வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

தமிழர் சமயம்

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌

காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌

பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌

கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)


விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 

இஸ்லாம் 

“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29

யூதம் / கிறித்தவம் 

இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)

இறைவனின் கருணையால் சொர்கம் *

நம்பிக்கை அல்லது விசுவாசம் அல்லது ஈமான் என்பதன் மதிப்பு என்ன? 

கிறிஸ்தவம்

8 ஏனென்றால், கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் - இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய பரிசு. 9 கிரியைகளால் அல்ல, அதனால் யாரும் பெருமை பேச முடியாது.10 ஏனென்றால், நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய கைவேலையாய் இருக்கிறோம்; எபேசியர் 2:8-10

இஸ்லாம்  

நிச்சயமாக எந்த மனிதரையும் அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும் கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : புகாரீ 5986)

 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களில் எவரும் அவருடைய அமலின் காரணத்தால் -மறுமையில்- வெற்றியடையந்துவிட முடியாது என்றார்கள் (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 5041)

 

யாரை வணங்கினாலும் அருள் செய்பவன் அவன் ஒருவனே

தமிழர் சமயம் 

யாதொரு தெயவம்‌ கொணெடீர் அத்தெய்வமாக ஆங்கே
மாதொரு பாகனார்தாம்‌ வருவர்‌ !!!! மற்றத்‌ தெய்வங்கள்‌
வேதனைப்படும்‌ பிறக்கும்‌ இறக்கும்‌ மேல்‌ வினையும்‌ செய்யும்‌
ஆதாலல்‌ அவை இலாதான்‌ அறிந்து அருள்‌ செய்வன்‌ அன்றே - திருமந்திரம்

சவஞானூத்தியார்‌ - அருணந்தி௫வம்‌

கருத்து - எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும்‌ அந்த தெய்வ வடிவில்‌ வந்து அருளுபவன்‌ சிவனே என்பதைக்‌ கூறும்‌ பாடல்‌.

பதவுரை: எந்தத்‌ தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும்‌ நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம்‌ வழங்க அந்த தெய்வங்களால்‌ இயலாது என்பதால்‌ மாதொரு பாகனாடிய இவனே வந்து அந்த தெய்வமா௫ அருள்செய்வான்‌. பிறதெய்வங்கள்‌ யாவும்‌ துன்பப்படும், பிறக்கும், இறக்கும், வினைகள் புரியும் ஆனால் எல்லாம்‌ வல்ல இறைவனாகிய இவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள்‌ இல்லையாதலால்‌, செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக்‌ கொடுக்க வல்லவன்‌ அவனே ஆவான்‌. 
 

வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம். (குர்ஆன் 6:14)

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40

கிறிஸ்தவம் 

 18.. அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். 20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். (உபாகமம் 10)