ஒரு தமிழனாய் ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? சித்தாந்த ஒற்றுமை என்ன?

நன்மை தீமையை ஆய்ந்து அறிய வேண்டும்...!

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். - குறள் 511

- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்? 

சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. - குறள் 636

- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?

அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு

தமிழர் மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது (திருமந்திரம் 2104) : அதாவது சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இல்லை, பல கடவுள்களும் இல்லை.

- ஒவ்வொரு மதத்திற்க்கும் ஓர் தெய்வம் இல்லை :

எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? - சிவவாக்கியர் 222

- சிலைகளை இறைவனாக வணங்க கூடாது - சித்தர் சிவாவாக்கியர் பாடல்கள்

செங்கலும் கருங்கலும் "சிவந்தசாதி லிங்கமும்"
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35

பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

- மறு ஜென்மம் பூர்வ ஜென்மம் என ஏதும் கிடையாது !!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

- ஆனால் மறுமை உண்டு !!

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுமை என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

- சோதிடம் பைத்தியகாரத்தனம் !!

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - நாலடியார் 52

புனிதமாக கருதப்படும் தாலி தமிழர் மதம் இல்லை 

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'''

19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமத ஆதிக்கம் அதிகமானபிறகு தொடங்கியதே!

- வரதட்சணை கூடாது !!

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே! - அகநானூறு பாடல் 90 - மருதன் இளநாகனார்

திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ’விலை’(சீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

- வட்டி பெரும்பாவம் !!

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம் - 20, அறஞ்செயான் திறம் - பாடல் எண் 1.)

மனிதனின் பிறப்பே இறைவனை வணங்கத்தான் 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09.

- அவனை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா? 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - நாலடியார் 001

- இத்தனையும் அறிந்தபிறகு ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? இவை அனைத்தும் இஸ்லாத்தின் சித்தாந்தம். இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள்.

இந்து மதத்தில் இருந்துகொண்டு
சிலையை வணங்காமல் இருக்க முடியுமா?
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?
தாலி வேண்டாம் என்றோ?
வரதட்சணை வேண்டாம் என்றோ?
ஆண் தான் பெண்ணுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றோ?
வட்டி கூடாது என்றோ?
சோதிடம் பொய் என்றோ?
மறு ஜென்மம் இல்லை என்றோ கூறிவிட முடியுமா?

"முடியாது" ஏனென்றால் இவைகள் தான் இந்து மதத்தின் அடிப்படைகள். ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும். இந்துவாக அல்ல.

- ஏற்றுக்கொள்ளும் சித்தாந்ததில் பிழைகள் இருக்க கூடாது, பின்பற்றுபவர்களில் இருக்கத்தான் செய்யும். இது அனைவர்க்கும் பொருந்தும், தமிழனாய் இஸ்லாமிய கொள்கைகளே ஏற்றுகொள்ள சிறந்தது இணக்கமானது. முஸ்லிம்களிடத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் இஸ்லாமிய கட்டமைப்பு ஒரு தானியங்கி சமூக சுத்திகரிப்பு இயந்திரம் போல, தன்னை தானே அவ்வப்போது சீர்திருத்திகொள்ளும்.

- அரபி மொழி பிரச்னை என்றால் இந்துமதம் சம்ஸ்கிருத மொழியை புனிதமாக சொல்கிறது தமிழை சூத்திர மொழி என்கிறது. ஆனால் முகமது நபி அவர்கள் எந்த ஒரு அரபியும் எந்த ஒரு அரபி அல்லாதவரை விட சிறந்தவர் கிடையாது, மொழியால் சிறப்பில்லை, குலத்தால் சிறப்பில்லை, நிறத்தால் சிறப்பில்லை என்பதொடு நற்குணமும் இறை அச்சமுமும் அதிகம் கொண்டவரே சிறந்தவர் என்ற அவரின் முற்போக்கு போதனைகளை வாசித்தால் உனக்கு ஒருவேளை அறிவு வளரலாம்.

- இத்தனை கற்ற பிறகும் இதை அப்படியே விட்டுவிடலாமா என்றால்? 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391

ஹிந்துக்கள் மாடு சாப்பிடுவது இல்லை, என்றால் சில ஹிந்துக்கள் உண்ணுகிறார்கள், ஹிந்து மதத்தில் அனுமதி உள்ளதா?

"ஹிந்து" என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் தான் "இந்து மதத்தில் பசு மாமிசம் உண்ண அனுமதி உண்டா?" என்ற கேள்விக்கான பதில்.

இந்து என்பது சமயத்தின் பெயரா? அல்லது பூகோள பெயரா?

பூகோள பெயரென்றால், நிச்சயமாக மக்களிடையே சமயங்கள் வேறுபடும், எனவே அதன் பண்பாடும் வேறுபடும். எனவே அதில் சிலர் பசு மாமிசம் உண்ணுவதில் ஆச்சரியம் இல்லை. அது அவர்களது பண்பாடு!

மேற்கண்ட தகவலின் படி ஹிந்து என்பது பூகோலப்பெயர். அதாவது சிந்துநதியை சுற்றி இருந்த மக்கள் என்று பெயர். இது பூகோலப் பெயர் என்றால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல.

ஹிந்து என்பது ஒரு சமயத்தின் பெயரென்றால், அது ஒரு பாரம்பரித்துடன் இருக்கவேண்டும். தொல்காப்பிய முதல்நூல் வழிநூல் தத்துவம் உலக சமயம் அனைத்துக்கும் பொருந்தும். இதை உறுதிப்படுத்த, ரிக்வேதம் 350 ரிஷிகளாலாலும், எழுதப்பட்டது, பைபிள் 40 தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளது, தமிழர் நூலான புறநானூறு கிட்டத்தட்ட 150 புலவர்களாலும், அகநானூறு 146 புலவர்களாலும், நற்றிணை 175 புலவர்களாலும், குறுந்தொகை 206 புலவர்களாலும், ஐங்குறுநூறு ஐவராலும், பாத்திற்றுப்பத்து எட்டு பேராலும், கலித்தொகை ஐவராலும் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும். ஒரு நூலை பலர் எழுதுவது எப்படி சாத்தியமானது? யார் வேண்டுமானாலும் இப்படி ஒருநூலில் பாடலை இணைத்துவிட முடியுமா? இல்லை. அதுதான் பாரம்பரியம். பின்னாளில் வரும் ஆசிரியரை பற்றி தீர்க்க தரிசனம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த செய்திகளை ரிக் வேதத்திலும், அவ்வையாரின் நல்வழியிலும், பைபிளிலும் காண முடியும். இது ஒரு நீண்ட தலைப்பு.

எனவே இந்து என்கிற சமயம் எங்கே? யாரால்? பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வந்தது என்கிற தரவுகள் உள்ளது என்று ஆராய்ந்தால் அதன் மொழியும் நமக்கு சொல்வது தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்று. எனவே தமிழர்கள் பசுமாமிசம் உண்ணக் கூடாதென்று இல்லை. தமிழர்களைப் போல இந்து பாரம்பரியத்தை சாராத யாரும் பசுமாமிசம் உண்ணகூடாதென்று இல்லை.

சரி, இப்போ உண்மையில் இந்துக்கள் பசுமாமிசம் சாப்பிடக் கூடாதா? wiki

இனவெறி!


ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 
இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா?” 
என்று கேட்டார்கள். 

அதற்கு நபி அவர்கள்,

 “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” 
என்றார்கள். - நூல்: அஹ்மத்
    • இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை.
    • உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும்,  ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.
    • கொடுமைகளுக்கு குண்டு வெடிப்பு போன்று தீவிரமாக மார்கத்திற்கு முரணான முறையில் எதிர்வினை ஆற்றிய ஒரு சிலர்ர்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரிக்கவில்லை.
    • எத்தனையோ நிழல் உலக தாதக்கள் இந்த துணைக்கண்டத்தில் இருந்தும் ஒரு சில அரபி பெயர்தாங்கிகளை ஊடகங்கள் முன்னிலைபடுத்தி பேசி வருகின்றன ஆனால் அவர்களையும், கொலை கொள்ளை நிகழ்த்துபவர்களையும் அவர்கள் செயல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சிப்பவர்களாகவே கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர்.
    • தினமும் அறிஞர் வாயிலாக இறைவனின் போதனைகளை கேட்கும் திருக்குரானை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை இது.
எனவே இஸ்லாம் இதை போதிப்பது மட்டுமின்றி அதிகார, மத, இன வெறி என அனைத்தையும் நடைமுறையில் தடை செய்துள்ளது.

பற்று வேறு வெறி வேறு.

அல்ஹம்துலில்லாஹ்.

இன்பமும் துன்பமும் இணைந்தே வரும்

தமிழர் சமயம்


இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;
முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே(திருமந்திரம் 267)

இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?

இஸ்லாம்


நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - (குர்ஆன் 94:5-7)

கிறிஸ்தவம் 


[கடவுளின்] கோபம் ஒரு கணம் மட்டுமே, அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அழுகை இரவைத் தாமதப்படுத்தலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும். - (சங்கீதம் 30:5)

இரண்டு உலகம்

தமிழர் சமயம் 


இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. - (குறள் 374)

பதவுரை
இருவேறு உலகம் - மனித உலகம், அசுரர் உலகம் 
இயற்கை - இயல்பு, அமைப்பு, பண்பு; 
திரு வேறு - சிறப்பு வேறு; 
தெள்ளியர் ஆதலும் வேறு - ஞானம் பெறுதலும் வேறு.

பொருளுரை: இரு வேறு உலகத்தின் இயல்பு வேறு, அதன் சிறப்பு வேறு, அதில் அறிவுடையார் ஆதலும் வேறு. அதாவது அறிவின் தன்மையும் அளவும் வேறு வேறு.

இதில் "இருவேறு உலகம்" என்பதன் பொருளாக அனைத்து பொழிப்புரையாளர்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் இருவேறு நிலைகளை குறிப்பிடுவதாக எழுதியுள்ளனர். ஆனால் அது இருவேறு இயற்கை இயல்பை குறிக்கிறது. 

"திரு"-வுக்கு செல்வந்தர் என்று குறிப்பிடும் உரையாசிரியர்கள், செல்வந்தருக்கு உலகத்தின் இயற்க்கை மாறுபடவில்லை என்பதை சிந்திக்க வில்லை என்றே கருதுகிறேன். ஞானம் பெற்றோருக்கும் பெறாதோருக்கும் உலகம் இரு வேறு இயற்கையை வழங்கவில்லை. ஞானம் என்பதே இயற்கையை புரிந்து கொள்ளும் அறிவுதான். எனவே இது இயற்கை மாறுபடும் இரு உலகை குறிப்பிடுகிறது. அது மனித மற்றும் அசுர (ஜின்) உலகமாக இருக்கலாம் அல்லது பூவுலக மற்றும் மேலுலகமாக இருக்கலாம்.

 

இஸ்லாம்


இஸ்லாம் ஒரே பூமியில் இரண்டு வகையான உலகத்தை குறிப்பிடுகிறது. மனித உலகம், ஜின்கள் உலகம். நம்முடைய உலகின் இயல்பும் சிறப்பும் நாம் அறிந்ததே. அதில் உள்ள ஞானத்தை அறியவே நாம் கல்வி கற்கிறோம். ஜின்கள் உலகம் பற்றியும் அதன் இயல்பு பற்றியும் இஸ்லாம் கூறும் செய்திகள் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.  

ஜின்னுலக இயற்கை  

நம் கண்களுக்கு புலப்படாத ஜின்கள் உலகம்  

ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!

ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!

நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)

ஜின் படைப்பு 

இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!

மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)

உருவ அமைப்பு  

ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !

1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!
2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!
3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)

வசிப்பிடம்  
 
ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

1 ) இருட்டான இடங்கள்
2 ) பாழடைந்த இடங்கள்
3 ) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்
4 ) பராமரிப்பில்லாத மைதானங்கள்
5 ) பாலை வனங்கள்
6 ) அடர்ந்த காடுகள்
7 ) மலைகள்
8 ) ஓடைகள்
9 ) மையவாடிகள்
10 ) பாழடைந்த பள்ளிவாசல்கள்
11 ) கிணறுகள்
12 ) சமுத்திரங்கள்
13 ) வயல் வெளிகள்
14 ) சுரங்கங்கள்
15 ) பொந்துகள்
16 ) வீட்டின் முகடுகள்
17 ) மரங்கள்
18 )குகைகள்
19 ) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்
20 ) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள் போன்றவைகளில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)

உணவு  

ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!

1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள்!
2) கெட்டியான சாணம்!
3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)

ஆற்றல்

நபி சுலைமான் (அலை) அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)  
 
ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான் (அல்குர்ஆன் : 72:9)  
 
பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)  
 

ஜின்னுலக ஞானம்   


ஜின்களுக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் 
 
மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!

ஜின்களில் நபி மார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)

 

மேலுலகம் 

இரு உலகம் என்று குறள் கூறுவது பூவுலகையும் மேலுலகையும் குறிப்பிடுவதாக இருந்தால், அதன் சிறப்பும் ஞானமும் வேறுபட்டே இருக்கிறது. 

மேலுலக இயற்கை  

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - (திருக்குர்ஆன் 2:25

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

முடிவுரை

இரண்டு உலகம் என்பது இங்கேயே என்றால் அது மனிதர் மற்றும் அசுரர் (ஜின்) உலகை குறிக்கிறது. பூவுலக அல்லது மேலுலகை குறிக்கிறது என்று கருத முடியுமா என்று தெரியவில்லை. மேலும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. கீழுலகை அது குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அங்கு எந்த "திரு"-வும் அதாவது சிறப்பும் இல்லை.