வரதட்சனை


 தமிழர் சமயம் 

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே - (அகநானூறு பாடல் 90)- மருதன் இளநாகனார்

பொருள்: திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், 5
பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? (அகநானூறு 280)

பொருள்: பொன்னால் செய்து வைத்தது போல் பூத்துக் கிடக்கும் செருந்திப் பூக்கள் பலவற்றை இவள் தலையில் அணிந்திருக்கிறாள். 

திண்ணிதாக இருக்கும் மணலில் நண்டை ஓடும்படிச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

வளையல் அணிந்த இந்தச் சிறுபெண்ணைப் பெறற்கரிய பொருள்களைக் கலம் கலமாக கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெறமுடியாது.

எனவே ஒன்று செய்யலாம். 

நான் வாழும் ஊரை விட்டுவிட்டு இவள் தந்தைக்கு அறம் செய்யலாம். 

இவள் தந்தை உப்பு உழவு செய்யும்போது உடனிருந்து உழைக்கலாம். 

கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடன் மீன் பிடிக்கச் செல்லலாம். 

அவனுடன் படுத்து உறங்கலாம், அவனைப் பணிந்து நடந்துகொள்ளலாம். அவன் கூடவே இருக்கலாம். 

அப்படி இருந்தால் அவன் இவளை எனக்குத் தரக்கூடும்.

அவன் கொடையாளி. கடலில் மூழ்கி எடுத்துத் தான் கொண்டுவந்த முத்துக்களை, தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பண்பு கொண்டவன்.  

கானலம் பெருதுறையின் தலைவன். பரதவன். இவளுக்குத் தந்தை. இவன் எனக்கு இவளைத் தந்துவிடுவான். இப்படித் தலைவன் நினைக்கிறான்.  


இந்து மதம் 

அர்ஷா திருமணம் 

ஆர்ஷவிவாஹா என்பது திருமணத்தின் நீதியான வடிவம். ஒரு மணமகனிடமிருந்து ஒரு ஜோடி கால்நடை, ஒரு மாடு மற்றும் ஒரு காளை அல்லது இரண்டு ஜோடிகளைப் பெற்ற பிறகு, ஒரு மனிதன் தனது மகளை மணமகளாகப் பரிசளிக்கும் ஒரு வகையான திருமணமாகும். முன்னாள் மகள் விற்பனை. ஒரு ஜோடி பசுக்களுக்கு ஈடாக ஒருவரின் கன்னி மகளை மணமகளாக வழங்குமாறு யாக்ஞவல்கிய முனிவர் பரிந்துரைக்கிறார்.

அசுர திருமணம் 

அசுரவிவாஹா என்பது மணமகன் தன்னால் இயன்ற செல்வத்தை மணமகள் மற்றும் அவளுடைய உறவினர்களுக்கு வழங்கிய பிறகு, ஒரு கன்னியைப் பெறுவது ஒரு வகையான திருமணமாகும். 

 

கிறிஸ்தவம் 

Jacob loved Rachel. And he said, “I will serve you seven years for your younger daughter Rachel.” Laban said, “It is better that I give her to you than that I should give her to any other man; stay with me.” So Jacob qserved seven years for Rachel, and they seemed to him but a few days because of the love he had for her. (Genesis 29:18-20) 
 
யாக்கோபு ராகேலை நேசித்தார். அதற்கு அவர், “உன் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உனக்கு சேவை செய்வேன்” என்றார். லாபான், “நான் அவளை வேறு ஒருவருக்குக் கொடுப்பதைவிட, அவளை உனக்குக் கொடுப்பது நல்லது; என்னுடன் இருங்கள்." ஜேக்கப் ராகேலுக்காக ஏழு வருடங்கள் பணிபுரிந்தார், அவர் அவள் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக அவை அவருக்கு சில நாட்களே தோன்றின.(ஆதியாகமம் 29:18-20)

Ask me a great amount for a dowry, and I will give whatever you ask of me, but give me the young lady as a wife.” (Genesis 34:12 WEB)

வரதட்சணையும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். (ஆதியாகமம் 34:12)   

இஸ்லாம்

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

“எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.” -(4:25) 

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்.’ (குர்ஆன் 33:50) 
 

வரதட்சணையை மறுப்பவனே வெறுப்பவனே

மனிதன்.
ஆண்மகன்.
தமிழன்.
முஸ்லிம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்


தமிழர் சமயம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே(திருமந்திரம் 2104)

பதவுரை 
ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.
நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்
சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை
நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

பொருளுரை 
ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - புறநானூறு : 192

பதவுரை
யாதும் – அனைத்தும்; ஊரே - நமது ஊர் தான்
யாவரும் – அனைவரும்; கேளிர் - நமது உறவினர்
தீதும் - தீயவையும் (நமக்கு நேரும் தீமையும்)
நன்றும் - நல்லவையும் (நம்மைச் சேரும் நன்மையும்)
பிறர்தர - பிறர் தருவதால்; வாரா – வாராது, வருவதல்ல
நோதலும் - வருந்துவதும்
தணிதலும் - அது தீர்வதும்
அவற்றோர் - அவற்றை, முன் சொல்லியவற்றை
அன்ன - போல (உவம உருபு)
சாதலும் - சாவது
புதுவது - புதிது
அன்றே (அன்று + ஏ): அன்று - இல்லை
வாழ்தல் - வாழ்தல்
இனிதுஎன - இனியது என
மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும்; இலமே - இல்லை
முனிவின் - வெறுப்பு ஏற்பட்டு (முனிவு - வெறுப்பு, வருத்தம்)
இன்னாது - துன்பம் மிக்கது (வாழ்வு துன்பம் மிக்கது)
என்றலும் - என்று சொல்வதும்; இலமே - இல்லை
மின்னொடு - மின்னலுடன்
வானம் - வானம்
தண்துளி: தண் - குளிர்ந்த; துளி - மழைத்துளி
தலைஇ - பெய்வதால் (தலைதல் - மழைபெய்தல்)
ஆனாது – விடாமல், தொடர்ந்து
கல்பொருது - கல்லுடன் மோதி (பொருதுதல் - மோதுதல், போர்செய்தல்)
இரங்கும் - ஒலிக்கும் (இரங்குதல் - ஒலித்தல்)
மல்லல் - வலிமை மிக்க
பேர்யாற்று (பெரிய + ஆற்று) - பெரிய ஆற்றின்
நீர்வழி - நீரின் ஓட்டத்தின் வழியே
படூஉம் – செல்லும், பயணப்படும்
புணைபோல - மிதவை போல (புணை - தெப்பம்)
ஆருயிர் (அருமை + உயிர்) - இந்த அரிய உயிர்
முறைவழி - விதியின் வழியே
படூஉம் - செல்லும், பயணப்படும்
என்பது - என்பது
திறவோர் - திறம் கொண்டு அறிந்தோர் (பகுத்தறிந்தோர்)
காட்சியின் - நூலின் மூலம், தந்த அறிவின் மூலம்
தெளிந்தனம் - தெளிவு பெற்றோம்
ஆகலின் - ஆனதால்
மாட்சியின் - பெருமை மிக்க
பெரியோரை - பெரியவர் என்று
வியத்தலும் - வியந்து அடிபணிவதும்; இலமே - இல்லை
சிறியோரை - சிறியோர் என்று
இகழ்தல் - இகழ்ந்து பழித்தல்
அதனினும் - அதனை விட (பெரியோர் என அடிபணிதலை விட)
இலமே - இல்லை
 
பொருளுரை
அனைத்தும் நமது ஊர் தான்; அனைவரும் நமது உறவினரே. நமக்கு நேரும் தீமையும், நம்மைச் சேரும் நன்மையும் பிறர் தந்து வருவதல்ல; நாம் எற்படுத்திக் கொள்வது. அதுபோல் தான் நமது துயரமும், அதன் தீர்வும். சாவும் புதிது அல்ல; நமது பிறப்பின் பொழுதே உறுதியாகிவிட்ட ஒன்று. வாழ்வதே இனிது என்றோ, வாழ்வின் இனிமையான பொழுது நிலையானது என்றோ மகிழ்வதும் இல்லை; வெறுப்பு ஏற்பட்டு இந்த வாழ்வு துன்பம் மிக்கது என்று சொல்வதும் இல்லை. மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் மிதவையைப் போல இந்த அரிய உயிரும் விதியின் வழியே செல்லும் என்பது திறம் கொண்டு பகுத்தறிந்தோர் தந்த அறிவின் மூலம் தெளிவு பெற்றதனால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் வியந்து அடிபணிவதும் இல்லை; அதைவிட, சிறியோர் என்று யாரையும் இகழ்ந்து பழித்தலும் இல்லை. 

இஸ்லாம்

இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் (என்றும் கூறினோம்). - (குர்ஆன் 23:52)

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)

(ஆரம்பத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றவே) நேர்வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போராகவும், (தீயவழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். மேலும், மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விசயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காக சத்திய வேதத்தையும் தன்இறைதூதர்களுக்கு அல்லாஹ் அருளினான்.'' (அல்குர்ஆன் 2:213)

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். - (அல்குர்ஆன் 49:13) 

கிறிஸ்தவம் 

நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும். ஆதியாகமம் 9:8&9

முடிவுரை

கிறிஸ்தவத்தில் இஸ்லாத்திலும் உள்ள "மனிதன் படைக்கப் பட்டவன்" என்கிற கருத்தும் "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல" என்கிற கருத்தும் பல காரணங்களால் விமர்சிக்கப்படுகிறது. அதில் ஒன்று, ஒரே ஜோடியிலிருந்து எப்படி மனித இனம் பெருகியது? சகோதரர்களும் சகோதரிகளும் மணமுடித்தால் தான் இது சாத்தியம். இந்த நடைமுறை மனித ஒழுங்குக்கும் சிந்தனைக்கும் மாற்றமாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது தான் அது. 

ஆனால் அனைத்து பண்பாட்டின் ஆரம்ப கால நூல்களும் இவ்வாறுதான் சொல்கிறது. அனைவரும் உறவினர்கள் என்பதும், ஒரே குலத்தை சார்ந்தவர்கள் என்பதும் எப்படி சாத்தியம்? எனவே ஒழுக்கம் என்பதும் அறம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும் ஆனால் அது இறைவனால் வகுக்கப் படுமே தவிர மனிதர்களால் அல்ல. 

(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:38)

மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். (திருக்குர்ஆன் 2:213)

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். (திருக்குர்ஆன் 2:4) 

“...உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.” (திருக்குர்ஆன் 23:50)

வட்டி

தமிழர் சமயம்


திருமூலர் திருமந்திரம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. (திருமந்திரம் - முதல் தந்திரம் - 20 அறஞ்செயான் திறம்-1.)

(பொழிப்புரை)  மரத்தின் உயரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிவதற்கு ஒப்பானது, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மூலம் சம்பாதித்தவை, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டு ஒழிவதே ஆகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

(குறிப்புரை)  பட்டி - பட்டிமை(களவு); அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
பதகன், பெயர்ச்சொல்.: கொடும்பாவி, கீழ்மகன்

திரிகடுகம் 

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்
இம் மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். - (நல்லாதனார் திரிகடுகம் 81)

(பொருள் : வாசி - வட்டி, துறை - நீர்த் துறை)

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், வட்டிக்கு கொடுத்துப் மிகுதியான பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

தமிழ் பழமொழி : வட்டி ஆசை முதலுக்கு கேடு.

இஸ்லாம்


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.- (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:39)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.”
(அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி) புஹாரி 2085)

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.)

கிறிஸ்தவம் 


உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:25)
 
வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,  - (எசேக்கியேல் 18:8)

 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,  - (எசேக்கியேல் 18:13)

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை  - (ங்கீதம் 15:5)
 



யூதர்களின் வட்டி திட்டம்




பெரும் பாவங்கள்

தமிழர் சமயம் 


கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே 

பொழிப்புரை

1) பிற உயிரைக் கொல்லுதல்,
2) பிறர் பொருளைக் களவு செய்தல்,
3) கள்ளுண்டல்,
4) நெறிநீங்கிய காமத்து அழுந்தல்,
5) பொய் கூறல்`

என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம். 



இஸ்லாம் 


1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்

எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும். - (குர்ஆன் 32:20)

விதி

தமிழர் மதம் 


ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்
வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டாவிடுதல் அரிது.. - (நாலடியார் 109)

 (பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

(வி-ம்.) மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில் யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் (விதியினால்) அவர்கள்பால் வந்து அடையகூடியது நன்மையோ தீமையோ அடையாமல் விடுதல் இல்லை.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - 380

பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?  

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377

பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம்


இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57 : 22)

ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆம் (தெரியும்)'' என்று சொன்னார்கள். அவர் "அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள்? நற்செயல் புரிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒவ்வொருவரும் "எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது "எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 6596) 

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318) 

விதியை மதியால் வெல்ல முடியுமா?  முடியும்..!

பதவுரை: மதி - அறிவு, வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)

நாயகம் (ﷺ) நவின்றார்கள்; “விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” (ஆதாரம் இப்னு மாஜா: 4914)

 

கிறிஸ்தவம்


குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139 :16)

எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை! பறவை வானில் பறப்பது உட்பட⁉

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. (மத்தேயு 10 :29)

முடிவுரை


ஊழ் எனப்படும் விதி உண்டென்றும் அனைத்தும் அவற்றின் அடிப்படையிலேயே நிகழுகிறது.