சாதிய ஏற்றத்தாழ்வு எப்பொழுது உருவாகி எப்பொழுது நிலைபெற்றது?

 

11:00 சாதியை தமிழர்கள் தலையில் காட்டியது ஆங்கிலேயர்கள் (கிபி 1700) என்பதிலும் சோழர் காலத்துக்கு (கிபி 1000) பிறகுதான் வருணாசிரமம் தலை தூக்கியது என்பதிலும் உள்ள முரணை பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

அதவாது உயர்வு தாழ்வு பாராட்டாத ஒன்றாக சாதி இருந்த பட்சத்தில் கிமு 300 முதல் வெவ்வேறு காலகட்டத்தில் சாதி முறையை சாடிய பாடல்கள் ஏன் பல நூல்களில் இடம் பெற்று உள்ளது?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2) - கிமு 300

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38) (சிவா வாக்கியம் 38) கி.பி. 9

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195) - கிபி 250 
 
இவ்வாறு இருக்க வருணாசிரமம் ஏற்ற தாழ்வு என்பது சோழர் காலத்துக்கு பிறகுதான் இங்கே வந்ததாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.
  • இப்பாடல்கள் தரும் புரிதலின்படி, சாதி/குல/குடி பாகுபாடு என்பது கிமு 300 முதல் இருந்தே வந்துள்ளது.
  • ஆரம்பத்தில் குல/குடி பகை காரணமாக, விருப்பு வெறுப்பு போதிக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வுகள் போதிக்க பட்டும் இருக்கலாம்.
  • பின்னாளில் அந்த ஏற்றத்தாழ்வு நிரந்தரமாகி அதன் விளைவாக விருப்பு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
  • பின்னாளில் சுய இலாபத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகில் இதை நிறுவனமயப்படுத்த கீதை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
  • ஆரிய பிராமணர்களின் தேவைக்கு ஏற்ப கீதையில் இந்த பாடல்களை திணித்தோ திரித்தோ இருக்கலாம். ஏனென்றால் சம்ஸ்கிருத வேத கடவுள்களுக்கும் கீதையின் கடவுளுக்கும் தொடர்பில்லை. எனவே கீதையின் மூல மொழி சமஸ்கிருதமா எனபதிலும் சந்தேகம் உள்ளது. மேலும் கீதை மகாபாரதத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு உள்ளது.
  • 18:20 சாதிய ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் கிபி 1218-க்கு பிறகுதான் உருவானதிற்கான ஆதாரம் கிடைக்கிறது என்கிற தரவு, கிமு 300-இல் இருந்து சாதிய முரண் இருந்து வந்துள்ளது என்கிற கருத்தை வலுவிழக்க செய்யாது. காரணம் ஆண்டாண்டு காலமாக நமக்கு பல்வேறு சித்தர்கள் முனிவர்கள் மூலம் சாதி / குல / குடி ஏற்றத்தாழ்வு க்கு எதிராக போதனைகள் செய்யப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே அது உருவாகும் பொழுதெல்லாம் உடைக்கப்பட்டு வந்து உள்ளது. எனவே  நமது தமிழ் உலகில் குருக்கள் / சித்தர்கள் தோன்றுவது நின்று போன சாதிய முரணுடன் வருணாசிரம கொள்கை திணிக்கப்பட்டு இந்த ஏற்றாததாழ்வு முறை ஆரியர்கள் மூலம் இங்கே நிலைநிறுத்தப்பட்ட காலம் வேண்டுமானால் கிபி 1200 ஆக இருக்கலாம்.  
இல்லாத ஒன்றை எப்பொழுதும் தீய சக்திகள் புதிதாக ஏற்படுத்தாது, மாறாக இருப்பதன் பொருளை / விளக்கத்தை திரித்து தனக்கு தேவையானதை சாத்தித்து கொள்ளும் என்பது வரலாறு.
 




இறைவனின் நாட்டத்தை தவிர வேறு எதுவும் நடக்காது


தமிழர் சமயம் 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - (குறள் 377)

உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம் 

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! - (குர்ஆன் 9:51)

கிறித்தவம் 

அதற்கு ஜான் பதிலளித்தார், “ஒரு நபர் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதை மட்டுமே பெற முடியும். (யோவான் 3:27)

பூமி எதிர் திசையில் சுழலத் தொடங்கினால் என்னவாகும்? : அறிவியல் தீர்க்க தரிசனங்கள் - 02

காலத்துக்கு ஏற்ற கேள்வி. ஏற்கனவே உள்பகுதி எதிர் திசையில் சுழல ஆர்மபித்து விட்டதாம்.

மேலுள்ள செய்தி குறிப்பிட்டு இருப்பது போல மையப்பகுதியின் வேகம் அல்லது திசை மாறுவதற்கான காரணம் என்ன?

உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். (திருக்குர்ஆன் 16:15)

தங்கம், நிலக்கரி, வைரம், லித்தியம் போன்றவைகளுக்காக மலைகளை குடைவதும், கிரானைட் போன்றவைகளுக்காக மலைகளை உடைத்ததும், தொடந்து உடைப்பதும், போட்டி போட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் துளையிட்ட ப்ரொஜெக்ட்டும் சில காரணங்களாக இருக்கலாம். ஏனென்றால் மலைகளை உள்ளும் புறமும் சேதப்படுத்துவது அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த காரணத்தை வலுவிழக்கச் செய்கிறது.

சரி இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு
  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்
  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்
  • பருவநிலை மாறுபடலாம்

இதை யாராவது முன்பே கணித்து உள்ளார்களா?

ஆம். ஆனால் அதை கணிப்பு என்று சொல்ல முடியாது. அது ஒரு டிவைன் மெசேஜ் என்று கூறலாம். அதாவது தொல்காப்பிய நூல்விதி கூறுவது போல.

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தை ஒத்த அந்த நாள், நாம் ஒரு நாளுக்கு உரியதை மட்டும் தொழுதால் போதுமா?". அவர் நபி அவர்கள், "இல்லை, ஆனால் கணக்கிட்டு தொழுங்கள்!" என்றார். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரலி)

  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் –“சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது”அறிவிப்பவர் அபூஹுரைரா(ரழி)நூல் (புகாரி 6506)

சூரியன் மேற்கிலிருந்து உதித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)

  • பருவநிலை மாறுபடலாம்
அரேபியாவின் நிலம் புல்வெளிகளாகவும் ஆறுகளாகவும் மாறும் வரை கடைசி நேரம் வராது." [முஸ்லிம் 157 c] 
 

 

 இந்த பதிவுக்காக மீள் வாசிப்பு செய்யும்பொழுது உள்ளுக்குள் பதட்டம் அதிகரிக்கிறது. உலக அழிவுநாள் மிக அருகில் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. மேலும் சில முன்னறிவிப்புகள் பட்டியல் உங்களுக்காக.

  • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கபப்டும்
  • பாலை வனம் சோலை வனமாகும்
  • காலம் சுருங்குதல்: அதாவது நாள் மிக வேகமாக ஓடுவது.
  • கொலைகள் பெருகுதல்
  • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
  • நெருக்கமான கடை வீதிகள்
  • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • ஆடை அணிந்தும் நிர்வாணம்
  • உயிரற்ற பொருட்கள் பேசுவது
  • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
  • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
  • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
  • செல்வம் பெருகும்
  • மகளின் தயவில் தாய்
  • குடிசைகள் கோபுரமாகும்