கர்த்தரை பற்றிய இயேசுவின் முக்கிய போதனை என்ன?


- இஸ்ரவேலரே கேள்! நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே (மாற்கு 12:29)

“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).

கர்த்தரை கண்டவர் உண்டா?

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)

கர்த்தருக்கு பிறப்பு இறப்பு உண்டா?

கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார். (சங்கீதம் 9:7)

கடவுளை கொலை செய்ய முடியுமா ?

உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே! (எசக்கியேல் 28:9)

பூமியில் உள்ளவர்கள் இறைவனாவார்களா?

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா(இறைவன்) என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)

சிலைகள் இறைவனா?

அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள் (1 கொரி 10:7)

சரி இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று கூறுகிறார்?

என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். (மத்தேயு 10:40,41)

இந்த வசனம் இயேசு கிறிஸ்து அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறது. மேலும் அவர் போதகர் என்று அறியப்பட்டு இருந்தார்.

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டும் அனுப்பபட்டவர் !

அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். - மத்தேயு 15:24

இயேசு சீடர்களிடம் ,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். (மத்தேயு 10:5)

எதற்கு இயேசு உலகுக்கு அனுப்பபட்டார் ?

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இயேசு தாமாகவே அனைத்தையும் செய்தாரா?

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். னக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது(யோவான் 5:30)

எனவே அவர் கர்த்தரும் இல்லை கர்த்தரின் மகனும் இல்லை என்று பொருள்.

வேத வசனங்களை மனிதர்கள் எழுதலாமா?

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

பைபிளில் மாற்றம் செய்ய மனிதருக்கு உரிமை உண்டா?

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய் - (நீதிமொழிகள் 30:6)

எனில் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தைகள் மட்டுமே இறைவனின் வசனங்கள் மற்றவைகள் பவுல் என்பவரால் எழுத பட்டது : இறைவசனததோடு பவுல் சேர்த்த வார்த்தைகள் பொய் என்பது உறுதியாகிறது மேலும் அதில் இயேசு கிறிஸ்து அவர்களின் போதனைக்கு எதிரான வசனங்களும் உள்ளது? கர்த்தர் ரட்சிப்பானாக...

மேலுள்ள அனைத்து கொள்கைகளும் போதனைகளும் முகமுது நபி அவர்களாலும் போதிக்க பட்டுள்ளது. ஒவ்ருவொம் முஸ்லிமும் இயேசு கிறிஸ்து அவர்கள் மீது அன்பு கொள்வதும் அவரை நம்புவதும் கடைமை ஆகும்.

முகமது நபி அவர்கள் பற்றி மோசே மற்றும் இயேசு கிறிஸ்துவும் முன்னறிவிப்பு செய்து உள்ளனர். இயேசு கிறிஸ்து அவர்களை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் உண்மையில் கிருஸ்துவை நேசிப்பது உண்மையானால் அவர்கள் முகமுது நபி அவர்களை நம்புவதும் பின் பற்றுவதும் அவசியமாகிறது.

1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது,

4. உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

கிறிஸ்து சத்தியத்தை போதித்தார் :

ஆனால் இன்றைய நடைமுறையில்
  • கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாட படும் நாள் அவரின் உண்மை பிறந்த நாள் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
  • பைபிளில் சுவிசேசம் எழுதிய பலர் இயேசுவின் உண்மை சீடர்கள் இல்லை.
  • பவுல் இயேசு அவர்களை நேரில் பார்க்காத பல வருடங்களுக்கு பின் வந்த மனிதர், தன்னை தானே இயேசுவின் சீடராக அறிவித்து கொண்ட யூதர்.
  • இயேசு அவர்களின் போதனைக்கு எதிரான போதனைகளை பவுல் செய்கிறார்.
  • கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் பைபிளில் எங்கும் இல்லை.
  • இயேசு தன்னை கர்த்தர் என்றோ கர்த்தரின் நேரடி மகன் என்றோ தன் வாயால் சொன்னதே இல்லை.
  • இயேசு ஒரே இறைவனை வணங்க சொல்லியும் சிலை வணக்கம் கூடாது என்றும் சொல்லி இருக்க நடப்பது அனைத்தும் அவருக்கு எதிரான செயல்களே..
  • கிருஸ்தவர்கள் என்பவர்கள் இயேசு கிறிஸ்து போதித்ததை மட்டும் பின்பற்றுபவர்கள். தேவை என்கிற பட்சத்தில் சிகப்பு பைபிள் என்ற ஒரு பதிப்பில அவரது வார்த்தைகள் மட்டும் சிகப்பு நிறத்தில் அச்சிட பட்டு இருக்கும் அவைகளையும் திருக்குரானில் இயேசு கிறிஸ்து பற்றிய வாசகங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும்..
  • பவுல் என்பவர் இயேசு கிறித்து அவர்களின் போதநீகு எதிராக செய்தவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே..


மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?

பொதுப்படையான கேள்விக்கு பொதுப்படையாக பதில் சுருக்கமாக தருவதென்றால்,

சமயம் சார்ந்த கருத்துக்கள் பொதுவாக உலக நன்மைக்கே வித்திடும். முரண்பாடாகதெரியும் இந்த கருத்து அதை ஆழ்ந்து கற்காததன் விளைவு. மொழி, இட, கால பாகுபாடு அன்றி ஒரே தத்துவத்தை தாங்கி நிற்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை உறுதி ஆகிறது. சமயங்கள் ஓவ்வொன்றுக்கும் முரண்கள் பல இருப்பதாக போதிக்கப்படும் நாம், ஒற்றுமைகளை பட்டியலிட்டால், சமயங்களுக்கு இடையேயான வேற்றுமை என்பது மக்களை பிளவு படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று என்னும் அளவுக்கு மிகப் பெரியது. இந்த வளையொலி முழுவதும் ஒற்றுமைகளை பட்டியலிடும் வேலையை தான் செய்கிறது.

அப்படி அனைத்து மதங்களிலும் பொது விடயங்களாவன,

  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2. நிலையில்லா உலகுக்கு மட்டுமே உழைக்காமல் நிலையான வீடு பேரு பெறவும் உழை
  3. குலத்தால், மொழியால், நிறத்தால் சிறப்பில்லை, அவரவர் செய்யும் செயலால்தான் சிறப்பு
  4. அவரவர் செய்த வினைப்பயனும் உண்டு, இறைவன் எழுதிய விதிப்பயனுமுண்டு
  5. பொறாமை, பெருமை, கோபம், நயவஞ்சகம் கொள்ளாதே
  6. கொலை, திருட்டு, கொள்ளை, ஏமாற்று செய்யாதே
  7. அன்பு, கருணை, தருமம், உதவி செய்
  8. பிறன் மனை நோக்காதே, விபச்சாரம் செய்யாதே
  9. வட்டி வாங்காதே, கொடுக்காதே
  10. எடையில் குறைக்காதே
  11. நன்மை தீமையின் அளவு பொறுத்து சொர்கம் நரகம் உண்டு
  12. இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

இவைகளை ஏற்று பின்பற்றும் ஒருவனால் தனக்கும் தன சமூகத்துக்கும் நன்மையை தவிர வேறு ஏற்படுத்த முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமை என்பது சற்று சிக்கலான ஆனால் எல்லோரும் கற்று அறிய வேண்டிய பகுதி ஆகும்.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமையாக சொல்லப்படுவது 

  1. சில கருத்துக்கள் அறிவியலுக்கு எதிராக பேசுகிறது
  2. கடும் போக்கு வாதத்தை போதிக்கிறது
  3. சமயங்களுக்கு இடையேயான இணக்கங்களை உடைக்கிறது
  4. மக்களின் மனித தன்மையை இழக்க செய்கிறது

ஆனால் இந்த தீமைகள் எல்லாம் எதன் மூலம் ஏற்படுகிறதென்றால்,

  1. ஒரே இறைவன் தான் அனைத்து மொழிகளுக்கும் அவனது பிரதிநிதிகளை (சித்தர்/ரிஷி/நபி/தீர்க்கதரிசி/குரு) அனுப்பி மக்களை வழி நடத்துகிறான் என்பதை மறுப்பதன் மூலம் பல இறைவனை கற்பனை செய்கிறான், பல இறைவன் கோட்பாடு மக்களை பிளவுபடுத்தவும் யுத்தங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
  2. இறைவன் தேவ தூதர்கள் (நந்தி/ஜிபிரியேல்/கேப்ரியேல்) வாயிலாக அவனது பிரதிநிதிகளுக்கு கட்டளைகளை அனுப்புகிறான் என்பதை மறுப்பதன் மூலம் இறைவனின் grand design-ஐ புரிய  மறுக்கிறான், அது அவனை அறியாமையில் ஆழ்த்தும், அறியாமை அழிவின் வாசல் ஆகும்.
  3. அந்த பிரதிநிதிகளை பற்றிய முன்னறிவிப்புமுன் சென்ற வேத ஆகம நூல்களில் கொடுக்கப்படாமல் அவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவதில்லை என்பதை அறியாமையினால், வசீகரமாக பேசும் எவரையும் குரு என்று நம்பி தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி ஏமாற்றம் அடையும் பொழுது இறைவனை மறுக்கும் சூழலுக்கு செல்கிறான். போலி மருத்துவரால் மருத்துவத்தை விடாத மனிதன், போலி குருவால் ஆன்மீகத்தை விடுகிறான்.
  4. இறைவன் தந்த வேத நூலின் மூலமே மக்களாகிய நாம் வழிநடத்தப் படவேண்டும் என்பதை அறியாமல், அவனுடைய வேதம் என்ன என்று கூட அறியாமல் அறமும் வழிகாட்டுதலும் இல்லாமல் மனிதன் அநியாயங்களை செய்ய துவங்குகிறான்.
  5. உண்மையை, சத்தியத்தை, ஹக்கை அறியாமல் பொய் தெய்வங்களை, பொய் குருக்களை, பொய் வேதங்களை ஏற்று பாவங்களை விதைத்து நரகத்தை அறுவடை செய்யும் துர்பாக்கிய சாலிகளாக மனிதன் மாறிப்போய் நிற்கிறான்.
  6. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி அதற்கே உரிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதோ அதேபோல இறைவனை அறியவும், உண்மையான வேதத்தை அறியவும், வேதங்களில் கலக்கப்பட்ட பொய்களை களையவும், வேதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை திரிபுகளையும் அடையாளம் காணவும் விதிகள் உள்ளன என்பதை அறியாத நிலையில் மனிதன் உள்ளான்.

சமயம் என்பது அறிவியலை போன்று, ஆற்றல் போன்று, வாகனத்தை போன்று - முறையாக கற்று கையாளப்பட வேண்டிய ஒன்று. அறிவியலை புறந்தள்ள முடிவு செய்வது அறிவீனம், அப்படியேதான் சமயமும்.

https://ta.quora.com/மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?


கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க 

இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதத்தவர்களின் மதப்பற்று போல இந்துக்களிடம் 10 சதவீதம் கூட இல்லையே, ஏன்?

மதப்பற்று என்று கூறுவதை விட சமைய பற்று என்று இதை கூற விரும்புகிறேன். இந்த வேற்றுமைக்கான சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு சில கேள்விகளையும் கேட்கிறேன்.
  • இஸ்லாமும் கிறித்தவமும் புனிதர்களால் ஏற்படுத்தப் பட்டதென்றும் அவர்களின் பாரம்பரியமும் வரலாறும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், ஆனால் இந்துமதம் ஆங்கிலேயர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
  • கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியும். இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரிந்தவர் எத்தனை பேர்?
  • இந்துக்களுக்கு சம்ஸ்கிருத வேதம் பற்றி அந்த மொழி பற்றி எந்த அறிவும் இல்லை. எனவே அரைகுறை சமஸ்கிருத்தைல் யாரேனும் பேசினால் ஆ-வென்று பார்த்து அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணுகிறார்கள். மொழி அறிவின், தத்துவ அறிவின் ஆழம் அறியாததால் இந்த நிலை. "வேதம் ஓதி வீடு பெற்றார்" என்று தமிழர்களுக்கு சொல்கிறது திருமந்திர வேதம்.தமிழர் வேதத்தை ஓதும் சைவர் அல்லது தமிழர்கள் யார்?
  • இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அவர்களுக்கு ஓர் பிரச்சனை என்றதும் அவர்கள் அவர்களது வேதத்தில் தீர்வை தேடுகிறார்கள், கிடைப்பதாக நம்புகிறார்கள். தம் வேதத்தை வாசிக்க கூட தெரியாத இந்துக்களோ, வேதம் என்ன என்ற அக்கறை கூட இல்லாத தமிழர்களோ அவர்களின் பிரச்னைக்கு வேதத்திலே தீர்வு தேடுவது சாத்தியமில்லை.
  • வேதம் கடவுளால் வழங்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள், கடவுள் மீதுள்ள பற்றே அவர்களின் வேதத்தின் மீதும், அவர்களின் சமயத்தின் மீதும், அந்தந்த மக்களின் மீதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியாமல், தெரிந்தால் வாசிக்க முடியாமல், வாசிக்க முடிந்தால் பின்பற்றாமலும் பிறருக்கு சொல்லாமலும் வாழும் பொழுது சமய பற்றை எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
  • இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ வேதத்தில் இந்துக்கள் கூட படித்து குறை சொல்லும் அளவுக்கு வேதங்கள் எல்லோரையும் அடையும் வண்ணம் பொதுமை படுத்தி உள்ளனர். ஆனால் இந்துக்கள் அல்லது தமிழர் வேதத்தில் ஒரு குறை சொன்னால், அது பொய்யான நூல் அல்லது பொய்யான விளக்க உரை என்று சொல்லி தப்பித்து கொள்ளும் அளவுக்கு எந்த நூல் சரி அல்லது பிழை, எந்த விளக்கம் சரி அல்லது பிழை என்று எல்லோரும் அறியும் படி அல்லது எல்லோரும் ஏற்கும் படி ஓன்று இல்லை!
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நம்பும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் உலக வேதங்களில் உள்ள ஒற்றுமையை பட்டியலிடும் பொழுது பல்வேறு மதங்களை இனங்களை உள்வாங்கிய இந்துமதம் அவற்றுக்கு இடையேயான வேத ஒற்றுமைகளை பண்பாட்டு ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் மற்ற வேதங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லாத நிலையே இந்து மதப்பற்று இல்லாமைக்கான காரணம்.
முதலில் இப்படி போட்டிக்கு சமைய பற்றை வளர்ப்பது பற்றல்ல. அதற்கு பொறாமை அல்லது ஈகோ என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

"கல்வி, கல்வி" என்று அனைத்து சமைய அறநூல்கள் கதறுவது வேத கல்வியையே..! ஒரு சிலருக்கு மருத்துவ கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு பொறியியல் கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு கணக்கியல் கல்வி கிடைக்கலாம் ஆனால் அனைவருக்கும் வீடுபேரு அடையும் வழிக்கான கல்வி அவசியம். அவரவர் வேத அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவோம். நிச்சயமாக உண்மை வேத அறிவு மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தவிடு பொடியாகும்.

பிறப்பெனும் பேதமை

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
 (மெய்யுணர்தல் குறள் எண்:358)

பதவுரை: பிறப்பு-பிறப்பு; என்னும்-என்று சொல்லப்படுவது (பற்றிய); பேதைமை-அறியாமை; நீங்க-கெட; சிறப்பு-சிறப்பு; என்னும்-என்கின்ற; செம்பொருள்-செவ்வியதான மெய்ப்பொருள், கடவுள்; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.

மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.

பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை (அதிகாரம்:துறவு குறள் எண்:345)

பதவுரை: மற்றும்-வேறுபிற, மற்றைய, பின்னும், மேலும்; தொடர்ப்பாடு-தொடர்பு; எவன்-என்ன பயன் கருதி? கொல்-(அசைநிலை); பிறப்பு-உயிர்வாழ்க்கை, பிறவி (த்துன்பம்); அறுக்கல்-அறுத்தல், நீக்குதல்; உற்றார்க்கு-மேற்கொண்டவர்க்கு; உடம்பும்-உடம்பும்; மிகை-அளவின் மீறுதல்.

மணக்குடவர் உரை: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?

____________________________

உங்கள் இறைவன் ஆதமுடைய குழந்தைகளிடமிருந்து - அவர்களின் இடுப்பில் இருந்து - அவர்களின் சந்ததியினரை எடுத்துக் கொண்டு, "நான் உங்கள் இறைவன் அல்லவா?" என்று அவர்களையே சாட்சியமளிக்கச் செய்ததைக் குறிப்பிடவும். அதற்கு அவர்கள், ஆம், நாங்கள் சாட்சியம் அளித்துள்ளோம் என்றார்கள். [இது] - மறுமை நாளில், "நிச்சயமாக நாங்கள் இதை அறியாமல் இருந்தோம்" என்று நீங்கள் கூறக்கூடாது என்பதற்காக. (7:172)

89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.