எதிரிகள் துன்பம் அடைந்தால் மகிழ்ச்சி அடைய கூடாது

 யூதம் 

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். (நீதிமொழிகள் 24)

கிறிஸ்தவம் 

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும். (மத்தேயு 5:43-47)

இஸ்லாம்  

நன்மையும் தீமையும் சமமாக இருக்க முடியாது. தீமைக்கு சிறந்ததைக் கொண்டு பதிலளிக்கவும், அப்போது நீங்கள் பகைமை கொண்டவர் ஒரு நெருங்கிய நண்பரைப் போல இருப்பார். (41:34)

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றுப்படி, "அல்லாஹ்வின் தூதரே, இணைவைப்பவர்களுக்கு எதிராக ஒரு சாபத்தைப் பிரார்த்திக்கவும்" என்று நான் கூறினார். அதற்கு முகமது நபி (ஸல்),  'நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை. கருணையின் உருவகமாக மட்டுமே அனுப்பப்பட்டேன்' என்று பதிலளித்தார். (முஸ்லீம்)

தமிழர் சமயம் 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (குறள் - 987)

பொருள்: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.