மாதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?

 கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.

நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.

உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.

உதாரணமாக,

  • நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற மூன்று வேதங்களும் உள்ளன
  • நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும், குறிப்பாக யூத மதம் மற்றும் கிறிஸ்தவம்.
  • நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புற நானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள். 

எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில்ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்க வில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.

சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)

எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.

முடிவுரை

இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.

    1. ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
    2. ஒரு சமயம் ஒரு வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
    3. ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும்.
    4. அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
    5. அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
    6. இதுதான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
    7. சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
    8. அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே அறியும் சிவனும் ஒன்னு என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.

கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை மறுக்க ஒருக்காலமும் முடியாது.