப்பிடப் பட்டது. பிறகு வட மொழி நூல் மற்றும் மதம் ஊடுருவ துவங்கிய பிறகு "வேதம்" மற்றும் "ஆகமம்" (முதல்வன் வாக்கு) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   
 

 வெவ்வேறு சமயங்களில் புனித நூல்கள் என்னென்ன பெயரில் அறியப்படுகின்றன?

தமிழர் சமயங்கள் நூல், மறை, மந்திரம், காப்பியம்வேதம், ஆகமம்

இந்து மதம் வேதம் (ரிக், யஜுர், சாம, அதர்வனா), உபநிஷம் (எ.கா - ஈஷா உபநிஷம் உட்பட மொத்தம் 108), புரணம் (கருட புராணம் உட்பட மொத்தம் இந்து மத பெரியோர்களால் அங்கீகரிக்கப் பட்ட 18 புராணங்கள் உண்டு), இதிகாசம் (ராமாயனம், மகாபாரதம்), கீதை மற்றும் மனுஸ்ம்ரிதிகள் (வேதத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள்)

இஸ்லாம் அல் கிதாப் (நூல்), அல் குர்ஆன் (ஒதப்படுவது), திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது), தன்சீல் (வெளிப்படுத்தப் பட்டது) போன்ற பல பெயர்கள் உள்ளன.   

கிறிஸ்தவம் இதில் பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் அல்லது புத்தகம் என்று பெயர். மேலும் அதன் பெயர்களாக Book of the Law (Deuteronomy 31:26)Gospel (Romans 1:16), Holy Scriptures (Romans 1:2) Law of the Lord (Psalm 19:7), Living Words (Acts 7:38), Scriptures (2 Timothy 3:16), The Scroll (Psalm 40:7), Truth (John 17:17),  Word of God (Luke 11:28) சொல்லப்படுகிறது.

வேதம் என்பதன் வரையறை என்ன?

 
பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
  1.  முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.   
  2.  கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
  3.  மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
  4.  நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை  மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறள் மற்றும் தொல்காப்பியம் என்ற இருவேறு பண்புகளை கொண்ட நூல்களுக்கு பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை. 
 
குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.

தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது. 
  • தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - (சொல்லதிகாரம் 1:4)
  • மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  • உலகத்தின் இயற்கை: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)
எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும்என்றால் அதை மறைநூலாக கருதாமல் இருக்க  முடியவில்லை. எனவே வேதத்தின் வரையறையை தேடும் முயற்சியில் கீழ்கண்ட செய்திகள் கிடைத்த்துள்ளது.

தமிழர் சமயம்

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

பொருள்: உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் முனைவனுக்கு வெளிப்பட்டு மக்களுக்கு போதிக்கப்பட்டு பின்பற்ற பட்டு நின்றது நூல் என உணர்க. 

குறிப்பு: இன்று புத்தகமாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நூல் என்பது மறை நூலையே குறிக்கும். எனவே திருக்குறள் உட்பட அனைத்து வேதத்திலும் நூல் என்று குறிப்பிடப்படுவது வேதத்தையே ஆகும்.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
    • வினை-யின்: செயல்-இன் 
    • நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால் 
    • விளங்கிய: உணரும் உணர்ச்சி 
    • அறிவு: அறிவு ஞானம் 
    • முனைவன்: முந்தியவன், மூத்தவன் 
    • கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர்.
    • முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க
    • நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது 

பேராசிரியர் உரை: வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். 
 
முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது. 
 
மற்று மேலே சொல்லப் பட்ட சூத்திரத்தின்படி நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம். (தொல்.பொருள்.649.பேரா.)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641) 

பேராசிரியர் உரைஎன்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். 
 
கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். விக்கி 

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)

பேராசிரியர் உரைமுதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு. 

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

உலக வழக்கமும் ஒருமுக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் (அகத்தியம் 381)

நூற்பா விளக்கம்: உலக வழக்கமும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும் நிலைபெற உணர்வை தருபவன் முதுமறை நெறியை வழங்குபவனாவான்.

குறிப்பு: மேற்கண்ட இந்த அடிப்படை வரையறையோடு திருமந்திரம் கூறும் "நான்மறை"-யை வாசித்து தெளிவு பெற்றால், உலக வேதங்கள் அனைத்தும் ஒரே தெய்வத்தின் ஏற்பாடு என்பதை அறியலாம். உலக சமயங்கள் எத்தனை, தமிழர் சமயங்கள் எத்தனை, அவைகள் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறது என்கிற தெளிவு பிறக்கும்.  

இஸ்லாம்


தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.

இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன்  2:2)

குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.

(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)

1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.
  1. வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
  2. திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
  3. வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)
ஆகியவை அம்மூன்று வழிகளாகும். 

சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.

மறைநூல் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று 
 
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)  
 
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்
 
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213) 

பிற்காலத்தில் மொழிகள் வேறுபட்டதும், ஒவ்வொரு மொழிக்கும் வேதம் வழங்கப் பட்டது (ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முதல் நூல் உண்டு) 

 "ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்-ஆன் 10:47)

வழிநூலை புறக்கணித்தவர்கள்

அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். - (குர்ஆன் 40:83)

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்ஆன் 2:101)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது. (குர்ஆன் 5:46)  

அனைத்து மறைநூல்களும் நம்பப்பட்ட வேண்டும்  

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (குர்-ஆன் 2:4) 

"(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்". 

(நபியே!) இன்னும் இறைநம்பிக்கை உடையவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். [அல்குர்ஆன் 2:4] 

 “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 5:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும்,  அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். [அல்குர்ஆன் 4:136.]  

குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது  

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.  (குர்ஆன் 25:1) 

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - அவரு(நபியு)டைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். [அல்குர்ஆன் 69:44] 

குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது 

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (குர்-ஆன் 15:9) 

இஸ்லாத்தை பொறுத்தவரை குர்ஆன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது, அவற்றில் சில

1 அல் கிதாப் (புத்தகம் (அ) நூல்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது).... etc.

அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன,

– நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “தௌராத்”
– நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “ஸபூர்”
– நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “இன்ஜீல்”
– நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட “அல்குர்ஆன்"


இந்து மதம்

மாறாத அது மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண்டது. ஆலமரம் போன்ற அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான். -  (கீதை - 15.1)

குறிப்பு: ஒரே மூல நூலிலிருந்து அனைத்து வேதங்களும் வழங்கப்பட்டதை இந்த வசனம் மறைமுகமாக கூறுகிறது. மேலும் வேர்கள் அழியாது, இலைகள் அவ்வப்பொழுது உதிரும், மறையும். புதிய இலைகள் துளிர்க்கும். காய்ந்த பழைய இலைகளை நம்பி இருத்தல் அறிவுடைமை அல்ல. 

 நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே. - (Bg 15.15)

குறிப்பு: அனைத்து வேதங்களும் பிறப்பு இறப்பு இல்லாத தன்னை பற்றியே பேசுவதாகவும்அவை அனைத்தையும் வழங்கியது தான்தான்இறைவன் கூறுவதாக இந்த வசனம் அமைந்து இருக்கிறது.  

கிறிஸ்தவம்

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49) 
 
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நல்லறம் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி - (II தீமோத்தேயு 3 அதிகாரம் 16) 
 

 பௌத்தம்


புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த  அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.  
 

முடிவுரை

எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா  நிலத்திலும் வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம்.  



உருவ வணக்கம்

உருவ வணக்கம் என்பது

  • கையால் செய்யப் பட்ட கற்சிலைகள்
  • பொன்னால், வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்கள்,
  • வரையப்பட்ட உருவங்கள்
ஆகியவைகளை வணங்குவது ஆகும். இவைகள் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, இரண்டும் கலந்தோ இருக்கலாம்.
 

இந்து மதம்


‘ஜீவனுள்ள தேவனை மறுத்து, கைகளினால் செய்யப்பட்ட, கண்களினால் காணத்தக்கதான உருவங்களை வணங்குபவர்கள் பயங்கரமான நரகத்திற்கு செல்வார்கள்’ (யஜூர்வேதம் 40:8,9)

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. - (கீதை 7:25)     

தமிழர் சமயம் 


சிவ வாக்கியர் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

(சிவவாக்கியர் யார், எவ்விடத்தை சார்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் விட்டு சென்ற பாடல்கள் பெயரால் சிவவாக்கியர் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது. தென்னாகத்தை சேர்ந்த சைவத் துறவிகளாகக் கருதப்படும் சித்தர்களுள் ஒருவராக கொள்ளப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம் தெரியவில்லை.)  
 

குதம்பைச் சித்தர் 


கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும் 

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார். 

அகஸ்தியர் ஞானம் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

 என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.

(அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று ஆய்வுகள் சொல்லுகிறது, இதில் சில ஆரியர்களும் அடங்குவர்)

குறள் 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (குறள் 7.)

பொழிப்பு: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

ஔவையாரின் ஞானக்குறள்

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. - (154)

உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். - (153) 
 
 
திருமந்திரம் 
 
"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே  (திருமந்திரம் 2614)

மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

கிறிஸ்தவம் & யூத மதம் 


 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். (அப்போஸ்தலர் 15:20)

எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. (அப்போஸ்தலர் 15:28)

 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். (அப்போஸ்தலர் 21:25)

 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (I கொரிந்தியர் 8:4)

 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7)

 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். (I கொரிந்தியர் 10:7)

 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (I கொரிந்தியர் 10:14)

 இப்படியிருக்க, விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? (I கொரிந்தியர் 10:19)

 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. (I கொரிந்தியர் 10:28)

நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. (I கொரிந்தியர் 12:2)

 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (II கொரிந்தியர் 6:16)

19. பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, 20  சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21  மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும் - (கலாத்தியர் 5 அதிகாரம் 19-21)

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். (I பேதுரு 4:3)

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். (I யோவான் 5:21)

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. (வெளி 2:14

 வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். (வெளி 2:20

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டா தவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; (வெளி 9:20)

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். (வெளி 22:15)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கை வேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது. அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். - (சங்கீதம்115:4-8; 135:15-18)

விக்கிரங்களை உருவாக்குகிற யாவரும் வீணர். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது: அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குதாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள் - (ஏசாயா44:9-19)

விக்கிரகங்கள் நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்றவைகள்.அவைகளுக்குப்பயப்பட வேண்டாம். - (எரேமியா 10:3-5)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் - (1கொரிந்தியர். 6:9,10)

யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14]

 தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுது கொள்கிறவர்கள் அறிவில்லாதவர்கள். - (ஏசாயா 45:20)

இஸ்லாம் 


அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று (அல்குர்ஆன் 7:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்(அல்குர்ஆன் 5-90)

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17)

முடிவுரை 

விக்கிரகங்களை வணங்குவதை வெறுக்காத ஒரே ஒரு மறை நூல் கிடையாது. பின்னூட்டத்தில் மேலும் பல நூறு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.