இறைவனின் சவால் : உங்கள் தெய்வங்களை பேச சொல்லுங்கள் பார்ப்போம்

கிறிஸ்தவம்


“நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்!  என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். (ஏசாயா 44:8)

கர்த்தரும், விக்கிரகங்களும்
1 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்லாம் 


இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ளமாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப்பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.  அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரைஅழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும்கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்குஉதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (அல்குர்ஆன் 7:192-197)

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். - (அல்குர்ஆன் 21:92)

தமிழர் மதம்


“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ - சிவவாக்கியர் பாடல்-520


பெருமை

தமிழர் மதம்


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

பொருள்: யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும். தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது. 
 
அறிவுடைமை மீக்கூற்றம் ஆனகுலனே
உறுவலி நற்றவம் ஓங்கியசெல்வம்
பொறிவனப்பின் எம்போல் வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்பு இல. - (அறநெறிச்சாரம் எட்டுவகையான செருக்கு பாடல் - 65)

விளக்கவுரை அறிவு உடைமையாலும், புகழாலும், உயர்ந்த பிறவியாலும், மிக்க வலிமையாலும், நல்ல தவத்தினாலும், உயர்வான செல்வத்தாலும், நல் ஊழாலும், உடல் அழகாலும் எம்மைப் போன்றவர் இல்லை எனச் சொல்லி மகிழ்ச்சி அடையும் எட்டு வகையான செருக்கும் இறுதியில் இன்பம் செய்யா. 

பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.  (முதுமொழிக் காஞ்சி 7:8)
 
பதவுரை: நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல் - 

பொருள்பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.

பலகற்றோம் யாம்என்று தற்புகழ வேண்டர்
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல். - (அறநெறிச்சாரம் தற்புகழ்ச்சி கூடாது பாடல் - 79)

விளக்கவுரை பரந்த கதிர்களையுடைய கதிரவனைக் கையில் உள்ள சிறிய குடையும் மறைக்கும். (ஆகவே) யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. (ஏனென்றால்) பல நூல்களையும் ஆராய்ந்து கற்றவர் கட்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களையே கற்றவரிடத்தும் இருக்கும்.

 

இஸ்லாம் 

இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : முஸ்லிம்) 
 

கிறிஸ்தவம் 


அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (1 பேதுரு 5:5)

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] அறுத்துப்போடுவார்.”—(சங்கீதம் 12:2-4)

கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன. - (நீதிமொழிகள் 214)

உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.  - (நீதிமொழிகள் 30:32)

ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும். (நீதிமொழிகள் 22.10)

தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்

தமிழர் சமயம் 

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439

பதவுரை:
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை.
நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்
நன்றி - நன்மை; உதவி; அறம்.
பயவா - பயக்காத, தாராத, பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
வினை- செயல் 
 
உரை: எந்தக் காலத்திலும் தன்னை வியந்து பாராட்டி நலலவனாகக்கருதி உயர்வாக நினைக்கும் நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - [பொருட்பால், அரசியல், வலியறிதல்குறள் 474]

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்

“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)

உரை:  எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிக்கும் பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)

உரை: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).  

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (அடக்கமுடைமை குறள் எண்:123
 
உரை: அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். 

இஸ்லாம் 

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப் படமாட்டார்கள். (குர்ஆன் 4:49) 

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

கிறிஸ்தவம்


ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறவனே நல்லவன். (2 கொரி 10:17-18
 
இயேசு கூறினார் "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே" (மத்தேயு 19:17, மாற்கு 10:18)

கடவுள் பாவிகளின் ஜெபங்களுக்கு அவர்கள் நின்று, ஜெபித்து, தங்களைத் தாழ்த்தும்போது அவர்களுக்குப் பதிலளித்தார். “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ண கோவிலுக்குள் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். "பரிசேயன் நின்று தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தான்: 'கடவுளே, நான் மற்றவர்களைப் போல அல்ல: மோசடி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது இந்த வரி வசூலிப்பவர்களைப் போல இல்லை. 'வாரத்தில் இருமுறை நோன்பு நோற்பேன்; எனக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்.' "ஆனால் வரி வசூலிப்பவர், சிறிது தூரத்தில் நின்று, வானத்தை நோக்கி தனது கண்களை உயர்த்தக்கூட விரும்பவில்லை, ஆனால் கடவுளே, பாவியான என்மீது கருணை காட்டுங்கள்!" என்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் மற்றவனை விட நியாயமானவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார். - (லூக்கா 18:10-14)

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. (1 கொரி 13:4)

இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.  (1 சாமுவேல் 2:3

அனைத்து வேதங்களும் சொல்வது என்ன?

இந்துமதம் 

‘எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்லுகின்றன’ என்று உபநிஷத் சொல்கிறது (கடோபநிஷத் II.15).  


இஸ்லாம்

அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை  விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (குர்ஆன் 16:36)


கிறிஸ்தவம்

இயேசுவிடம் ஒருமுறை ஒரு வேதபாரகன் கேட்டான். “கற்பனைகளில் பிரதானமான கட்டளை எது?” இயேசு உபாகமம் 6:5 மற்றும் லேவியராகமம் 19:18 லிருந்து இரண்டு வசனங்களில் பதிலளித்தார்.

"இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே ..."


தமிழர் மதம்

 


கே.ஜி.எப் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

திரைப்படத்தில் கெட்ட குணமுடைய, செயலுடைய ஒருவரை மக்கள் திட்டி தீர்த்த ஒரு காலமுண்டு.

பணத்துக்காக ஒருவன் ஒரு கொலையோ திருட்டோ செய்தால் அந்த கதாபாத்திரம் இழிவாக பார்க்கப் பட்டது.

ராதா ரவி ஒரு நேர்காணலில் சொன்னார் "மக்கள் காரி துப்பனும், அப்பத்தான் நான் என் வில்லன் பாத்திரத்தை சரியாக செய்ததாக நான் நம்புவேன்" என்றார். ஏனென்றால் பொது மக்களின் மன நிலை அப்படி இருந்தது. சாதாரணமான மக்களில் பெரும்பாலானோர் கெட்டதை வெறுத்தார்கள், அதை அவமானமாக கருதினார்கள்.

KGF-இன் வெற்றி மட்டுமல்ல இது போன்ற ஒவ்வொரு படத்தின் வெற்றியும் மக்களின் மனநிலையை பிரதி பலிக்கிறது. அதன் காட்சி அமைப்பு, பிரமாண்டம் மட்டும் வெற்றிக்கான காரணமல்ல, அதன் என்ன ஓட்டமும் மிகப் பிரதானமானது. கொலையும் கொள்ளையும் தற்ப்பெருமையும் குடியும் கூத்தும் தானே இந்த திரைப்படத்தில் பிரதான இடத்தை பிடித்து இருந்தது. மக்களின் மனநிலையை யூகித்து படங்கள் எடுக்கப்படுகின்றன, சரியான யூகங்கள் வெற்றி பெறுகின்றன. பலப்படங்கள் மக்களை வழிநடத்த எடுக்கப் படுகின்றன, சில சரியான வழிகளில், பல தவறான வழிகளில்.

இது ஒரு cyclic effect - மக்களால் திரைப்படமும், திரைப்படத்தால் மக்களும் மோசமாகி கொண்டே போகிறனர். பகவாதர் தூரத்தில் இருந்து "மேயாத மான்" என்று பாடியதில் துவங்கி இன்று எப்படிப்பட்ட வக்கிரத்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் அறிவோம். நாளை எங்கே செல்லும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இது போல ஒவ்வொரு ஒழுக்கநெறியையும் அறநெறியையும் உடைத்துக்கொண்டே வருகின்றன திரைப்படங்களும் அது போன்றவைகளும்.

மக்களின் மனங்களில் ஏற்படும் தவறுகளை போக்க நெறிநூல்கள் முயல்கிறது, மக்களின் தவறான மனஓட்டத்தை ஊக்குவிக்கிறது திரைப்படங்கள். நல்லதை சொல்லும் திரைப்படங்கள் வெறும் 1% தான், அதிலும் 1% தான் வெற்றி பெறுகிறது. எனவே திரைப்படத்தின் தன்மையே இதுதான். இன்னும் சொல்லப்போனால் இன்றைய வியாபாரத்தின் தன்மையே இதுதான். இலாபம் மட்டுமே நோக்கு, நல்லது கெட்டது பற்றி கவலை இல்லை.

உண்மையான இன்பம் இது போன்ற திரைப்படங்களில் அல்லது அது அழைத்துச் செல்லும் அசிங்கங்களில் இல்லை. உண்மையான இன்பம் என்பது

  • சக மனிதனை மதிப்பதில் உள்ளது
  • ஒருவன் ஏமாற்றினாலும் அவனை மன்னிப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உழைப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு தர்மம் செய்வதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உதவி செய்வதில் உள்ளது
  • ஒழுக்கமாக வாழ்வதில் உள்ளது
  • நேர்மையாக வாழ்வதில் உள்ளது
  • விட்டுக்கொடுப்பதில் உள்ளது
  • இறை நேசத்துடன் வாழ்வதில் உள்ளது
  • அறநெறிகளுடன் வாழ்வதில் உள்ளது
  • செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உயர்ந்த கூலி உண்டு என்று அறிவதில் உள்ளது

தனி மனிதனும் சமுதாயமும் தன்னை சீர்படுத்த தவறினால்..! பேரழிவு நிச்சயம்.